இது 13 பதிவுகளை கொண்ட இழை. சற்று பொறுமையாக படிக்கவும். இது யாரேனும் ஒருவருடைய வாழ்க்கைப் பாதையை மாற்றுமென்றால், எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் இளம் பிராயத்தில் படிப்பில் மிகவும் சுட்டியாக இருந்தான். அவனது தாய் தந்தை, அவனை மிகவும்..1/13
சிரமப்பட்டு படிக்க வைத்தனர். 10ஆம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவனாக வருவான் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,ஆனால் அவன் பள்ளியில் கூட முதல் மாணவனாக வரவில்லை. இன்னொரு பள்ளிக்கூடத்தில் 11ஆம் வகுப்பில் அவனது பெற்றோர் அவனை சேர்த்தனர். விடலைப் பருவத்தில் அனைவருக்கும் வரும்..2/13
காதல் நோய் வந்தது. நண்பர்களின் சேர்க்கை அதிகரித்தது.புகைப் பிடிக்கும் பழக்கமும் வந்தது.பள்ளித் தேர்வுகளில் முதல் தோல்வியை சந்திக்க நேர்ந்தது,பெற்றோரை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், அவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போனான். ஆனால், அவன் தந்தை தேடிக் கண்டுபிடித்து..3/13
வீட்டிற்கு அழைத்து வந்து அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்த முயன்றார்.அவன் திருந்தவில்லை.மேலும் தவறுகள் செய்தான்.12 ஆம் வகுப்பில் தோல்வியை தழுவுவான் என்று பள்ளி அவனை வெளியே துரத்த முயன்றது,மீண்டும் அவனது தந்தை அவனுக்காக பள்ளியில் மன்றாடி தொடர வைத்தார். பொதுத் தேர்வு சமயத்தில் 4/13
வினாத்தாள் கிடைத்து விடும் என்று நம்பியவனுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.எப்படியோ கஷ்டப்பட்டு, கடைசி நேரத்தில் முட்டி மோதி 83% தேர்ச்சி பெற்று வெளியே வந்தான்.அனைவரும் திகைத்தனர் (அவன் உட்பட). பின்னர், அவன் தந்தை அரும்பாடு பட்டு, ஒரு நல்ல கல்லூரியில் மிகவும் சிரமப்பட்டு புள்ளியியல்.5/13
படிப்பில் சேர்த்து விட்டார்.இவன் இன்னமும் திருந்தவில்லை. நண்பர்களுடன் சுற்றித் திரிந்து, கல்லூரிக்கு செல்லாமல் பொழுதைக் கழித்து,அது வீட்டில் தெரிந்தவுடன் மீண்டும் ஓடிப் போனான்.இந்த முறை அவன் தந்தையால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை, உடம்பை வருத்தி பரிகாரமெல்லாம் செய்தார்,பாவம்6/13
ஆனால், எப்படியோ 1 ஆண்டுக்கு பின்னர் தேடிக் கண்டுபிடித்தார், வீட்டிற்கு அழைத்து வந்து புத்திமதி சொல்லி திருத்த முயன்றார். ஆனால், அவன் திருந்தவில்லை. 3 ஆண்டு கல்லூரியின் முடிவில் 27 அரியர் பேப்பர்களுடன் தள்ளாடினான். தந்தை ஊக்கப் படுத்தினார், ஆனால் அவன் மனம் தளர்ந்து, படிப்பை..7/13
நிறுத்தி, கிடைத்த வேலையை செய்தான். பணம் பார்க்க ஆரம்பித்தவுடன், படிப்பின் மேல் கவனம் செல்லவில்லை. தந்தையின் தொடர் வற்புறுத்தலால், தொலைத் தூர கல்வி பயில எத்தனித்தான். அவன் தந்தை மனம் தளராமல் அவனுக்காக போராடி, இராணுவத்தில் (அவன் விரும்பாவிட்டாலும்) சேர்த்து விட்டார். 8/13
ஆனால், அவனுக்கு அங்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு, தற்கொலைக்கு முயன்று வேலையை விட்டு, வீடு வந்து சேர்ந்தான். அப்பொழுதும் அவன் தந்தை அவனை ஊக்கப் படுத்தினார். அவன் மீண்டெழுந்து, MA படிப்பை முடித்து, ஒரு கால் சென்டரில் வேலைக்கு சேர்ந்தான். வயது 28 ஆகிப் போனது. அவன் தந்தை அவனுக்கு..9/13
