GJ Profile picture
5 Sep, 31 tweets, 5 min read
#TeachersDaySpecial
நல்லாசிரியர் Y.சவரிராஜ்

சுருட்டை முடியும் தடிமனான கண்ணாடியும், முழுக்கை சட்டையும் பேரகான் செருப்பும் கையில் ஒயர் கூடையில் மதிய உணவுமாக, சாலையை மேலோட்டமாக பார்த்து கொண்டு நிற்கிறார் சவரிராஜ். கிருஸ்த்துவத்தில் மனம் அடங்கி போன மனிதர்.

அரசு உயர்நிலை பள்ளியில்
வேப்ப மரத்தடியில் 5 வரிசைகளாக மாணவர்கள் அமர்ந்து சிலேட்டில் எழுதிக்கொண்டு இருக்கும் சத்தம்.

சிலேட்டில் எழுதிக்கொண்டு இருப்பது 4ம் வகுப்பு 5ம் வகுப்பு மாணவர்கள் இல்லை. 10ம் வகுப்பு ஆங்கில கட்டுரை கராத்தேயின் வரிகள் சிலேட்டில் ஓடிக் கொண்டிருந்தன. அதுவரை அமைதியாக இருந்த தார்சாலை
திடீரென சத்தமிட்டு அத்தனை மாணவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. தார் சாலைகளும் பெரும்பாலான பெண்களை போலவே மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மெனக்கெடுகின்றன. அந்த சத்தம் பெருவை ரதமாகிய ஆண்டாள் வேன் திருச்சி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வருகிறது. பெருவளப்பூர் என்ற அந்த
கிராமத்தின் சுருக்கம் தான் பெருவை.ஆண்டாள் வேனின் வருகை கிரிக்கெட் விளையாட்டு தொடங்கும் போது போடப்படும் டிரையல் பந்து போல இருந்தது அந்த 10ம்வகுப்பு மாணவர்களுக்கு.

தார்சாலை மீண்டும் சத்தமிடுகிறது.

இந்த முறை போட்டது முதல் பந்து தான்.தனலட்சுமி பேருந்து பள்ளியின் வாசலில் நிற்கிறது
கராத்தேயின் நடைமுறை இனி மேல் தான் தொடங்க போகிறது என்பதால்,மாரியம்மனுக்கு மாவு இடிக்கும் போது வரும் சத்தம் ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் கேட்க தொடங்குகிறது, தனலட்சுமி பேருந்து வாசலில் நிற்கிறது.

எழுதப்பட்ட சிலேட்டுகள் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்ட மாணவர்களாலும், குழு தலைவர்களின்
சிலேட்டுகள் அவர்களுடன் பரஸ்பர புரிதல் உள்ள மற்ற குழு தலைவர்களாலும் பிழை பார்க்கப்பட்டு வகுப்பின் வாசலில் அடுக்கி வைக்கப்படுகின்றன.

பேருந்திலிருந்து இறங்கி அவரது அறைகக்கு போன சவரிராஜ் ஜெபித்து விட்டு கையில் குச்சியுடன் பத்தாம் வகுப்பு அ பிரிவை நோக்கி நடந்து வருகிறார். சவரிராஜ்
ஒன்பதாம் பத்தாம் வகுப்பிற்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர். 10ம் வகுப்பு அ பிரிவின் வகுப்பு ஆசிரியர் என்பதால் கூடுதலாக ஆங்கில பாடமும் எடுக்கிறார்.அந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கையெழுத்து போடுவதற்கு மட்டும் தான் மற்ற சகலமும் சவரிராஜ் தான்‌.

அன்று தான் பள்ளியில்
புதிதாக சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு இடைவேளை முன்பே சவரிராஜ் மீதான பயம் பற்றிக் கொள்கிறது.அவர் எதிரே வரும் போது அரைக்கால் டிரவுசர்கள், பாவடைகள், தாவணிகளின் கால்கள் சற்று ஒதுங்கி வெயிலிலும் இறங்க துணிவு கொள்கின்றன. 6ம் வகுப்பு 7ம் வகுப்பு என்று வருடங்கள் நகர நகர இன்னும்
ஒன்று இரண்டு வருடங்களில் நமக்கு சவரிராஜ் சார் பாடம் எடுப்பார், அடி வெழுத்துடுவார் என்கிற பயமும் அவர்களை நொக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன.

