" என்ற மஹ்மூதாவை பார்த்து புன்னகைத்து விட்டு சைக்கிளை தள்ளினார் காதர்..!
நோன்பின் காரணத்தினால் வலுத்து குரலெடுத்து சப்தமிட முடியாமல், "கேஸ் அடுப்பு பழுது பாக்குறதே..!" ன்னு சன்னமா குரல் கொடுத்து கொண்டே ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்தார்..!
"இந்தாங்க பழுது பாக்குறஹலே.. (2/22)
இங்க வாங்க..! இந்த அடுப்பு பத்த மாட்டேன்னுது என்னன்னு பாருங்க.." என்றவர் காட்டிய திசையில் இருந்த அடுப்பை கவனித்தார்.. வெகு நாட்களாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்தது.. பையிலிருந்து ஒரு பழைய துணியை எடுத்து அடுப்பை முழுவதும் துடைத்தார்.. (3/22)
பர்னரை கழட்டி பார்த்தார் முழுதும் துரு அடைத்து கொண்டிருந்தது.. துருக்களை நீக்கினார்.. பர்னரை சோதித்தார் எந்த பழுதும் இல்லாமல் இருந்தது.. அதை பழையப்படி மாட்டி.. அடுப்பை பற்ற வைத்தார்..
அந்த பெண்மணியின் முகம் மலர்ந்தது.. "எம்புட்டுங்க..? (4/22)
" என்ற பெண்மணிக்கு "இருபது ரூபாய்ங்க.." என்ற காதரிடம் "ஏங்க.. சும்மா தொடச்சி தானே போட்டீங்க.. இதுக்கு ஏன் அம்புட்டு..? இந்தாங்க பத்து ரூவா வச்சிக்குங்க.." என்று நீட்டிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்..
அதை வாங்கி பாக்கெட்டில் வைத்து கொண்டு நடையை கட்டினார் காதர்.. (5/22)
அந்த பெண்மணியோ சக பெண்ணிடம்.. "இந்தாருடி.. டவுன்ல காட்னேன்.. பர்னர் மாத்தனும்னு முன்னூறு ரூவா கேட்டான்.. வேணாம்னு வாங்கியாந்துட்டேன்.. இவரு பத்து ரூவால எரிய வச்சிட்டாரு..!" என்று பெருமை பீத்திக் கொண்டார்.. (6/22)
வெயிலின் கொடுமை தாளாத காதரு ஒரு வீட்டின் வாசலில் மரத்தின் நிழலில் ஒதுங்கினார்.. மணி பண்ணிரண்டு ஆகியிருந்தது.. மதியம் லொஹர் தொழுக பெரிய பள்ளிக்கு போய்டலாம் என்று மனதில் என்னியவராக பாக்கெட்டை சோதித்தார்.. முப்பது ரூவா தேறியிருந்தது.. சஹர் சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கனும்.. (7/22)
புள்ளைக்கு நோம்பு தொறக்க ஏதாவது வாங்கனும்.. நன்னாரி சர்பத் அவனுக்கு ரொம்ப புடிக்கும்.. வாங்கி கொடுத்தா சந்தோசப்படுவான்னு எண்ணியவாறு அங்கிருந்து புறப்பட எத்தனித்தப் போது..!
பத்து ரூவாய் தர்மம் என்று கணக்கிட்டவராக கஞ்சிவாளியில் நிரம்ப கஞ்சியை வாங்கிக் கொண்டு பள்ளிக்கு வெளியே வந்து நன்னாரியையும் மெதுவடையையும் வாங்கிக் கொண்டு திரும்பும் போது ஒரு இயலாத பெண்மணி இரு குழந்தைகளுடன் நின்றிருந்தார்..
அந்த குழந்தைகளின் "பசிக்குது.. (16/22)
" என்ற குரல் கேட்டதும் காதரின் கண் கலங்கியது.. வெரசா திரும்பி கொஞ்சம் ஆப்பம், வடை வாங்கிக் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் வைத்திருந்த பாத்திரத்தில் தான் வாங்கியிருந்த நோன்பு கஞ்சியை பகிர்ந்துவிட்டு.. சட்டைப்பையில் தேடினார்.. (17/22)
அசல் பணம் மட்டுமே மிச்சமிருந்தது.. அதிலிருந்து முப்பது ரூவாயை எடுத்து அவர்களின் கையில் திணித்துவிட்டு சைக்கிளை தள்ளினார் காதர்.. ஒரு மெல்லிய பூங்காற்று அவரை தழுவியது..
"மஹ்மூதா..!" என அழைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்து வாங்கியாந்த பொருள்களை கீழே வைத்தார் காதர்.. (18/22)
பொருட்களை கண்ட மஹ்மூதா நிலமையை புரிந்து கொண்டவராக "சஹருக்கு சோறாக்கி மொளவுத்தண்ணி வச்சிக்கலாம்.. கொல்லையில முருங்கை கீரை ஆய்ஞ்சி வச்சிருக்கேன்.. தேங்கா கீத்து மூணு இருக்கு.. அத வச்சி சம்பாளு வச்சிக்கலாம்.. நீங்க போய் ஒதுவு செய்ஞ்சிட்டு வாங்க.. (19/22)
குரான் ஓதிட்டு நோம்பு தெறக்க நேரம் சரியா இருக்கும்.." என்ற மஹ்முதாவின் வார்த்தைகளில் திருப்தியுற்று ரப்புக்கு நன்றி சொல்லியவனாக கொல்லை பக்கம் சென்றார் காதர்..
மஹ்மூதாவோ "பசியோட வந்தவனுக்கு உணவளிப்பதை இறைவன் தனக்கே உணவளிப்பதாக எடுத்து கொள்கிறான்.. (20/22)
"
"சக மனிதன் மீது இரக்கம் கொள்ளாதவன் மீது இறைவன் இரக்கம் காட்டுவதில்லை.."
