#EnjoyEnjaami பாடல்: அறிவு
குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி
அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே
சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கோட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி
கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி
அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சையை பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குனே கூட்டுக்கு பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா
வேர்வத்தண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா
ஆக்காட்டி கருப்பட்டி
ஊதங்கொழு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்
ஜன் ஜனே ஜனக்கு
ஜனே மக்களே
உப்புக்கு சப்பு கொட்டி
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அடக்கி ரத்தங்கொட்டு
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு
நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் சேழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே
என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தா சுத்தி வந்தா
சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம் தானே
காட மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு
என்ன கோரை என்ன கோரை
என் சீனி கரும்புக்கு என்ன கோரை
என்ன கோரை என்ன கோரை
என் செல்ல பேராண்டிக்கு என்ன கோரை
பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
வேதகள்ளு விட்டுருக்கு
அது வேதகள்ளு விட்டுருக்கு
அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ
ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே
குக்கூ குக்கூ

தன் முன்னோர்களை பற்றி எழுதியுள்ளார் அறிவு. இலங்கைக்கு தேயிலை தோட்டத்துக்கு அடிமையா வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அங்கு காடுகளை அழித்து நகரங்களை உருவாக்க உழைக்கிறார்கள். பின் அங்கு குடிமக்கள் அதிகம் ஆகி விடவும் கொண்டு போன மக்களை
திரும்ப அவரவர் நாட்டுக்கே கொண்டு போய் விட்டு விடுகின்றனர். இவர்கள் தமிழகம் திரும்பியதும் இரண்டு தலைமுறையாக இலை பறிப்பது மட்டுமே செய்ததால் வேறு தொழில் தெரியவில்லை. பிறகு அவர்கள் மலைப்பகுதிகளுக்கு சென்று தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய முயன்று அங்கும் ஆட்கள் இருந்ததால் வேலை
கிடைக்காமல் பெயிண்ட் செய்வது, கூலி வேலை செய்வது என்று உழைத்து குடும்பத்தை காப்பாற்றியவர்களுள் ஒருவர் அறிவின் பாட்டி வள்ளியம்மாள். அவர் இவரை எப்பொழுதும் எஞ்சாமி என்றே குறிப்பிடுவார். அவரைப் பற்றிய பாடல் இது. நம் வேர்களை அறிய ஒவ்வொருவருவரும் முற்படவேண்டும். இவர் பாடலுக்கும்
அதனுடன் பாடகர் Dhee நடித்து வெளிவந்திருக்கும் காணொளிக்கும் ஒருவித தொடர்பும் இல்லாதது வருத்துதற்குரியதே! கதை சொல்லும் முறை #rap
#rapper அறிவிற்கு பாராட்டுகள். பல வலைத்தளங்களிலும் பாடலை எழுதியது தீ என்று இருக்கிறது. நடித்தது மட்டும் தான் அவர். இசை தீயின் தந்தை சந்தோஷ் நாராயணன்.
His speech in his song audio launch

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

17 Mar
இறுதி தேர்தல் கணிப்பு #Election2021
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. கட்சி பாகுபாடு
இல்லாமல் உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரின் கணிப்பு கட்டுரை:
2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் எவ்வாறு வாக்களித்தன என்பதை சதவிகிதத்தில் பார்ப்போம், இது 2021தேர்தலுக்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கிறேன்.
அதிமுக 40.8 % வாக்குகளைப் பெற்றது
திமுக 31.6 %
காங்கிரஸ் 6.4 %
பாமக 5.3 %
தேமுதிக 2.4%
பாஜக 2.8%
சிபிஐ 0.8%
சிபிஎம் 0.7%
வி.சி.க 0.8%
தாமக 0.5%
மதிமுக 0.9%
IMUL 0.7%
எம்.எம்.கே 0.5%
புதிய தமிழகம் 0.5%
தற்போதைய கூட்டணிக்கு ஏற்ப இந்த வாக்குப் பங்கை பிரிப்போம்.
அதிமுக, பாமக, பாஜக, தமாகா மற்றும் பி.டி ஆகியவை என மொத்தம் 49.9%
அதேசமயம் திமுக, காங்கிரஸ்,
Read 17 tweets
15 Mar
#பிள்ளைத்தமிழ் இலக்கியம் என்பது புலவர்கள் தாம் விரும்பிய இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடுவது. மூன்று மாதம் முதல் இருபத்தோரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கையை பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு.
பெரியாழ்வார் கண்ணன் மேல் பாடிய பிள்ளைத்தமிழ் பாசுரங்கள் தேனினும் சுவை மிகுந்தவை. அவை தான் முதலில் பிள்ளைத்தமிழ் பற்றிய நூல் என்று சொல்கின்றனர். ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் இவ்வகையில் முதல் என்றும் சொல்கின்றனர். பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக்
குறிப்பை முதலில் வழங்கிய நூல் தொல்காப்பியமே ஆகும்.
குழவி மருங்கினும் கிழவது ஆகும்-(தொல். பொருள். புறம். 24)
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் குமரகுருபரர் இயற்றியவை. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்-திரிசிரபுரம் மீனாட்சி
Read 9 tweets
12 Mar
இதை எழுதியிருப்பது அரசுக்கான தலைமை பொருளாதார ஆலோசகர். வெளிநாடுகள் நம் செயல்களை அது கிரிக்கட்டாக இருப்பினும் கோவிட் பரவலை தடுக்கும் செயலாக இருபின்னும், விவசாயிகள் போராட்டமாக இருப்பினும் அவற்றை பற்றி அவர்கள் கருத்து வெளியிடும்போது அவர்களுக்கு ஒரு நியாயம் நமக்கென்றால் வெறு நியாயம்!
நியுயார்க் அட்டர்னி ஜெனெரல் 76 பக்க அறிக்கையில் டெமொகிராடிக் ஆளுநர் 50% குறைத்து கரோனா இறப்புகளை பதிவு செய்துள்ளார் என்று அறிவித்து இருக்கிறார். இதைப் பற்றி இந்தியாவில் வேகுண்டு எழுதலோ பாலிவுட் நடிகர்கள் கருத்துத் தெரிவித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ததோ நடந்ததா? இதே இந்தியா
செய்திருந்தால் உலகம் முழுக்க இதற்கு கண்டனம் தெரிவித்துப் போராட்டமும் ட்விட்டரில் சர்வதேச பிரபலங்களும் எதிர்த்து கருத்துப் பொழிந்திருந்திருக்க மாட்டார்களா? இதே GDP கணக்கிடப்படும் முறை இந்தியாவில் மாற்றப்பட்ட போது உலகம் முழுக்க இதற்கு எதிர்ப்பு வந்தது? ஏன்? அவர்களுக்கும் நம்
Read 8 tweets
10 Mar
வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் ராமபிரான் வாய் மொழியாக 16 ஸ்லோகங்கள்-நமக்கான அறிவுரைகள்!
1.சர்வே க்ஷயஅந்தா நிசயா: பதன அந்த: சமுக்ச்ரயா:
சம்யோகா விப்ரயோக அந்தா மரண அந்தம் ச ஜீவிதம்.

