A Thread on some small Self Employment ideas for women 👇
பெண்களுக்கான சில சிறு சுயதொழில் யோசனைகளை பற்றிய பதிவு:
பெண்கள் வீட்டிலிருந்தே தொழில்முனைவோர் ஆவதற்கும் பகுதி நேர வேலை செய்வதற்கும் இவை சிறந்த வணிக வாய்ப்புகள்.
*Conditions Apply:
தொழிலைத் தொடங்குவதற்கு முன் அவற்றை ஆராய்ந்து சரியாகச் செயல்படுங்கள்.
1. Blogging:
சிறந்த ஆன்லைன் வணிக யோசனைகளில் ஒன்று Blogging. நீங்கள் விரும்பியதை உங்கள் வலைப்பதிவில் பதிவிடலாம், ஃபேஷன் மற்றும் அழகுக் குறிப்புகள், மகப்பேறு பராமரிப்பு, குழந்தைகள் ஆரோக்கியம், வீட்டு வைத்தியம், பொருட்களை மதிப்பாய்வு, பெற்றோர் ஆலோசனை,
டீன் ஏஜ் பிரச்சினை ஆலோசனைகள், பண்டைய உணவு முறை, சமையல் குறிப்புகள், food styling, உதவிக்குறிப்புகள். Google AdSense ஐப் பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவு தளத்தில் விளம்பரங்களை வைப்பதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
நீங்கள் எழுதும் பதிவில் தனித்துவத்தைக் காட்டுங்கள். இந்த வலைப்பதிவை உருவாக்குவதற்குக் கூட நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை.
அனைத்தும் உங்களுடைய சொந்த படைப்பாற்றல் ஆகும்.
2. உங்கள் டிஜிட்டல் படைப்புகளை வெளியிடுங்கள்:
நீங்கள் எழுதுவதில் அல்லது புகைப்படம் எடுப்பதில் திறமை இருந்தால், உங்கள் டிஜிட்டல் படைப்புகளை இந்த தளத்தில் விற்று அதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். blurb.com notionpress.com/for-writers amazon.in/b?ie=UTF8&node…
3. ஃப்ரீலான்ஸ் சேவைகள்:
நீங்கள் brochure, catalogue, Logo, Graphix வடிவமைக்கமுடியுமா? இனிமையான குரல்வளம் உள்ளவரா? எழுதும் திறன் உள்ளவரா? இந்த ஃப்ரீலான்ஸ் சேவைகள் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
5. Dropshipping Shop:
இந்த வணிகத்தில், நீங்கள் பொருட்களைக் கையாள தேவையில்லை, மாறாக ஒரு மூன்றாம் தரப்பு விற்பனையாளர் உங்கள் சார்பாக வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை அனுப்புவார். நீங்கள் விற்பனையை மட்டுமே செய்ய வேண்டும்.
பொதுவாக வணிகத்தில், விற்பனையாளர் ஒரு பொருளை வாங்கி ஸ்டோரில் வைத்து வாடிக்கையாளரிடம் லாபத்தில் விற்க வேண்டும். ஆனால் டிராப் ஷிப்பிங் என்பது ஒரு புதிய வணிக வடிவமாகும், இதில் நீங்கள் பொருட்களை வாங்கும் விற்பனையாளர் அதை வாடிக்கையாளரிடம் அனுப்புவதற்குப் பொறுப்பேற்கிறார்.
உடைகள், மளிகைப் பொருட்கள், மருந்துகள் போன்ற எந்த பொருட்களை ஒரு குறிப்பிட்ட இடத்தை மையமாகக் கொண்ட வெவ்வேறு விற்பனையாளர்களிடமிருந்து தயாரிப்புகளை உங்கள் சொந்த ஆன்லைன் ஸ்டோரின் மூலம் விற்பனை செய்யலாம்.
அமேசான் F.B.A (Fulfilment by Amazon) மற்றும் பிளிப்கார்ட் Fulfilment :
ஆன்லைனில் உங்கள் பொருட்களை விற்று, வருமானத்தை ஈட்டக் குறைந்த செலவு மற்றும் எளிய தளத்தை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் அதன் Fulfilment திட்டத்தின் மூலம் வழங்குகிறது.