பாட்டுப் போட்டி,பேச்சுப் போட்டி,கட்டுரை போட்டி,மாட்டுடைப் போட்டிகள் நடக்கும் இடத்தில் சவரிராஜை கான முடியாது. மேலும் 8ம் வகுப்பு வரை தான்
ஆண்டு விழாவில் நடனம் ஆடுவதெல்லாம்.ஒன்பதாவது போன பின்பு அவரது வகுப்பு நேரத்தில் நடன பயிற்சிக்கு போக முடியாது. அது அங்குள்ள எல்லா ஆசிரியைக்கும் தெரியும் மாணவர்களுக்கும் தெரியும்.
வகுப்புக்கு வெளியே தவறு செய்யும் மாணவர்கள் சவரிராஜ் அறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அவர் அழைக்கும்
வெளியே நிற்க்கும் மாணவர்கள் அத்தனை தெய்வங்களையும் துணைக்கு அழைக்கின்றனர். முட்டிப் போட வைத்து முதுகிலும் உள்ளங்காலிலும் அடிக்கிறார்.இதில் முதுகை வளைத்தாலோ அம்மா அப்பா என்று கத்தினாலோ இருமடங்கு அடி கிடைக்கிறது‌‌.இப்படித்தான் பள்ளியின் வாசலில் நாவல் பழம் வித்த 7ம் வகுப்பு மாணவர்களை
பத்தாம் வகுப்பு மாணவர்களை அனுப்பி அவர்கள் இருவரையும் அப்படியே தூக்கி வர சொல்கிறார்.அந்த பத்தாம் வகுப்பு மாணவர்களும் தரையில் அமர்ந்து இருந்த அவர்களை, பிள்ளையாரை குளத்தில் கரைக்க தூக்கிக் கொண்டு போவது போல தூக்கிக்கொண்டு வர முதுகிலும் உள்ளங்காலிலும் அடி விழுகிறது இருவருக்கும்.அதில்
ஒரு மாணவன் தன்னை அறியாமல் முதுகை
நெளிக்க மேலும் இரண்டு அடி விழுகிறது.இது மாதிரி தினமும் நிறைய பஞ்சாயத்துகள் சவரிராஜ் அறைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
பத்தாம் வகுப்பு அ பிரிவுக்கு சவரிராஜ் வந்ததும் அடுக்கி வைக்கப்பட்ட ஒவ்வொரு சிலேடட்டையும் எடுத்து பிழைகளின் எண்ணிக்கையை பொருத்து
கையில் அடி விழுகிறது.ஐந்து பேரை தாண்டியதும் குச்சி உடைய மீதி உள்ள மாணவர்களை முதுகில் கையால் அடிக்கிறார்.பெண்களுக்கும் இதே முறை தான்.இரட்டை சடைகளை ஒரு கையால் பிடித்து வளைத்து மறு கையால் முதுகில் அடிக்கிறார். இது வரை எந்த பெத்தவனும் பள்ளி வாசலில் வந்து நின்றதில்லை.அந்த கிராம மக்கள்
சவரிராஜ்க்கும் கல்விக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

கையில் புத்தகம் ,குறிப்பேடு எதுவும் இல்லாமல் தான் வகுப்பில் நுழைகிறார். ஒரு நாளும் புத்தகத்தை வரி வரியாக படித்து பாடம் எடுத்ததில்லை.அவர் வகுப்பு முடியும் வரை மாணவர்களுக்கு திக்கு திக்கு என்று தான் போகிறது. முதலில்
நேற்று நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்கிறார்‌.
இந்த வெற்றி நோட்ஸ்லாம் அவர் கேட்கிற ஒரு கேள்விக்கு கூட உதவாது.நேற்று அவர் நடத்தியதை கவனித்து இருந்தால் மட்டும் தான் பதில் சொல்ல முடியும்.புத்தகத்தில் இருக்கும் அனைத்து வார்த்தைகளையும் மண்டைக்குள் ஏற்றி வைத்தாலும் பலன் கிடைக்காது
பதில் சொல்லாத மாணவர்களுக்கு மீண்டும் அடி விழுகிறது.ஒரு மாணவன் அடி வாங்கும் போது கையை பின்னே இழுத்து மெதுவாக விழுமாறு செய்ததால் இரண்டு மடங்கு அடி வேகமாக விழுகிறது. ஒரு மாணவி அடி விழும் போது அம்மா என்று கத்துகிறாள்.ஆயி அப்பன் காசு தான் குடுக்கும் வந்து அடியும் வாங்குமா என்று சொல்லி
அவளுக்கும் 2 மடங்கு அடி விழுகிறது. அவர் வகுப்பில் காற்றுக்கும் வெளிச்சத்துக்கு மட்டும் தான் எந்த கட்டுப்பாடும் இல்லை.

