லிங்கம் அமைக்கப்பட்டிருக்கும் இடமான ஆவுடையைச் சுற்றி பலகை கட்டி அதன் மீது நின்று கொண்டு அர்ச்சர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சி.
இந்த லிங்கம் ஒரே கல்லால் ஆனது மிகவும் சிறப்பு.
இங்கு உள்ள நந்தியும் மிகவும் பெரிய அளவு கொண்டது.
இது முழுக்க சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது.
நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.
தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி.
மேலும் லிங்கத்தின் அடியில் சந்திரகாந்தக் கல் வைத்துள்ளதால் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் வெப்பத்தைத் தந்து வருகிறது என்பதை அனுபவித்த அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோபுரம் தஞ்சாவூர் போன்றே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த பின்னரே கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
தஞ்சைக்கு அடுத்து இந்த கோபுர விமானம் தான் தமிழகத்தில் பெரியது.
இதனுடைய கட்டுமானப்பணிகள் சோழர் காலத்தில் உள்ள கட்டிடக்கலையின் திறமையை வெளிப்படுத்துகிறது.
இந்த கோபுரக் கலசத்தின் நிழல் பூமியில் விழாது என்பது மிகவும் அதிசயமானது.
இந்தக் கோவிலை நிர்மாணித்தவர் இராஜேந்திரசோழன் 💪
இராஜராஜசோழன் – திருபுவனமாதேவியின் புதல்வன்.
சிறந்த வீரன் என்பதால் பல நாட்டு மன்னர்களை ஜெயித்து அவைகளை தன் வசம் ஆக்கினார்.
இவரது ஆட்சி காலமான 1012–1044 கடல் கடந்தும் சென்று நாடுகளைக் கைப்பற்றியதால் கடாரம்கொண்ட சோழன் என்ற பெயர் பெற்றார்.
தந்தை வழியில் ஆன்மீகத்தையும் பரப்பினார்.
இந்த கோவிலை உருவாக்கி கும்பாபிஷேகத்திற்கு கங்கையிலிருந்து புனித நீரை தன்னிடம் தோற்ற மன்னர்களின் தலையில் ஏற்றி இங்கு கொண்டு வரச் செய்தார்.
மேலும் கும்பாபிஷேகம் செய்யும் புனிதநீரை கோவிலுக்குள் கிணறு வெட்டச் செய்து அந்த புனித நீர் அங்கு வந்து சேரும் படி நேர்த்தியாக ஏற்பாடு செய்தார்
சிவதரிசனம் செய்ய வரும் பொழுதெல்லாம் இந்த புனித நீரை எடுத்து தலையில் தெளித்துபின்னர் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டார்.
இந்த தலத்து அம்மனின் பெயர் பெரியநாயகி.
பெயருக்கு ஏற்றார்போல் 9 1/2 அடி உயரத்தில் மிக அருமையாக அருள்பாலிக்கிறார்.
ஒவ்வொரு சிற்பமும் நுணுக்கமான கலைநயத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள நவகிரகம் ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வெகு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது
திருமண தடை, பணியிட மாற்றம், பதவி உயர்வு,குழந்தை பாக்கியம் இவைகளுக்கு இத்தல துர்க்கையை வேண்டினால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மேலும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்யப்படுவது மிகவும் உயர்வாக கருதப்படுகிறது.
ஏற்கெனவே பெரிய உருவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு நூற்றுக்கணக்கான மூடை அரிசி சாதம் படைத்து லிங்கம் முழுவதும் மூடும் அளவு அபிஷேகம் செய்யப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அபிஷேகம் தொடரும்.
இவற்றுடன் காய்கறி, பழ வகைகளையும் பல காரங்களும் நைவேத்தியமாக படைக்கின்றனர்.
இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசித்து செல்வர்.
இந்த படையல் செய்த பொருட்களை ஆவுடைப் பகுதியில் இருந்து எடுத்து தயிர் கலந்து சாப்பிட
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் ஏற்படும் என்பது ஐதீகம்.
இந்த திருக்கோவில் அன்னையாய் இருக்கும் பெரிய நாயகி அம்மனின் பாதத்தில் காஞ்சி பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்து வைத்த பின்னர், பக்தர்கள் அதிக அளவில் வர ஆரம்பித்தனர்.
