அது, 2007 டிச., 15. திருநெல்வேலியில், தி.மு.க., இளைஞர் அணி மாநாடு. கருணாநிதி பேசுகிறார்: தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி, 'அவையத்து முந்தி இருப்பச் செயல்' என, வள்ளுவர் கூறி உள்ளார். இது, அவை என வைத்துக் கொண்டால், இங்கு எல்லாரும் பாராட்டி பேசினீர்களே. இதுதான் முந்தியிருப்ப செயல்.
இதை அவருக்கு நான் செய்து முடித்து விட்டேன்.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, 'இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்' என்கிறார் வள்ளுவர். அதாவது, ஸ்டாலின் செயல்களைப் பார்த்து, ஊரில், நான்கு பேர், 'இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ' என புகழ்ந்தால்,
அது தான் தந்தைக்கு மகன் ஆற்றும் உதவியாகும். அதை, ஸ்டாலின் செய்வார் என்ற, நம்பிக்கை எனக்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல், இன்று ஸ்டாலின், தி.மு.க., தலைவராகி, கட்சியை வழிநடத்தி வருகிறார். அவரது தந்தையை போல், ஸ்டாலினும் தன் மகன் உதய நிதியை, 'அவையத்து முந்தி இருப்பச் செயல்' என்ற அடிப்படையில், இளைஞர் அணி தலைவராக்கி, சேப்பாக்கம் வேட்பாளராக நிறுத்தி உள்ளார்.
தலைவர் எவ்வழி, தொண்டன் அவ்வழி என அந்தக் கட்சியில் உள்ள நிர்வாகிகள் அவரவர் மகனுக்கு கட்சிப் பதவியும், தேர்தல் சீட்டும் வாங்கிக் கொடுத்து பாரம்பரியம் காத்து உள்ளனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. 1
கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.
2
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.
இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. 🇮🇳🙏1
சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.
இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். 🇮🇳🙏2
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.
1 பிரம்மதேவன் ஸ்ரீ மகா விஷ்ணு தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியின் நிர்மலமாக பிரகாசத்துடன் கூடியதாகவும் சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை பிறப்பினால்
ஏற்படும் துக்கத்தை போக்குகின்ற லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, தமிழகத்தில், அவருக்கு எதிராக கடுமையான காழ்ப்பு துாண்டப்பட்டு வருகிறது.
அவர் தமிழகம் வரும் போதெல்லாம், கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலுான்கள் பறக்க விடுவதும், 'திரும்பிப்போ மோடி' என, கோஷமிடுவதும் தொடர்ந்து நடக்கிறது.
அந்த வெறுப்பை, தி.மு.க.,வும், அதன் ஆதரவு ஊடகங்களும், மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து, பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்து விட்டனர். அந்த அளவுக்கு, தமிழக மக்களால் வெறுக்கப்படுவதற்கு, தமிழகத்திற்கு மோடி என்ன துரோகம் இழைத்தார்?