(சேர்ந்தன எல்லாம் கரையும்; உயர்ந்தன தாழும்; சேர்ந்தவர் பிரிவர்; பிறப்பவர் இறப்பர்) Image
2.யதா பலானாம் பக்வானாம் ந அன்யத்ர பதனாத் பயம்
ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய ந அன்யத்ர மரணாத் பயம்
(பழுத்த பழங்கள் கீழே விழவேண்டும்; அதுபோல இருப்பவர்கள் இறப்பர். அவைகள் பயப்படுவதில்லை.)

3.யதா காரம் த்ருஅ ஸ்தூணம் ஜீர்ணம் பூத்வா அவசீததி
ததா வசீதந்தி நரா ஜரா ம்ருத்ய வசம் கதா:

(உறுதியான
கட்டிடங்களும் இடிந்து விழும்; அழிந்து போகும்.அதைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்)

4.அன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத
யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்
(இரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பிவராது.)
Read 14 tweets
27 Feb
#மாசிமகம் மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்று கோவில்களில் இருந்து சுவாமி புறப்பட்டு கடலில் அல்லது நதியில் நீராடி திரும்புவர். இதை தீர்த்தவாரி அல்லது கடலாடி என்பார்கள். பக்தர்களும் சுவாமியுடன் ஸ்நானம் செய்து புண்ணிய பலனை அடைவர். கங்கை,
காவிரி ஆகிய புண்ணிய நதிகளிலும் நீர் நிலைகளிலும் இந்நாளில் நீராடி இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால் முன் ஜென்ம வினைகள் தீரும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறது சாஸ்திரம். தேவர்களே இந்நாளில் தீர்த்தமாடுவது இதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கும். மாசி மாதம் மகம்
நட்சத்திரத்தில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் சிவ தீட்சை பெற்ற பலனைத் தரக்கூடியது. மாசி மக நன்னாளில் தான் பார்வதி தேவி தாட்சாயிணியாக அவதரித்தார். ஸ்ரீ மகாவிஷ்ணு பாதாளலோகத்தில் இருந்து பூலோகத்தை மீட்க வராக அவதாரம் எடுத்த திருநாளும் மாசி மகத்தன்று தான். முருகப்பெருமான் தன்
Read 14 tweets
24 Feb
#குலசேகரஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு மகனாக, திருவஞ்சிக்குளம் என்னும் இடத்தில் கலி 28வதான பரபவ வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பெருமாளின் மார்பில் இருக்கும் ஸ்ரீகௌஸ்துபத்தின் அம்சம் ஆவார்.
இவர் திருவேங்கடவர் அருளாலே அவர் மீது பக்தி அதிகரித்து அதை அனுபவித்துக் கொண்டே ராஜ்ஜியம் நடத்தினார். அவர் சேர நாட்டை தவிர சோழ பாண்டிய தேசத்தையும் வென்று ஆட்சி புரிந்தார். கொல்லிக்காவலன், கூடல்நாயகன், கோழைக்கோன் என்று வழங்கப்பட்டார். ராமபிரான் மேல் அளவுகடந்த அன்பினால் ஒருமுறை
இராமாயணம் கதை கேட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் 14,000அரக்கர்களோடு ஜனஸ்தானம் என்னும் இடத்தில் போரிடுவதை கேட்டு எப்படி தனி ஒருவன் மாய அரக்கர்களோடு போராடுவார் என்று தன் சைனியத்தைத் திரட்டிக் கொண்டு அவருக்கு உதவ கிளம்பிவிட்டார். உடனே கதை சொல்பவர் அத்தனை போரையும் வதம் செய்து வென்றார்
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!