#TablighiJamaat தான் கொரோனோ பரவ முக்கிய காரணம் என கூறி அன்றைக்கு மத சாயம் பூசியவர்கள் அனைவரும் இன்னைக்கு உரிய பாதுகாப்பு இன்றி #KumbhMela நடந்து கொண்டு இருக்கு,சத்தமே இல்லை! மறதி தேசிய வியாதி ஒரு மதத்தை குறி வச்சி என்ன என்ன திருவாசகங்களை சொன்னார்கள் என கீழே பதிவு செய்கிறேன் :
#TablighiJamaat சென்று வந்தவர்கள் மனித வெடிகுண்டு போல?
-பாஜக முன்னாள் முதல்வர்
#TablighiJamaat போய்ட்டு வந்தவர்களை துப்பாக்கி வச்சி சுட்டா கூட தப்பு இல்லை
-பாஜக எம்.பி.
#TablighiJamaat Members தீவிரவாதிகள் போல நடத்தப்பட வேண்டும்.
-பாஜக எம்.பி.
இப்பொழுது,#kumbamela நடந்து கொண்டு இருக்கிறது,அரசு கணக்குபடியே 10 லட்சம் மக்கள் முதல் 50 லட்சம் மக்கள் வரை ஒரு நாளைக்கு வந்து செல்வார்கள் என கூறி இருக்கிறார்கள்!

இப்படி ஒரு சூழ்நிலையில் இவ்வளவு நபர்கள் கூடுவது ஆரோக்கியமா? பாதுகாப்பு வேண்டாமா?
அடுத்த காமெடி,#kumbamela SOP அவர்கள் தயார் பண்ணது தான்!
6 அடி தள்ளி தள்ளி நிற்க வேண்டுமாம்,கண்டிப்பா மாஸ்க் அணிய வேண்டுமாம்!

நடந்துச்சா? அடுத்த #Thread'ல் பார்ப்போம்
This is the Reality! இந்த விஷயத்துக்கு அன்னைக்கு இஸ்லாமியர்கள் அனைவரும் பார்த்த அந்த விஷ பார்வையோடு பார்த்தால் என்ன ஆகும்?

ஒரு நோய் வந்தது,அதற்க்கு தேவை தடுப்பூசி தான் தவிர,மதசாயம் அல்ல!

அன்றைக்கு,#TablighiJamaat கூடிய பொழுது,Covid19 Count என்ன? இன்னிக்கு Count என்ன?
இப்பொழுது,சிலர் #TablighiJamaat தவறு செய்யவே இல்லை என சொல்கிறாயா? என கேட்கலாம்,இது தான் நீதிமன்றம் சொன்னது :
தப்லிகி ஜமாஅத் சார்ந்தவர்கள் பல இடங்களில் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்டு,அவர்களுக்கு தீங்கு இழைக்கும் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது அவர்களை விடுதலை செய்கிறோம்.
என்னுடைய நோக்கம், #TablighiJamaat #KumbhMela பற்றி Compare செய்வது அல்ல,அன்றைக்கு மதசாயம் பூசிய விவகாரம் எவ்வளவு ஆபத்தானது என்பதை சுட்டிகாட்டுவதே! எண்ணிக்கை இவ்வளவு இருக்கும் பொழுது,#kumbamela பற்றி ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டாமா அரசு?
விளைவுகள் எல்லாருக்கும் தானே?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avudaiappan

Avudaiappan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ImAvudaiappan

23 Feb
பாபா ராம்தேவ்(பதஞ்சலி)#Coronil என்ற மருத்து கொரோனாவை குண்ப்படுத்த பயன்படுவதாகவும் இது DCGI & WHO Certified என மத்திய சுகாதாரதுறை அமைச்சர் Dr. Harshvardhan முன்னிலையில் அறிவித்து இருக்கிறார் இது ஒரு அப்பட்டமான பொய் என IMA அறிக்கையில் விளாசி இருக்கிறது.
மேலும் இது பொய் என WHO சொல்லி இருக்கிறது.இதில் கேள்வி எப்படி இப்படியான பொய்யை ஒரு மத்திய சுகாதார அமைச்சர் முன்னிலையில் சொல்ல முடிந்தது? அதுவும் அந்த அமைச்சர் ஒரு டாக்டரும் கூட என IMA விளாசல்.

