A thread on Health Insurance - Part 1:👇

மருத்துவ காப்பீடு பற்றிய பதிவு:
1 மருத்துவ காப்பீட்டு
2 மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம்
3 மருத்துவ காப்பீட்டின் நன்மைகள்
4 மருத்துவ காப்பீட்டின் வகைகள்
5 மருத்துவ காப்பீட்டை பற்றிய தவறான புரிதல்கள்
6 மருத்துவ காப்பீட்டை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
7 மருத்துவ காப்பீட்டைத் தேர்வு செய்யும் முறைகள்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
பரப்பரப்பாக ஓடி கொண்டிருக்கும் உலகத்தோடு, நாமும் வேகமாக ஓடும் இந்த காலக்கட்டத்தில் நமது பாரம்பரிய உணவு முறைகள், உடற் பயிற்சிகளை மறந்ததனால் மற்றும் பல காரணமாக பல நோய்கள் மற்றும் உடல் நலமின்மை ஏற்படுகிறது.
அந்த மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நமக்கு தேவையானது மருத்துவ காப்பீடு.
மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்பது காப்பீட்டு ஒப்பந்தமாகும், அந்த ஒப்பந்தத்தில் பாலிசி வாங்கிய பாலிசிதாரருக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஈடுகட்டும் என்று குறிப்பிட்டுக்கிருக்கும்.
ஒருவரது நிதித் திட்டமிடலில் மருத்துவ காப்பீடு மற்றும் கால காப்பீட்டைக் கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும். ஒருவர் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் மருத்துவ காப்பீடு எடுப்பது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
2. மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம்
- உடல் நலமின்மை என்பது எப்பொழுது வேண்டுமாலும் வரலாம் அதை யாராலும் கணிக்க முடியாது, ஆனால் ஒருவர் நிச்சயமாக அதற்கான நிதி தேவைகளுக்குத் தயாராக இருக்க முடியும். அதற்கான வழிகளில் ஒன்று தான் மருத்துவ காப்பீடுத் திட்டம்.
மருத்துவ காப்பீடு என்பது மருத்துவ செலவுகளை ஈடுகட்டும் திட்டம் மட்டுமல்ல, ஆனால் உண்மையில், அது ஒருவரது நிதி வாழ்க்கையை காப்பீடு செய்கிறது.
மருத்துவ காப்பீடு இல்லாதிருந்தால், அவரது சேமிப்பு மற்றும் நிதி முதலீடுகளிலிருந்து பெரும் தொகையை மருத்துவ செலவுகளுக்கு செலுத்தவேண்டியிருக்கும்.
-மருத்துவ அவசரக் காலங்களில் இந்த காப்பீடு தேவையான நிதியை வழங்குகிறது.
-இது காப்பீடு செய்யப்பட்ட நபரை மட்டுமல்ல, குடும்பத்திற்கும் அவர்களின் மருத்துவ அவசரக் காலங்களில் நிதி உதவியை வழங்குகிறது.
-பணவீக்கத்தின் போது கூட அவசர மருத்துவ செலவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வாங்குவது மிக முக்கியம், ஏனெனில் மருத்துவ செலவுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒரு சிறிய பிரீமியத்தை வருடாந்திரம் செலுத்துவதன் மூலம் அதை தவிர்க்கலாம்.
- ஒரு நல்ல மருத்துவ காப்பீட்டுக் கொள்கையானது பொதுவாக மருத்துவர் ஆலோசனைக் கட்டணம், மருத்துவ பரிசோதனைகளுக்கான செலவுகள், ஆம்புலன்ஸ் கட்டணங்கள், மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஈடுசெய்யும்.
3.மருத்துவ காப்பீட்டின் நன்மைகள்
-சிறந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வாங்குவதன் மூலம். நீங்கள் சிறந்த சிகிச்சையைப் பெறலாம், எந்தவொரு மருத்துவ நிலையையும் சமாளிக்கலாம்.
-காப்பீட்டு நிறுவனம் பல்வேறு மருத்துவமனை நெட்வொர்க்குகளுடன் இணைந்து செயல்படுவதால் பணமில்லா சிகிச்சையைப் பெறலாம்
-காப்பீட்டாளர் முந்தைய ஆண்டில் எந்தவொரு சிகிச்சையிலும் கிளைம் இல்லை என்றால் போனஸ் (No Claim Bonus-NCB) கிடைக்கும்.
-முந்தைய NCB களின் அடிப்படையில் இலவச மருத்துவ பரிசோதனைகள் கிடைக்கும்.
-செலுத்தப்படும் பிரீமியத்தைப் பொறுத்து மருத்துவ அறை செலவுகளையும் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும்.
- மருத்துவ காப்பீட்டில் செலுத்தப்படும் பிரீமியம் வருமான வரிச் சட்டத்தின் 80 D பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
4. மருத்துவ காப்பீட்டு வகைகள்:
இந்தியாவில் பல வகையான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உள்ளன, அவற்றில் மிக முக்கிய மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்:
1. தனிநபர் மருத்துவ காப்பீடு திட்டம்:
பாலிசி எடுத்த தனிநபரின் மருத்துவ செலவுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளை மட்டுமே காப்பீட்டு நிறுவனம் ஈடுகட்டும்.
2. குடும்ப மருத்துவ காப்பீட்டுத் திட்டம்:
ஒரே பிரீமியம் மூலம் முழு குடும்பத்திற்கும் மருத்துவ காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறுவதற்கும் மற்றும் பாலிசியில் உள்ள குடும்பத்தில் எந்தவொரு உறுப்பினரின் மருத்துவமனையில் சேர்க்கும் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
3. மூத்த குடிமக்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம்:
இந்த காப்பீட்டு திட்டம் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அல்லது தனிநபர்களுக்கானது.
4. அறுவை சிகிச்சை மற்றும் சிக்கலான நோய் காப்பீட்டுத் திட்டம்: புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், மாரடைப்பு போன்ற சிக்கலான நோய்களுக்கு எதிராக சிகிச்சை தேவைப்படும் காப்பீட்டாளருக்கு இந்த திட்டம் பொருத்தமானது.
இந்த சிகிச்சையின் மருத்துவ செலவுகள் மிக அதிகமாக இருப்பதால், பிரீமியம் மற்ற காப்பீடுகளை விட அதிகமாக இருக்கும்.
5. டாப்-அப் காப்பீட்டுத் திட்டம்:
தற்போதுள்ள பாலிசியின் காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிட்டால் இந்த காப்பீட்டுத் திட்டம் மூலம் மேலும் காப்பிட்டு அதிகமாக பெறலாம்.
6. குழு / ஊழியர் காப்பீட்டுத் திட்டம்:
இந்த காப்பீடு நம் வேலை செய்யும் கம்பெனியின் காப்பீட்டு திட்டம், இது நம்மில் பலருக்கு உள்ளது.
7. கொரோன நோய் காப்பீட்டுத் திட்டம்:
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கானது, இந்த காப்பீட்டுத் திட்டம் மூலம் காப்பிட்டு பெறலாம் (Ex: கொரோனா கவாச்).
ஒவ்வொரு காப்பீட்டை பற்றியும் மேலும் விரிவாக எழுதுகிறேன்.

