#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஊரில் வயல்களின் நடுவே ஆங்காங்கே குளங்கள் இருந்தன. அதில் சிறிதும், பெரிதுமாக நிறைய மீன்கள் இருந்தன. அதில் மூன்று பெரிய மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தன. அவைகள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரி செய்து கொண்டு மிக்க நேசமாக
அக்குளத்தில் வாழ்ந்தன. மற்ற மீன்களுக்கு அவைகளிடம் மிக்க மரியாதையும், அன்பும் இருந்தது. அந்த மீன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ குணம் இருந்தது. ஒன்றிற்கொன்று வித்தியாசமான குணமானாலும் அவைகளுக்குள் பிரச்சினை ஒன்றும் இல்லை. முதலாவது மீனின் இயல்பு எதிர்வரும் ஆபத்துகளிலிருந்து முன்
எச்சரிகையோடு தன்னை காப்பாற்றி கொள்ளும் குணமுடையது. இரண்டாவது மீனின் இயல்பு, ஆபத்தான சமயம் வரை காத்திருந்து , மிகவும் சிரமப்பட்டு தக்க உபாயத்தை கையாண்டு பல கடினங்களுக்கு பின் தன்னைத்தானே காப்பாற்றி கொள்ளும் குணமுடையது. மூன்றாவது மீனின் இயல்பு காலதாமதம் செய்து யாருடைய நல்ல
உபதேசங்களை கேட்காமல் ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் குணமுடையது. ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் அக்குளத்தருகே வந்து அதைச் சுற்றிலும் வாய்க்கால் அமைத்து தண்ணீரை வடியவைத்து, நீர் குறைந்ததும் வலை வீசி மீன்களைப் பிடிக்கலாம் என்று பேசிக் கொண்டனர்.
இந்தப்பேச்சை அம்மூன்று மீன்களும் கேட்டன.
மறுநாளே கால்வாயையும் வெட்டத் துவங்கினர். பெரிய மீன்கள் மற்ற மீன்களைக் கூப்பிட்டுப் பேசத் துவங்கியது. அப்போது முதலாவது மீன் சொன்னது, உறவினர்களே இக்குளத்தில் இருக்கும் நம் யாவருக்கும் ஆபத்து நெருங்கி விட்டது. இன்று சில மீனவர்களின் பேச்சைக் கேட்டேன். நான் ஒரு யோசனை சொல்கிறேன். நீர்
வடிய இவர்கள் வெட்டும் வாய்க்கால் மூலம் தந்திரமாக தப்பித்து வெளியேறி வேறொரு இடத்திற்கு செல்வோம் என்றது. இந்த யோசனையில் யாருக்காவது ஆக்ஷேபணை இருந்தால் தெரிவிக்கலாம் மேலும் அடுத்த இடத்திற்குப் போய்விட்டால் இந்த பெரும் ஆபத்திலிருந்து தப்பிவிடலாம் என்றும் தண்ணீரும் வெளியேறத் துவங்கி
விட்டதால் சீக்கிரம் முடிவெடுப்போம் என்றும் கூறியது.
இரண்டாவது மீன் தனது நண்பர்களிடம் நண்பனே இப்படி முடிவெடுக்க இன்னும் காலம் வரவில்லை. நேரம் வரும்போது எனக்கு தக்க யோசனை தோன்றும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். என்றது. மூன்றாவது மீன் தனது நண்பர்களிடம் இப்போதைக்கு இந்தப் பேச்சுக்கு
அவசியமும் இல்லை அவசரமுமில்லை இதெல்லாம் வீண் பயம். கவலை கொள்ள வேண்டாம் என்றது. இப்போது உள்ள நேரத்தை வீணடிக்காமல் ஆனந்தத்துடன் துள்ளி விளையாடுவோம் என்றது. பழக்கமான இடத்தைவிட்டுப் போக மனமில்லாததால் மற்ற மீன்களும் இதை ஆமோதித்தன. முதலாவது மீன் நான் போகிறேன் என்று சொல்லி விட்டு
வெளியேறும் நீரினுட் புகுந்து வெளியேறிவிட்டது. மீனவர்கள் அதிக அளவு நீரை வெளியேற்றி விட்டு நல்லதொரு அழுத்தமான வலையை குளத்தில் வீசி, பலவித யுக்திகளைக் கையாண்டு மீன்களையெல்லாம் வலையில் சிக்க வைத்தனர். இரண்டாவது மீனும் அதில் சிக்கியது. ஆனால் வலையின் கயிற்றை வாயில் கவ்விக்கொண்டு
வலையினுள் கட்டுண்டதைப் போல கிடந்தது. மீனவர்கள் வலையை வேறு நல்ல நீர்ருள்ள இடத்திற்கு எடுத்துப்போய் சுத்தம் செய்வோம் என்று இழுத்துக் கொண்டு போய் சுத்தம் செய்யத் துவக்கினர், இரண்டாவது மீன் கயிற்றை வாயிலிருந்து விடுத்துக் கொண்டு நீரில் தாவி தப்பித்து கொண்டது. ஆனால் மூன்றாவது மீன்
பயத்திலேயே உணர்விழந்து மரணத்தைத் தழுவியது. அதனால் ஆபத்து/இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன் தான் துன்பத்தினின்றும் விடுபடுகிறான் என பாகவதம் கூறுகிறது. ஒருவன் தனக்குத் தக்க சமயத்தில் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறானோ அவன் கஷ்டப்பட்டுதான் சுகமடைய முடியும். எந்த மனிதனும் ஆலோசனை
செய்து, நன்கறிந்து, தேசகாலத்தை உத்தேசித்து, பரந்தாமனின் உபதேசங்களை சரியான நேரத்தில் சரியாகப் பயன் படுத்தினால் அதன் ஒத்துழைப்பால் விருப்பமான பலனைப் பெற முடியும். அதனால் ஒவ்வொரு நிமிடமும் பரந்தாமனின் புகழ் பாடுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கங்கைக்கரை ஒட்டிய நவதீப்பில் முகிலன், கோவிந்தன் என இரண்டு நண்பர்கள் வசித்து வந்தனர். அதில் முகிலன் உண்மையான கிருஷ்ண பக்தன், கோவிந்தன் வெளியே மட்டுமே பக்தனாக நடித்தான் குறிப்பாக சாக்கு போக்கு சொல்லி எந்த பக்தி சேவையும் செய்யாமல் தட்டிக்கழித்து வந்தான். ஒரு
முறை கங்கைக் கரை அருகில் உள்ள மாயாப்பூர் என்னுமிடத்தில் ஆன்மீக மகான் ஒருவர் விஜயம் செய்தார். இதனை அறிந்த உண்மையான பக்தன் முகிலன் தனது நண்பனிடம் கங்கையின் மறு கரையில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக மகான் ஒருவர் வந்துள்ளார் நாம் சென்று அவரது ஆசியைப் பெறலாம் என்று கூறி அழைத்தான்.