நல்ல பெண்ணாய் பார்த்து திருமணம் செய்து வைத்தார். இவன் தன் மனைவியின் மேல் அன்பு செலுத்த தவறி, விவாகரத்து வரை சென்றது. அப்போதும்,அவன் தந்தை இவனுக்காக அந்தப் பெண் வீட்டாருடன் கெஞ்சினார், ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. விவாகரத்து ஆனது. 2 வருடம் கழித்து, அவன் தந்தை மீண்டும்..10/13
போராடி, வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அப்போது உணர்ந்தான் அவன், தந்தையின் மகத்துவத்தை. இது நடந்தது 2012 ஆம் ஆண்டு. அன்றிலிருந்து மனம் திருந்தியவனாய், வீட்டிற்கு அடங்கியவனாய், பொறுப்புடன் செயல்பட்டு, இன்று ஒரு குழந்தையும் பெற்றெடுத்து...நல்ல நிலையில்..11/13
இருக்கிறான். இவனுக்கு இறை அருள் இருந்தாலும், அவன் தந்தை இல்லையேல் அவனில்லை. தந்தையை பேணிப் பாதுகாத்து வந்தவன், தற்போது அவரை இழந்து நிற்கிறான். அவன் ஒன்றும் கெட்டவனில்லை, ஆனால் தந்தையின் அருமை புரியாமல் இருந்து விட்டான், அவரின் தியாகங்களை எண்ணாமல் இருந்து விட்டான். 12/13
நான் மேலே சொன்ன அவன் - வேறு யாருமில்லை - நான் தான்.
ஆகவே சொந்தங்களே, "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்பதை உணர்ந்து, அவர் சொல்படி நடந்து, (என்னைப் போல் தவறுகள் செய்து பாடம் கற்காமல்) வாழ்வில் வெற்றி பெறுங்கள்.
இதுவும் ஒரு 4 பதிவுகளை கொண்ட டுவீட். சற்று நிதானமாக படிக்கவும். நன்றி. 🙏🙏
இந்தக் குழந்தையின் முதல் சிட்டிங் இப்போது வெற்றிகரமாக முடிந்து விட்டது. Voice of Hindus அமைப்பின் கோரிக்கையை ஏற்று தங்களால் ஆன நன்கொடையை வழங்கி உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த..1/4
ஈசனை தலைவனாக ஏற்று நிற்பவர்கள் சைவர்கள். இவர் களின் புனித குறியீடாக திருநீறு விளங்குகிறது. திருநீற்றின் மகிமை சொல்லில் அடங்காதது. கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க, திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்றுப் பதிக பாடல்கள் தான் அருள்புரிந்தன. 1/9
பசுவின் சாணத்தில் இருந்து கல்வ விதிமுறையில் தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இப்படிப் பெறப்படும் கல்ப விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியது என்று புராணங்கள் கூறுகின்றன. 2/9
திருநீற்றுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. விபூதியை ‘ஐஸ்வர்யம்’ என்றும் சொல்வர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், அதற்கு ‘ரட்சை’ என்ற பெயரும் உண்டு. வினைகளை அழித்து பொடிபடச் செய்வதால் அதனைத் ‘திருநீறு’ என்று சொல்லுகிறோம். 3/9
IBPS என்று அழைக்கப்படும் தனியார் அமைப்பு, வங்கிகளுக்கான தேர்வுகளை நடத்தி,நிரப்பப் படவேண்டிய வங்கி இடங்களை நிரப்பும் என்பது அனைவரும் அறிந்ததே.மொத்தம் 11 வங்கிகள் இந்தக் கூட்டமைப்பு மூலம் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளும்!இந்த வருடத்திற்கு அவர்கள் விளம்பரம் 1/10
செய்த காலி இடங்கள் மேலே இணைத்துள்ளேன். அதன் படி, 11 வங்கிகளில், வெறும் 4 வங்கிகள் தான் காலி இடங்கள் குறித்து விளம்பரம் செய்துள்ளன. அந்த 4 வங்கிகளையும் சேர்த்து காலி இடங்கள் 1417. இட ஒதுக்கீடு முறைப்படி எவ்வளவு இடங்கள் இருக்க வேண்டும் என்றும் இங்கு ஒரு SS இணைக்கிறேன். 2/10
எவ்வளவு பெரிய அநீதி இது?!! பாசிச பாஜக அரசு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை பிடுங்கி, EWS என்ற பெயரில் முன்னேறிய சனாதன வகுப்பினருக்கு கொடுத்து விட்டனர். அது போக, Gen கோடாவில் கை வைக்காமல்..இவ்வளவு பெரிய அநீதி இழைத்திருக்கிறது!!
