நான் ஒரு சராசரி தமிழ்நாட்டு குடிமகன்.. கலைஞர் கருணாநிதி அவர்களை 'தமிழின தலைவர்' அப்படினும் போற்ற விருப்பம் இல்லாத, 'தமிழின துரோகி' அப்படின்னும் தூற்ற நினைக்காத சராசரி ஆள்
இலவச பஸ் பாஸ் திட்டம், ரேஷன் கடை திட்டம், இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துனது, தமிழ்நாட்டின
1/N
உள்கட்டமைப்பை மொத்தமாக மாத்தி போட்டதுன்னு கருணாநிதி அவர்களை கொண்டாட பல காரணங்கள் இருந்தாலும், 2009 இறுதி போர் அப்போ மௌனமா மட்டுமே இருந்தது, 2006-11 ஆட்சி காலத்துல நடந்த வேற சில கொடுமைகள்னு கோபம் ஒரு புறம் இருந்தாலும்..
எனக்கு எப்போவுமே ஒரேயொரு விஷயம்தான் புரியல..
1) வருஷா
2/N
வருஷம் ஜூன் 3ஆம் தேதி அன்னைக்கு, ட்விட்டர்ல 'Father of Corruption' 'திராவிடத்தால் வீழ்ந்தோம்'ன்னு trend பண்ற சங்கீகள், பிப்ரவரி 24 அன்னைக்கு 'A1 குற்றவாளி'ன்னு கோர்ட் தீர்ப்பு சொன்ன ஜெயலலிதா அவர்கள் பெயரை ஏன் trend பண்றதில்ல... அவங்களும் திராவிட தலைவர் தானேப்பா... குற்றம்
3/N
நிரூபிக்கப்பட்ட ஊழல் குற்றவாளிப்பா.. எது தடுக்குது, பார்ப்பன பாசமா?
2) "ஈழ துரோகி கருணாநிதி"ன்னு தம்பிகள் நெஞ்சு வெடிக்க கத்துறீங்க, சரி.. ஆனா, ராஜீவ் காந்தி மரணத்தப்போ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமிழ் மக்களோட உணர்வுகளை வெச்சு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவர்களை... பிரபாகரன்
4/N
அவர்களை 'தூக்குல போடணும்'னு சட்டமன்றத்துல தீர்மானம் நிறைவேற்றுன ஜெயலலிதா அவர்களை 'ஈழத்தாய்'னு நாம் தமிழர் தம்பிகள் சில்லறையை சிதற விடுறது என்ன லாஜிக்? 'ஈழ துரோகி ஜெயா அம்மா'னு சொல்லவிடாம தடுக்குறது 'சிறைப்பறவை' 'தியாக தாய்' சின்னம்மா மேல இருக்குற பாசமா? இல்ல, 'சித்தப்பா' மேல
5/N
இருக்குற மரியாதையா.. அதுவும் இல்லாட்டி, சட்டமன்றத்துல தீர்மானம் நிறைவேற்றுன மாமனாருக்கு வீரவணக்கமா?
3) 'முல்லை பெரியாறு அணையை காவு கொடுத்த கருணாநிதி'ன்னு கேள்வி கேட்குற தம்பிகள்... அந்த முல்லை பெரியாறு உட்பட தமிழர்கள் அதிகம் வாழ்ந்த இடுக்கி மாவட்டத்தை கேரள மாநிலத்துக்கு
6/N
விட்டுக்கொடுத்த காமராஜர் அய்யாவை கேள்வி கேட்குறதே இல்ல. அது ஏன்? தேவிகுளம், பீர்மேடு மட்டுமில்ல. கர்நாடகாவுல காவிரி ஆறு பிறக்குற குடகு மாவட்டத்தை கன்னடர்களுக்கு விட்டுக்கொடுத்ததும் காமராஜர் ஆட்சியிலதான்.அந்த Coorg தமிழ்நாட்டுல இருந்திருந்தா, காவிரி பிரச்சினையே இருந்திருக்காதே
7
அதை எல்லாம், எந்த தம்பிகளும் என்னைக்குமே கேள்வி கேட்டது இல்ல. எது தடுக்குது? தமிழ் குடி பாசமா?
கருணாநிதி அவர்களை திட்டுறதுல, விமர்சனம் பண்றதுல, வசை பாடுறதுலல்லாம் எந்த தப்பும் இல்ல.. ஆனா, எல்லா கேஸையும் அவர் மேல எழுதிட்டு, அவர் பண்ண எந்த நல்லதையும் பேசாம மத்த தலைவர்களுக்கு
8/N
எல்லாம் மட்டும் 'புனிதர்' வேஷம் போடுறப்போ தான் சங்கீகள், அரை சங்கீகளோட 'எரியுதுடி மாலா' சத்தம் அதிகம் கேட்குது..