கண்டிப்பாக நாம் ஒரு நாள் போவோம் ஆனால் இப்போது வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து செல்லலாம். இப்போது நிறைய வேலை உள்ளது என்று கூறி தட்டிக் கழித்தான் கோவிந்தன். இரண்டு நாட்கள் கடந்தன, கங்கைக் கரையில் களியாட்ட விழா நடந்தது. கோவிந்தன் முகிலனிடம் நாம் இங்கு விழாவை காண செல்வோமா அங்கு சூடான
via WA
சுஜாதாவை தவிர வேறு யார் இப்படி எழுத முடியும்
அந்த காலம் தான்
நன்றாக இருந்தது!
ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
பேருந்துக்குள் கொண்டுவந்து
மாலைமுரசு விற்பார்கள்
மிதி வண்டி வைத்திருந்தோம்
எம் ஜி ஆர் உயிரோடு
இருந்தார்.
ரஜினி, கமல் படம் ரிலிஸ்,
KB படங்கள் என்றால்
ஒரு மாதம் அலசுவோம்.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
கல்யாண வீடுகளில்
பாய் போட்டு சாப்பாடு.
கபில் தேவின்
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH
குமுதம், விகடன்
நேர்மையாக இருந்தது.
எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
கேசட்டிலும்
பாடல் கேட்பது
சுகமானது.
வீடுகளின் முன் பெண்கள்
காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
அரட்டை அடிப்பார்கள்.
சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
முன்பே திட்டமிடுவோம்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே தயாராவோம்.
புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பராசர பட்டர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள், அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவரை மெதுவாக
வீட்டுக்கு அழைத்து வந்து மயக்கம் தெளிவித்தனர். பட்டர் எழுந்தவுடன், காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள். ஒன்றுமே இல்லை. நான் ஒரு காட்சியைக் கண்டேன். அதனால் மயங்கி விழுந்து
விட்டேன் என்றார் பட்டர். என்ன காட்சி என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். ஒரு வேடன் ஒரு முயல்குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப்பையில் மூட்டைக்கட்டி எடுத்துச்சென்றான். இதைக்கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல், அந்த வேடனைத் துரத்திச்சென்று, அவன் கால்களை பிடித்துக் கொண்டு
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி அழுதான் அர்ஜுனன். அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் கண்ணனை இறுக பற்றிக்கொண்டு கண்ணா அபிமன்யு உன் மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம்
தாள முடியாமல் அழுகிறாயோ என்று கேட்டான். கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன், கண்ணா நீயோ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க
முடியாது. கண்ணன் சொன்னார், உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அப்படி சொல்லாதே கண்ணா, மானிடர்கள் மறைந்தாலும் பாச பந்தம் அவர்களை விட்டு போகாது என்றான் அர்ஜுனன். அப்படியா? இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கே தான் இறந்த உன் மகன்
#சிவன்_சொத்து_குலம்_நாசம் நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவரின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் இன்னொரு சம்பவம்! இதை பகிர்ந்து கொண்டவர் சங்கர பக்த ஜன சபாவின் செயலாளர் வைத்தியநாதன். இவர் இளவயது முதல் மகா பெரியவரின் கூட இருந்த அடியவர். அது, மாசி மாதத்தின் வைகறைப்
பொழுது. வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம். முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம், மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற
இடத்தை அடைந்தபோது அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன. அப்பொழுது பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம். அவர் இரண்டு நாட்களாக மௌன விரதத்தில் இருந்தார். மெயின் ரோட்டில் இருந்து இடது
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஒரு முறை, மன்னன் அம்சவரதனைக் காண ஒரு சாது வந்தார். ஆசி வழங்கிய சாது, அவனிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். இந்த ஊரிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேலை கொடுப்பாயாக. அவனது கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரச் சொல்.
அதுவே அவனது வேலையாக இருக்க வேண்டும், அதற்காக அவனுக்குத் தக்க ஊதியமும் வழங்க வேண்டும் என்றார். சாதுவின் வேண்டுகோளைக் கேட்டு திகைப்புற்ற போதிலும், ஒரு வித பயத்தினால் காரணம் ஏதும் கேட்காமல், மன்னன் அம்சவரதன் ஒப்புக் கொண்டான். சாதுவும் அரசவையை விட்டு வருத்தத்துடன் வெளியேறினார்.
சாதுவின் விசித்திரமான கட்டளையை மன்னன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றினான். தனது அமைச்சர்களின் உதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்தான். அவன் முட்டாளா என்பதை நன்கு சோதித்து அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம்