5. மருத்துவ காப்பீடு பற்றிய நமது தவறான புரிதல்கள் மற்றும் மருத்துவ காப்பீடு வாங்காமல் நாம் செய்யும் தவறுகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
IRDA வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுள் காப்பீட்டுடன் ஒப்பிடும்போது மருத்துவ காப்பீட்டுக்கான விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மக்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றிய தவறான கண்ணோட்டமும் ஒரு காரணம்.
1. மருத்துவ காப்பீடு ஒரு முதலீட்டு திட்டம் இல்லை, அதனால் ஒரு வருமானமும் கிடையாது.
- மருத்துவ காப்பீடு ஒரு முதலீட்டு திட்டம் இல்லை, ஆனால் ஒருவர் மருத்துவக் காப்பீட்டை வாங்குவதன் மூலம், அவரது மருத்துவச் செலவுகள் ஈடுசெய்யவதுடன் அவரது சேமிப்பு மற்றும் முதலீடுகள் பாதுகாக்கப்படுகிறது.
2. இளமையாக இருக்கும்போது காப்பீடு தேவையில்லை.
- இல்லை, ஒருவர் இளமையில் மருத்துவக் காப்பீடு வாங்குவதே சரியானது, ஏனெனில் மருத்துவக் காப்பீடு குறைந்த பிரீமியத்தில் பெறலாம், காரணம்- இளம் வயதிலேயே மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
பொதுவாக, பாலிசி வாங்கிய நாளிலிருந்து 36 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கும். எனவே, காப்பீட்டை முன்கூட்டியே வாங்குவது, இதுபோன்ற நோய்களுக்கு எதிரான நிதி மற்றும் சிகிச்சை செலவினத்திற்கான நிதி பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
இளமையில் மருத்துவக் காப்பீட்டை வாங்குவதன் மூலம் மேலும் ஒரு நன்மை ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டிற்கும், காப்பீட்டாளர் ஒரு போனஸைப் பெறுகிறார்.
3: கார்ப்பரேட் / Group Health Insurance போதும்:
இல்லை, அதில் வயதான பெற்றோர்களுக்கும், சார்புடைய உறுப்பினர்களுக்கும் தங்கள் கவரேஜை நீட்டிக்க மாட்டார்கள். மேலும், நீங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வரை அவை செயல்படும். நீங்கள் வேலையை விட்டு வெளியேறியவுடன் அந்த காப்பீடு செல்லாது.
மேலும், அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, கார்ப்பரேட் காப்பீடு பாதுகாப்பு போதுமானதாக இருக்காது. நீங்கள் ஒரு தனிப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தை வாங்குவது நல்லது.
4. புகைப்பிடிப்பவர்கள் அல்லது மது பிரியர்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களைப் பெற முடியாது:
இல்லை, அத்தகைய நபர்கள் அதிக உடல்நல தீங்குருந்தாலும், அவர்கள் கொஞ்சம் கூடுதல் கட்டணம் செலுத்தி கடுமையான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டு மருத்துவ காப்பீட்டை வாங்கலாம்.
5. மருத்துவக் காப்பீடு என்பது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு மட்டுமே நாம் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோம் நமக்குத் தேவையில்லை என்று பலர் நம்புகிறார்கள்.
- இல்லை, ஆரோக்கியமான உடலால் நோய்கள் அல்லது விபத்துக்கள் போன்ற எதிர்பாராத சம்பவங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியாது.
வருமுன் காக்க.
6. ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே மருத்துவக் காப்பீடு திட்டங்கள் செயல்படும்.
- இல்லை, கண்புரை, சிறுநீரக கல் அகற்றுதல் மற்றும் சில அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் ஒரே நாளில் நோயாளிகளை வெளியேற்றுகிறார்கள். அவ்வாறு சில சிகிச்சைகள், மருத்துவர் கட்டணம், மற்றும் OPD சிகிச்சைகள் தொடர்பான செலவுகளையும் சில மருத்துவக் காப்பீடு ஈடு செய்கிறது.
7. அறுவை சிகிச்சைக்குச் சற்று முன்பு மருத்துவக் காப்பீட்டு வாங்கினால் போதும்.
