கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த 2000 கிலோ தங்கம் பயனின்றி உள்ளதாகவும் அவற்றை வைப்பு நிதியாக வைத்து அரசின் நிதிச் சுமையை குறைக்க ஸ்டாலின் திட்டம் போட்டுள்ளார். இது குறித்து #திமுக செய்தித் தொடர்பாளர் கண்ணதாசன் “கோயில் சொத்துகள் ஒரு காலத்தில் அந்தக் கோயில் மற்றும் அதைச் சார்ந்து
உள்ள ஊர் மக்களுக்குப் பயன் படுவதற்காகக் கொடுக்கப் படவைதான். அதன் ஒரு பகுதியாகத்தான் கோயில் நகைகள் மூலம் வருமானம் ஈட்ட எடுக்கப்பட்டுள்ள அரசின் முயற்சி. இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கோயில்களைச் சீரமைப்பதோடு மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டின்
கோவில்களைச் சார்ந்து பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலகோடி வருமானம் வருகிறது. உண்டியல் மற்றும் இதர காணிக்கைகள் மூலம் ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. இவற்றை நெறிப்படுத்தினால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் நிதிச் சுமையைச் சரி செய்ய முடிவதோடு
அந்தக் கோயில்கள் அமைந்துள்ள பகுதி மக்களின் மருத்துவம் மற்றும் கல்விப் பணிகளுக்கு அந்தத் தொகை பயன்படுத்தப்படும்.
கோயில் சொத்துகள் அரசின் நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாது மக்களுக்கு உணவளிக்கும் அன்னதானம் உள்ளிட்டவற்றிற்கும் பயன்படுத்த முடியும். அரசுக்கும் பொருளாதார ரீதியில்
மிகப்பெரிய சப்போர்ட் கிடைக்கும். கோயில் சொத்துகளை தங்கள் தேவைக்குப் பயன்படுத்த முடியாது என்பதால் இந்து மதம் மற்றும் கோயில்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் சில இந்துத்துவ அமைப்புகளுக்கு வேண்டுமானால் இது பாதகமாக இருக்குமே தவிர அரசுக்கு இது சாதகமாகத்தான் அமையும்" எனக் கோயில் சொத்துகள்
மூலம் வரும் வருவாய் அரசுக்குச் சாதகம் என்பதை விவரித்துள்ளார்.
இது குறித்து #பாஜக மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி அவர்கள் கூறியதாவது, "கோயில் வருமானத்தைக் கோயில்களுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் நியாயம். அதற்காகத் தானே கோயில்களுக்கான நிலங்கள், சொத்துகள்
இருக்கின்றன. கோயிலுக்காக ஒதுக்கப்பட்ட சொத்துகள் மற்றும் காணிக்கைகளின் நோக்கம் நிறைவேறும். மக்களின் நம்பிக்கையும் காப்பாற்றப்படும்.
கோயிலின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளக் கடவுளுக்காக எழுதி வைத்த, கொடுக்கும் சொத்துகளிலிருந்து வரும் வருமானம் கோயில்களுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்
பட வேண்டுமே தவிர அதில் அரசு தலையிடவே கூடாது. அதில் தலையிடுவதற்கு அரசுக்குத் தார்மீக உரிமையும் இல்லை. அந்த வருமானம் குடமுழுக்கு நடத்துவது, பெரிய கோயில் வருமானம் என்றால் அதைச் சார்ந்து இருக்கும் சிறு சிறு கோயில்களின் பூஜை, விழாக்களுக்குப்பயன்படுத்துவது, கோயில் தர்ம காரியங்களுக்குப்
பயன்படுத்துவது என்று மட்டும்தான் இருக்க வேண்டுமே தவிர அதை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டு செய்யவே கூடாது. சிதிலமடைந்துள்ள கோயில்களைச் சீரமைக்க, பெரிய கோயில்களைப் பராமரிக்க மட்டுமே அந்த வருமானத்தைப் பயன்படுத்த வேண்டும். கோயில் வருமானத்தைச் செலவு செய்ய அரசுக்கு
உரிமையே இல்லை. அதிகாரத்தைப் பயன்படுத்தி கோயில்கள் மீது அவர்களாகவே உரிமைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் தி.மு.க-வால் இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களின் ஆலய வருமானங்களை அரசு தங்களின் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா? இந்து கோயில்களில்
மட்டும்தான் அரசாங்கம் தங்கள் உரிமையை நிலை நாட்ட முயற்சி செய்ய வேண்டுமா? என சரியான கேள்வியை பதிவு செய்துள்ளார்.
