நீண்ட திரெட் :
நேற்று இந்நேரம் டைம்லைன் இருந்த கொதிநிலையை எண்ணிப் பார்க்கிறேன்.
தடுப்பூசி முகாம்களுக்கு மக்களைக் கொண்டு வரும் பணியைச் செய்ய சென்று கொண்டிருந்த நேரத்தில் டிவிட்டரை திறந்தபோது திருச்சியில் நடந்த சம்பவத்தை அறிந்தேன். இதென்ன! தவறான அணுகுமுறையாக உள்ளதே என நினைத்தபோது
நண்பர் ஒருவர் அழைத்து பாதிக்கப்பட்ட பையனுக்கு உதவ முடியுமா என கேட்டார். அந்தப் பக்கம் நடந்தது எதுவென தெரியலையே என்றேன். அந்த சம்பவத்தின் இணைப்பை அனுப்பி வைத்தார். பார்த்தால் அது நான் ப்ளாக் பண்ணி வைத்திருக்கும் ஐடி. அப்போதே நான் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கே
அதற்கான எதிர்வினையாக உங்களிடம் எழுந்த கோபமும், ஆத்திரமும் என்னையும் உள்ளே இழுத்து விட்டு விட்டது. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்களான @IlovemyNOAH2019 , @Surya_BornToWin போன்றோர் கூட சமநிலை இழந்திருந்ததை என்னால் இப்பவும் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் நிதானமாக தமது
கருத்துகளை சொல்பவர்கள் என நான் கருதும் @teakkadai1 @narsimp , @RagavanG , @arattaigirl போன்றவர்கள் கூட கோபமாக அதற்கான நடவடிக்கையைக் கோரியபோது, இளைஞர்கள் கொந்தளித்துப் போயிருந்ததில் வியப்பில்லை. நடந்த சம்பவத்துக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் உங்களுக்கு உத்தரவாதம்
தரும் பொறுப்பிலும் நான் இல்லை. அதைச் சொல்லும் அதிகாரமும் எனக்கில்லை. நான் உங்களைப் போன்றே பெருமளவு முற்போக்குக் கருத்துகள் கொண்ட ஒரு மனிதன். அந்தத் தகுதி மட்டும்தான் எனக்கு இங்கே. டிவிட்டருக்கு வந்து நான் கற்றுக் கொண்டது ஏராளம். நான் வியந்து பார்க்கும் திறமை கொண்ட இளைஞர்களுடன்
உரையாடும் வாய்ப்புகள் எனக்கொரு பொக்கிஷம். நான் பெற்ற பல்துறை அறிவுக்கு ஈடேதும் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி, நடந்து முடிந்த தேர்தலில் என்னை வளர்த்தெடுத்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வர உங்களின் உழைப்பும், பங்களிப்பும் நான் நேரில் பார்த்து அறிந்தவை. நன்றி மறப்பது
நன்றல்ல.. என்பதால் உள்ளே வந்து உங்களுக்கு ஒரு ஆறுதலும், நம்பிக்கையும் சொல்லிச் சென்றேன். (அதற்காக எனக்குக் கிடைத்த விதவிதமான ஏச்சுக்களும், ஏளங்களும் சுவாரஸ்யமானவை. அப்போது வந்த வருத்தம் இப்போதில்லை. நீரடித்து நீர் விலகாது என்பது ஆன்றோர் சொல்).
நண்பர் மூலமாக எண்ணைப் பெற்று அந்த
முட்டாளை அழைத்து ஆறுதல் சொன்னேன். முட்டாள்தான்! வேறென்ன?
தனது தொழில் நிறுவனத்தின் பெயரில் டிவிட்டர் கணக்கைத் தொடக்கி அதில் கட்சித் தலைவர்களைக் கேவலமாக பதிவிட்டிருக்கும் மடத்தனத்துக்கு அதுதானே பெயர்! தனது தொழிலுக்கு பாதிப்பு வருமே எனும் குறைந்தபட்ச அறிவுகூடவா ஓர் இளைஞனுக்கு
இருக்காது! அதிலும் கலைஞரை வசைபாடிய ட்வீட்களும், மூன்று நாட்கள் முன்வரை திமுக மீது வன்மம் காட்டிய ஸ்கிரீன் ஷாட்டுகளும் காண நேரிட்டது. எனினும் இங்குள்ளவர்களின் அழுத்தத்தால் அந்தத் தம்பியிடம் நடந்ததைக் கேட்டறிந்தேன். இந்தச் சம்பவத்தில் இவர் மீது குற்றம் இல்லை என்பது எனது கருத்து.