இங்குள்ள மூலவர் பிரகதீஸ்வரருக்கு 25 மீட்டர் நீளமுள்ள வேஷ்டியைும் 14 அடி உயரமுள்ள மாலையும் சாத்தி வழிபடுகின்றனர்.
பிரதோஷத்தின் போது இங்கு வந்து ஈசனையும் அம்மையையும் வணங்கி, நத்தியிடமும் தங்கள் குறைகளைக் கூறி, பனிபோல் அனைத்து துயரங்களும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் ஒவ்வொரு சன்னதியிலும் ஒவ்வொரு தெய்வம் அருள்பாலிக்கின்றனர்.
குழந்தையாய் துர்க்கை அம்மன் உள்ளார்.
இந்த கோவிலை உருவாக்கிய இராஜேந்திர சோழனின் குல தெய்வம் இந்த துர்க்கை தான்.
மிகவும் துடிப்பானவள், சக்தி வாய்ந்தவள்,சிறுமியாய் புன்னகை பூத்தவளாய்,
பன்னிரண்டு கரத்துடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருள்பாலிப்பது மற்ற தலங்களில் காண இயலாத அரிய காட்சியாகும்.
இவள் மங்களங்களை அருள்வதால் மங்களசண்டி என்று அழைக்கின்றனர்.
இங்கு விநாயகர் கையில் எழுத்தாணியுடன் காணப்படுகிறார்.
இராஜேந்திர சோழன் தன் அமைச்சரிடம், கோவில் பணிக்கு ஆன செலவுகள் என்ன என்று கேட்டவுடன் நினைவுக்கு வராததால் தடுமாறி பதறினாராம்.
இந்த விநாயகர் முன்னின்று வணங்க, அனைத்து விபரங்களும் பளீரென நினைவுக்கு வந்ததாம்.
எனவே தான் இவர் கணக்கு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
ஆறுமுகப் பெருமானை இத்தலத்தில் மட்டுமே ஆறுமுகங்களையும் காண முடியும்.
மற்ற தலங்களில் 6வது முகம் காண இயலாது என்கின்றனர்.
மேலும் நவக்கிரக அமைப்பும், யாரும் சுற்றி வர இயலாதபடி ஒரே கல்லில் சூரியனுக்குரிய யந்திர வடிவில் தாமரை 8 கிரகங்களும் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நவக்கிரகங்கள் தான் உலகைச் சுற்றி வருகிறது.
எனவே அதையாரும் சுற்றக் கூடாது என்பது இதன் தாத்பர்யம் என்கின்றனர்.
இந்த தலத்தில் லட்சுமி,சரஸ்வதி இருவருமே தியானம் செய்தபடி அமர்ந்துள்ளதால், இருவரையும் ஞானலட்சுமி, ஞான சரஸ்வதி என்று நாம கரணம் சூட்டியுள்ளனர்.
முக்கிய விழாக்களாக பிரதோஷம், மகா சிவராத்திரி, பங்குனி திருவிழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், ஆடி வெள்ளி, கிருத்திகை, ஆடி கடைசி வெள்ளி ஆகியவையும் மற்றும் பண்டிகை தினங்களாக தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி ஆகிய தினங்களிலும் சிறப்பு பூஜைகள் உண்டு.
தினமும் 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் கோவில் பக்தர்களின் வருகைக்காக திறந்து இருக்கும். இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அரியலூரிலிருந்து 40 கிரோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விலாசம்:-
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில், கங்கைகொண்ட சோழபுரம் – 612901,
அரியலூர் மாவட்டம்
குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும்.
கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால்
கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசமாக வாய்ப்புள்ளதா?
அதற்கான சட்டம் இருக்கிறதா ?
மத்திய அரசு நினைத்தால் இதை நடத்தி காட்ட முடியுமா ?
மாநில அரசு ஒத்துழைக்காமல் இது
நிறைவேறுமா ?
நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள் ஆனால் அன்று வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள் குழுமியிருந்தார்கள்
நானும் வாய்தாவுக்கு ஆஜராக போயிருந்தேன் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்தேன்.
இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்
அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்
அந்தப் பெண்ணின் அக்காள் புருஷன் அந்தப் பையனை கண்டிக்கிறார்,
பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.
மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.
குழந்தை அழத் தொடங்குகிறது ஒரு பெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.
ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.
நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.