கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசமாக வாய்ப்புள்ளதா?
அதற்கான சட்டம் இருக்கிறதா ?
மத்திய அரசு நினைத்தால் இதை நடத்தி காட்ட முடியுமா ?
மாநில அரசு ஒத்துழைக்காமல் இது
நிறைவேறுமா ?
திருட்டு திமுக ஒன்றிய அரசு என அழைப்பதால் மத்தியஅரசு திமுகவை பயமுறுத்த இப்படி பேசுகிறதா ?
என நிறைய கேள்விகளுக்கு பதிலாகவும் அப்படி கொங்கு நாடு தனியாக பிரிந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு அலசு அலசுவோம் வாருங்கள்,
தமிழகத்தின் மேற்கு மண்டலங்களை ஒருங்கிணைத்து கொங்கு நாடு என
தனி மாநிலமாக உருவாக்க பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது,
கொங்கு நாடு என்பது சங்ககாலம் தொட்டு மருவி வரும் பெயர் .
அது அந்த பகுதியை சேர்ந்த தமிழர்களின் அடையாளம்.
இந்நிலையில் கொங்கு மண்டலம் எனப்படும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து
புதிதாக “யூனியன் பிரதேசமாக” மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுருந்தால் அதற்கான ஆயத்தப் பணிகளை உடனே துவங்கி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இதை நடைமுறைபடுத்த வேண்டும்.
காஷ்மீரை இரண்டா பிரிச்ச ராசியான கை திரு ரவி சங்கர் பிரசாத் பெத்த கை அவரை இங்க கவர்னராக அனுப்புறாங்கன்னா
ஏதோ பெரிய திட்டம் இருக்குனு தான் அர்த்தம்,
இந்திய அரசியலமைப்பு பிரிவு 3ன் படி மாநிலங்களை பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு (பாராளுமன்றம் / ஜனாதிபதிக்கு) உண்டு என்பதோடு அப்படிப் பிரிக்க மாநில
அரசுகளின் சட்டமன்றத்தின் கருத்துகளை ஜனாதிபதி கேட்கலாம் என்று மட்டுமே குறிப்பிடுகிறது.
மாநில அரசுகளின் அனுமதி தேவைல்லை என இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.
அப்படி என்ன தான் சொல்கிறது பிரிவு 3 ?
புதிய மாநிலங்களை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள மாநிலங்களின் பகுதிகள், எல்லைகள் அல்லது பெயர்களை மாற்றுவது.
பாராளுமன்றம் இயற்றும் சட்டப்படி
(அ) ஒரு மாநிலத்தின் பகுதியை பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்கலாம்; அல்லது, மாநிலங்களின் பகுதிகளை இணைத்து புதிய மாநிலம் உருவாக்கலாம்.
(ஆ) எந்த மாநிலத்தின் பரப்பையும் அதிகரிக்க செய்யலாம் (அதிகாரம் உண்டு).
(இ) எந்த மாநிலத்தின் பரப்பையும் குறைக்கலாம்.
(ஈ) எந்த மாநிலத்தின் எல்லைகளையும் மாற்றலாம்.
(இ) எந்த மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம்.
இதெல்லாம் வைத்து பார்க்கும்போது கொங்கு நாடு Conform தான் போல,
இதற்க்கு தான் கொத்தடிமைகள் கதறிட்டு இருக்கானுங்க😂😂😂😂
அப்படி அமைந்தால் கொங்கு நாடு பற்றி விளாவாரியான ஒரு அலசல்,
பரப்பளவு மொத்தம் : 45,493 KM2 (17,565 Square Miles)
மக்கள்தொகை : 2011 கணக்கெடுப்பின்படி : 2,07,43,812
அடர்த்தி : 607/km2 (1,570/Sq-Mi)
அலுவல் மொழி : தமிழ்
மற்றவை : கொங்குத் தமிழ்.
நேர வலயம் : (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண் : 635-642xxx
பெரிய நகரம் : கோயம்புத்தூர்.
எழுத்தறிவு : 75.55%
பெயர்க்காரணம் :
கொங்கு என்ற சொல்லின் பெயர்க்காரணமாக கீழுள்ள காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன,
கங்கு என்றால் ஓரம், எல்லை, வரம்பு என்று அர்த்தம்.
கிணற்றின் ஓரத்தையும் வயலின் ஓரத்தையும் கங்கு என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தற்கால காவிரிக்கு தென்கரையில் உள்ள கொங்கு பகுதிகளிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களிலும் வழக்கில் உள்ளது.
மேலும் கேழ்வரகின் உமிக்கும் மேல் உள்ள புறத்தோலை கொங்கு, கொங்கை என்று
அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்ட கிராமங்களில் வழக்கில் உள்ளது.