பிரபாகரனை "முட்டைபோண்டா" என உருவக்கேலி செய்தமைக்கு கொந்தளித்து எழுந்தவர்களின் டைம்லைனில் சென்று பார்த்தால் மொத்தமும் கேடுகெட்ட விமர்சனங்களும், வசைச் சொற்களுமாகவே உள்ளது.
இருந்தும் சரவணன் என்பவர் அதைக் கண்டித்தவுடன் இவர் பதிவை நீக்கியுள்ளார். அத்துடன் அந்தப் பிரச்சனை முடிந்தது.
அதன் பின் நடந்தது அனைத்துமே வெகு கவனமாகத் திட்டமிடப்பட்ட நாடகம் என தெரிகிறது. ஒருவேளை அழைத்துக் கண்டித்த சரவணன் என்பவர் மட்டுமே கூட நேரில் வந்திருந்தால் 10 நிமிடங்களில் இவர் மன்னிப்புக் கேட்க, இருவருமே நண்பர்களாக சேர்ந்து டீ குடித்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், திட்டமிடப்பட்ட
சம்பவம் என்பதால் பலபேர் கும்பலாக இவரின் கடைக்கு வருகின்றனர். அதற்கு தலைமை ஏற்று புதிதாக ஒரு கேரக்டர் உள்ளே நுழைவது இந்த திட்டத்தின் மையக்கரு.
அதன்பின் நடந்ததை நீங்கள் அறிவீர்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய வழக்கத்தை இந்த இளைஞர்கள் உருவாக்கி உள்ளனர். அதை நாம் தமிழர் உட்பட
சிலர் நேரடியாக ஆதரிக்கின்றனர். இனிமேல் கருத்து வேறுபாடுகள் வரும்போது கூட்டத்தை அழைத்துக் கொண்டு எதிர்தரப்பினரின் வீடுகளுக்கு, அலுவலகத்துக்குப் போய் நியாயம் கேட்கலாமாம்! அதற்கு பெயர் "அன்பால் திருத்துவதாம்"!. தமிழ்நாட்டின் பெரிய கட்சிகள் இப்படி அன்பால் திருத்தப் புறப்பட்டால் ஒரே
ஒருவராவது எதிர்கருத்து சொல்லிவிட இயலுமா? உங்கள் வீடுகளில் திடீரென ஒரு கும்பல் உள்ளே புகுந்து உங்களை அன்பால் திருத்தினால் உங்கள் குடும்பத்தின் மனநிலை என்னாகும்? நீங்களாவது மெனக்கெட்டு திட்டமிட்டு 10 பேரைத் திரட்டிக் கொண்டு போக வேண்டும். தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுக்கும் அந்தத்
தெருவிலேயே 10 பேர் இருப்பார்கள். நீங்கள் அவர்களின் தலைவர்களைப் பேசும் பேச்சுகளுக்கு அவர்கள் "அன்பால் திருத்த முயன்றால்" என்னாகும்? விஜயலட்சுமி என்பவர் சீமானைப் பேசிய பேச்சுகள் நினைவிருக்குதானே! நாளை அவர் அன்பால் திருத்த சீமான் வீட்டுக்குப் புறப்பட்டால் அது கருத்துரிமையில் வருமா?