தொடரும்...

Stay safe and stay healthy!
மேலே சொன்ன தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளத்தாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்னும் நல்ல தலைப்புடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.
நன்றி. வணக்கம். 🙏
@Karthicktamil86
@theroyalindian
@IamNaSen
@aram_Gj
@jamozhi
#learningguy
#LGWeeklyposts
#LGpost23
#Healthinsurance
@gentlekums - 👆.
நீங்கள் கேட்ட health insurance பற்றிய பதிவு..
நன்றி 🙏.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Learning Guy

Learning Guy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @learning_guy_

7 Jul
#HappyBirthdayMSDhoni
என்னுடைய Dhoni, எனக்கு வழிகாட்டியாக என் வாழ்க்கையில் இருக்கும் ஒரு மாமனிதர்.
நான் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், கற்கிறேன், கற்றுக்கொள்வேன்
அவற்றில் சில:
1. Cool ஆகா இருத்தல்
2. கிரிக்கெட் என்பது ஒரு physical game மட்டுமல்ல, அது ஒரு Mind game.
3. Keep it simple
4. கற்றுக்கொள்வது முக்கியம், செய்த தவறுகளைச் செய்யக்கூடாது.
5. தோல்வியை எதிர்கொள்ளுங்கள்
6. 100% பணிக்கு அர்ப்பணிப்பு
7. பயத்தை மறந்து, வித்தியாசமாக ஏதாவது செய்வது
மறக்கமுடியாத சம்பவங்களில் சில:
1. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக சூப்பர் ஓவரில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது😜
2. அணியில் உள்ள இளைஞரை கோப்பையை ஒப்படைத்து விட்டு கடைசியில் நின்று போஸ் கொடுப்பது
3. பல போட்டிகளில் எதிரணி பந்து வீச்சாளர் மற்றும் அணி மீது அழுத்தத்தை வைத்திருத்தல்
Read 5 tweets
2 Jul
A thread on Digital Marketing, Types, Certifications and Job opportunities: 👇

