#சிவன்_சொத்து_குலம்_நாசம் நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவரின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் இன்னொரு சம்பவம்! இதை பகிர்ந்து கொண்டவர் சங்கர பக்த ஜன சபாவின் செயலாளர் வைத்தியநாதன். இவர் இளவயது முதல் மகா பெரியவரின் கூட இருந்த அடியவர். அது, மாசி மாதத்தின் வைகறைப்
பொழுது. வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம். முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம், மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற
இடத்தை அடைந்தபோது அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன. அப்பொழுது பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம். அவர் இரண்டு நாட்களாக மௌன விரதத்தில் இருந்தார். மெயின் ரோட்டில் இருந்து இடது
புறமாகத் திரும்பி பயணிப்பது தான் திட்டம். ஆனால், பல்லக்கின் உள்ளே இருந்து மீண்டும் தண்டத்தால் தட்டும் சத்தம் கேட்டது. அந்த சமிக்ஞை மூலம், ஊர்வலம் வலப்புறமாகத் திரும்ப உத்தரவாகி விட்டதைப் புரிந்துகொண்டார் மாலி என்ற அன்பர். ஊர்வலம் வலதுபுறமாகத் திருப்பப்பட்டது. இது, மண்மங்கலம் போற
பாதை ஆச்சே, அடியார்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பினார். இப்படிப் போகணும்னு உத்தரவாகிவிட்டதென்றால் அதன்படி போகவேண்டும். இதற்கு நிச்சயம் ஏதாவது காரண காரியம் இருக்கும் என்றார் மாலி. மண்மங்கலம் கிராமம் இன்னும் முழுமையாக விழித்துக் கொள்ளவில்லை. அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த
அம்மாள், திண்ணை மாடத்தில் அகல் விளக்கேற்றி வைத்தார். அப்படியே இன்னொரு விளக்கை பெருமாள் கோவில் வாசற்படியில் ஏற்றி வைத்துவிட்டு தனது வீட்டுவாசலில் நீர் தெளித்துப் பெருக்க ஆரம்பித்தார். அதே நேரம் தூரத்தில் ஏதோ பெரிய ஊர்வலம் வருகிற மாதிரி சத்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவர்
ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். குதிரையும் யானையுமாக பல்லக்கு ஊர்வலம் ஊருக்குள் வந்து கொண்டிருப்பதைக் கண்டு அவர் கண்கள் வியப்பால் விரிந்தன. மிகச் சரியாக அவரது வீட்டுவாசலை பல்லக்கு நெருங்கியதும், மீண்டும் உள்ளே தண்டத்தின் சத்தம். பல்லக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. எத்தனையோ
காப்பியங்களிலும் கதைகளிலும் சொல்லி இருக்கிறார்களே, ஆதவனைக் கண்டு தாமரை மலர்ந்ததாக, அப்படியொரு அற்புதத்தை அன்று நிஜமாகவே மண்மங்கலம் கிராமம் சந்தித்தது. உடம்பாலும் வாக்காலும், மனத்தாலும் செயலாலும் தன்னை முழுவதுமாகப் பரம்பொருளுக்கு அர்ப்பணித்துக் கொண்ட அந்தத் தெய்வத் தாமரை, மெள்ள
பல்லக்கின் திரையை விலக்கித் தன் திருமுகம் காட்ட, அதன்பின்னர் இன்னும் தாமதிக்கக் கூடாது என்பதுபோல சட்டென்று மேகத் திரையை விலக்கி, ஆதவனும் தன் ஒளிக்கிரணங்களை அந்தக் கிராமத்தின் மீது வீசி, தெய்வத் தாமரையின் திருவடிகளைத் தொட்டு வணங்கினான். அந்தக் கிராமம் செய்த புண்ணியம், மகா பெரியவா
என்ற தெய்வக் கமலம், தமது திருவடிகளை அந்த மண்ணில் பதித்துத் திருவருள் புரிந்தது. வாசல் தெளித்து கொண்டிருந்த பெண்மணி, இப்படியொரு தெய்வீக தரிசனத்தைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண நேரம் ஸ்தம்பித்து நின்றவள், பிறகு சுதாரித்து உள்ளே ஓடி, கணவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அவரும்
எழுந்து ஓடிச் சென்று, நான்கு சொம்பு தண்ணீரைத் தலைக்கு ஊற்றி அவசர அவசரமாகக் குளித்து முடித்து, விபூதி பூசிக்கொண்டு வருவதற்குள், நிறைகுடமும் பூரண ஆரத்தியும் தயார் செய்து விட்டிருந்தாள் அந்த மாதரசி. மகாபெரியவாளுக்கு ஆரத்தி எடுத்து, பாத பூஜை செய்து, அவரை வணங்கி வரவேற்றனர் அத்தம்பதி.
