#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி அழுதான் அர்ஜுனன். அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் கண்ணனை இறுக பற்றிக்கொண்டு கண்ணா அபிமன்யு உன் மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம்
தாள முடியாமல் அழுகிறாயோ என்று கேட்டான். கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன், கண்ணா நீயோ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க
முடியாது. கண்ணன் சொன்னார், உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அப்படி சொல்லாதே கண்ணா, மானிடர்கள் மறைந்தாலும் பாச பந்தம் அவர்களை விட்டு போகாது என்றான் அர்ஜுனன். அப்படியா? இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கே தான் இறந்த உன் மகன்
அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன். ஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்கலோகத்தில் இருந்தான் அபிமன்யு. அவனை அடையாளம் கண்டுகொண்ட அர்ஜுனன், என் மகனே அபிமன்யு என்று பாசத்தோடு கட்டி அணைக்க போனான். அணைக்க போன அர்ஜுனனை தடுத்த
அபிமன்யுவின் ஆன்மா, அய்யா யார் நீங்கள்? என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது. தயவு கூர்ந்து என்னை விட்டு விலகி செல்லுங்கள் என்றது அபிமன்யுவின் ஆன்மா. அதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம் பார்த்திபா பார்த்தாயா? உறவு, பாசம், பந்தம், உணர்வு, கோபம், அன்பு, காமம் யாவும்
உடலில் உயிர் இருக்கும் வரை தான். உடலை விட்டு உயிர் போய் விட்டால், ஏதும் அற்ற உடலுக்கும் உணர்வு இல்லை. அதை விட்டு போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை. நீ அழ வேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே. அதை கட்டி பிடித்து அழு. உன்
உணர்ச்சியெல்லாம் அதில் கொட்டி அழு. ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல; பிறந்த உயிர் இறப்பிற்கும் நீ காரணம் அல்ல; என்பதை நன்கு உணர்ந்து கொள். படைத்தவன் எவனோ அவனே தான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான். நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே. செயல் யாவும் படைத்தவன் செயலே என்பதை
உணர்ந்து செயல்படு. அதுவே வாழ்வின் அர்த்தமாகும் என்று கூறி கண்ணன் புன்னகைத்தான். பிறந்த பிறப்பில் நீ செய்ய வேண்டிய நியாயமான குடும்ப கடமையை உறுதியாக நின்று செய். ஆனால் தன் நலம் கருதாத உன் அர்ப்பணிப்பு மட்டுமே உன் பெயர் சொல்லி நிலையாக உலகில் வாழும் என்பதை உணர்பவனே மனிதன்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பராசர பட்டர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள், அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவரை மெதுவாக
வீட்டுக்கு அழைத்து வந்து மயக்கம் தெளிவித்தனர். பட்டர் எழுந்தவுடன், காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள். ஒன்றுமே இல்லை. நான் ஒரு காட்சியைக் கண்டேன். அதனால் மயங்கி விழுந்து
விட்டேன் என்றார் பட்டர். என்ன காட்சி என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். ஒரு வேடன் ஒரு முயல்குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப்பையில் மூட்டைக்கட்டி எடுத்துச்சென்றான். இதைக்கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல், அந்த வேடனைத் துரத்திச்சென்று, அவன் கால்களை பிடித்துக் கொண்டு
#சிவன்_சொத்து_குலம்_நாசம் நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவரின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் இன்னொரு சம்பவம்! இதை பகிர்ந்து கொண்டவர் சங்கர பக்த ஜன சபாவின் செயலாளர் வைத்தியநாதன். இவர் இளவயது முதல் மகா பெரியவரின் கூட இருந்த அடியவர். அது, மாசி மாதத்தின் வைகறைப்
பொழுது. வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம். முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம், மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற
இடத்தை அடைந்தபோது அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன. அப்பொழுது பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம். அவர் இரண்டு நாட்களாக மௌன விரதத்தில் இருந்தார். மெயின் ரோட்டில் இருந்து இடது
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஒரு முறை, மன்னன் அம்சவரதனைக் காண ஒரு சாது வந்தார். ஆசி வழங்கிய சாது, அவனிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். இந்த ஊரிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேலை கொடுப்பாயாக. அவனது கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரச் சொல்.
அதுவே அவனது வேலையாக இருக்க வேண்டும், அதற்காக அவனுக்குத் தக்க ஊதியமும் வழங்க வேண்டும் என்றார். சாதுவின் வேண்டுகோளைக் கேட்டு திகைப்புற்ற போதிலும், ஒரு வித பயத்தினால் காரணம் ஏதும் கேட்காமல், மன்னன் அம்சவரதன் ஒப்புக் கொண்டான். சாதுவும் அரசவையை விட்டு வருத்தத்துடன் வெளியேறினார்.
சாதுவின் விசித்திரமான கட்டளையை மன்னன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றினான். தனது அமைச்சர்களின் உதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்தான். அவன் முட்டாளா என்பதை நன்கு சோதித்து அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம்
#ஆடிகிருத்திகை இன்று திருமுருகப் பெருமானை வணங்குதல் சிறப்பு. #அருணகிரிநாதர் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை: 1. சீர்பாத வகுப்பு தமிழில் உள்ள முருகன் துதிகளிலேயே மிக மிக அழகானது. அருள்
நெறியிற் சேர்த்து ஞானம் அளிக்கும். 2. தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகம்
சித்திக்கும். 3. வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது. பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது. அருணகிரிநாத சுவாமிகள்
ஆசைகூர் பத்தனேன்மனோ பத்மமான பூ வைத்து …… நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி …… யொருஞான
வாசம்வீ
கஞ்சி குடிக்காத காமாக்ஷி
காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சியையும் சம்பந்தப்படுத்தி ஒரு இருசொல் அலங்காரக் கவிதை இருக்கிறது.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால், காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப்
போட்டாலும் சாப்பிட மாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்' என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்' என்றில்லாமல் ‘அரவார்'
என்று வருகிறது) இப்படிப்பட்ட ஐந்து தலைப் பாம்புக்கு அம்பாள், ஆறாவது தலையாக மானசீகமாக ஆகிறாளாம்.
கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த 2000 கிலோ தங்கம் பயனின்றி உள்ளதாகவும் அவற்றை வைப்பு நிதியாக வைத்து அரசின் நிதிச் சுமையை குறைக்க ஸ்டாலின் திட்டம் போட்டுள்ளார். இது குறித்து #திமுக செய்தித் தொடர்பாளர் கண்ணதாசன் “கோயில் சொத்துகள் ஒரு காலத்தில் அந்தக் கோயில் மற்றும் அதைச் சார்ந்து
உள்ள ஊர் மக்களுக்குப் பயன் படுவதற்காகக் கொடுக்கப் படவைதான். அதன் ஒரு பகுதியாகத்தான் கோயில் நகைகள் மூலம் வருமானம் ஈட்ட எடுக்கப்பட்டுள்ள அரசின் முயற்சி. இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கோயில்களைச் சீரமைப்பதோடு மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டின்
கோவில்களைச் சார்ந்து பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலகோடி வருமானம் வருகிறது. உண்டியல் மற்றும் இதர காணிக்கைகள் மூலம் ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. இவற்றை நெறிப்படுத்தினால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் நிதிச் சுமையைச் சரி செய்ய முடிவதோடு