#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஒரு முறை, மன்னன் அம்சவரதனைக் காண ஒரு சாது வந்தார். ஆசி வழங்கிய சாது, அவனிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். இந்த ஊரிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேலை கொடுப்பாயாக. அவனது கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரச் சொல்.
அதுவே அவனது வேலையாக இருக்க வேண்டும், அதற்காக அவனுக்குத் தக்க ஊதியமும் வழங்க வேண்டும் என்றார். சாதுவின் வேண்டுகோளைக் கேட்டு திகைப்புற்ற போதிலும், ஒரு வித பயத்தினால் காரணம் ஏதும் கேட்காமல், மன்னன் அம்சவரதன் ஒப்புக் கொண்டான். சாதுவும் அரசவையை விட்டு வருத்தத்துடன் வெளியேறினார்.
சாதுவின் விசித்திரமான கட்டளையை மன்னன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றினான். தனது அமைச்சர்களின் உதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்தான். அவன் முட்டாளா என்பதை நன்கு சோதித்து அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம்
வரும்படி கட்டளையிட்டான். மன்னன் அம்சவரதன் தொடர்ந்து தனது நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தான். செல்வங்களைச் சேகரித்தான், இளவரசிகள் பலரை தனது இராணிகளாக்கினான், பல்வேறு மாளிகைகளைக் கட்டினான், மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்வைக் கழித்தான். முட்டாளும் முட்டாள்தனமாக ஊரெங்கும் குச்சியுடன் வலம
வந்தான். காலங்கள் உருண்டோடின. மன்னனை வயோதிகம் வாட்டத் தொடங்கியது, படுத்த படுக்கையானான். விரைவில் மரணத்தைத் தழுவப் போவதை அறிந்து, உற்றார் உறவினர் என அனைவரையும் சந்திக்கப் பேராவல் கொண்டான். அண்டை நாட்டு மன்னர்கள், நாட்டின் முக்கியஸ்தர்கள் என அனைவரும் மரணப் படுக்கையில் இருந்த மன்னனை
தினமும் சந்தித்து வந்தனர். அச்சமயத்தில் மன்னனைக் காண முட்டாளும் தனது குச்சியுடன் வந்தான். நீண்ட நாட்கள் கழித்து, மன்னனைக் கண்ட மகிழ்ச்சியில், முட்டாள், நீடூழி வாழ்க மன்னா, என்று வாழ்த்து கோஷம் எழுப்பினான். தனது நிலையை உணராமல், வாழ்த்து கோஷம் எழுப்பும் முட்டாளை எண்ணி வருந்திய
மன்னர், நான் வாழ்ந்த காலம் முடிந்துவிட்டது, செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது, என்று பதிலளித்தார். எங்குச் செல்கிறீர்கள் மன்னா, எப்போது வருவீர்கள் என்று கேட்டான். வெகு தூரம் செல்கிறேன். திரும்பி வருவதாக இல்லை என்றான் மன்னன். என்னையும் அழைத்துச் செல்லுங்களேன் மன்னா என்றவன்னிடம்
அங்கெல்லாம் உன்னைக் கூட்டிச் செல்ல இயலாது என்றார். அப்படியெனில் இராணியர்களோடு தனியாகச் செல்லப் போகிறீரா? அதற்குத்தான் என்னை வேண்டாம் என்கிறீர்களோஎன்றான். முட்டாளின் முட்டாள்தனத்தை எண்ணி மன்னனுக்குச் சற்று கோபம் ஏற்பட்டது. இருப்பினும் சற்று பொறுமையுடன் தன்னுடைய இராணியர்களை எல்லாம்
அங்கு கூட்டிச் செல்ல இயலாது என்ற தெளிவான உண்மையை முட்டாளுக்கு எடுத்துரைத்தான். இளைய இராணியரை மட்டுமாவது அழைத்துச் செல்லுங்களேன். இல்லை. நான் மட்டும் தனியாகத் தான் செல்ல வேண்டும். பாதயாத்திரையாகச் செல்ல உள்ளீரோ! வழிச் செலவிற்காகச் சற்று தங்க நாணயங்களையாவது எடுத்துச் செல்லுங்கள்
என்றான். முட்டாளின் முட்டாள்தனமான கேள்விகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள இயலாத மன்னன் அவனுடைய பேச்சுகளை உடனே நிறுத்தும்படி கட்டளையிட்டான். இருப்பினும், சாதுவின் பேச்சைக் கேட்டு இந்த முட்டாளை வேலைக்கு வைத்தோம் என்ற காரணத்தினால், இத்தனை காலம் நீ முட்டாளாக குச்சியுடன் நகரத்தைச் சுற்றி
வந்ததால் உனக்கு இப்போது ஓய்வு தருகிறேன். இனிமேலும் நீ சுற்றி வரத் தேவையில்லை, உனக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும். ஆனால் இந்த குச்சியை உன்னைவிடச் சிறந்த ஒரு முட்டாளைக் கண்டுபிடித்து அவனிடம் நீ கொடுக்க வேண்டும். அவனுக்கும் தக்க ஊதியம் வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்று உரைத்தார்.