இதற்க்கு முன்னாடியே இதே பிரச்சனை நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் என்ன சொன்னது தெரியுமா?
#Coronil என பெயரிட்டு இது, கொரோனாவை குணப்படுத்த கூடிய மருந்து என பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது!
மக்கள் செத்து மடிந்து கொண்டு இருக்கும் பொழுது,அவர்கள் பயத்தை பயன்படுத்தி பதஞ்சலி பணம்,பணம்,பணம் என லாபநோக்கத்தோடு எடுத்த முயற்சி இது!
-சென்னை உயர்நீதிமன்றம்
Read 5 tweets
13 Jan
#Master விஜய்-நாளைய எம்.ஜி.ஆர்.?? #Thread

நடிகர் விஜய்க்கு எம்ஜிஆர் ரொம்ப பிடிச்ச ஆளுமை,நடிகர்.அவர் படங்கள் பல இடத்தில் அவரோட " நிறைய Reference"தொட்டு இருப்பார்.

தளபதி விஜய்,எம்.ஜி.ஆர் ஆக முடியுமா?எதற்காக எம்.ஜி.ஆர் தேவைபடுகிறார் விஜய்க்கு?

பார்ப்போம்..
அவர் படங்கள் பல இடத்தில் அவரோட " நிறைய"தொட்டு இருப்பார் பிகில் படத்தில் "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே" பாட்டு பாடி கொடுத்த "Reference" முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்போ வரை விஜய் எப்படி "சுறா" படத்தை பண்ணார்?அதுவும் அவரோட 50வது படமாக என கேள்வி வரலாம்..
அதுக்கான காரணம் அந்த படத்தில் அவருக்கு "மீனவர்" ரோல் அவ்வளவு தான்.

எம்.ஜி.ஆர்'க்கு "மீனவன்" ரோல் நல்ல ஆச்சு!

படகோட்டி,மீனவ நண்பன் படங்கள் எப்படி கை கொடுத்ததோ அப்படி "சுறா" அமையும் என நினைத்தார் விஜய்.ஆனால் அந்த சுறாவே வளையில் மாட்டிவிட்டது..
Read 17 tweets
12 Jan
சிங்கார சென்னை சிங்காரமாக இருக்கிறதா?

இந்த 50 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ்நாடு பல குறியீடுகளில் முன்னேறி இருக்கிறது.மாற்று கருத்து இல்லை.ஆனால் எவ்வளவு நாளுக்கு இதே பெருமையை பேச போகிறோம்?

பெரிய மெட்ரோ சிட்டிகளில் ஒன்று சென்னை.அடிப்படை கட்டுமானங்கள் பல சிறப்பாக இருக்கிறது1/n
என சொல்லும் பொழுது கிட்ட தட்ட நாங்க யாரு தெரியும்ல ? என்ற தரத்தில் பழைய சாதனைகளையே பேசி வருகிறோம்.

சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது என்பது தான் நிதர்சமான உண்மை. கடந்த சில ஆண்டுகளில் வேற வேற காரணங்களுக்காக நிலத்தடி நீர் உயர்ந்து இருக்கிறது என்பதும் உண்மை தான்..
ஆனால் அது போதுமா? நிச்சயம் இல்லை.
நிதி ஆயோக் 2020'ல் டெல்லி,சென்னை உட்பட சில நகரங்கள் நிலத்தடி நீர் மொத்தமாக இல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக சொன்னது! என்ன செய்துவிட்டோம் அதற்காக?

2021 ஆரம்பத்தில் இருக்கிறோம் இனி தான் கோடை காலத்தை நாம் பார்க்க இருக்கிறோம்.
Read 22 tweets
8 Jan
கடந்த இரண்டு நாட்களாக கீழே இருக்குற மாதிரி தான் வீட்டுக்கு போற வழி எல்லாம் இருந்தது.பெரிய மன உளைச்சல் உண்டானது.
தினமும் காலை ஆபீஸ்க்கு போகும் பொழுதும் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரம்பொழுதும் இதில் நடந்து தான் வீட்டுக்கு போய் வந்தேன்.
1/n
நான் வளர்ந்த விதத்தில் இப்படி சாக்கடையில் நடை பழகியதில்லை. ஒரு இரண்டு நாட்கள் இப்படி இருக்கவே கடுமையான மன உளைச்சல்.இரவில் தூங்கும்பொழுது கூட இதே சாக்டையில் நடப்பது போல உணர்வு.....

