#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பத்ம புராணத்தில் இருந்து:
வாரணாசியில் கிரிகலா என்ற ஸ்ரீ விஷ்ணு பக்தன் வாழ்ந்து வந்தான். திடீரென்று ஸ்ரீ விஷ்ணு கோவில்கள் தீர்த்த யாத்திரை போக வேண்டுமென்று மனைவியிடம் சொன்னான். சுகலா என்பவள் அவன் மனைவி தானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள். வழியில்
எத்தனையோ இடையூறுகள் ஏற்படுமென்று அஞ்சிய கிரிகலா அவளிடம் சொல்லாமலே யாத்திரைக்குப் புறப்பட்டு விட்டான். கணவனிடம் மிக்க அன்பு கொண்ட சுகலா உணவு, உறக்கம் என்பதை விட்டுத் தரையில் கிடந்து உறங்கத் தொடங்கினாள். அவளது உறவினர்கள் அவளிடம் உன் கணவன் ஸ்ரீ விஷ்ணு கோவில்கள் தீர்த்த
யாத்திரைக்குத் தானே போயிருக்கிறார். நீ ஏன் இப்படி மனத்தைக் குழப்பிக் கொண்டு, உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய் என்று கூறினர். அவர்கள் கூறியதை ஏற்காத மனைவி சுகலா என்னிடம் சொல்லாமல் போனதே என்னை ஒதுக்கி வைத்தது போலத் தான். ஆகவே நான் இந்த விரதங்களை அனுஷ்டிப்பது நியாயம்தான் என்று
வாதாடினாள். அப்போது ஒருமுறை இந்திரன் பணியாளன் ஒருவன் வந்து, அம்மா உன் கணவன் போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் எங்கே போனான் என்று யாருக்கும் தெரியவில்லை. போனவனை நினைத்து அவதிப்பட்டு உன் இளமையை ஏன் பாழாக்கிக் கொள்கிறாய் எங்கள் எஜமானர் உங்களை மணந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்
என்று கூறியவுடன், உங்கள் எஜமானர் யார் என, இந்திரன் என்று அவன் விடை கூறியதும், உன் எஜமானனை இங்கு வரச் சொல் என்றாள். முழு அலங்காரங்களுடன் இந்திரன் அங்கு வந்தான். இந்திரனை நன்றாகக் கடிந்து கொண்டு, இப்படிப்பட்ட பாவச் செயல்களில் தேவேந்திரன் இறங்கக் கூடாது என்று ஏசி அனுப்பி விட்டாள்.
இந்த நிலையில் தன் தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டு கிரிகலா வீடு திரும்பத் தயாரானான். அப்போது ஸ்ரீமன் நாராயணன் கோவிலில் ஒரு அசரீரி பின்வருமாறு கூறிற்று: 'கிரிகலா, இத்தனை தீர்த்தங்களில் நீ குளித்தும் கடுகளவு புண்ணியமும் சேரவில்லை. அதனால் உன் முன்னோர்கள் இன்றும் நரகத்தில் தான்
அழுந்தி உள்ளனர் என்று கூற, கிரிகலா நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டான். அசரீரி, ‘உன்னையே நம்பி இருக்கும் உன் மனைவியை அழைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரை செல்லாமல், நீ மட்டும் போனதால் ஒரு பயனும் இல்லை. உடனே அவளைச் சென்று அடைவாயாக!' என்று கூறவே விரைவாக வீடு திரும்பிய கிரிகலா
மனைவியோடு மகிழ்ச்சியாக இருந்தான். அப்போது அங்கே வந்த இந்திரன் கிரிகலாவைப் பார்த்து, கிரிகலா நீ இப்படியொரு மனைவியை அடைய நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவள் மனத்தைக் கலைக்க நான் எவ்வளவோ முயன்றும் அது முடியவில்லை. ஆகவே உங்களுக்கு ஒரு வரம் தருகிறேன். என்ன வரம் வேண்டும் என்று
கேட்க, கிரிகலாவும் அவன் மனைவியும் “நாங்கள் பரந்தாமன் மீதான பக்தி மற்றும் நேர்மையான வழியிலிருந்து என்றும் விலகாமல் இருக்க வேண்டும் எனவும், நாங்கள் வாழ்கின்ற இந்த இடம் நாராயண (நாரி) தீர்த்தம் என்ற பெயருடன் புண்ணிய ஸ்தலமாக விளங்க வேண்டும்” என்றும் கேட்டனர். இந்திரனும் அக மகிழ்ந்து
அவ்வாறே கொடுத்தான்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கஞ்சி குடிக்காத காமாக்ஷி
காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சியையும் சம்பந்தப்படுத்தி ஒரு இருசொல் அலங்காரக் கவிதை இருக்கிறது.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால், காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப்
போட்டாலும் சாப்பிட மாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்' என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்' என்றில்லாமல் ‘அரவார்'
என்று வருகிறது) இப்படிப்பட்ட ஐந்து தலைப் பாம்புக்கு அம்பாள், ஆறாவது தலையாக மானசீகமாக ஆகிறாளாம்.
கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த 2000 கிலோ தங்கம் பயனின்றி உள்ளதாகவும் அவற்றை வைப்பு நிதியாக வைத்து அரசின் நிதிச் சுமையை குறைக்க ஸ்டாலின் திட்டம் போட்டுள்ளார். இது குறித்து #திமுக செய்தித் தொடர்பாளர் கண்ணதாசன் “கோயில் சொத்துகள் ஒரு காலத்தில் அந்தக் கோயில் மற்றும் அதைச் சார்ந்து
உள்ள ஊர் மக்களுக்குப் பயன் படுவதற்காகக் கொடுக்கப் படவைதான். அதன் ஒரு பகுதியாகத்தான் கோயில் நகைகள் மூலம் வருமானம் ஈட்ட எடுக்கப்பட்டுள்ள அரசின் முயற்சி. இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கோயில்களைச் சீரமைப்பதோடு மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டின்
கோவில்களைச் சார்ந்து பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலகோடி வருமானம் வருகிறது. உண்டியல் மற்றும் இதர காணிக்கைகள் மூலம் ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. இவற்றை நெறிப்படுத்தினால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் நிதிச் சுமையைச் சரி செய்ய முடிவதோடு
#திருஇந்தளூர் 26வது #திவ்யதேசம்
சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில். காவிரி கரையில் அமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவை திருவரங்க பட்டணம் (மைசூர்), திருவரங்கம், அப்பால ரங்கம் (கோவிலடி), கும்பகோணம்
மத்தியரங்கம், திருஇந்தளுர் பரிமளரங்கம் என்பவை ஆகும். இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணையும் மனதையும் கவருவதாக அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் இவற்றின் நறுமணம்
வீசுகிறது. இதனால் பெருமாளுக்கு சுகந்தவன நாதர் என்று மற்றொர் பெயரும் பெருமாளுக்கு உண்டு. மூலவர் பரிமள ரெங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனாலும், பாதாரவிந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். தென்புறத்தில் காவிரி தாயாரும், வடபுறத்தில் கங்கை
ஈஸ்வரனைக் காட்டிலும் குரு பெரியவர், ஈஸ்வர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன் என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை। ஆனால் பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல்
என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சுலோகத்தில் குருவுக்கும்
பரமாத்மாவுக்கும் பேதமின்மையை சொல்லியிருப்பது ஒரு விசேஷம்.
இதில் விஷ்ணு, சிவன் இருவரையும் சொல்லியிருப்பதால் இந்த சுலோகத்தைச் சொல்லி நாம் குருவந்தனம் பண்ணினால் நமக்கு சிவ- விஷ்ணு பேதமின்மை பாவமும் உண்டாகி விடும்.
ஆனால் தெய்வ பக்தியை மறக்கக் கூடாது. குருவை நம்மோடு சேர்த்து
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஆயர்பாடியில் ததிபாண்டன் என்ற ஒரு தயிர் வியாபாரி இருந்தான். ஒரு சமயம் கண்ணனை அன்னை யசோதை பிரம்பைக் கையில் ஏந்தியபடி துரத்திக் கொண்டே வர, ததிபாண்டன் கடைக்கு ஓடி வந்தான் விஷமக்காரக் கண்ணன்.
காலியாக இருந்த தயிர்ப் பானையைத் தலையணையாக வைத்தபடி உறங்கிக் கொண்டு
இருந்தான் ததிபாண்டன். மாமா மாமா என்று இனிய, ஆழமான குரலில் அவனைக் கண்ணன் அழைத்தான். அவன் கண்விழித்துப் பார்த்து என்ன என்று கேட்டான். மாமா நான் வீட்டிலிருந்த வெண்ணெய் எல்லாம் திருடித் தின்றதால் என் அம்மா என் மேல் கோபத்துடன் பிரம்பை எடுத்துக் கொண்டு என்னைத் துரத்தி வருகிறாள். நான்
ஒளிந்து கொள்ள இடம் தேடி வந்துள்ளேன். உங்களுடைய காலிப் பானை ஒன்றினுள் நான் ஒளிந்து கொள்கிறேன். நான் ஒளிந்து கொள்ளும் பானையின் வாயைத் துணிபோட்டுக் கட்டிவிடுங்கள். என் தாய் வந்து கேட்டால் நான் இங்கு இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்றான். ததிபாண்டனும் அதற்குச் சம்மதித்து அவ்வாறே
தினமும் நம் வீட்டு பூஜையறையில் உள்ள நம் குலதெய்வம் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அன்னம் நைவேத்தியம் செய்து அதை வீட்டிலுள்ள அனைத்து ஸ்வாமி படங்களுக்கும் காண்பித்துவிட்டு காகத்திற்கு போடவேண்டும். ஆனால் சிலர் நான் காலையில் குளிக்காமல் குக்கர் வைப்பதால் சாதம் நைவேத்தியம்
செய்வதில்லை என்கின்றனர். அது தவறு. தயவுசெய்து கண்டிப்பாக தினமும் ஸ்வாமிக்கு சாதம் எப்படியாவது நைவேத்தியம் செய்ய வேண்டும். அதுவும் குக்கரில் வைத்த அனைத்து அன்னத்தையும் அல்லது வடித்த சோறு அனைத்தையும் சிறிது நெய்விட்டு அப்படியே நைவேத்யம் செய்யவேண்டும். வைணவர்கள் கண்டருளப் பண்ணுதல்
என்று அழகிய தமிழில் இதை சொல்வார்கள். நைவேத்தியம் என்றால் அறிவிக்கிறேன் என்று பொருள் அதாவது இன்று இது உன் அருள் இது எப்போதும் எல்லோர்க்கும் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். சிலர் சிறிய கிண்ணத்தில் கொண்டு
வந்து வைக்கிறார்கள். அது வேண்டாம். அந்த அன்னம்