A thread on RIGHT TO EDUCATION 👇

கல்வி உரிமைச் சட்டம் பற்றிய பதிவு
RTE என்பது Right to Education Act 2009, அதாவது அனைவருக்கும் கல்வி என்று தொடங்கப்பட்ட இலவச கல்வி உரிமைச் சட்டம் ஆகும். இந்த கல்வி சட்டம் ஆகஸ்ட் 2009 இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட (பொருளாதாரத்தில் பின்தங்கிய)
குழந்தைகளுக்கு சமூக வேறுபாடின்றி இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஒன்றிய அரசு இந்த கல்வி சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தம் உள்ள இடங்களில் 25 சதவிகித இடங்களைக் கட்டணம் இல்லாமல் மாணவர்களுக்கு வழங்கும்
நடைமுறை அந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் நலிவடைந்த பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தவாறே விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். rte.tnschools.gov.in
தமிழக அரசு சார்பில் செயல்படும் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்.
ஆன்லைனில் பதிவு செய்யவதற்கு முன், தமிழ்நாடு RTE பள்ளி பட்டியலை (மாவட்ட மற்றும் பள்ளி வாரியாக) சரிபார்க்கலாம். கல்வி கட்டணம் மட்டுமே இலவசம் பிற செலவுகளை பெற்றோர்கள் ஏற்கவேண்டும்
2021-2022 ஆண்டிற்கான விண்ணப்ப படிவம் தொடங்கிய தேதி - 5 ஜூலை 2021 மற்றும் கடைசி தேதி - 3 ஆகஸ்ட் 2021
RTE சேர்க்கைக்கான தகுதி:
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
- பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
- ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- வயது சான்றுக்கான பிறப்புச் சான்றிதழ்
- பெற்றோர் ஆண்டு வருமானச் சான்றிதழ்
- முகவரி சான்று
- ஜாதிச் சான்றிதழ்
தமிழ்நாடு RTE க்கான சேர்க்கை ஆன்லைனில் மூலம் மட்டுமே செய்யப்படும். இந்த விண்ணப்பங்களை முறையாகச் சரிபார்க்கப்பட்டு, உண்மையாக விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முடிவுகளை தனியார்ப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளில் வெளியிடுவார்கள்,
பின்பு அவரவர் விண்ணப்பித்த பள்ளிகளில் குறிப்பிட்ட தினங்களுக்குள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.
சமீபத்தில் எனது நண்பர் தனது குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டபோது தான் இதைப் பற்றி அறிந்தேன். தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க விரும்பும் ஏழை பெற்றோர்களுக்கு இந்த இலவச கல்விக்கான சேவை உள்ளது என்பதை தெரிவிக்கவே இதை நான் பதிவிடுகிறேன்.
நன்றி. வணக்கம். 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Learning Guy

Learning Guy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @learning_guy_

7 Jul
A thread on Health Insurance - Part 1:👇

மருத்துவ காப்பீடு பற்றிய பதிவு:
1 மருத்துவ காப்பீட்டு
2 மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம்
3 மருத்துவ காப்பீட்டின் நன்மைகள்
4 மருத்துவ காப்பீட்டின் வகைகள்
5 மருத்துவ காப்பீட்டை பற்றிய தவறான புரிதல்கள்
6 மருத்துவ காப்பீட்டை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
7 மருத்துவ காப்பீட்டைத் தேர்வு செய்யும் முறைகள்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
பரப்பரப்பாக ஓடி கொண்டிருக்கும் உலகத்தோடு, நாமும் வேகமாக ஓடும் இந்த காலக்கட்டத்தில் நமது பாரம்பரிய உணவு முறைகள், உடற் பயிற்சிகளை மறந்ததனால் மற்றும் பல காரணமாக பல நோய்கள் மற்றும் உடல் நலமின்மை ஏற்படுகிறது.
Read 23 tweets
7 Jul
#HappyBirthdayMSDhoni
என்னுடைய Dhoni, எனக்கு வழிகாட்டியாக என் வாழ்க்கையில் இருக்கும் ஒரு மாமனிதர்.
நான் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், கற்கிறேன், கற்றுக்கொள்வேன்
அவற்றில் சில:
1. Cool ஆகா இருத்தல்
2. கிரிக்கெட் என்பது ஒரு physical game மட்டுமல்ல, அது ஒரு Mind game.
3. Keep it simple
4. கற்றுக்கொள்வது முக்கியம், செய்த தவறுகளைச் செய்யக்கூடாது.
5. தோல்வியை எதிர்கொள்ளுங்கள்
6. 100% பணிக்கு அர்ப்பணிப்பு
7. பயத்தை மறந்து, வித்தியாசமாக ஏதாவது செய்வது
மறக்கமுடியாத சம்பவங்களில் சில:
1. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக சூப்பர் ஓவரில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது😜
2. அணியில் உள்ள இளைஞரை கோப்பையை ஒப்படைத்து விட்டு கடைசியில் நின்று போஸ் கொடுப்பது
3. பல போட்டிகளில் எதிரணி பந்து வீச்சாளர் மற்றும் அணி மீது அழுத்தத்தை வைத்திருத்தல்
Read 5 tweets
2 Jul
A thread on Digital Marketing, Types, Certifications and Job opportunities: 👇

