ஹிந்து அமைப்புகள் துண்டு பிரசுரம்; தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சி
சேலம்: தமிழகம் முழுதும், தி.மு.க.,வுக்கு எதிராக ஹிந்து முன்னணி, பூஜாரிகள் பேரவை உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வினியோகித்து வருவதால், தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, தி.மு.க.,வின் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு தயக்கம் இன்றி செல்வதும், அங்கு வழங்கப்படும் பொருட்களை ஏற்றுக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், கோவில்களுக்கு சென்றால், திருநீறை அழிப்பது, பிரசாதத்தை வாங்க மறுப்பது ஆகியவற்றை தொடர்கின்றனர். இதனால், தி.மு.க.,வை, பா.ஜ., மட்டுமின்றி ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பூஜாரிகள் பேரவை உட்பட, 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் உறுதிமொழி என்ற தலைப்பில், தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளிக்க வலியுறுத்தி, ஹிந்து தெய்வங்களின் படங்களுடன் ஹிந்து அமைப்பினர், 'வாட்ஸ் - ஆப்', பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் சேலம் மாவட்டத்தில் வீடுகள் தோறும், துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். இதனால், தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. 1
கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.
2
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.
இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. 🇮🇳🙏1
சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.
இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். 🇮🇳🙏2
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.
1 பிரம்மதேவன் ஸ்ரீ மகா விஷ்ணு தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியின் நிர்மலமாக பிரகாசத்துடன் கூடியதாகவும் சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை பிறப்பினால்
ஏற்படும் துக்கத்தை போக்குகின்ற லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, தமிழகத்தில், அவருக்கு எதிராக கடுமையான காழ்ப்பு துாண்டப்பட்டு வருகிறது.
அவர் தமிழகம் வரும் போதெல்லாம், கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலுான்கள் பறக்க விடுவதும், 'திரும்பிப்போ மோடி' என, கோஷமிடுவதும் தொடர்ந்து நடக்கிறது.
அந்த வெறுப்பை, தி.மு.க.,வும், அதன் ஆதரவு ஊடகங்களும், மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து, பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்து விட்டனர். அந்த அளவுக்கு, தமிழக மக்களால் வெறுக்கப்படுவதற்கு, தமிழகத்திற்கு மோடி என்ன துரோகம் இழைத்தார்?