கடைத்தெருவில் பொதுக்கூட்டம் நடந்தால், மாற்றுக்கட்சியினர் நடத்தும் கடையிலேயே சேர், பெஞ்ச் வாங்கி தொண்டர்கள் அமர்ந்து கேட்டுட்டு, போகும்போது நன்றி சொல்லி திரும்ப தந்து விட்டுப் போகும் ஊர் நமது. தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள கேடுகெட்ட ஈனச்செயலை ஒருவர் செய்வது மோசமான முன்னுதாரணம்
எனில், அதை ஆதரித்து அறிக்கை விடுத்தது அதைவிட மோசமான செயல். "பிரபாகரன் எனும் டிரேட்மார்க்கில் யாருக்கு அதிக பங்கு" என்பதற்காகப் பிரிந்து சென்ற பங்காளிகள் நடத்திய கவன ஈர்ப்பு நாடகம் என்பதை அரசியல் அறிவுள்ளோர் யாரும் புரிந்து கொள்ள முடியும். அதற்காகவே உள்ளூரிலேயே தேர்வு செய்யப்பட்ட
Weak target தான் இந்த Car Spa தம்பி வினோத். இத்தனைக் கருத்து மோதல்கள் இருக்கே! தப்பித்தவறி கூட 'அன்பால் திருத்த' இவர்கள் திருச்சியிலேயே இருக்கும் திமுக மாவட்டச் செயலாளர் நேருவின் வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள். இவர்களுக்குத் தேவை ஒரு பலியாடு.
நடந்த சம்பவம் மிக மோசமான தவறு. இதை
ஆதரிப்பவர்கள் அனைவரும் நாளை இதே போன்று நமக்கும் நடக்கக்கூடும்! அரசியல் கருத்து மோதலை முடிக்கும் இடம் அவரவர் வீடோ, அலுவலகமோ, கடைகளோ அல்ல என்பது அப்போது புரியும். தனது சுயலாபத்துக்காக தேன்கூட்டைக் கலைத்து விட்டனர். இந்தப் புதிய அராஜக வழக்கத்தைக் கண்டுதான் டிவிட்டரில் இத்தனைக்
கொதிப்பு எழுந்தது. எனவேதான் அதற்கான எதிர்வினையாக காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இனிமேலாவது, கருத்து மோதல்களைக் களத்துக்குக் கொண்டு வராதீர்கள். நேரில் சந்தித்தால் மென் சிரிப்போடு நலம் விசாரித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் நமது பண்பாட்டுத் தொடர்ச்சியை சுயநலனுக்காக அறுத்து விடாதீர்கள்
தோழர்களே!
இனி, சட்டம் தனது கடமையைச் செய்யும் என எதிர்பார்ப்போம். தொடர்ந்து அதற்கான அழுத்தத்தை நாம் தருவோம்.
குறிப்பு 1 : கருத்துமோதலில் கண்ணியம் என்பது ஒருவழிப் பாதையல்ல. நீங்கள் விதைப்பதுதான் முளைக்கும். இதே போன்ற தரங்கெட்டச் செயல்களை திமுகவினர் செய்தாலும் புகார்கள் பெறப்படும்
நடவடிக்கை எடுக்கப்படும். தலைவரின் உணர்வுகளைப் புரிந்து கட்டுப்பாடு காக்கவும். 🙏
குறிப்பு 2 : நடந்த சம்பவத்தில் அதே நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்கு பலரும் நான் தான் காரணம் என்பதைப் போல பதிவிட்டிருந்தீர்கள். நிச்சயம் நான் காரணம் அல்ல. உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும்,
உங்களுடன் இருந்து உங்கள் கருத்துகளுக்கு பலம் சேர்ப்பதும்தான் எனது கடமை. அதற்காகத்தான் தலைவர் எனக்கும் பொறுப்பை அளித்துள்ளார். அந்தக் கடமையின் பகுதிதான் எனது ஈடுபாடு. நமது உணர்வுகளைப் புரிந்து கொண்ட தலைமைக்கும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றக் களமிறங்கிய காவல்துறைக்கும் நன்றி. 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SKP KARUNA

SKP KARUNA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @skpkaruna

6 Jun
"மாநில வளர்ச்சி கொள்கைக்குழு" எனப்படும் முன்னாள் மாநிலத் திட்டக்குழுவுக்கு துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு தமிழக அரசின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரான அதிகாரங்களும், வசதிகளும் கொண்ட உயர்ந்த பொறுப்பாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில்
தமிழக அரசின் கொள்கைகள், மக்களுக்கான இலவசத் திட்டங்கள், கல்வி, மருத்துவ அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக வடக்கில் இருந்து சங்கிகள் நடத்திய மிகப் பெரிய பண்பாட்டுப் போரை நாம் எதிர்கொண்டோம். அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து நமது சமூகநீதி சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு
ஆதரவாக ஆதாரப்பூர்வமாக பேசியும், எழுதியும் இளம் தலைமுறையினருக்கு "நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம்" என ஆற்றுப்படுத்தி வழி நடத்திய பொருளாதார மேதைக்கு இந்த உயரிய கவுரம் அளித்தது மிகப் பொருத்தமே!