சன் டீவி சீரியலில் வரும் குடும்ப பிரச்சினையை பெண்கள் பேசிக் கொள்வது போல கதை சொல்லுகிறார். உண்மையிலே இந்த மனுசன் பாடம் தான் நடத்திக்கொண்டு இருக்கின்றாரா என்று
திருட்டுத்தனமாக ஒரு மாணவன் புத்தகத்தை திறந்து பார்க்க, புத்தகத்தில் எழுத்தபட்ட ஒவ்வொரு வரிகளுக்கும் சவரிராஜ் உயிர் கொடுத்து கொண்டு இருப்பதாக அவன் உணர்கிறான். கடும் இருட்டில் டார்ச் லைட்டை அடித்து உடனை திருப்பிக் கொள்வது போல சவரிராஜ் நகைச்சுவையும் பாடத்தின் நடுவே கலந்து விடுகிறார்
அது வரை சவரிராஜ் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்த மாணவர்கள்,அந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் பார்க்க வேண்டியதை பார்த்துக் கொள்கின்றனர். சத்தம் வெளிய கேட்கிறது

சவரிராஜ் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் ஆனால் ஒரு நாளும் வகுப்பில் முகத்தில் இறுக்கத்தை தளர்த்திக் கொண்டதில்லை.
"ஏன்மா லேட்டா வர" என்று சவரிராஜ் கேட்டதற்கு
"பஸ்ஸ விட்டேன் சார் என்று அந்த மாணவி பதில் சொல்ல
"எந்த ரூட்ல விட்ட உன் அப்பன் அவ்ளோ பெரிய பணக்காரனா" என்று கிண்டல் செய்கிறார்
"என்னமா சாப்ட"என்ற கேள்விக்கு சாதம் சார் என்று ஒரு மாணவி பதல் சொல்ல
நாங்கலாம் என்ன சாணியா திண்ணுட்டா உட்காந்து
இருக்கோம் என்று கிண்டல் செய்கிறார். வகுப்பில் சிரிக்காத அந்த மனிதர் வகுப்பிற்கு வெளியே சக நண்பர் போல் பழகுகிறார்.

மாணவர்களை மட்டும் மாலையில் லேட்டா அனுப்பி வைத்து காலையில் சீக்கிரமும் வரச்சொல்கிறோமே என்று குற்ற உணர்வு அவரை உறுத்த வருடத்தில் பாதி நாட்களில் அந்த அரசு உயர்நிலைப்
பள்ளியிலே தங்கிக் கொள்கிறார். அவர் வகுப்பில் படிப்பில் ஆர்வம் இருக்கும் மாணவர்கள் ஆர்வம் இல்லாத மாணவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி நடத்தப்படுகின்றனர்.அவர் கவனம் கடைசி மாணவன் வரை ஒரே மாதிரி இருக்கிறது. புரிந்து கொள்ள சிரமப்படும் மாணவர்களை மட்டும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிக்கு
வரச்சொல்லி அவரது அறையில் மீண்டும் நடத்துகிறார்.இந்த சிறப்பு வகுப்பிற்கு பணம் வாங்கி கொள்வதில்லை.

இவன் தேரவே மாட்டான் என்று கணிக்கப்பட்ட மாணவர்களை தூக்கி கொண்டாடி அவர்கள் இழந்த நம்பிக்கையை மீட்கிறார்.ஒவ்வொரு நாள் மாலையிலும் விடுமுறை நாட்களிலும் அவர்களுக்கு பாடம் எடுக்கிறார்.பொது
தேர்வு எழுத இலால்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு போகும் மாணவர்களுக்கு , வினாத்தாளில் சவரிராஜ் தான் தெரிகிறார்.பத்தாம் வகுப்பு மாணவனுக்கு ஆறாம் வகுப்பு வினாத்தாளை கொடுத்த மாதிரி இருக்கிறது. வருடம் வருடம் ஒருவராவது அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுகின்றனர்.சில வருடங்கள்
அந்த எண்ணிக்கை நான்கு ஐந்தை தாண்டுகிறது.அந்த தேரவே மாட்டான் என்ற சொல்லப்பட்ட மாணவர்களையும் நல்ல மதிப்பெண்களில் தேர்வு அடைய வைத்து பள்ளிக்கு நூறு சதவீதம் தேர்வு விழுக்காடு வாங்கி தருகிறார். அந்த அரசுப்பள்ளி சுற்றுவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் கவனத்தை ஈர்க்கிறது. கல்வித்துறை
சவரிராஜ்க்கு நல்லாசிரியர் விருது வழங்குகிறது.ஒவ்வொரு ஆண்டும் எதாவது ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகளில் தலைமைஆசிரியர் பொறுப்பு ஏற்குமாறு அழைப்பு வருகிறது.அது அத்தனையும் நிராகரித்து விடுகிறார்