பெரிய முட்டாளைக் கண்டுபிடித்து குச்சியைக் கொடுக்கும்படி மன்னன் கட்டளையிட, அந்த முட்டாள் உடனடியாக தனது குச்சியினை மன்னரிடம் நீட்டினான். பிடித்துக் கொள்ளுங்கள் மன்னா என்றான். கோபத்தில் வெகுண்டெழுந்த மன்னன் என்ன தைரியம் உனக்கு, என்னையே பெரிய முட்டாள் என்கிறாயா என்று சவால் விடுத்தான்
முட்டாள் தனது பேச்சின் தொனியை மாற்றினான். நிச்சயம் மன்னா. நீங்களே பெரிய முட்டாள். ஆசையுடன் அனுபவித்த அரசியரையும், கஷ்டப்பட்டு கட்டிக்காத்த கஜானாவையும், பாசத்துடன் பார்த்து வளர்த்த படைகளையும், குதிரைகளையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல இயலாது என்று சொல்கிறீர்கள். ஆனால் எங்குச்
செல்கிறோம் என்பதை நீங்கள் உணரவில்லை. எங்கு செல்கிறோம், ஏன் செல்கிறோம், எப்படிச் செல்கிறோம், யாருடன் செல்கிறோம், எதற்குச் செல்கிறோம் என்று எதையும் அறியாமல் எங்கோ செல்லும் உம்மைவிட பெரிய முட்டாள் யார் இருக்க முடியும் இராணியரைச் சேர்த்தீர், குழந்தைகளைப் பெற்றீர், சேனைகளை வளர்த்தீர்,
பல ராஜ்ஜியங்களை வென்றீர், சொத்துக்களைக் குவித்தீர், கஜானாவையும் நிரப்பினீர். ஆனால் என்ன பிரயோஜனம் நான் யார்? ஏன் பிறந்தேன்? ஏன் துன்பப்படுகிறேன்? வாழ்வின் குறிக்கோள் என்ன? கடவுள் யார்? கடவுளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? மரணம் என்றால் என்ன? பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால்
இருப்பது என்ன? என்று எதையும் தெரிந்து கொள்ளாமல் இந்த பூமியில் வாழ்ந்து என்ன பலன்? முட்டாளின் சொற்களில் பொதிந்திருந்த ஆழமான கருத்துகள் மன்னனின் நெஞ்சில் பசுமரத்தாணி போல நன்றாகப் பதிந்தன. குச்சியை வைத்துக் கொண்டு ஊரை வலம் வந்த முட்டாளிடம் இத்தனை ஞானமா மன்னருக்கு சந்தேகம் எழுந்தது.