அடுத்ததாக பேரா. ம. விஜயபாஸ்கர். The Dravidian Model புத்தகம் எழுதிய ஆய்வாளர். அதுபோக
Read 7 tweets
5 Jun
இந்திய தபால் துறை :
நான் மிகவும் மதிக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் இது. உலகிலேயே மிகச் சிறப்பான கட்டமைப்பும், அர்ப்பணிப்பும் கொண்ட நிறுவனம் இது என்று கூட நான் சொல்வேன். சின்ன வயசிலே நான் பல பரிசோதனைகளை செய்து பார்த்த அனுபவத்தில் இதை சொல்கிறேன்.
நினைவு 1 : அட்லஸ் எடுத்து வடக்கே
ஒரு சின்ன ஊரின் பெயரைத் தேர்ந்தெடுப்பேன். 15 பைசாவுக்கு போஸ்ட் கார்டை வாங்கி அந்த ஊரில் ஒரு கற்பனைக் கேரக்டரை உருவாக்கி, உடைந்த ஆங்கிலத்தில் எங்க ஊர், கோவில் பற்றி, அன்றைக்கு மயில் பார்த்தது, வீட்டுப்பாடம் எழுதியது எல்லாம் டைரி போல எழுதி தபால் பெட்டியில் போடுவேன். நாட்கள் மிக மிக
மெதுவாக நகர்ந்த காலம் அது. பல நாள் கழித்து அந்த தபால் கார்டு மேலே பற்பல முத்திரைகளை வாங்கி குடுகுடுப்பைக்காரனின் ஒட்டுப்போட்ட துணி போல எனக்கே திரும்ப வரும். addressee not found என முத்திரை தாங்கி.. நான் கொடுத்த 15 பைசாவுக்கு மதிப்புத் தந்து அந்த அட்டையை பல ஆயிரம் மைல்கள் பற்பல
Read 10 tweets
3 Jun
+2 தேர்வை எப்படி நடத்தவது?
எனது யோசனைகள்.. பரிசீலினைக்கும் & விவாதத்துக்கும்.
1. சராசரியாக 8 லட்சம் பிள்ளைகள் +2 தேர்வை எழுதுகின்றனர்.
2. எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் 6 தேர்வுகள்தான்.
3. அதில் இரண்டு மொழிப்பாடங்கள்.
4. மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்கள்தான்
உயர்கல்விக்கான தகுதி மதிப்பெண்கள். சரிதானே!
எனது யோசனை :
1.) 8 லட்சம் பேர்களுக்கும் மொழிப்பாடங்களுக்கு அவர்களின் +1, +2 (பிற தேர்வுகள்) அடிப்படையில் மதிப்பெண்களைத் தந்து விடலாம். கூடுதலாக Covid Consideration ஆக 10 மதிப்பெண்களும் தரலாம்
2) வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள
கலை & அறிவியியல் கல்லூரி, பட்டயக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மீதமுள்ள 4 பாடங்களுக்கும் கூட இதே முறையில் மதிப்பெண்கள் வழங்கிவிடலாம்.
மேற்சொன்ன கல்லூரி / பாலிடெக்னிகளில் தேவைக்கும் அதிகமான இரு மடங்கு இடங்கள் உள்ளமையால் இவர்கள் கோரும் இடங்களைத்
Read 12 tweets
30 May
#பரிவு
முதல் அலையின் போது நண்பர் ஒருவர் ஸ்டான்லி #COVID பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். தனிமை, மவேற்று மனிதர்கள், கவச உடை அணிந்த பணியாளர்கள் என புதியச் சூழலைக் கண்டு கடுமையாக பதட்டமாகி ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. தலைமை டாக்டர், நண்பரின் உறவினர் யாரையாவது உள்ளே சென்று
உடன் இருந்து தைரியம் சொல்லச் சொன்னார். PPE kit கூட தருவதாக சொல்லி இருக்கிறார். தாய், தந்தை வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு அனுமதி இல்லை. சகோதரன் ஏதோ காரணம் சொல்லி விட்டான். மனைவியை உள்ளே செல்ல அவரது பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. நண்பர்கள் சிலர் துணிந்தபோதும் முயற்சி கைகூடவில்லை.