வருடம்வருடம் அவரை கடந்து பள்ளியிலிருந்து வெளியே செல்லும் மாணவர்கள் பின்னாளில்
சமுகத்தின் மிகப் பெரிய பொறுப்புகளில் அமர்கின்றனர். இதுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மனநிலையில் ஒயர் கூடையில் மதிய உணவுடன் தினமும் பெருவை அரசு உயர்நிலை பள்ளியின் வாசலில் இறங்கி, கல்வித்துறையின் உயர் பதவியில் பணி ஓய்வு பெற வேண்டிய சவரிராஜ் ஒரு அறிவியல் ஆசிரியராகவே பணி
ஓய்வு பெறுகிறார். இந்தியாவின் பழமையான தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் பயின்ற பேராசிரியர்களின் வகுப்பில் பயின்று இருந்தாலும்,ஒரு சாதாரண அரசு பள்ளியில் பயின்று அவரை தேடி வந்த அத்தனை உயர் பதவியும் நிராகரித்து கடைசி வரை அரசு உயர்நிலை பள்ளியின் அறிவியல் ஆசிரியராகவே பணிபுரிந்து ஓய்வு
பெற்ற திரு Y. சவரிராஜ் அவர்கள் மட்டும் தான் வகுப்பறையில் நான் கண்ட ஒரே ஆசான்

இந்த சந்தில் எனக்கு தெரிந்த ஆசிரியர் @bharath_kiddo மாப்ள அவர்களுக்கும் மற்ற எல்லா ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்
@selvachidambara வாழ்த்துக்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with GJ

GJ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @aram_Gj

7 Aug
கொரோனோ ஊரடங்கில் நடந்த பல வினோதங்களில் ஒன்று, சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை நோக்கிப் படையெடுத்தது. இது இந்தியா மட்டுமில்லைங்க உலகம் முழுக்க இதான் நடந்திருக்கு.

அதுவும் குறிப்பாக இளைஞர்களும் இளம் முதலீட்டாளர்களும் பணம் சம்பாதிக்கும் பேராசையி்ல் காசை கொட்டியிருக்கின்றனர். Image
முன் அனுபவம் இல்லாமல் நுழைந்த இவர்கள் பல தவறுகளை செய்ததன் மூலம் தங்களுடைய கை சுட்டுக்கொண்டது தான் மிச்சம்.

இப்படி எதுவும் தெரியாமல் வர்த்தகத்தில் பணத்தை போட்டு, இழந்துவிட்டு பின்னர் பங்குச் சந்தையே மோசம்; அது ஒரு சூதாட்டம் என்றெல்லாம் புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லைங்க..
பயிற்சி பெறாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவது, நீச்சல் தெரியாமல் கிணற்றில் குதிப்பதற்கு சமம்!

சரி வாங்க சந்தையில் நுழைவதற்கு முன்னாடி எந்த மாதிரி தவறுகளை நாம செய்ய கூடாது என்பதை நாளை காலை 11.30 மணிக்கு நாம் அனைவரும் டிவிட்டர் space ல விவாதிப்போம்.
@hstradeschool
Read 6 tweets
14 May
Term insurance part - 02
நேற்று பல பேர் தனிப்பட்ட முறையில் நிறைய கேள்விகளை கேட்டீர்கள் என்னால் எல்லோருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும் இந்த பதிவில் எனக்கு தெரிந்த வரை எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நான் சொன்னதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று எதுவும்
கிடையாது. நீங்கள் உங்களுடைய financial advisor தொடர்பு கொண்டு கலந்து ஆலோசித்த பின்பு நீங்கள் முதலீடு செய்யலாம்.

