ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.
ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன் என்றது.
பறவையே உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?
முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் சாது.
தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது.
சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார் சாது.
ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன் சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன்.
இருந்தாலும் சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன் என்றது பறவை.
பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன் திரும்பி விடு என்றார் சாது.
பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன.
ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள் என்றது பறவை.
சாது யோசித்தார். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார்.
பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும்.
அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள் என்றார் சாது.
பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.
ஐயா! உங்களின் ஆசியினால் ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம் என்றது பறவை.
பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?' என்று கேட்டார் சாது.
பறவை பேசியது.
ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.
ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது என்ற உண்மை புரிந்தது என்று சொல்லி விட்டு பறந்தது பறவை.
சாதுவைப் பார்த்தான் சீடன். சாது பேசினார்.
சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் துணை ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய குச்சி என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது,
சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது. ஆனால் அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது. பறவைகளுக்கு குச்சியைப் போல மனிதர்களுக்கு *இல்லறம்* கருவியாகிறது. சம்சார சாகரம் என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.
*இல்லறம்* என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், ‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'.
இதைப் போல கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது. இதுவே இல்லற ரகசியம்.
🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. 1
கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.
2
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.
இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. 🇮🇳🙏1
சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.
இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். 🇮🇳🙏2
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.
1 பிரம்மதேவன் ஸ்ரீ மகா விஷ்ணு தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியின் நிர்மலமாக பிரகாசத்துடன் கூடியதாகவும் சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை பிறப்பினால்
ஏற்படும் துக்கத்தை போக்குகின்ற லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, தமிழகத்தில், அவருக்கு எதிராக கடுமையான காழ்ப்பு துாண்டப்பட்டு வருகிறது.
அவர் தமிழகம் வரும் போதெல்லாம், கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலுான்கள் பறக்க விடுவதும், 'திரும்பிப்போ மோடி' என, கோஷமிடுவதும் தொடர்ந்து நடக்கிறது.
அந்த வெறுப்பை, தி.மு.க.,வும், அதன் ஆதரவு ஊடகங்களும், மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து, பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்து விட்டனர். அந்த அளவுக்கு, தமிழக மக்களால் வெறுக்கப்படுவதற்கு, தமிழகத்திற்கு மோடி என்ன துரோகம் இழைத்தார்?