குறிப்பு; திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற முதல் மற்றதுறைகளை விட அறநிலையதுறை மட்டும் சுறுசுறுப்பாக இயங்க காரணம் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தான் திமுகவின்
அறநிலைதுறையின் சுறுப்புக்கு உண்மையான காரணம். தமிழ்நாட்டின் கோவில்களின் கோடிக்கணக்கான வருமானத்தை வைத்து ஏதோ இந்துக்களுக்கு நல்லது செய்வது போல் தினந்தோறும் ஒருகோயில் சென்று ஆய்வு செய்தற்கு காரணம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கதையாக இதன் மூலம் இந்து கோயில்களையும் அழித்து விடலாம்
அரசின் ஊதாரித்தன செலவுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டம்தான் இது. ஒரு பக்கம் இந்து கோவில் வருவாயை அரசு கையகப்படுத்திக்கொண்டு கோவில்களை சீரழிப்பது. மற்றொரு பக்கம் இந்து கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வைத்து இந்த மத துவேசத்தை கல்வியில் புகுத்தி, வருங்கால மாணவர்கள் மனதில்
பதிய செய்வது. கொரோனா காலத்தில் கூட சரியாக செயல்படாத சுகாதாரதுறை இருக்க #அறநிலையத்துறை#பத்திரதுறை#மதுவிற்பனைதுறை மட்டும் இந்த ஆட்சியில் மிக துரிதமாக செயல்பட காரணம்? இந்த அரசின் ஊதாரி செலவுகளை சரிக்கட்ட இவைகள் மிக மிக முக்கியம் என #திமுக கருதுவதால்தான் என்பதை மக்கள் புரிந்து
கொள்ள வேண்டும்.
இந்துக்கள் சாதிகள், அரசியல்கள் கடந்து ஒன்றுப்பட்டு நின்று இந்து கோயில் வருமானங்கள் கோயில்களின் நன்மைக்கும், அங்குவரும் பக்தர்களுக்கு போதுமான வசதிகளை செய்து கொடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போராட வேண்டும். இல்லை என்றால் வருங்காலத்தில் இந்து மதம் என்பது
தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியில் மிக மிக சிறுபான்மையினர் ஆக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம்.
இந்துக்களே சிந்தியுங்கள். ஒன்றுபடுங்கள்!
மத்திய அரசு தலையிட்டு தடுக்குமா? இதை தடுக்க பொது நல வழக்குத் தொடுக்கப்பட முடியுமா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கஞ்சி குடிக்காத காமாக்ஷி
காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சியையும் சம்பந்தப்படுத்தி ஒரு இருசொல் அலங்காரக் கவிதை இருக்கிறது.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால், காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப்
போட்டாலும் சாப்பிட மாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்' என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்' என்றில்லாமல் ‘அரவார்'
என்று வருகிறது) இப்படிப்பட்ட ஐந்து தலைப் பாம்புக்கு அம்பாள், ஆறாவது தலையாக மானசீகமாக ஆகிறாளாம்.
#திருஇந்தளூர் 26வது #திவ்யதேசம்
சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில். காவிரி கரையில் அமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவை திருவரங்க பட்டணம் (மைசூர்), திருவரங்கம், அப்பால ரங்கம் (கோவிலடி), கும்பகோணம்
மத்தியரங்கம், திருஇந்தளுர் பரிமளரங்கம் என்பவை ஆகும். இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணையும் மனதையும் கவருவதாக அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் இவற்றின் நறுமணம்
வீசுகிறது. இதனால் பெருமாளுக்கு சுகந்தவன நாதர் என்று மற்றொர் பெயரும் பெருமாளுக்கு உண்டு. மூலவர் பரிமள ரெங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனாலும், பாதாரவிந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். தென்புறத்தில் காவிரி தாயாரும், வடபுறத்தில் கங்கை
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பத்ம புராணத்தில் இருந்து:
வாரணாசியில் கிரிகலா என்ற ஸ்ரீ விஷ்ணு பக்தன் வாழ்ந்து வந்தான். திடீரென்று ஸ்ரீ விஷ்ணு கோவில்கள் தீர்த்த யாத்திரை போக வேண்டுமென்று மனைவியிடம் சொன்னான். சுகலா என்பவள் அவன் மனைவி தானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள். வழியில்
எத்தனையோ இடையூறுகள் ஏற்படுமென்று அஞ்சிய கிரிகலா அவளிடம் சொல்லாமலே யாத்திரைக்குப் புறப்பட்டு விட்டான். கணவனிடம் மிக்க அன்பு கொண்ட சுகலா உணவு, உறக்கம் என்பதை விட்டுத் தரையில் கிடந்து உறங்கத் தொடங்கினாள். அவளது உறவினர்கள் அவளிடம் உன் கணவன் ஸ்ரீ விஷ்ணு கோவில்கள் தீர்த்த
யாத்திரைக்குத் தானே போயிருக்கிறார். நீ ஏன் இப்படி மனத்தைக் குழப்பிக் கொண்டு, உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய் என்று கூறினர். அவர்கள் கூறியதை ஏற்காத மனைவி சுகலா என்னிடம் சொல்லாமல் போனதே என்னை ஒதுக்கி வைத்தது போலத் தான். ஆகவே நான் இந்த விரதங்களை அனுஷ்டிப்பது நியாயம்தான் என்று
ஈஸ்வரனைக் காட்டிலும் குரு பெரியவர், ஈஸ்வர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன் என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை। ஆனால் பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல்
என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சுலோகத்தில் குருவுக்கும்
பரமாத்மாவுக்கும் பேதமின்மையை சொல்லியிருப்பது ஒரு விசேஷம்.