இல்லை, மருத்துவக் காப்பீட்டுக் காத்திருப்பு காலம் ஒரு பிரிவு அடங்கும். காப்பீட்டாளர் பாலிசிதாரர்களின் மருத்துவ வரலாற்றை வைத்து அல்லது காப்பீட்டுக்கு முன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துக்கிறார்கள்.
பாலிசிதாரர்கள் முன்பே இருக்கும் வியாதியுடன் தொடர்புடையதாக இருந்தால், எதிர்காலத்தில் கிளைம் நிராகரிப்பதை இது தடுக்கிறது. எனவே, அறுவை சிகிச்சைக்குச் சற்று முன்பு ஒரு பாலிசியை வாங்கலாம் என்று நினைப்பது தவறு.
பல நோய்களுக்கு 1, 2, 3 மற்றும் 4 ஆண்டுகள் காத்திருக்கும் காலம் உள்ளது. பாலிசியின் கீழ் இல்லாத சில பட்டியலிடப்பட்ட நோய்கள் உள்ளன. பரவலாக, பாலிசியின் முதல் 30 நாட்களுக்கு எந்த கிளைமும் செய்ய முடியாது.
8. அதிக நெட்வொர்க் மருத்துவமனைகள் மற்றும் பகல் நேரப் பராமரிப்பு நடைமுறைகள் ஒரு சிறந்த காப்பீட்டைக் குறிக்கின்றன.
இல்லை, காப்பீட்டு நிறுவனங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகள் அல்லது தினப்பராமரிப்பு நடைமுறைகளின் எண்ணிக்கையை மேம்படுத்தலாம் (அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்) என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். காப்பீட்டாளரின் நெட்வொர்க் ஒவ்வொரு ஆண்டும் மாறகூடும்,
இதன் விளைவாக மேலும் சில மருத்துவமனைகளைச் சேர்க்கலாம் அல்லது பட்டியலிலிருந்து அகற்றலாம். அதே கருத்து பகல் நேரப் பராமரிப்பு நடைமுறைகளுக்கும் பொருந்தும்.
9. மருத்துவக் காப்பீடு என்பது வரி சேமிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே.
இல்லை, மருத்துவ காப்பீடு நீங்கள் எந்தவொரு மருத்துவ அவசர நிலையையும் சந்தித்து மருத்துவமனையில் சேர்க்கும்போது, காப்பீட்டு நிறுவனம் அனைத்து மருத்துவ கட்டணங்களையும் ஈடுகட்டுகிறது, நீங்கள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. இது தான் Cashless Hospitalization.
நீங்கள் ஆவணத்தைக் கவனமாகப் படிக்கவில்லை என்றால், நீங்கள் நீண்ட காலத்திற்கு வருத்தப்பட வேண்டும் மற்றும் வரிச் சலுகைகளைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை இழக்க நேரிடும். எனவே மருத்துவக் காப்பீடு என்பது வரி நன்மைக்காக மட்டுமல்ல.
10. மருத்துவக் காப்பீட்டிற்குக் குறைந்தபட்சம் 24 மணிநேர மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
இல்லை, காப்பீட்டு நிறுவனங்கள் 24 மணிநேர மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத தினப்பராமரிப்பு நடைமுறைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றன. நடைமுறைகளில் பல அறுவை சிகிச்சை உள்ளன. பாலிசியின் கீழ் எத்தனை நாட்கள் பராமரிப்பு நடைமுறைகள் உள்ளன என்பதை அறிய மருத்துவ பாலிசியை கவனமாக படிப்பது நல்லது.
11. மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மகப்பேறு Claim வழங்காது:
- இல்லை, காப்பீட்டு வழங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் மகப்பேறு Claim வழங்கத் தொடங்கியுள்ளது. சில நிபந்தனைகள் மகப்பேறுகளுக்கு வழங்கப்படும். இது காத்திருப்பு காலம் மற்றும் முதலாவது மகப்பேறுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
12. மலிவான காப்பீட்டுத் திட்டங்கள் சிறந்த காப்பீடு ஆகும்.
