1. இப்போது வீடு வாங்கலாமா?
- எப்படியாவது ஒரு கடனை வாங்கியாவது ஒரு வீட்டை வாங்கிடணும் என்று ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தில் தினசரி நடக்கும் உரையாடல்களில் ஒன்று.
- ஒரு பெண் பார்க்க போவதுற்கு முன் பெண் வீட்டில் கேட்கும் முதல் கேள்வி மாப்பிள்ளைக்கு வேலை மற்றும் சொந்த வீடு இருக்கிறதா?
இவை அனைத்திற்கும் பதில் சொல்வது போல், தற்போதைய சூழ்நிலையில் வீட்டுக் கடன் விகிதம் குறைவாகவும் மற்றும் வீடுகளின் விலைகளும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடக் குறைவாக உள்ளன, இது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாகும்.
வாங்க விருப்பமுள்ளவர்கள், ஏற்கனவே வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், திட்டமிடுபவர்கள், பணம் செலுத்த வாய்ப்பு உள்ளவர்கள் இப்போது வீடு வாங்குவதற்கான பணியைத் தொடங்கலாம்.
2. சில வங்கிகளின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்:
(கடன் தொகை 30 லட்சம் வரை )
10 லட்சம் கடன் தொகைக்கு அசல் மற்றும் வட்டி தொகைகள்:
20 லட்சம் கடன் தொகைக்கு அசல் மற்றும் வட்டி தொகைகள்:
30 லட்சம் கடன் தொகைக்கு அசல் மற்றும் வட்டி தொகைகள்:
3. எப்படி வீட்டுக் கடனை குறைந்த வட்டியில் வாங்கலாம்?
- உங்கள் சிபில் ஸ்கோர்
- வேலை செய்யும் நிறுவனம் மற்றும் உங்கள் வருமானம்
- பெண்களுக்குக்கான வீட்டுக் கடன்
4. வீட்டுக் கடன் வாங்கியவுடன், பெரும்பாலான மக்கள் வீட்டுக் கடனை எப்படி சீக்கிரம் திருப்பிச் செலுத்துவது என்று யோசிக்கத் தொடங்குவார்கள்.
- ஒரு விவசாயி தனது மகன் கல்வி கற்பதற்காகத் தனது நிலத்தை விற்கிறார், அந்த பையன் படித்த பின்பு வேலையில் சேர்ந்து நகரத்தில் ஒரு குட்டி வீடு வாங்க, கடன் வாங்குகிறார். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த அவர் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்.
அதற்கு பதிலாக சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கடனை விரைவில் செலுத்தலாம்.
a. RBI ஒவ்வொரு காலாண்டிலும் REPO விகிதங்களை மாற்றுவதால், வங்கிகள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை மாற்றும், அதைப் பார்த்து வங்கியை அணுகி சிறிது தொகையைச் செலுத்தி வட்டிவிகிதத்தை மாற்றிக்கொள்ளலாம். அதே EMI தொடர்ந்து செலுத்தி கடன் காலத்தைக் குறைக்கலாம்.
b. EMI யை அதிகரிப்பு
நாம் செலுத்தும் EMI தொகைகள் முதலில் அசலை கழிக்காது, வட்டி மட்டுமே கழியும், எனவே கடன் வாங்கிய அடுத்த ஆண்டில் இருந்தே EMI யை அதிகப்படுத்தினால் உங்கள் கடன் கணிசமான மாதங்கள் குறையும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் EMI அதிகரிப்பதன் மூலம் வட்டி தொகையும் வெகுவாக குறையும்.
c. முதலீடுகளை மதிப்பாய்வு செய்யவும்:
கடன்கள் மற்றும் முதலீடுகளைக் கண்காணித்து மதிப்பாய்வு செய்யவும். உதாரணமாக, சில முதலீடுகள் போதுமான வருவாயைக் கொடுக்கவில்லை என்றால் அதற்குப் பதில் வீட்டுக் கடனில் EMI தொகையை அதிகப்படுத்துவது நல்லது,
அல்லது, சில முதலீடுகள் 10 முதல் 15 சதவிகிதம் வருமானம் தரும் பட்சத்தில் அதில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
d. பகுதி முன் கட்டணத்தைச் செலுத்தவும்:
கடன் தொகையை முன்கூட்டியே செலுத்த நீங்கள் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு வட்டி வசூலிக்கப்படும். பகுதி முன்கூட்டியே செலுத்துவது கடன் காலத்தைக் குறைக்கவும் வட்டியை குறைக்கவும் ஒரு விரைவான வழியாகும்.