இதில் விஷ்ணு, சிவன் இருவரையும் சொல்லியிருப்பதால் இந்த சுலோகத்தைச் சொல்லி நாம் குருவந்தனம் பண்ணினால் நமக்கு சிவ- விஷ்ணு பேதமின்மை பாவமும் உண்டாகி விடும்.
ஆனால் தெய்வ பக்தியை மறக்கக் கூடாது. குருவை நம்மோடு சேர்த்து
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஆயர்பாடியில் ததிபாண்டன் என்ற ஒரு தயிர் வியாபாரி இருந்தான். ஒரு சமயம் கண்ணனை அன்னை யசோதை பிரம்பைக் கையில் ஏந்தியபடி துரத்திக் கொண்டே வர, ததிபாண்டன் கடைக்கு ஓடி வந்தான் விஷமக்காரக் கண்ணன்.
காலியாக இருந்த தயிர்ப் பானையைத் தலையணையாக வைத்தபடி உறங்கிக் கொண்டு
இருந்தான் ததிபாண்டன். மாமா மாமா என்று இனிய, ஆழமான குரலில் அவனைக் கண்ணன் அழைத்தான். அவன் கண்விழித்துப் பார்த்து என்ன என்று கேட்டான். மாமா நான் வீட்டிலிருந்த வெண்ணெய் எல்லாம் திருடித் தின்றதால் என் அம்மா என் மேல் கோபத்துடன் பிரம்பை எடுத்துக் கொண்டு என்னைத் துரத்தி வருகிறாள். நான்
ஒளிந்து கொள்ள இடம் தேடி வந்துள்ளேன். உங்களுடைய காலிப் பானை ஒன்றினுள் நான் ஒளிந்து கொள்கிறேன். நான் ஒளிந்து கொள்ளும் பானையின் வாயைத் துணிபோட்டுக் கட்டிவிடுங்கள். என் தாய் வந்து கேட்டால் நான் இங்கு இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்றான். ததிபாண்டனும் அதற்குச் சம்மதித்து அவ்வாறே
தினமும் நம் வீட்டு பூஜையறையில் உள்ள நம் குலதெய்வம் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அன்னம் நைவேத்தியம் செய்து அதை வீட்டிலுள்ள அனைத்து ஸ்வாமி படங்களுக்கும் காண்பித்துவிட்டு காகத்திற்கு போடவேண்டும். ஆனால் சிலர் நான் காலையில் குளிக்காமல் குக்கர் வைப்பதால் சாதம் நைவேத்தியம்
செய்வதில்லை என்கின்றனர். அது தவறு. தயவுசெய்து கண்டிப்பாக தினமும் ஸ்வாமிக்கு சாதம் எப்படியாவது நைவேத்தியம் செய்ய வேண்டும். அதுவும் குக்கரில் வைத்த அனைத்து அன்னத்தையும் அல்லது வடித்த சோறு அனைத்தையும் சிறிது நெய்விட்டு அப்படியே நைவேத்யம் செய்யவேண்டும். வைணவர்கள் கண்டருளப் பண்ணுதல்
என்று அழகிய தமிழில் இதை சொல்வார்கள். நைவேத்தியம் என்றால் அறிவிக்கிறேன் என்று பொருள் அதாவது இன்று இது உன் அருள் இது எப்போதும் எல்லோர்க்கும் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். சிலர் சிறிய கிண்ணத்தில் கொண்டு
வந்து வைக்கிறார்கள். அது வேண்டாம். அந்த அன்னம்