இல்லை, பிரீமியத்தின் தொகையின் அடிப்படையில் நிறையப் பேர் தங்கள் காப்பீடு வாங்கும் முடிவை எடுக்கிறார்கள். என்றாலும் குறைந்த பிரீமியத்துடன், அனைத்து மருத்துவ சேவைகளும் உள்ளடங்கிய மற்றும் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் வழங்கும் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
13. பிரீமியம் உரியத் தேதிக்குப் பிறகு காப்பீடு புதுப்பிக்கப்பட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்காது:
இல்லை, ஒவ்வொரு ஆண்டும் உரியத் தேதிக்கு முன்னதாக பாலிசியை புதுப்பிப்பது மிக முக்கியம், எந்த காரணத்திற்காகவும் பாலிசியை புதுப்பிக்கத் தவறினால், பாலிசி காலாவதி தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் அதைப் புதுப்பிக்கலாம். கொள்கையின் அனைத்து நன்மைகளையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
14. காப்பீட்டுத் திட்டங்கள் முழு மருத்துவ செலவினங்களும் ஏற்கும்:
இல்லை, ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் காரணமாக காப்பீட்டாளர் பகுதி தொகையைச் செலுத்துகிறார். உதாரணமாக, அறை வாடகைக்குக் காப்பீட்டின் 1% தொகை ஆகும், அதற்கும் அதிகமான தொகையை பாலிசிதாரர் ஏற்க வேண்டும். மேலும், மருந்து பில்கள் போன்ற பிற மருத்துவச் செலவுகள் அதில் அடங்காது.
15. ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்திற்கு மருத்துவ காப்பீடு கிடையாது.
இல்லை, இன்று பல காப்பீட்டாளர்கள் அலோபதி மருத்துவத்திற்கு பதிலாக, சில நிபந்தனைகளின் கீழ் மாற்று சிகிச்சை முறைகளை (ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்றவை) மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் வழங்குகிறார்கள்.
16. தற்போதுள்ள மருத்துவ காப்பீட்டுக் கொள்கை நிறுவனத்தை மாற்ற முடியாது:
இல்லை, நீங்கள் விரும்பும் வேறு எந்த காப்பீட்டாளருக்கும் உங்கள் பாலிசியை போர்ட் செய்யலாம். மருத்துவ காப்பீட்டுக் கொள்கையை ஒரு காப்பீட்டு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றும்போது, பழைய பாலிசி மூலம் திரட்டிய நன்மைகளை இழக்க வேண்டியதில்லை.
நீங்கள் ஒரு காப்பீட்டாளரிடமிருந்து இன்னொருவருக்கு நகரும்போது மட்டுமல்லாமல், அதே காப்பீட்டாளருடன் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கும் நகரும்போதும் இது பொருந்தும்.
பாலிசி புதுப்பித்தலின் கட்டத்தில் மட்டுமே நீங்கள் பாலிசியை போர்ட் செய்ய முடியும்.
இந்த புதுப்பித்தல் குறைந்தது 45 நாட்களுக்கு முன்பே செய்ய வேண்டும், பழைய காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றத்தைக் கூறவேண்டும்.
உங்கள் கொள்கையை இடைவெளி இல்லாமல் புதுப்பிக்கவும் (போர்ட்டிங் செயல்பாட்டில் இருந்தால் 30 நாள் சலுகை காலம் உள்ளது)
RTE என்பது Right to Education Act 2009, அதாவது அனைவருக்கும் கல்வி என்று தொடங்கப்பட்ட இலவச கல்வி உரிமைச் சட்டம் ஆகும். இந்த கல்வி சட்டம் ஆகஸ்ட் 2009 இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட (பொருளாதாரத்தில் பின்தங்கிய)
குழந்தைகளுக்கு சமூக வேறுபாடின்றி இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஒன்றிய அரசு இந்த கல்வி சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தம் உள்ள இடங்களில் 25 சதவிகித இடங்களைக் கட்டணம் இல்லாமல் மாணவர்களுக்கு வழங்கும்
1 மருத்துவ காப்பீட்டு
2 மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம்
3 மருத்துவ காப்பீட்டின் நன்மைகள்
4 மருத்துவ காப்பீட்டின் வகைகள்
5 மருத்துவ காப்பீட்டை பற்றிய தவறான புரிதல்கள்
6 மருத்துவ காப்பீட்டை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
7 மருத்துவ காப்பீட்டைத் தேர்வு செய்யும் முறைகள்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
பரப்பரப்பாக ஓடி கொண்டிருக்கும் உலகத்தோடு, நாமும் வேகமாக ஓடும் இந்த காலக்கட்டத்தில் நமது பாரம்பரிய உணவு முறைகள், உடற் பயிற்சிகளை மறந்ததனால் மற்றும் பல காரணமாக பல நோய்கள் மற்றும் உடல் நலமின்மை ஏற்படுகிறது.
