மேடை நாடகங்கள் மிகப் பிரபலமாக இருந்த காலகட்டம் அது.
மாலை நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவழிக்க நாடகக் கொட்டகைகளுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள்.
லண்டனில் ஏராளமான நாடக குழுக்கள் ஓர் அரங்கில் "ஷெர்லாக் ஹோம்ஸ்' நாடகத்துக்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது.
தினசரி ஒரு சிறுவன் ஒத்திகைக்கு வந்து கொண்டிருந்தான்.
இறுதிக்கட்ட ஒத்திகை அன்று.
மறுநாள் நாடகம்.
'பில்லி' என்ற வேலைக்காரன் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு அன்று காய்ச்சல் என்று தகவல் வந்தது.
பாத்திரம் வேலைக்காரன் என்றாலும், நிறைய வசனம் அந்த கேரக்டருக்கு.
பேச வேண்டிய முக்கியமான பாத்திரம்.
தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.
புதிதாக யாரையும் ஏற்பாடு செய்ய முடியாத நிலை.
வழக்கமாக அந்தச் சிறுவனைப் பார்த்த இயக்குநர் "டேய் தம்பி நடிக்கிறாயா?' என்று கேட்டார். காதில் தேனாகப் பாய்ந்தது அந்தக் கேள்வி.
அந்தக் கேள்விக்காகத்தானே அந்தச் சிறுவன் காத்துக் கொண்டிருந்தான்.
"யெஸ் சார்' என்றான் சிறுவன்.
"வசனமெல்லாம் மனப்பாடம் பண்ணணுமே முடியுமா?' என்று கேட்டார் இயக்குநர். பில்லி
பாத்திரத்தின் வசனங்களைக் கடகடவென்று ஒப்பித்தான் சிறுவன். தினசரி கேட்டுக் கொண்டிருந்த வசனங்கள் ஆயிற்றே.!
சபாஷ் என்று அவனை அணைத்துக் கொண்டார் இயக்குநர்.
மறுநாள் மேடையில் அட்டகாசமாக நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றான் அவன்.
அப்போது அந்தச் சிறுவனுக்கு 14 வயதுதான்.
அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சிறந்த சிரிப்பு நடிகராகவும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் உயர்ந்த சாப்ளின்.
உலகத் திரைப்படச் சரித்திரத்தில் ஒரு சிரிப்பு நடிகர். எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் என்றால், அது சார்லி சாப்ளின் மட்டும் தான்.
அது மட்டுமா? பதினெட்டுப் படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார்.
சார்லி சாப்ளின் இளம் வயது கஷ்டங்கள் நிறைந்தது.
வாழ்க்கையில் ஏகப்பட்ட இன்னல்கள் இடையூறுகள்.
அப்பா சிறந்த பாடகர். மேடை நடிகர். அம்மாவும் அதே போலத்தான்.
சார்லி சாப்ளின் முழுப் பெயர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின். அவருக்கு ஒரு சகோதரர்.
அவர் பெயர் சிட்னி சாப்ளின். சார்லிக்கு பத்து வயதாகும் போது, தந்தை இறந்து விட்டார்.
தந்தை இறந்த சில மாதங்களில் தாயும் உடல்
நலமில்லாமல் படுத்துவிட, குடும்பப் பாரம் பத்து வயது சார்லியின் தலையில் விழுந்தது.
அம்மாவும், அப்பாவும் நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சார்லிக்கு இயல்பாகவே நாடக ஆர்வமும், நடிப்பில் பிடிப்பும் இருந்தன என்று சொல்லலாம்.
நாடகக் குழுக்கள் ஒத்திகை நடக்கும் இடங்களுக்குச் சென்று வாய்ப்பு கேட்பதும், அது கிடைக்காத சமயங்களில் அந்தக் குழுக்களில் எடுபிடி
பையன்கள் போல வேலை செய்தும் காலத்தைப் போக்கினார்கள் இருவரும்.
8வது லங்காஷர் பையன்கள் என்ற சிறுவர்கள் நாடக, இசைக்குழுவில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது.