பகுதி முன்கூட்டியே செலுத்துவதில் பல நன்மைகள் உள்ளன. ஒன்று, பெரும்பாலான வங்கிகள் இந்த வசதிக்காக எந்த கட்டணத்தையும் வசூலிக்காது. ஆரம்ப ஆண்டுகளில் வருடத்திற்கு ஒரு முறை செலுத்துவதன் மூலம் வட்டி தொகை அல்லது காலங்கள் வெகுவாக குறையும்.
e. Housing Loan Balance Transfer:
உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கான மற்றொரு வழி, வீட்டுக் கடன் இருப்பு பரிமாற்றம் (HLBT) ஆகும், இதில் நீங்கள் குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் மற்றொரு வங்கிக்கு உங்கள் நிலுவையில் உள்ள கடன் தொகையை மாற்றுகிறீர்கள்
தற்போதுள்ள கடனை பரிமாற்றுவதற்கு முன், முன்கூட்டியே மற்றும் பிற கையாளுதல் கட்டணங்களை சரிபார்க்கவும், மேலும் புதிய கடன் வழங்குபவரிடமிருந்து கட்டணங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை சரிபார்க்கவும்.
f. வருமான வரிச் சலுகை:
வருமான வரிச் சலுகை ஒரு நிதியாண்டில் வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு ரூ. 2 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 20 சதவிகித வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் ஒரு வருடத்தில் சுமார் ரூ. 40,000 சேமிக்க முடியும்,
மற்றும் 30 சதவிகித வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் இந்த வட்டி செலுத்துதலில் சுமார் ரூ .60,000 சேமிக்க முடியும். எனவே வருமான வரிச் சலுகையையும் கருத்தில் கொள்ளுங்கள்.
g. முதலில் அதிக வட்டி விகிதக் கடன்களை செலுத்துங்கள்
வீட்டுக் கடன்கள் குறைந்த வட்டிக் கடன்கள் என்பதால், முதலில் நீங்கள் அதிக வட்டிக் கடன்களை முதலில் செலுத்துவது நல்லது.
h. அவசர தேவை நிதியைப் பயன்படுத்த வேண்டாம்:
உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்த உங்கள் அவசர தேவை நிதியைப் பயன்படுத்த வேண்டாம். எல்லா நேரங்களிலும் உங்களிடம் போதுமான அளவு அவசர நிதி இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
i. நிபுணர் ஆலோசனை:
மேலே சொன்னவை தான் சிறந்த வழிகள் என்று நான் கூறவில்லை, நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து அல்லது நிபுணர் ஆலோசனை அல்லது தேவைப்பட்டால் நிதி ஆலோசகர் மூலம் முடிவெடுங்கள். இவற்றை நான் காலம் போன பின்பு தான் உணர்ந்தேன்.
j. மேலும் கடனை அதிகரிக்காதீர்கள்:
வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் தயவுசெய்து உங்கள் நிதி நிலைமைகளைத் திட்டமிடுங்கள், இல்லையெனில் நீங்கள் உங்கள் கடன்களை மேலும் அதிகரிப்பீர்கள், மற்றும் உங்கள் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்
5. வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவதன் சில நன்மைகள்:
- Financial Freedom
- குறைந்த வட்டி செலுத்துவதன் மூலம் வாங்கிய வீட்டின் சொத்து மதிப்பு கூடும்.
- உங்கள் குடும்பத்திற்குக் கடன் சுமை மற்றும் அடிப்படை பாதுகாப்பு.
- உங்கள் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்தலாம்.
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, நான் கற்றதை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முடிவெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யுங்கள்.
இதை மறந்துவிட்டேன்.
கடன் வாங்கிய முதல் 12 மாதங்களில் நாம் செலுத்தும் EMI தொகைகள் வட்டி மற்றும் அசலில் கழியும் விகிதங்கள்.
எனவே கடன் வாங்கிய அடுத்த ஆண்டில் இருந்தே EMI யை அதிகப்படுத்தினால் மற்றும் பகுதி முன் கட்டணத்தைச் செலுத்தவும் உங்கள் கடன் கணிசமான மாதங்கள் குறையும்
A Thread on smallcase Investment:
smallcase முதலீடு பற்றிய பதிவு:
1. smallcase முதலீடு என்றால் என்ன?
smallcase முதலீடு என்பது முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான ஒரு புதிய வழி முறை. அதாவது Mutual Fund ஐப் போலவே, பல/சில பங்குகளில் முதலீடு செய்வதாகும், ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலல்லாமல்,
A Thread on some small Self Employment ideas for women 👇
பெண்களுக்கான சில சிறு சுயதொழில் யோசனைகளை பற்றிய பதிவு:
பெண்கள் வீட்டிலிருந்தே தொழில்முனைவோர் ஆவதற்கும் பகுதி நேர வேலை செய்வதற்கும் இவை சிறந்த வணிக வாய்ப்புகள்.