#HappyBirthdayMSDhoni
என்னுடைய Dhoni, எனக்கு வழிகாட்டியாக என் வாழ்க்கையில் இருக்கும் ஒரு மாமனிதர்.
நான் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், கற்கிறேன், கற்றுக்கொள்வேன்
அவற்றில் சில:
1. Cool ஆகா இருத்தல் 2. கிரிக்கெட் என்பது ஒரு physical game மட்டுமல்ல, அது ஒரு Mind game. 3. Keep it simple 4. கற்றுக்கொள்வது முக்கியம், செய்த தவறுகளைச் செய்யக்கூடாது. 5. தோல்வியை எதிர்கொள்ளுங்கள் 6. 100% பணிக்கு அர்ப்பணிப்பு 7. பயத்தை மறந்து, வித்தியாசமாக ஏதாவது செய்வது
மறக்கமுடியாத சம்பவங்களில் சில: 1. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக சூப்பர் ஓவரில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது😜 2. அணியில் உள்ள இளைஞரை கோப்பையை ஒப்படைத்து விட்டு கடைசியில் நின்று போஸ் கொடுப்பது 3. பல போட்டிகளில் எதிரணி பந்து வீச்சாளர் மற்றும் அணி மீது அழுத்தத்தை வைத்திருத்தல்
A thread on Digital Marketing, Types, Certifications and Job opportunities: 👇
டிஜிட்டல் மார்க்கெட்டிங், அதன் வகைகள், பாட சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஒரு பதிவு:
இந்த மார்க்கெட்டிங் இல்லைனா ஒரு பொருட்களையும் விற்க முடியாது, எந்த பொருள் வேணாலும் எடுத்துக்கோங்க, எல்லாத்துக்கும் நமக்கு ஒரு விளம்பரம் தேவைபடுகிறது. விளம்பரம் எப்படி வேணா இருக்கும் டிவி AD, ஒருத்தர் சொல்லி, பத்திரிகை, வீடியோ, மின்னஞ்சல்... பல வழியில் நமக்கு வருகிறது.
உ: ஒரு தொழில் நிறுவனம் அவங்க தயாரிக்கும் பொருட்களை அல்லது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு சொல்லணும். அதை அவங்க விளம்பரமாகச் செய்யாவிட்டால், அவங்க தயாரிப்புகள் என்ன, சேவைகள் என்ன என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது.
001.பாண்ட் என்றால் என்ன?
பாண்ட் என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் ஆகும். அவை ஒரு நிறுவனத்திற்கு நிதி திரட்டவும் மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் கடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் வாங்கியவர்கள் வட்டியுடன் திருப்பி கொடுப்பார்கள்
நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்தோ அல்லது பொதுமக்களிடமிருந்தோ தங்கள் தொழிலுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட கடன் வாங்குவார்கள். வாங்கிய கடனுக்குப் பத்திரத்தைக் கொடுப்பார்கள். கடன் வாங்கியவர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துகிறார். இந்த பத்திரங்கள் ஒரு தேதியில் முதிர்ச்சியடையும்
A Thread on Safety Tips while using Digital India Transactions 👇
VJS - ஒரு கதை சொல்லட்டா சார்?
Maddy - என்ன உன்னை மாதிரி ஏமாத்தறவங்களுக்கு ஒரே கதை தானே.
VJS - அது எப்படிச் சார், ஏமாறவங்க இருக்கும் போது ஏமாற்ற தான செய்வார்கள், அப்படிப் பார்த்த நீயும் நானும் ஒன்னு தானே சார்?
சரி, வாங்க வங்கி பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு குறித்து விரிவாகப் பார்ப்போம்.
இணையச் சேவைகளின் அதிகரிப்புடன், ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கியின் பயன்பாடு வெகு அளவில் அதிகரித்துள்ளது, குறிப்பாக demonetization பிறகு, அதுவும் இப்பொழுது இருக்கும்