இதே வேளையில் தான் மலம் அள்ளும் தொழிலாளர்களை நினைத்து பார்க்கிறேன்
.நண்பர்கள் யாரும் திவ்ய பாரதி எடுத்த "கக்கூஸ்" ஆவணப்படத்தை பார்த்தது இல்லை என்றால் நிச்சயம் பாருங்கள்..அந்த வலியில் 1 சதவீதம் தான் இது என்றாலும் அந்த வலியே போதுமானதாக இருந்தது ஒரு சமூக பிரச்சனையை உணர.....
Read 13 tweets
5 Jan
சமீபத்தில் என் மகளுக்கான பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம்.டெக்கரேஷன் எல்லாம் சிறப்பாகவே செய்து முடித்தோம். சின்னதாக பலூன் ஆரச் ஒன்று ரெடி செய்ய சொல்லி இருந்தேன் அதுவும் குறை ஏதும் இல்லை.,நல்லாவே வந்து இருந்ததது!
எடுத்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது, 1/n Image
இன்னும் பெரிதாக பலூன் ஆர்ச் பண்ணி இருந்து இருக்கலாம்,கூட ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி இருந்து இருக்கலாம் என யோசிச்சிசேன்.இன்னும் கூட Grand ஆக இருந்து இருக்கும் என நினைச்சிகிட்டே....

அடுத்த நாள் அந்த டெக்கரேஷனுக்கான கணக்கை அந்த மண்டபத்தில் வைத்து முடித்து கொண்டு இருந்தேன்.
அப்போ அதை வடிவமைத்தவர் "சார் இந்த பலூனை விழாவுக்கு வந்த குழந்தைகளுக்கே கொடுத்து இருக்கலாமே?" என சொன்ன படியே அவரோட இருந்த பசங்களிடம் அதை தூக்கி மண்டபத்துக்கு வெளியே போட சொன்னார்....

வெளியேவும் போட்டனர்... கொஞ்ச நேரம் கழிச்சி வெளியே போய் பார்த்தேன்....
Read 9 tweets
26 Nov 20
நேத்து பெய்த கனமழை காரணமாகவும் பாதாள சாக்கடை சரியா Maintain-பண்ணாத காரணத்தினாலும்,ஏரி இருக்கும் இடமாக பார்த்து வீடு கட்டியதாலும் வீட்டிற்க்கு உள்ளே தண்ணீர் வந்துவிட்டது. இதை பற்றி மீடியாவிடம் மக்கள் சொன்னால் அல்லது பதிவு செய்தால் கிட்ட தட்ட Zombies போல பாய்ந்து வந்து 1/n
#Thread
"உன்னை யாரு ஏரிக்கு உள் வீடு கட்ட சொன்னது?" என பெரிய இயற்கை ஆர்வலர் போல காட்டிக்க முயற்சி பண்றாங்க சிலர்.உண்மையிலே ஏரியில் பேராசை கொண்டு வீடு கட்டியவர்களா அவர்கள்?

நிச்சயம் அதிகப்படியான மக்கள் குறைந்த வாடகையில் ஒரு வீடு! குழந்தைகளுக்கு பக்கத்தில் ஸ்கூல் இதெல்லாம் கணக்கு
பண்ணி போற வீடு தான் அது! அது அவங்களோட சொந்த வீடு இல்லை.ஆனா இவங்க ஏதோ அந்த ஏரியை அவங்க 2-Years ah ப்ளான் பண்ணி பித்தாலாட்டம் பண்ணி CMDA Approval வாங்கியவர்கள் போல பூமிக்கும் வானுக்கும் குதிக்கிறார்கள்!

சென்னையில் பாதி பேருக்கு இருக்கும் ஒரு கனவு "சொந்த வீடு".
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!