நான் பல வருடங்களாக சொல்லி வந்துள்ளேன், மோடிஜி இந்தியாவிற்கு கிடைத்த வரபிரசாதம் என்று. இந்தக் காணொளி மூலம் அது மேலும் உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள மோடிஜி எதிர்ப்பாளர்களுக்கு இந்தக் காணொளி சமர்ப்பணம்!
இந்த முதியவர் வசிக்கும் கிராமம்..1/n
பாகிஸ்தானில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள எல்லையோர கிராமம். நேரு உட்பட பல தலைவர்கள் இங்கு சென்று வந்துள்ளனர். 60 வருடங்களுக்கும் மேலாக எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், இப்போது கடந்த 4 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்தப் பெரியவர் சொல்கிறார். 2/n
சாலை வசதி கூட இல்லாதிருந்த இந்தக் கிராமம் உட்பட இதை சுற்றியுள்ள 44 கிராமங்களில், இப்போது நான்கு வழி சாலை போடப் பட்டிருக்கிறது.பள்ளி, மருத்துவமனை, மின்சாரம் இப்படி பல்வேறு அத்தியாவசிய தேவைகள்,காங்கிரஸ் ஆண்ட காலத்தில் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, இப்போது கழிப்பிட வசதி முதல்...3/n
Namaskar Bharathwashi. Today it's our turn to know about - Onake Obavva - brave woman who fought the forces of Hyder Ali single-handedly with a pestle (Onake). Her husband was a guard of a watchtower in the rocky fort of Chitradurga. During the reign of Madakari Nayaka, 1/4
the city of Chitradurga was besieged by the troops of Hyder Ali (1754-1779). A chance sighting of a man entering the Chitradurga fort through a hole in the rocks led to a plan by Hyder Ali to send his soldiers through that hole. She noticed the army trying to enter the fort..2/4
through the hole. She used the Onake or pestle (a wooden long club meant for pounding paddy grains) to kill the soldiers one by one by hitting them on the head and then quietly moving the dead without raising the suspicions of the rest of the troops.3/4
அனைத்து பாரதியர்களுக்கும் இனிய காலை வணக்கம். போர்த்துகீசிய முயற்சிகளை பல முறை முறியடித்த 'இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீரர்' என்று கருதப்படும் ராணி 'அப்பக்கா சவுத்தாவைப்' பற்றி மேலும் தெரிந்து கொள்வது நமது கடமை. போர்த்துகீசியர்கள் பல முறை முயன்றும், துறைமுக நகரமான
'உல்லால்' நகரை அவர்களால் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இவர் தான் முக்கிய காரணம்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களின் ஒவ்வொரு தாக்குதலையும் அப்பாக்கா விரட்டினார். அவரது துணிச்சலுக்காக, அவர் அபயா ராணி (அச்சமற்ற ராணி) என்று அறியப்பட்டார். அட்மிரல் டோம் அல்வாரோ டா சில்வீராவுக்கு
எதிராக வென்றார், ஜெனரல் பிக்ஸாடோவை கொன்று 70 வீரர்களையும் சிறை பிடித்தார். அட்மிரல் மாஸ்கரென்னஸ் என்பவரையும் கொன்று மங்களூர் கோட்டையை கைப்பற்றினார். தனது கணவரின் துரோகம் காரணமாக போர்த்துகீஸியரால் கைது செய்யப்பட்டு, சிறையிலும் போராடி வீர மரணம் அடைந்தார். #ஜெய்ஹிந்த்