கருணாநிதியை மட்டுமே நம்மளை திட்டவிட்டுட்டு, சைடுல ராஜாஜி மாதிரி தலைவர்களை கொண்டாடுறதும்.. ஜெயலலிதா அவர்கள் ஊழலற்றவர், எந்த தவறுமே செய்யாதவர் மாதிரி ஒரு பிம்பத்தை
9/N
கட்டமைக்குற சூட்சுமம் புரியுறப்போதான், ராஜாஜி முதல் காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதானு எந்த தலைவர் பத்தியும் அதிகம் பேசுறதை நான் சோஷியல் மீடியால குறைச்சுகிட்டேன். உடன்பிறப்புகளும், சங்கீகளும், தம்பிகளும் பேசுறதை வேடிக்கை மட்டும் பார்க்க ஆரம்பிச்சேன். தெய்வங்கள் மாறி
10/N
மாறி உண்மையை பேசுவாங்க.
ஆனா, ஒண்ணு... தமிழக அரசியல் வரலாற்றுல அதிகபட்ச பொய்யான செய்திகளும், வெறுப்பும் பரப்பப்பட்ட மனுஷன்னா... அது கருணாநிதி அவர்களா தான் இருக்க முடியும். அந்தளவுக்கு சங்கீகளை சம்பவம் பண்ணியிருக்கார்ன்னு தான் தோணுது.
2016 வரை கருணாநிதி அவர்களை மிக அதிகம்
11/N
விமர்சனம் பண்ணவன், வெறுத்தவன் நான்.. அதுக்கு மிக முக்கிய காரணம், 2006-11 ஆட்சி. ஆனா, அவரையும் மற்ற தலைவர்களையும் இன்னும் அதிகம் படிக்க, புரிஞ்சுக்க தொடங்குனதும் இங்கே 'கரைகள் இல்லாத கைகள்' எதுவுமே இல்லன்னு புரிஞ்சது. ஆனா, இந்த மனுஷன் மேல மட்டும் அதிக வெறுப்பு இருக்க காரணம்,
12/N
இங்கே புரையோடி கிடக்குற diluted சங்கீத்தனம். 'Father of Corruption'னு ஒவ்வொரு வருஷமும் இவங்க எல்லாம் நிறுவ முயற்சி பண்ணாலும், அந்த மனுஷனோட ஆளுமை பல தலைமுறைகளுக்கு நின்னு பேசும். விமர்சனங்கள் தாண்டி, எப்போவும் அவர் மேல மரியாதை உண்டு!
அண்ணாதுரை அவர்களுக்கு அடுத்தபடியா கடந்த
13/N
50 ஆண்டுகள்ல மாநில சுயாட்சியோட அருமையை உணர்த்தியவர் 🔥 பெரியார், அண்ணா வழியில அவர்கள் செய்ய நினைச்ச பல விஷயங்களை செஞ்ச ஒரே தலைவர்ன்னு கூட சொல்லலாம்...
உங்க தாயார் பத்தி தவறா பேசிட்டாங்கன்னு குரல் தழுதழுக்க அழுது பேசியிருந்தீங்க. நிஜமாவே பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது. தமிழக மக்கள் சார்பா உங்களுக்கு எங்களோட வருத்தங்களை தெரிவிச்சுக்குறேன். ஆ.ராசா அவர்களுக்கு கண்டனங்கள். இன்னைக்கு அவரும்
1/N
மன்னிப்பு கேட்டிருக்கார்ன்னு நினைக்குறேன்.
ஆனா, பல விஷயங்களுக்கு நீங்க வருத்தம் தெரிவிக்க வேண்டியிருக்கு, மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கே ஐயா... அதை எப்போ செய்ய போறீங்க?
'லேடியா, மோடியா'ன்னு கேட்டு ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த #பாஜக கூட கூட்டணி வெச்சீங்க... பதவியை காப்பாத்த,
2/N
கட்சியை அடகு வெச்சீங்க
எந்த நீட் தேர்வை கொண்டு வரமாட்டேன்னு ஜெயலலிதா சொன்னாங்களோ.. அதை கொண்டு வர காரணமா இருந்தீங்க. அனிதா உட்பட எத்தனையோ மாணவிகள் #நீட் தேர்வால தற்கொலை பண்ணப்போ, நீட்டை தடை பண்ணாம 'திமுக தான் நீட்டை கொண்டுவந்துச்சு'ன்னு எதிர்க்கட்சி மேல பழியை போட்டுட்டு
3/N
சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே என்கிட்ட கேட்குற ஒரு கேள்வி... "#பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"
ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்ன்னு நினைச்சேன்... in fact, சீக்கிரமே என் தலைவன் பெரியார் பத்தி ஒரு பெரிய வீடியோவோட வர்றேன் 🙂
"பெரியார் தான் எல்லாம்
1/N
👇👇👇
பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்...