6. தொலைபேசி அழைப்பு பதில் சேவை (Tele Call Answering Service):
உங்களிடம் போதுமான தொலைப்பேசி தொடர்பு அனுபவம் இருந்தால், நீங்கள் வீட்டிலிருந்தே தொலைப்பேசி பதிலளிக்கும் சேவையின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்தி இந்த வேலைகளை நீங்கள் தேடலாம். நிறுவனத்தை அணுகுவதற்கு முன் அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும். naukri.com/home-based-tel…
7. மொழிப் பயிற்சி வகுப்பு:
இன்று மக்கள் தங்கள் பல்வேறு வேலைத் தேவைகளுக்காக பல மொழிகளைக் கற்கிறார்கள். இவற்றில், பிரஞ்சு, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் மிகவும் பிரபலமானவை. இந்த மொழிகளில் நீங்கள் நிபுணத்துவம் இருந்தால் மொழிப் பயிற்சி வகுப்பைத் ஆன்லைனில் தொடங்கலாம்.
8. Affiliate Marketing:
இணைப்பு சந்தைப்படுத்தல் என்பது மற்றவர்களின் தயாரிப்புகளை (உங்கள் வலைத்தளத்தில்/WhatsApp குரூப் மூலம்) ஊக்குவித்தல் மற்றும் விற்பனையை அதிகரிக்க உதவுதன் மூலம் ஆகும் ஒவ்வொரு விற்பனையிலும், உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.
9. மொழிபெயர்ப்பு வேலைகள்:
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் திறமையானவராக இருந்தால், நீங்கள் வீட்டிலிருந்து ஃப்ரீலான்ஸ் மொழிபெயர்ப்பு வேலையில் சேரலாம். மடிக்கணினி மற்றும் நிலையான இணைய இணைப்பை வைத்திருப்பதன் மூலம், சில நிமிடங்களில் மொழிபெயர்ப்பாளராக நீங்கள் தொடங்கலாம்.
10. Virtual Assistant:
ஒவ்வொரு வணிகத்திற்கும், மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பது, நிர்வாக சேவைகளைச் செய்வது மற்றும் கூட்டங்களைத் திட்டமிடுவது போன்ற அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஒரு Virtual உதவியாளர் தேவை. வேலைக்கான ஊதியம் நீங்கள் செய்யும் நேரம் மற்றும் முயற்சிகளை பொறுத்தது.
இல்லத்தரசிகள், தொழில் முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள்
பகுதி நேரமாக இந்த வணிக வாய்ப்புகளை பயன்படுத்தலாம்.
யோகா, தியான மற்றும் ஜூம்பா பயிற்சியாளர்கள், தையல் வணிகம், வீட்டு அடிப்படையிலான கேட்டரிங், அழகு கலைஞர்கள், Web / App developing, சோப் தயாரித்தல், யூ டியூபர்,
டிஜிட்டல் மார்க்கெட்டிங், பங்கு சந்தை ஆய்வாளர், ஃபேஷன் டிசைனிங், நிதி ஆலோசகர், காப்பீட்டு முகவர், கைவினைப்பொருட்கள், பரிசுகள், அட்டைகள் மற்றும் கணக்கியல் பணி என்று பல வாய்ப்புகள் உள்ளன, உங்களது ஆர்வத்தை கொண்டு வணிகத்தை தேர்வு செய்யுங்கள்.
மேலும் தொழில் தொடங்குவதற்கு முன் கவனித்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மற்றும் பெண்களுக்கான கடன் திட்டங்கள் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.
5. மருத்துவ காப்பீடு பற்றிய நமது தவறான புரிதல்கள் மற்றும் மருத்துவ காப்பீடு வாங்காமல் நாம் செய்யும் தவறுகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
IRDA வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுள் காப்பீட்டுடன் ஒப்பிடும்போது மருத்துவ காப்பீட்டுக்கான விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மக்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றிய தவறான கண்ணோட்டமும் ஒரு காரணம்.