சங்ககால தமிழகத்தின் எல்லையில் ஆண்டதால் கங்கன் என்ற பெயர் வந்தது. எல்லையில் ஓடுவதால் கங்கை என்ற பெயர் வந்தது.
அதன்படி, முடியுடை வேந்தர்களான சேர, சோழ, பாண்டிய நாட்டின்
வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்கு என்று இருந்து காலப்போக்கில் கங்கு>கெங்கு>கொங்கு என மருவியது.
கொங்கு என்ற சொல்லுக்கு தேன்,சாரல் என்று பொருள்.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் இப்பகுதி கொங்கு எனவும்
குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து பெய்ததால் இப்பகுதி கொங்கு எனவும் கூறுவார் உண்டு.
வரலாறு :
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன,
கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கங்க வம்சத்து மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் கங்கவாடி 96,000 என்ற பகுதி இருந்துள்ளது.
தஞ்சைச் சோழர்களான, இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது.
பின்னர் இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்சென்றது.
அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு இங்கிருந்து வந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்கர்களின் ஆட்சிக்கு வந்தது.
17ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது. தொடர்ந்து
பாளையக்காரர்களின் கீழ் கொங்டு நாடு இருந்து வந்துள்ளது.
உள்ளடக்க நாடுகள் :
கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளும் இணைநாடுகள் சிலவும் இருந்ததாக கொங்கு மண்டல சதகம் 3-ஆம் பாடல் தெரிவிக்கிறது.
அவற்றை உரைநூல் ஒன்று
குறிப்பிடுகிறது. அவற்றின் அகரவரிசை வருமாறு.
24 நாடுகள்:-
அண்ட நாடு
அரையன் நாடு
ஆறை நாடு
ஆனைமலை நாடு
இராசிபுர நாடு
ஒருவங்க நாடு
காங்கேய நாடு
காஞ்சிக்கோயில் நாடு
காவடிக்கன் நாடு
கிழங்கு நாடு
குறும்பு நாடு
தட்டையன் நாடு
தலையன் நாடு
திருவாவினன்குடி நாடு
தென்கரை நாடு
நல்லுருக்கன் நாடு
பூந்துறை நாடு
பூவாணிய நாடு
பொன்களூர் நாடு
மணல் நாடு
வடகரை நாடு
வாரக்கன் நாடு
வாழவந்தி நாடு
வெங்கால நாடு
இணைநாடுகள் :
இடைப்பிச்சான் நாடு
ஏழூர் நாடு
சேல நாடு
தூசூர் நாடு
பருத்திப்பள்ளி நாடு
விமலை நாடு.
இணைநாடுகள்:-
இடைப்பிச்சான் நாடு
ஏழூர் நாடு
சேல நாடு
தூசூர் நாடு
பருத்திப்பள்ளி நாடு
விமலை நாடு
சங்க நூல்களில் கொங்கு நாடு:-
"கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே"-புறநானூறு-பாடல்-373
"கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை"-புறநானூறு-பாடல்-160
நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள் ஆனால் அன்று வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள் குழுமியிருந்தார்கள்
நானும் வாய்தாவுக்கு ஆஜராக போயிருந்தேன் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்தேன்.
இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்
அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்
அந்தப் பெண்ணின் அக்காள் புருஷன் அந்தப் பையனை கண்டிக்கிறார்,
பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.
மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.
குழந்தை அழத் தொடங்குகிறது ஒரு பெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.
ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.
நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.
ஜூன் 1 வருடம் 2018.
மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள்...,
தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டது.
குஜராத் மாநிலம் கலிக்கோ அருங்காட்சியகத்திலிருந்த இராஜராஜர் மற்றும் அவரது நம்பிராட்டியார் செப்புத்திருமேனிகள் தஞ்சை பெரியகோவிலை வந்தடைந்தன.
சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்புத்திருமேனிகள் தாயகம் வந்தன,
என்ன நடந்தது..?
சுருக்கமாய் இச்சிலைகள் மீட்கப்பட்ட வரலாறு ஐயா மா.மாரிராஜன் பதிவிலிருந்து,
தஞ்சை பெரியகோவிலாம் இராஜராஜேஷ்வரம்'
வெகு சாமானியர் முதல் பலரும் பல நிவந்தங்களை இக்கோவிலுக்கு கொடுத்துள்ளனர்,
எண்ணிலடங்கா செப்புத்திருமேனிகளாக இறை வடிவங்களை செய்து
இக்கோவிலுக்கு சமர்ப்பித்தனர்.
இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டு (கி.பி 1014)
தஞ்சை பெரியகோவிலின் நிர்வாக அதிகாரியான மூவேந்த வேளானுக்கு ஓர் நோக்கம் தம் அரசனுக்கும் அரசிக்கும் படிமங்கள் எடுக்க வேண்டும் என,