சில நிமிடங்களில் வீட்டின் திண்ணையை அலம்பிச் சுத்தம் பண்ணி, கோலம் இட்டு வைக்க, அங்கே பெரியவா அமர்ந்து கொண்டார். இதற்குள் ஒட்டுமொத்த ஊரும் விழித்துக்கொண்டு அந்த வீட்டின் முன் திரண்டுவிட்டது. பழத்தட்டுக்களுடனும் மலர் மாலைகளுடனும் சாரை சாரையாக வந்து, மகாபெரியவாளை வணங்கினார்கள்.
ஸ்நானம், பூஜை எல்லாம் முடிந்து எல்லோருக்கும் ஆகாரம் ஆயிற்று. மகாபெரியவா பசும்பாலும் உலர் திராட்சையும் மட்டும் எடுத்துக்கொண்டார். மற்றவர்களுக்கு ஒவ்வொருத்தர் வீட்டிலும் இலை போட்டுப் பாயசம், அப்பளம் என்று உணவு பரிமாறினார்கள். அதற்குள் செய்தியை அறிந்து அக்கம்பக்கத்து கிராமங்களில்
இருந்தும் ஜனங்கள் வந்து சேர்ந்தார்கள். மாசிமாதம் அறுவடை முடிந்த நேரம் என்பதால் மிராசுதாரர்கள், குடியானவர்கள், தொழிலாளர்கள் என்று எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமரைப் பூ, இளநீர், வாழைத்தார் என ஜனங்கள் தாங்கள் கொண்டுவந்ததை பெரியவா முன் சமர்ப்பித்து வணங்கினார்கள். வயதான ஓர் அம்மாள்
தினக்கூலி நெல்லை மடியில் கட்டி எடுத்து வந்திருந்தாள். அதை அப்படியே பெரியவா முன்னே கொட்டி, அவரை நமஸ்காரம் பண்ணினாள். அப்போது அவள் முகத்தில் அப்படியொரு சந்தோஷம் காணிக்கைகளால் அந்தத் திண்ணையே நிரம்பிவழிந்தது. மகா பெரியவாளிடம் முறையிடுவதற்கு அந்த ஜனங்களுக்கெல்லாம் நிறைய விஷயங்கள்
இருந்தன. எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கை தூக்கி, வந்தவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். சிலருக்கு எலுமிச்சை, துளசி எனப் பிரசாதமும் கிடைத்தது. நேரம் நகர்ந்துகொண்டு இருந்தது. மகா பெரியவாளின் மௌனம் கலையவில்லை. திடீரென மாலியை அருகில் அழைத்து, சைகையால் பேசினார்.
கைகளால் லிங்கம் போன்றும், கோயில் கோபுரம் போன்றும் அபிநயித்துக் காட்டி, எங்கே இருக்கிறது என்பதுபோல் சைகையால் கேட்டார். அதை மாலி புரிந்துகொண்டார். கூட்டத்தைப் பார்த்து, இந்த ஊரில் சிவன் கோயில் எங்கே இருக்கு என்று கேட்டார். அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், ‘இங்கே ஒரு
பெருமாள் கோயில் இருக்கு. அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே” என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும்
தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே! மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார், மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே, நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில்
இருந்ததா என்றால், அதுகுறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள். அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்தனர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும்
தெரிவித்தார். தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களையும், ரோஜாப்பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார். அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய்ம்மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு
சுதாரித்துக்கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார். அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. காலமாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது.
கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது. எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக்கும்போது கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக. ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக. ‘சிவன் சொத்து
குலம் நாசம்’னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையையும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக்கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன, எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளையும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தும் போச்சு. சரி நாம அறிந்தோ அறியாமலோ பாவம்
செஞ்சிருக்கோம்போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியொரு தண்டனையைக் கொடுத்திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட்டோம். நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி ‘ணங்’குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால் பெரிய சிவலிங்கம
ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! அல்லா இப்ப என்ன பண்றது ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம். விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக்கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.
மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம். ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப் படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும் என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர்
மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.
இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியொரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது. அதுவரை மௌனமாக
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார். அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார் ‘மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’
என்று. படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை என்றார் கண்ணீர் மல்க. உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத்
திரும்பினார். ”இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?” என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகையாலேயே உத்தரவு பிறப்பித்தார். பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார்
வைத்தியநாதன். ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக்கொண்டது, அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது! அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.
பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்! பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது. காரணம் இன்றிக்
காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

5 Aug
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி அழுதான் அர்ஜுனன். அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் கண்ணனை இறுக பற்றிக்கொண்டு கண்ணா அபிமன்யு உன் மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம்
தாள முடியாமல் அழுகிறாயோ என்று கேட்டான். கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன், கண்ணா நீயோ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க
முடியாது. கண்ணன் சொன்னார், உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அப்படி சொல்லாதே கண்ணா, மானிடர்கள் மறைந்தாலும் பாச பந்தம் அவர்களை விட்டு போகாது என்றான் அர்ஜுனன். அப்படியா? இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கே தான் இறந்த உன் மகன்
Read 9 tweets
3 Aug
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஒரு முறை, மன்னன் அம்சவரதனைக் காண ஒரு சாது வந்தார். ஆசி வழங்கிய சாது, அவனிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். இந்த ஊரிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேலை கொடுப்பாயாக. அவனது கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரச் சொல்.
