சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது?
தமிழ்நாடு அரசு பிளஸ் டூ தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல் மாணவர் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்!
மத்திய கல்வித் துறை - பிரதமர் மோடி தலைமையில் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகமாக இருப்பதாகக் கூறி, சி.பி.எஸ்.இ. (CBSE) நடத்தும் 12 ஆம் வகுப்புத் தேர்வை இவ்வாண்டு ரத்து செய்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஆனால், அதே காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு என்ற நுழைவுத் தேர்வினை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை! அதை நடத்தியே தீருவோம் என்று கூறுகிறார்கள்!
சி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வித் துறையின்கீழ் இயங்கும் செகண்டரி பள்ளித் தேர்வின் மதிப்பெண்கள், அதுபோலவே பிளஸ் டூ மெட்ரிகுலேசன் பள்ளித் தேர்வு என்ற மாநில பள்ளிக் கல்வித் துறை நடத்தும் தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டுதானே ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு இதுவரை கரோனாவின் வீச்சால் தள்ளிப் போடப்பட்டுள்ளது. சில மாதங்கள் கழித்து நிலைமை ஓரளவு சரியான பிறகு, பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்ற நிலையில், மத்திய கல்வித் துறை சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்துள்ளது.
இதையொட்டி தமிழ்நாடு அரசு பிளஸ் டூ தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்று கருத்துக் கூறுமாறு, பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்களின் கருத்தை - மக்களாட்சியின் மாண்புக்கேற்ப கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
எட்டாவது, பத்தாவது வகுப்புத் தேர்வின் நிலை வேறு. பிளஸ் டூ வகுப்புப் பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள்தான் அவர்கள் மேலே கல்லூரியில், பல்கலைக் கழகங்களில் சேர்ந்து தொழிற்படிப்போ, மருத்துவப் படிப்போ, பட்டப் படிப்போ படிப்பதற்கு அடிப்படை கட்டுமானமாக அமையும் நிலை உள்ளது.
மாணவர்களின் நலனா? வெறும் தேர்வா? எனும்போது, முக்கியத்துவம் மாணவர்களின் உயிர்தானே என்று கூறத் தோன்றும்.
மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் முடிவு எடுக்கப்படவேண்டும்.
ஆனால், அதேநேரத்தில், அறிவுபூர்வமாக ஆழமாகச் சிந்தித்தால், மாணவர்கள் உயிருக்கும், உடல்நலத்துக்கும் பாதிப்பு வராத அளவுக்கு இப்பிரச்சினையில், ஒரு சிறந்த முடிவை எடுப்பது அவசியம்; அவர்களது எதிர்கால வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான முடிவு எடுக்கப்படவேண்டும்.
இந்தத் தேர்வினை மேலும் தள்ளிப் போடுவதோடு, நிலைமை சற்று தணிந்துவரும்போது, அத்தேர்வை போதிய - தக்க பாதுகாப்பு முன்னேற்பாட்டுடன் எழுத வைப்பதுபற்றி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை யோசிப்பதும், முடிவு எடுப்பதும் இன்றியமையாத ஒன்றாகும்.
தேர்வு நடத்தும் கூடங்களில் நல்ல இடைவெளி அமைத்து, தக்க சுகாதார பாதுகாப்பினை ஏற்படுத்தி, மாணவர்களின் எண்ணிக்கையை மய்யங்களில் குறைத்து, மய்யங்களையும், மேற்பார்வையாளர்களையும் அதிகரித்து, முகக்கவசம் மற்ற முன்னெச்சரிக்கையுடன் நடத்த யோசிப்பது நல்லது.
சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது? இதில் உள்ள சூது சூட்சமத்தைப் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது.
நுழைவுத் தேர்வை திறனறிவுத் தேர்வு என்று ஆக்கி, பள்ளிப் பாடத் திட்டங்களுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை தங்களது முழு அதிகாரத்தின்கீழே (ஏற்கெனவே கொண்டு வந்துள்ள கல்வியை) மத்திய அதிகாரமே ஆக்கிரமித்துக் கொண்ட நிலையை மேலும் ஆணியடிப்பதோடு, ...
கல்லூரிகளில் நுழையவே இதுபோன்ற நுழைவுத் தேர்வே மீண்டும் என்பதைத் திட்டமிட்டு புகுத்தவே இந்த ஏற்பாடு நடத்தப்படுகிறதோ என்ற அய்யம் பரவலாக பல பகுதிகளில் நிபுணர்களிடையே, கல்வியாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உச்சநீதிமன்றத்தில் நேற்று (3.6.2021) ஜஸ்டீஸ் U.U. லலித், ஜஸ்டீஸ் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
1/16
ஜனநாயகத்தில்- அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்பதையொட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத்துவா என்ற பத்திரிகையாளர், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ‘கோவிட்’ என்ற கரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும், 2/16
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் புல்வாமா, பாலாகோட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றியைக் காட்டி வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் என விமர்சித்து, 2020 மார்ச் 30ஆம் தேதி (30.3.2020) எழுதப்பட்ட கருத்துகளுக்காக, 3/16
இன்று (ஜூன் 3 - 2021) ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்த முத்தமிழ் வித்தகர் கலைஞரின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா! #HBDKalaignar98
கரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அடக்கத்தோடு ஆங்காங்கே உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க!
கலைஞர் உருவத்தால் மறைந்தாலும், உணர்வுடன் திராவிட இனத்தோடு என்றும் வாழ்பவர். #HBDKalaignar98
தந்தை பெரியாரின் ‘ஈரோட்டுக் குருகுலம்‘ அறிஞர் அண்ணாவின் காஞ்சி அரசியல் பள்ளி, அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் வற்றாத பாச மழை.
இவைகளால், கொள்கையால், உரிமைப் போராட்டமாய் என்றும் திராவிடத்தின் திசை மாறாமல் நடத்திச் செல்லும் கழகக் கலங்கரை வெளிச்சம் அவர்!
நமது நன்றிக் காணிக்கை!
-------------------------------------
திராவிட சமுதாயத்தின் பேராயுதமான தந்தை பெரியார் அவர்கள், தமது அறிவுப் பட்டறையில் வார்த்தெடுத்துத் தந்த போராயுதம்தான் இன்று (1.6.2021) 87 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை' நாளேடு என்ற ஏவுகணை! #viduthalai87
இந்த கரோனா தொற்று காலத்தில் பல பெரிய நாளேடுகளும் தவித்து திகைத்த நேரத்தில், தொய் வின்றி தனது அறிவுப் போரை நாளும் தொடர்ந்த வாளேடு இந்த நாளேடு - ‘விடுதலை!' #viduthalai87
அதற்காக ஆதரவுக்கரம் நீட்டி, புது உத்தியாம் பி.டி.எஃப். மூலம் பல லட்ச வாசகர்களை ஈர்த்து, புது வகைப் பாய்ச்சலை ஏற்படுத்திடக் காரணமான திராவிட இயக்க உறவுகளுக்கும், புதிய வரவுகளுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
ஏழு பேர் விடுதலை சட்ட நிலை என்ன?
குடியரசு தலைவர் அளவுக்குச் செல்லாமலேயே அரசமைப்புச் சட்டம் 161 பிரிவின்கீழ் மாநில அரசே விடுதலை செய்ய சகல அதிகாரமும் உண்டு! @mkstalin@CMOTamilnadu
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் - 30 ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனைக் கொடுமையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வது என்று ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொள்கை முடிவு எடுத்த நிலையில்,
தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவுப்படியே மாநில அரசுக்கு (அமைச்சரவைக்கு) உள்ள பரந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டிருந்தால், இத்தனை காலதாமதமும், தொடர் குழப்பங்களும் அதன் காரணமாக தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் அவலமும் உருவாகி இருக்காது.
சரியாக ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன் பார்ப்பனரல்லாத திராவிட இளைஞர்கள் - ‘‘பஞ்சம, சூத்திர'' - ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களை மனுவின் கல்வி மறுப்பு தீக்குழியினின்று காப்பாற்றி, பெருமை வாய்ந்த (சென்னை) மாநிலக் கல்லூரி- ‘பிரசிடென்சி காலேஜ்' (1/3)
(உயர்ஜாதியினரும், மேல்தட்டு வர்க்கத்தினரும், வெள்ளைக்காரரும் மட்டுமே கல்வி பயில உரிய கல்விக் கூடமாக இருந்த மாநிலக் கல்லூரி) - திராவிடர் ஆட்சியான, பனகால் அரசர் தலைமையில் அமைந்த ஆட்சியில், பார்ப்பனரல்லாத மாணவர்களைச் சேர்க்க - தனிக் கமிட்டி அமைத்து, (2/3)
அதன் கதவுகளைத் திறந்ததோடு, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக் கண்ணையும் திறந்த - ஆணை போடப்பட்டு செயலுறு கொண்ட நாள் - இந்நாள், இனிய நாள்!
திராவிடத்தால்தான் எழுந்தோம், புரிகிறதா? (3/3)
ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும்
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா?
தமிழக இளைஞர்களே, நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில்
உதயசூரியனை உதிக்கச் செய்வீர்!
உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவீர்!!
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் நடைபெறும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் நிதிநிலை மிகவும் மோசமாகியுள்ளதைப் பற்றிக் கவலைப்படாமல் ஏராளமான கடன்வாங்கி, இப்போது அளிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின்படி இக்கடன் தொகை ரூ.5லட்சத்து 70ஆயிரம் கோடி ஆக உயர்ந்துள்ளது.
பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தைக்கும்கூட ரூ.63 ஆயிரம் கடனோடு பிறக்கும் ‘கீர்த்தியை’ அதன் தலையில் கிரீடமாகச் சூட்டியுள்ளது அதிமுக அரசு.