ஆஹா இந்தச் சிறுவன் மிக அற்புதமாக நடனம் ஆடுகிறானே என்று அனைவரும் வியந்தனர்.
இந்த நிலையில்தான் "ஷெர்லாக் ஹோம்ஸ்' நாடகத்தில் வேலைக்காரச் சிறுவனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதுவே சார்லியின் வாழ்க்கையில் திருப்புமுனை.
சார்லிக்கு திரைப்பட வாய்ப்பு 1913- ஆம் ஆண்டு தேடி வந்தது.
"கீ ஸ்டோன்' திரைப்பட நிறுவனத்தில் வார சம்பளத்துக்கு நடிகராக ஒப்பந்தம் போடப்பட்டது.
தொள தொள கால்சட்டை, தலையில் குல்லா, டூத் பிரஸ் மீசை, கையில் பிரம்பு என்று வித்தியாசமான தோற்றத்தில் திரையில் குடுகுடுவென்று ஓடிச் சென்றபடி நகைக்க வைத்த சார்லியின் படங்கள் பலராலும் விரும்பப்பட்டது.
கொட்டகை நிறைந்த காட்சிகளாக ஒடின.
ஒவ்வொன்றிலும் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்தார் சார்லி.
குறிப்பாக "இரவு ஒரு மணி' என்ற படத்தில் இவர் ஒருவர் தான் படம் முழுவதும் வருவார். வேறு எந்த நடிகர்களும் கிடையாது.
சொந்தமாகப் சினிமா எடுத்தால் என்ன என்று என்று தோன்றியது
சார்லிக்கு.
இன்னமும் சுதந்திரமாகவும், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும், வெளியிடலாமே என்ற நினைப்பே அதற்குக் காரணம்.
விளைவாக ஸ்டூடியோ ஒன்றைக் கட்டினார் சார்லி.
அதன் பிறகு வெளிவந்த அவரது "ஒரு நாயின் வாழ்க்கை' என்ற படம் சிறப்பாகப் பேசப்பட்டது.
அந்த நிலையில் முதல் உலகப்போர் மூண்டது.
யுத்த சூழலை நகைச்சுவையோடு கலந்து அவர் நடித்த சோல்டர் ஆர்ம்ஸ் என்ற படம் சார்லியின் புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.
1921-இல் அவர் தயாரித்து வெளியிட்ட "தி கிட்' என்ற படம் மக்களால் பரபரப்பாகப் பேசப்பட்டது.
1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பாவுக்கு அவர் சுற்றுப்பயணம் வந்தார்
அப்படி வந்த போது அவரை வரவேற்கவும், பார்க்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
"நகைச்சுவை உயர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
நகைச்சுவை உணர்வு கொண்டவன் வாழ்க்கையைச் சுலபமாகச் சமாளிப்பான்.
அந்த வகையில் மக்களைச் சந்தோஷப்படுத்துவதே என் நடிப்பின் நோக்கம்' என்றார் சார்லி அப்போது.
1966-இல் மார்லன் பிராண்டோவும், சோபியா லாரனும் இணைந்த நடித்த படம் தான் அவர் தயாரித்த கடைசிப்படம்.
திரைப்படத்துறையில் மட்டுமல்ல எழுத்துத்துறையிலும் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி நான்கு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் சார்லி.
அதீத திறமைசாலி.
1977- ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவரது சிரிப்பு கடைசியாக நின்று போனது.
எவ்வளவு மக்களை தன் நடிப்பால் அவரவர் கவலைகளை மறைக்க வைத்த இதயம் நின்றது.
லட்சியத்தை விடாமல் முயற்சி மற்றும் கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதைச் சொல்கிறது சார்லி சாப்ளினின் வாழ்க்கை.
நீதி: "எப்படியும் வாழலாம் இங்கு என்று நினைக்கிற பலர் மத்தியில்,
இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைக்கிற சிலரும் உண்டு.
அவர்கள் நமக்கு எல்லாம் ஒரு மறக்காத "பாடமாக" இங்கு வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.!"
அந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான் தோன்றுகிறது அவருக்கு தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று.