அதுவே அவனது வேலையாக இருக்க வேண்டும், அதற்காக அவனுக்குத் தக்க ஊதியமும் வழங்க வேண்டும் என்றார். சாதுவின் வேண்டுகோளைக் கேட்டு திகைப்புற்ற போதிலும், ஒரு வித பயத்தினால் காரணம் ஏதும் கேட்காமல், மன்னன் அம்சவரதன் ஒப்புக் கொண்டான். சாதுவும் அரசவையை விட்டு வருத்தத்துடன் வெளியேறினார்.
சாதுவின் விசித்திரமான கட்டளையை மன்னன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றினான். தனது அமைச்சர்களின் உதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்தான். அவன் முட்டாளா என்பதை நன்கு சோதித்து அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம்
Read 19 tweets
2 Aug
#ஆடிகிருத்திகை இன்று திருமுருகப் பெருமானை வணங்குதல் சிறப்பு. #அருணகிரிநாதர் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை:
1. சீர்பாத வகுப்பு  தமிழில் உள்ள முருகன் துதிகளிலேயே மிக மிக அழகானது. அருள்
நெறியிற் சேர்த்து ஞானம் அளிக்கும்.
2. தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகம்
சித்திக்கும்.
3. வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது. பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது. அருணகிரிநாத சுவாமிகள்
ஆசைகூர் பத்தனேன்மனோ பத்மமான பூ வைத்து …… நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி …… யொருஞான
வாசம்வீ
Read 7 tweets
29 Jul
கஞ்சி குடிக்காத காமாக்ஷி
காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சியையும் சம்பந்தப்படுத்தி ஒரு இருசொல் அலங்காரக் கவிதை இருக்கிறது.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால், காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப்
போட்டாலும் சாப்பிட மாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்' என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்' என்றில்லாமல் ‘அரவார்'
என்று வருகிறது) இப்படிப்பட்ட ஐந்து தலைப் பாம்புக்கு அம்பாள், ஆறாவது தலையாக மானசீகமாக ஆகிறாளாம்.

"கஞ்சி குடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே
வெஞ்சினங்க ளன்றும் விரும்பாளே - நெஞ்சுதனில்
அஞ்சுதலை யரவாருக் (கு) ஆறுதலை யாவாளே
கஞ்சமுகக் காமாட்சி காண்"

கஞ்ச முகம் என்றால் தாமரைப் பூப்போலவுள்ள
Read 11 tweets
28 Jul
கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த 2000 கிலோ தங்கம் பயனின்றி உள்ளதாகவும் அவற்றை வைப்பு நிதியாக வைத்து அரசின் நிதிச் சுமையை குறைக்க ஸ்டாலின் திட்டம் போட்டுள்ளார். இது குறித்து #திமுக செய்தித் தொடர்பாளர் கண்ணதாசன் “கோயில் சொத்துகள் ஒரு காலத்தில் அந்தக் கோயில் மற்றும் அதைச் சார்ந்து
உள்ள ஊர் மக்களுக்குப் பயன் படுவதற்காகக் கொடுக்கப் படவைதான். அதன் ஒரு பகுதியாகத்தான் கோயில் நகைகள் மூலம் வருமானம் ஈட்ட எடுக்கப்பட்டுள்ள அரசின் முயற்சி. இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கோயில்களைச் சீரமைப்பதோடு மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டின்
கோவில்களைச் சார்ந்து பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலகோடி வருமானம் வருகிறது. உண்டியல் மற்றும் இதர காணிக்கைகள் மூலம் ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. இவற்றை நெறிப்படுத்தினால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் நிதிச் சுமையைச் சரி செய்ய முடிவதோடு
Read 16 tweets
28 Jul
#திருஇந்தளூர் 26வது #திவ்யதேசம்
சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில். காவிரி கரையில் அமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவை திருவரங்க பட்டணம் (மைசூர்), திருவரங்கம், அப்பால ரங்கம் (கோவிலடி), கும்பகோணம்
மத்தியரங்கம், திருஇந்தளுர் பரிமளரங்கம் என்பவை ஆகும். இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணையும் மனதையும் கவருவதாக அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் இவற்றின் நறுமணம்
வீசுகிறது. இதனால் பெருமாளுக்கு சுகந்தவன நாதர் என்று மற்றொர் பெயரும் பெருமாளுக்கு உண்டு. மூலவர்  பரிமள ரெங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனாலும், பாதாரவிந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். தென்புறத்தில் காவிரி தாயாரும், வடபுறத்தில் கங்கை
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(