'ஆமாம்... பெரியார் தான்டா எல்லாம் பண்ணார்!' ❤️
- வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை
நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர் நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.
- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார்.
மொழிரீதியா மதரீதியா எதிர்த்தா, அது ஹிட்லர் ஆட்சியில நடந்த யூத இன அழிப்பு மாதிரியும், இலங்கையில நடந்த தமிழின படுகொலை மாதிரியும், குஜராத்ல நடந்த மதக்கலவரம் மாதிரியும் தான் முடியும்.
'உங்கப்பன் தமிழனா இருக்கலாம், ஆனா உங்க அம்மா தெலுங்கு பேசுறாங்க... நீ தமிழன் இல்ல' 'உன் மனைவி
2/N
மனைவி கேரளத்தை சேர்ந்தவங்க.. அதனால நீ தமிழன் இல்லை'ன்னு அடையாளம் பிரிச்சா, கடைசியில #சீமான் அண்ணன் கூட தமிழரா இருக்கமாட்டார்...
பிறப்பால யார் தமிழன் அப்படின்னு கண்டுபிடிப்பேன்னு ஒவ்வொருத்தன் ஜாதி என்னன்னு கேட்டுக்கிட்டு.. DNA test, Urine test எடுத்துட்டு இருந்தா.. உங்க
3/N
• பேரறிஞர் #அண்ணா என்ற ஒருவர் இல்லையென்றால், இந்நேரம் நாமும் 'ஹிந்தி திணிப்பு தவறில்லை' என்று சொல்லிக்கொண்டு இருந்திருப்போம்.
• ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி, காஷ்மீரி, மராத்தி ஆகிய பிராந்திய மொழிகள் போல, #தமிழ் மொழியும் ஹிந்தியால் காவு
1/N
வாங்கப்பட்டு அழிந்து ஒழிந்து போயிருக்கும்.
• சொந்த ஜாதியிலேயே திருமணம் செய்தாலும், கல்யாண நாள் வரை கணவன் முகத்தை கூட பார்க்க முடியாது என்கிற நிலையிலிருந்து... ஜாதியை தாண்டி, மதத்தை தாண்டி காதல் திருமணம் செய்ய #பெரியார் வலியறுத்திய சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டம்
2/N
கொண்டுவந்தவர் அண்ணா.
• தமிழர்களின் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை 'முட்டாள்தனம்' என சொன்னதற்காக பிரதமர் நேருவையே எதிர்த்து போராடியவர்.
• மதராஸ் மாகாணத்தை பெயர் மாற்றி, 'தமிழ்நாடு' என்று பெயரிட்டவர்.
• அண்ணா இல்லையென்றால், இந்நேரம் மற்ற மாநிலங்கள் போல தமிழ்நாட்டையும்
3/N
சில ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஒரு பள்ளியில் பேசுகிறார். தன்னுடைய தாய்மொழியான தமிழ், பிரதமருக்கு தெரியாது என்ற காரணத்தால் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கேள்வி
1/N 👇👇
கேட்கிறார் நெல்லையை சேர்ந்த ஒரு மாணவி. அது மொழி அறிவு!
கேள்வி 2: மொழித்திணிப்பு என்றால் என்ன?
ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட மாணவியிடம், அவருக்கு ஹிந்தி தெரியுமா தெரியாதா என்று கூட கவலைப்படாமல் பிரதமர் மோடி ஹிந்தியில் பதிலளித்தார். அதுதான் மொழி திணிப்பு.
கேள்வி3: மொழி
2/N 👇👇
உரிமை என்றால் என்ன?
எப்போதெல்லாம் ஹிந்தி திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், "என் மொழியில் எங்கள் அரசாங்கத்திடம் பேசவேண்டும், அரசும் எங்கள் மொழியில் எங்களிடம் பேசவேண்டும்" என்று ஹிந்தியை தாய்மொழியாக கொண்டிராத தமிழகம் உள்ளிட்ட பிறமாநில மக்கள் குரல் கொடுக்கிறார்கள் இல்லையா?