டிஜிட்டல் மார்க்கெட்டிங், அதன் வகைகள், பாட சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஒரு பதிவு:
இந்த மார்க்கெட்டிங் இல்லைனா ஒரு பொருட்களையும் விற்க முடியாது, எந்த பொருள் வேணாலும் எடுத்துக்கோங்க, எல்லாத்துக்கும் நமக்கு ஒரு விளம்பரம் தேவைபடுகிறது. விளம்பரம் எப்படி வேணா இருக்கும் டிவி AD, ஒருத்தர் சொல்லி, பத்திரிகை, வீடியோ, மின்னஞ்சல்... பல வழியில் நமக்கு வருகிறது.
உ: ஒரு தொழில் நிறுவனம் அவங்க தயாரிக்கும் பொருட்களை அல்லது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு சொல்லணும். அதை அவங்க விளம்பரமாகச் செய்யாவிட்டால், அவங்க தயாரிப்புகள் என்ன, சேவைகள் என்ன என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது.
Read 36 tweets
12 Jun
A Thread on Bond Investments - Part 1👇
001.பாண்ட் என்றால் என்ன?
பாண்ட் என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் ஆகும். அவை ஒரு நிறுவனத்திற்கு நிதி திரட்டவும் மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் கடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் வாங்கியவர்கள் வட்டியுடன் திருப்பி கொடுப்பார்கள்
நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்தோ அல்லது பொதுமக்களிடமிருந்தோ தங்கள் தொழிலுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட கடன் வாங்குவார்கள். வாங்கிய கடனுக்குப் பத்திரத்தைக் கொடுப்பார்கள். கடன் வாங்கியவர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துகிறார். இந்த பத்திரங்கள் ஒரு தேதியில் முதிர்ச்சியடையும்
Read 29 tweets
9 Jun
A Thread on Safety Tips while using Digital India Transactions 👇
VJS - ஒரு கதை சொல்லட்டா சார்?

Maddy - என்ன உன்னை மாதிரி ஏமாத்தறவங்களுக்கு ஒரே கதை தானே.

VJS - அது எப்படிச் சார், ஏமாறவங்க இருக்கும் போது ஏமாற்ற தான செய்வார்கள், அப்படிப் பார்த்த நீயும் நானும் ஒன்னு தானே சார்?
சரி, வாங்க வங்கி பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இணையச் சேவைகளின் அதிகரிப்புடன், ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கியின் பயன்பாடு வெகு அளவில் அதிகரித்துள்ளது, குறிப்பாக demonetization பிறகு, அதுவும் இப்பொழுது இருக்கும்
Read 33 tweets
5 Jun
A Thread on Financial Mistakes done by Middle-Class People: 👇
நடுத்தர வர்க்க மக்கள் நம் செய்யும் நிதி தவறுகள்:

தல அஜித்: ஹலோ! நண்பர்களே இந்த வாரம் நம்ம நடுத்தர வர்க்க மக்கள் செய்யும் நிதி தவறுகள் பற்றி விரிவா பார்த்துருவோம் வாங்க.
a.பெரும்பாலும் நாம் செய்வது சேமிப்பு= (வருமானம்–செலவுகள்) அல்ல செலவு= வருமானம் - (சேமிப்பு+முதலீடு) இது தான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
வரவு எட்டணா செலவு பத்தணா பண்ணாதீர்கள்.
b.எல்லாவற்றையும் ஒரே முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(