RTE என்பது Right to Education Act 2009, அதாவது அனைவருக்கும் கல்வி என்று தொடங்கப்பட்ட இலவச கல்வி உரிமைச் சட்டம் ஆகும். இந்த கல்வி சட்டம் ஆகஸ்ட் 2009 இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட (பொருளாதாரத்தில் பின்தங்கிய)
குழந்தைகளுக்கு சமூக வேறுபாடின்றி இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஒன்றிய அரசு இந்த கல்வி சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தம் உள்ள இடங்களில் 25 சதவிகித இடங்களைக் கட்டணம் இல்லாமல் மாணவர்களுக்கு வழங்கும்
1 மருத்துவ காப்பீட்டு
2 மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம்
3 மருத்துவ காப்பீட்டின் நன்மைகள்
4 மருத்துவ காப்பீட்டின் வகைகள்
5 மருத்துவ காப்பீட்டை பற்றிய தவறான புரிதல்கள்
6 மருத்துவ காப்பீட்டை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
7 மருத்துவ காப்பீட்டைத் தேர்வு செய்யும் முறைகள்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
பரப்பரப்பாக ஓடி கொண்டிருக்கும் உலகத்தோடு, நாமும் வேகமாக ஓடும் இந்த காலக்கட்டத்தில் நமது பாரம்பரிய உணவு முறைகள், உடற் பயிற்சிகளை மறந்ததனால் மற்றும் பல காரணமாக பல நோய்கள் மற்றும் உடல் நலமின்மை ஏற்படுகிறது.
#HappyBirthdayMSDhoni
என்னுடைய Dhoni, எனக்கு வழிகாட்டியாக என் வாழ்க்கையில் இருக்கும் ஒரு மாமனிதர்.
நான் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், கற்கிறேன், கற்றுக்கொள்வேன்
அவற்றில் சில:
1. Cool ஆகா இருத்தல் 2. கிரிக்கெட் என்பது ஒரு physical game மட்டுமல்ல, அது ஒரு Mind game. 3. Keep it simple 4. கற்றுக்கொள்வது முக்கியம், செய்த தவறுகளைச் செய்யக்கூடாது. 5. தோல்வியை எதிர்கொள்ளுங்கள் 6. 100% பணிக்கு அர்ப்பணிப்பு 7. பயத்தை மறந்து, வித்தியாசமாக ஏதாவது செய்வது
மறக்கமுடியாத சம்பவங்களில் சில: 1. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக சூப்பர் ஓவரில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது😜 2. அணியில் உள்ள இளைஞரை கோப்பையை ஒப்படைத்து விட்டு கடைசியில் நின்று போஸ் கொடுப்பது 3. பல போட்டிகளில் எதிரணி பந்து வீச்சாளர் மற்றும் அணி மீது அழுத்தத்தை வைத்திருத்தல்
A thread on Digital Marketing, Types, Certifications and Job opportunities: 👇
டிஜிட்டல் மார்க்கெட்டிங், அதன் வகைகள், பாட சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஒரு பதிவு:
இந்த மார்க்கெட்டிங் இல்லைனா ஒரு பொருட்களையும் விற்க முடியாது, எந்த பொருள் வேணாலும் எடுத்துக்கோங்க, எல்லாத்துக்கும் நமக்கு ஒரு விளம்பரம் தேவைபடுகிறது. விளம்பரம் எப்படி வேணா இருக்கும் டிவி AD, ஒருத்தர் சொல்லி, பத்திரிகை, வீடியோ, மின்னஞ்சல்... பல வழியில் நமக்கு வருகிறது.
உ: ஒரு தொழில் நிறுவனம் அவங்க தயாரிக்கும் பொருட்களை அல்லது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு சொல்லணும். அதை அவங்க விளம்பரமாகச் செய்யாவிட்டால், அவங்க தயாரிப்புகள் என்ன, சேவைகள் என்ன என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது.
001.பாண்ட் என்றால் என்ன?
பாண்ட் என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் ஆகும். அவை ஒரு நிறுவனத்திற்கு நிதி திரட்டவும் மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் கடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் வாங்கியவர்கள் வட்டியுடன் திருப்பி கொடுப்பார்கள்
நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்தோ அல்லது பொதுமக்களிடமிருந்தோ தங்கள் தொழிலுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட கடன் வாங்குவார்கள். வாங்கிய கடனுக்குப் பத்திரத்தைக் கொடுப்பார்கள். கடன் வாங்கியவர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துகிறார். இந்த பத்திரங்கள் ஒரு தேதியில் முதிர்ச்சியடையும்