தான் உண்மையில் முட்டாள் அல்ல என்றும் பல வருடங்களுக்கு முன்பு தங்களைக் காண வந்த சாதுவின் சீடன் என்றும், தக்க தருணத்தில் ஆன்மீக உபதேசம் அளிப்பதற்காக முட்டாளாக நடித்தேன் என்றும் விளக்கினான். மரணம் தன்னை நெருங்கி வந்த பின்னர் வாழ்வின் உண்மையான பிரச்சனைகள் மன்னருக்குப் புரியத்தொடங்கின
வாழ்வை வீணடித்துவிட்டதாகப் புலம்பத் தொடங்கினான் மன்னன். இருப்பினும், எஞ்சியுள்ள காலங்களாவது பூரண கிருஷ்ண பக்தியில் பங்கு கொண்டு, பகவத் கீதையைப் படித்து, மஹா மந்திரத்தை உச்சரிக்கும்படி மன்னனுக்கு அவன் அறிவுறுத்தினான். எஞ்சிய குறுகிய காலத்தில் கிருஷ்ண பக்தியில் முழுமையாக ஈடுபட்டான்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி அழுதான் அர்ஜுனன். அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் கண்ணனை இறுக பற்றிக்கொண்டு கண்ணா அபிமன்யு உன் மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம்
தாள முடியாமல் அழுகிறாயோ என்று கேட்டான். கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன், கண்ணா நீயோ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க
முடியாது. கண்ணன் சொன்னார், உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அப்படி சொல்லாதே கண்ணா, மானிடர்கள் மறைந்தாலும் பாச பந்தம் அவர்களை விட்டு போகாது என்றான் அர்ஜுனன். அப்படியா? இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கே தான் இறந்த உன் மகன்
#சிவன்_சொத்து_குலம்_நாசம் நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவரின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் இன்னொரு சம்பவம்! இதை பகிர்ந்து கொண்டவர் சங்கர பக்த ஜன சபாவின் செயலாளர் வைத்தியநாதன். இவர் இளவயது முதல் மகா பெரியவரின் கூட இருந்த அடியவர். அது, மாசி மாதத்தின் வைகறைப்
பொழுது. வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம். முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம், மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற
இடத்தை அடைந்தபோது அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன. அப்பொழுது பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம். அவர் இரண்டு நாட்களாக மௌன விரதத்தில் இருந்தார். மெயின் ரோட்டில் இருந்து இடது
#ஆடிகிருத்திகை இன்று திருமுருகப் பெருமானை வணங்குதல் சிறப்பு. #அருணகிரிநாதர் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை: 1. சீர்பாத வகுப்பு தமிழில் உள்ள முருகன் துதிகளிலேயே மிக மிக அழகானது. அருள்
நெறியிற் சேர்த்து ஞானம் அளிக்கும். 2. தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகம்
சித்திக்கும். 3. வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது. பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது. அருணகிரிநாத சுவாமிகள்
ஆசைகூர் பத்தனேன்மனோ பத்மமான பூ வைத்து …… நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி …… யொருஞான
வாசம்வீ
கஞ்சி குடிக்காத காமாக்ஷி
காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சியையும் சம்பந்தப்படுத்தி ஒரு இருசொல் அலங்காரக் கவிதை இருக்கிறது.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால், காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப்
போட்டாலும் சாப்பிட மாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்' என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்' என்றில்லாமல் ‘அரவார்'
என்று வருகிறது) இப்படிப்பட்ட ஐந்து தலைப் பாம்புக்கு அம்பாள், ஆறாவது தலையாக மானசீகமாக ஆகிறாளாம்.
கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த 2000 கிலோ தங்கம் பயனின்றி உள்ளதாகவும் அவற்றை வைப்பு நிதியாக வைத்து அரசின் நிதிச் சுமையை குறைக்க ஸ்டாலின் திட்டம் போட்டுள்ளார். இது குறித்து #திமுக செய்தித் தொடர்பாளர் கண்ணதாசன் “கோயில் சொத்துகள் ஒரு காலத்தில் அந்தக் கோயில் மற்றும் அதைச் சார்ந்து
உள்ள ஊர் மக்களுக்குப் பயன் படுவதற்காகக் கொடுக்கப் படவைதான். அதன் ஒரு பகுதியாகத்தான் கோயில் நகைகள் மூலம் வருமானம் ஈட்ட எடுக்கப்பட்டுள்ள அரசின் முயற்சி. இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கோயில்களைச் சீரமைப்பதோடு மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டின்
கோவில்களைச் சார்ந்து பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலகோடி வருமானம் வருகிறது. உண்டியல் மற்றும் இதர காணிக்கைகள் மூலம் ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. இவற்றை நெறிப்படுத்தினால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் நிதிச் சுமையைச் சரி செய்ய முடிவதோடு
#திருஇந்தளூர் 26வது #திவ்யதேசம்
சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில். காவிரி கரையில் அமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவை திருவரங்க பட்டணம் (மைசூர்), திருவரங்கம், அப்பால ரங்கம் (கோவிலடி), கும்பகோணம்
மத்தியரங்கம், திருஇந்தளுர் பரிமளரங்கம் என்பவை ஆகும். இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணையும் மனதையும் கவருவதாக அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் இவற்றின் நறுமணம்
வீசுகிறது. இதனால் பெருமாளுக்கு சுகந்தவன நாதர் என்று மற்றொர் பெயரும் பெருமாளுக்கு உண்டு. மூலவர் பரிமள ரெங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனாலும், பாதாரவிந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். தென்புறத்தில் காவிரி தாயாரும், வடபுறத்தில் கங்கை