'வாழ்க்கையில் அவ்வளவு இலகுவாக யாருக்கும் கிடைத்து விடாத பெரும் வாய்ப்பு தங்கத்தட்டில் வைத்துத் தனக்குத் தரப்பட இருக்கையில் அதைத் தானே தட்டிப் பறித்துத் தள்ளி விட்டு விட்டோமோ?'
லேசாக உறுத்தத் தொடங்குகிறது அவருக்கு.
மீண்டும் தொலைபேசியில் அழைத்துத் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம்.
விசயம் வேறு ஒன்றுமில்லை. இதுதான்.
சட்டப்படிப்பை முறையாக முடித்து விட்ட அவருக்கு திங்கட்கிழமை காலையில் 'வைவா' தேர்வு நடைபெற இருக்கிறது.
அந்தத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும்போதுதான் ஞாயிறு காலையில் - அதாவது தேர்வுக்கு முந்தைய நாளில் - அந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.
"நாளைக் காலை சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது" என்பதே அதன் சாரம்.
ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள்.
உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டு பிடிக்கிறீர்கள்.
அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்கு அந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞர் ஒருவரையே அழைக்கிறீர்கள்.
அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட.
நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டு பிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள்.
சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டு பிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்கிறார்.
பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.
உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.?
உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்.?
அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா.?
உருசியா நாட்டை சேர்ந்தவர் நிஸ்னி நவ்கிரோட் என்கிற கிராமத்தில் 1868 மார்ச் 28ந்தேதி பிறந்தார் மாக்சிம் கார்க்கி.
அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் தான் இவரது இயற்பெயர்.
5 வயதில் இவர் தந்தை இறந்து போக, தாய் உயிருடன் இருந்த போதும் தாயன்பு கிடைக்காமல் பாட்டி அக்குலினாவிடம் வளர்ந்தார்.
குடும்பத்தில் வறுமை.
விளைவு, பள்ளிக்கு போவதை 7 வயதிலேயே நிறுத்தி விட்டார்.
8 வயதிலேயே வேலைக்கு சென்றார். அங்கு பல தரப்பினரோடு பழகினார், அதோடு கொஞ்சம் படித்து வைக்கலாம் என தனிப்பட்ட முறையில் படிக்கத் துவங்கினார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளை கற்றுக் கொண்டார்.
1892ல் இவர் முதல் சிறுகதை மகர் சுத்ரா என்கிற தலைப்பில் மாக்சிம் கார்க்கி என்கிற பெயரில் எழுதினார்.
அது வெளி வந்தபின் தொடர்ந்து அந்த பெயரிலேயே எழுதத் துவங்கினார்.
1899ல் இவரது முதல் நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சியை எதிர்த்து புரட்சிக்கர கட்டுரைகளை எழுதி வந்தார்.
ஆளவந்தாரின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இலைகள் உதிர்ந்துபோன மொட்டை மரம் ஒன்று இருந்தது.
அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், “இந்த மரத்தை ஏன் இப்படியே வைத்திருக்கிறீர்கள்?”
“அது வீட்டுக்குப் பின்னாடி தானே கிடக்கட்டும்‘னு விட்டுவிட்டோம்.” என்று பதில் சொன்னார் ஆளவந்தார்.
“மொட்டை மரத்தை இப்படி விட்டு வைப்பது கூடாது. அது நல்லதல்ல.
மேலும் அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டிய பிறகும் நீங்கள் உபயோகிக்கக் கூடாது.
ஏதாவது மோசமான சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே அந்த மரத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெளியே வீசி விடுங்கள்" என்றான் பக்கத்து வீட்டுக்காரன்.
அவன் யோசனைப்படியே, ஆளவந்தாரும் மறுநாள் மரத்தை வெட்டித் தள்ளினார். சிறு துண்டுகளாக்கி வெளியே தூக்கிப் போட்டார்.
அந்த மரத் துண்டுகள் வெளியே வந்து விழுந்த சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரன் தன் இரு மகன்களுடன் சிறு துண்டு துண்டுகளாக கிடந்த அந்த மரத்துண்டுகளை உடனே எடுத்துப் போனான்.