டிஜிட்டல் மார்க்கெட்டிங், அதன் வகைகள், பாட சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஒரு பதிவு:
இந்த மார்க்கெட்டிங் இல்லைனா ஒரு பொருட்களையும் விற்க முடியாது, எந்த பொருள் வேணாலும் எடுத்துக்கோங்க, எல்லாத்துக்கும் நமக்கு ஒரு விளம்பரம் தேவைபடுகிறது. விளம்பரம் எப்படி வேணா இருக்கும் டிவி AD, ஒருத்தர் சொல்லி, பத்திரிகை, வீடியோ, மின்னஞ்சல்... பல வழியில் நமக்கு வருகிறது.
உ: ஒரு தொழில் நிறுவனம் அவங்க தயாரிக்கும் பொருட்களை அல்லது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு சொல்லணும். அதை அவங்க விளம்பரமாகச் செய்யாவிட்டால், அவங்க தயாரிப்புகள் என்ன, சேவைகள் என்ன என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது.
Read 36 tweets
12 Jun
A Thread on Bond Investments - Part 1👇
001.பாண்ட் என்றால் என்ன?
பாண்ட் என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் ஆகும். அவை ஒரு நிறுவனத்திற்கு நிதி திரட்டவும் மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் கடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் வாங்கியவர்கள் வட்டியுடன் திருப்பி கொடுப்பார்கள்
நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்தோ அல்லது பொதுமக்களிடமிருந்தோ தங்கள் தொழிலுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட கடன் வாங்குவார்கள். வாங்கிய கடனுக்குப் பத்திரத்தைக் கொடுப்பார்கள். கடன் வாங்கியவர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துகிறார். இந்த பத்திரங்கள் ஒரு தேதியில் முதிர்ச்சியடையும்
Read 29 tweets
9 Jun
A Thread on Safety Tips while using Digital India Transactions 👇
VJS - ஒரு கதை சொல்லட்டா சார்?

Maddy - என்ன உன்னை மாதிரி ஏமாத்தறவங்களுக்கு ஒரே கதை தானே.

VJS - அது எப்படிச் சார், ஏமாறவங்க இருக்கும் போது ஏமாற்ற தான செய்வார்கள், அப்படிப் பார்த்த நீயும் நானும் ஒன்னு தானே சார்?
சரி, வாங்க வங்கி பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இணையச் சேவைகளின் அதிகரிப்புடன், ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கியின் பயன்பாடு வெகு அளவில் அதிகரித்துள்ளது, குறிப்பாக demonetization பிறகு, அதுவும் இப்பொழுது இருக்கும்
Read 33 tweets
5 Jun
A Thread on Financial Mistakes done by Middle-Class People: 👇
நடுத்தர வர்க்க மக்கள் நம் செய்யும் நிதி தவறுகள்:

தல அஜித்: ஹலோ! நண்பர்களே இந்த வாரம் நம்ம நடுத்தர வர்க்க மக்கள் செய்யும் நிதி தவறுகள் பற்றி விரிவா பார்த்துருவோம் வாங்க.
a.பெரும்பாலும் நாம் செய்வது சேமிப்பு= (வருமானம்–செலவுகள்) அல்ல செலவு= வருமானம் - (சேமிப்பு+முதலீடு) இது தான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
வரவு எட்டணா செலவு பத்தணா பண்ணாதீர்கள்.
b.எல்லாவற்றையும் ஒரே முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
Read 25 tweets
31 May
A Thread on ABY - A Pension Plan 👇
அடல் ஓய்வூதிய யோஜனா (APY), இது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட உத்தரவாத ஓய்வூதிய திட்டமாகும்.
அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. APY இன் கீழ், குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம்
ரூ .1000/- அல்லது ரூ 2,000/- அல்லது ரூ 3,000/- அல்லது மாதத்திற்கு ரூ 4,000/- அல்லது ரூ 5,000/- 60 வயதை எட்டிய பின்னர் சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதிய தொகை தொடங்கும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்; அதிகபட்சம் 40 ஆண்டுகள்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(