இறுதியில் யாருமே நேரில் சென்று பாராமலேயே, தனிமையில் அவன் இறந்து விட்டான்.
இன்று தொலைக்காட்சியில் முதல்வர் @mkstalin PPE Kit அணிந்து கொண்டு #COVID வார்டுக்கு செல்லும் காட்சியைப் பார்த்த நண்பன் இந்த நிகழ்வை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
முதல்வர் ஸ்டாலினுக்கு 69
Read 6 tweets
28 May
திரியின் இரண்டாவது, மூன்றாவது ட்வீட்லேயே ராஜகோபாலனை ரிலீஸ் பண்ணிட்டாங்க. அவர் குற்றம் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெறுவார் எனும் நம்பிக்கையை கூட வாழ விடலை. இதுதான் நான் சொல்லும் நியாயமற்ற ஒப்பீடு. நாம நிற்க வேண்டியது victim பக்கம் எனில், ஒற்றைக் குரலாக பள்ளிக் குழந்தைகள்
பக்கம் நிற்க வேண்டாமா? வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஜட்ஜ்மெண்ட் தருவதும், விசாரணைக்கே வராத வழக்கை உடன் ஒப்பிட்டு பேசுவதும் எந்த விதத்தில் இந்தப் பிள்ளைகளுக்கு உதவும்?
மைனர் குழந்தைகளின் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான வன்கொடுமையும் வெவ்வேறு. தனிதனி குற்றங்கள், சட்டங்கள்.
அழக்கூட தெரியாத குழந்தைகளை பாதுகாப்பதுதான் முன்னுரிமை. குடிச்சுட்டு பஸ் ஓட்டுறவனும், குடிபோதையில் பைக் ஓட்டுறவனும் ஒரே குற்றத்தை செய்யலை.
இந்த நேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசும்போது மேலும், மேலும் பல தரப்பு வாதங்கள் வந்து குவிந்து மாணவிகளுக்கு நடந்த வன்கொடுமை மீதான கவனத்தை
Read 4 tweets
28 May
ஒரு திட்டம் : உங்கள் கருத்துகளை சொல்லுங்க.
வீட்டுக்கே வந்து ப்ரஷ் காய்கறிகளை தரும் வண்டி.
1. இது அந்தந்தப் பகுதி / ஊர் கோ.ஆப் சொசைட்டி மூலம் இயக்கப்படும்.
2. கொள்முதலை நேரடியாக விவசாயிகளிடம் வாங்க வேண்டும். (பால் சொசைட்டி போல).
3. சுத்தம் செய்வது, தரம் பிரிப்பது, எடை & பேக்கிங்
சுய உதவிக்குழுக்கள் நியாயமான கூலியில் செய்து தருவார்கள்.
4. ஏற்கனவே பதிவு செய்து, ஒரு மாதத்துக்கான தொகையை முன்கூட்டியே கட்டி இருப்பவர்கள், APP மூலம் அன்றைய தேவையை ஆர்டர் செய்யலாம்.
5. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு வண்டி வரும்போது, app notification வரும். போய்
நமது ஆர்டரை எடை பரிசோதனை செய்து பெற்றுக் கொள்ளலாம்.
6. இதில் முக்கியமான விஷயம் : காய்கறிகளுக்கு ஃபிக்ஸட் விலைதான். (பால் பாக்கெட் போல).
உதாரணத்துக்கு தக்காளி எப்போதுமே கிலோ 25 ரூபாய்தான். மார்கெட்லே 10 ரூபாய்க்கு கிடைத்தாலும் 25 தான்.. 80 ரூபாய்க்கு ஏறினாலும் ரூ 25 தான்.
இந்த
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(