*Conditions Apply:
தொழிலைத் தொடங்குவதற்கு முன் அவற்றை ஆராய்ந்து சரியாகச் செயல்படுங்கள்.
1. Blogging:
சிறந்த ஆன்லைன் வணிக யோசனைகளில் ஒன்று Blogging. நீங்கள் விரும்பியதை உங்கள் வலைப்பதிவில் பதிவிடலாம், ஃபேஷன் மற்றும் அழகுக் குறிப்புகள், மகப்பேறு பராமரிப்பு, குழந்தைகள் ஆரோக்கியம், வீட்டு வைத்தியம், பொருட்களை மதிப்பாய்வு, பெற்றோர் ஆலோசனை,
5. மருத்துவ காப்பீடு பற்றிய நமது தவறான புரிதல்கள் மற்றும் மருத்துவ காப்பீடு வாங்காமல் நாம் செய்யும் தவறுகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
IRDA வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுள் காப்பீட்டுடன் ஒப்பிடும்போது மருத்துவ காப்பீட்டுக்கான விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மக்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றிய தவறான கண்ணோட்டமும் ஒரு காரணம்.
RTE என்பது Right to Education Act 2009, அதாவது அனைவருக்கும் கல்வி என்று தொடங்கப்பட்ட இலவச கல்வி உரிமைச் சட்டம் ஆகும். இந்த கல்வி சட்டம் ஆகஸ்ட் 2009 இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட (பொருளாதாரத்தில் பின்தங்கிய)
குழந்தைகளுக்கு சமூக வேறுபாடின்றி இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஒன்றிய அரசு இந்த கல்வி சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தம் உள்ள இடங்களில் 25 சதவிகித இடங்களைக் கட்டணம் இல்லாமல் மாணவர்களுக்கு வழங்கும்
1 மருத்துவ காப்பீட்டு
2 மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம்
3 மருத்துவ காப்பீட்டின் நன்மைகள்
4 மருத்துவ காப்பீட்டின் வகைகள்
5 மருத்துவ காப்பீட்டை பற்றிய தவறான புரிதல்கள்
6 மருத்துவ காப்பீட்டை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
7 மருத்துவ காப்பீட்டைத் தேர்வு செய்யும் முறைகள்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
பரப்பரப்பாக ஓடி கொண்டிருக்கும் உலகத்தோடு, நாமும் வேகமாக ஓடும் இந்த காலக்கட்டத்தில் நமது பாரம்பரிய உணவு முறைகள், உடற் பயிற்சிகளை மறந்ததனால் மற்றும் பல காரணமாக பல நோய்கள் மற்றும் உடல் நலமின்மை ஏற்படுகிறது.
#HappyBirthdayMSDhoni
என்னுடைய Dhoni, எனக்கு வழிகாட்டியாக என் வாழ்க்கையில் இருக்கும் ஒரு மாமனிதர்.
நான் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், கற்கிறேன், கற்றுக்கொள்வேன்
அவற்றில் சில:
1. Cool ஆகா இருத்தல் 2. கிரிக்கெட் என்பது ஒரு physical game மட்டுமல்ல, அது ஒரு Mind game. 3. Keep it simple 4. கற்றுக்கொள்வது முக்கியம், செய்த தவறுகளைச் செய்யக்கூடாது. 5. தோல்வியை எதிர்கொள்ளுங்கள் 6. 100% பணிக்கு அர்ப்பணிப்பு 7. பயத்தை மறந்து, வித்தியாசமாக ஏதாவது செய்வது
மறக்கமுடியாத சம்பவங்களில் சில: 1. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக சூப்பர் ஓவரில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது😜 2. அணியில் உள்ள இளைஞரை கோப்பையை ஒப்படைத்து விட்டு கடைசியில் நின்று போஸ் கொடுப்பது 3. பல போட்டிகளில் எதிரணி பந்து வீச்சாளர் மற்றும் அணி மீது அழுத்தத்தை வைத்திருத்தல்