என்ற நபிமொழிகளை சத்தமாக படித்து கொண்டிருந்தார்..
இறைவன் தனக்களித்திருக்கிற அபிவிருத்திகளை கண்டு மனம் நிறைந்தவராக, அதற்கு நன்றி செலுத்துவதற்காக ஸல்லாவை விரித்து தொழுகைக்கு நின்றார் காதர்..! (21/22)
தென்தமிழகத்தில் 1650 - 1720 காலகட்டத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளலாக அறியப்படும் சீதக்காதியின் இயற்பெயர் ஷெய்க் அப்துல் காதர். நாளடைவில் இப்பெயர் செய்தக்காதிர், செய்தக்காதி, சீதக்காதி என மருவியிருக்கிறது. இவர் பிறந்த ஊர் கீழக்கரை, காயல்பட்டினம் இன்னும் சில
1/n
ஊர்கள் சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்களின் பரம்பரை தொழிலான வணிகத்தையே தொழிலாக கொண்டவர். மிளகு ஏற்றுமதியில் பெரும் செல்வம் சேர்த்தவர். இஸ்லாத்தின் மீதும் தமிழின் மீதும் தீராக்காதல் கொண்டவர். அதனாலேயே இந்து - முஸ்லீம் வேற்றுமை பாராது அனைத்து புலவர்களையும் ஆதரித்தார். மக்களுக்கு
2/n
வாரி வழங்கினார். 16ம் நூற்றாண்டின் இறுதியில். இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் விஜய ரகுநாத சேதுபதி, மதுரையில் உள்ள பாண்டியருக்கு கப்பம் கட்டி அடிமையாக இருப்பதை விட, தனித்தே ஆட்சி செய்வது எனத் தீர்மானித்தார். எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்கவும், அரண்மனையின் பாதுகாப்புக்காகவும்,
3/n
குழப்பத்துல/கோவத்துல எழுதுனா தப்பாகிரும்ன்னு நைட் வரை வெய்ட் பண்ணேன். காலைல எனக்கும் ஒவைசி பிஜேபி டீம்ன்னுதான் தோனுச்சு. நாம தமிழ்நாடு என்கிற சேஃப் ஜோன்ல இருக்கோம். அதனால அங்குட்டு படிக்காத ஏழை முஸ்லீம் சமூகம் பட்ற பாட்டை நேரடியா ரியலைஸ் பண்ண முடியலன்னு நெனைக்கிறேன்.
1/9
வரப்போற காலங்கள்ல ஆயிரம் லெட்டர்பேட் கட்சிகள் இருந்தாலும் முஸ்லீம்களுக்கு ஒற்றை தேசியத்தலைமை அவசியம்ன்னு நினைக்கிறேன். அது இன்னைக்கு டெம்ப்ரவரியா ஜெயிக்கறதை விட ரொம்ப அவசியம். ஏன்னா பாஜக 2039 வரை பிரதமர் வேட்பாளர்களை முடிவு செய்து வைத்திருக்கிறது...
2/9
ஒவைசிக்கு தன் கட்சியை 20 கோடி முஸ்லீம்களின் தேசிய பிரதிநிதியாக மாற்றும் எண்ணமிருக்கிறது. அதனால்தான் எப்போதும் தனியாக நின்று செயல்பட விரும்புகிறார். தனிப்பெரும் கட்சியாக விரும்பும் எந்த ஒரு கட்சியும் யாருடனும் கூட்டு சேராது. இது வழக்கமான நடைமுறைதான்..
3/9
நிர்பயா ஞாபகம் இருக்கிறதா? அதுவும் கேங் ரேப் டு மரணம்தான்.
சப்தர்ஜங் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். ஆளும் கூட்டணியின் தலைவி போய் பார்த்தார். உறவினர்களுக்கு உறுதி அளித்தார்.
ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அவர்களையும் சந்தித்தார். போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸ் தடை போடவில்லை.
1/4
அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை மீது சிலர் சந்தேகம் கிளப்பினர். அரசு அவர்களை மிரட்டவில்லை. நிர்பயாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. என்றாலும் பலன் இல்லை.
சடலம் கொண்டுவரப்பட்டது. பிரதமரும் கூட்டணி தலைவியும் ஏர்போர்ட்டில் காத்திருந்து பெற்று, குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
உற்றார் உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்ய முடிந்தது. டெல்லி முதல்வர் சுடுகாட்டுக்கு வந்து மரியாதை செலுத்தினார். மத்திய உள்துறை இணை அமைச்சரும் அங்கு இருந்தார். மாநில பிஜேபி தலைவர்கூட வந்திருந்தார்.
நேற்றிரவு Apple, Elon Musk, Bill Gates, Warren Buffett, Jeff Bezos, Mike Bloomberg, Barack Obama, Joe Biden, Kanye West, Kardashian, Benjamin Netanyahu ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டன.
Thread
அதன் மூலம் ஒரே ஒரு ட்வீட் போடப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்த பிட்காயின் கணக்கில் $1000 போட்டால் நான் $2000 திரும்பத்தருவேன் எனபதே அந்த ட்வீட்.
சில நிமிடங்களில் இந்த ஹேக்கை ட்விட்டர் கண்டுபிடித்திருந்தாலும் அதற்குள்ளாக ஒரு லட்சம் டாலர்கள் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு விட்டன.
மக்களையும் குறை சொல்ல முடியாது. அதிகாரப்பூர்வ கணக்கில் வந்த ட்வீட் என்பதால் நம்பி விட்டனர். ட்விட்டர் தளம் இந்த ஹேக்கை சரி செய்து கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இணைய பயன்பாட்டாளர்கள் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.