நிறைய பேர் நேற்று கேட்ட போது 5 மடங்கு தேவை உள்ள பாலிசி எடுத்தால் போதுமா கேட்டார்கள்

இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றாலும் பொதுவா ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு
காப்பீடு எடுப்பது நல்லது. மிகக் குறைந்தபட்சமாக 10 மடங்காவது எடுக்க முயற்சி செய்யுங்கள். இன்னைக்கு 50 இலட்சம் பெரிதாக தெரியலாம் பத்து வருடங்கள் கழித்து பார்த்தால் அதன் மதிப்பு பெருசா இருக்கு அதனால் நன்றாக யோசித்து முடிவு எடுங்க

நிறைய பேர் எனக்கு 80 வயசு வரை காப்பீடு தேவை என்று
Read 19 tweets
13 May
நான் போன வருஷம் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து சொல்லி வருவது நீங்க முதலீடு செய்ய விரும்பினால் முதலில் ஒரு நல்ல term insurance plan எடுத்து வைங்க.. அதன் பின்னர் முதலீட்டு திட்டங்களை பற்றி பார்ப்போம் என்பது தான். உடனே எல்லோரும் நான் lic ல insurance போட்டு வைச்சு இருக்கேன் என்று
சொல்லுகிறார்கள். Term insurance என்பது வேறு என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். Term plan பொறுத்த வரை தாங்கள் செலுத்தும் பிரீமியம் இன்சூரன்ஸ்க்கு மட்டுமே செல்வதால் இந்த பிளானில் எந்தவிதமான முதிர்வு தொகையும் இருக்காது.

இந்த மாதிரி கொரோனா பெரும் நோய் தொற்று காலத்தில் இன்சூரன்ஸ்
ஏஜென்ட்கள் அவர்கள் வருமானம் பார்ப்பதற்காக பாலிசியின் பெயரில் சில்ட்ரன்ஸ் பிளான், retirements plan என ஏதாவது சொல்லி உங்க தலைல கட்ட தயாரா இருக்குறாங்க. இந்த மாதிரி இன்சூரன்ஸ் எல்லாம் அவுங்க பங்குசந்தை, mutual fund, government bonds என சிலவற்றில் முதலீடு செய்து அவர்கள் பணம் பார்த்து
Read 12 tweets
18 Apr
எல்லோரும் space ல share market பற்றி பேசுறாங்க நாம bitcoin பற்றி பேசுவோம்..

இரு மாதத்திற்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்தது நினைவிருக்கலாம். அது தான் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய் நிகர் நாணயம் இந்திய மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி உத்தரவு
என்று..உண்மையை சொன்ன யாராலும் அதை தடை எல்லாம் செய்ய முடியாது..மத்திய அரசும் இப்படி பம்மாத்து காட்டிக்கிட்டு இருக்கலாம்.

அந்த கிரிப்டோகரன்சி பற்றிய நமது புரிதல் அல்லது நாம் அறியவேண்டிய சில உண்மைகளை பற்றி சின்ன example உடன் பார்ப்போம்.

கிரிப்டோ சுர்ரெனசி என்றொரு (Innovative)
புதுமையான நாணயத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது தான் பிட்காயின். இதை வடிவமைத்தவர் ஒரு அமெரிக்க வாழ் ஜப்பானியர் சடோஷி நாகமோட்டோ.
இதை உருவாக்கியபின், மின்னணு பணப்பரிவர்தனைகளை நடத்தும் போது, கூடுமானவரையில் மூன்றாவது நபர் தலையீடில்லாமல் பணம் பெறுபவரும் பணம் அளிப்பவரும் தங்களது
Read 14 tweets
5 Sep 20
Part-2
Compounds-போன முறை நாம பார்த்த போது ஒவ்வொரு முறையும் பணம் இரு மடங்காக உயர்ந்து கொண்டே போச்சு.. ஆனா இது ரியாலிட்டி ல சாத்தியமா?என்றால் மிகப்பெரிய கேள்வி குறி தான்

ஆனா சின்ன வித்தியாசம் கூட (1%)நீண்ட கால திட்டத்திற்கு நீங்க பார்க்கும் போது மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும்
நீங்க mutual fund முதலீடு செய்வதற்கு முன்பு யாராவது expense ratio என்ன எவ்வளவு என்று பார்த்து இருக்கிறீங்களா?
AMFI (Association of mutual funds in India) இந்த நிறுவனம் அந்த expense ratio 2.5% மேல் இருக்க கூடாது என்று சொல்லி உள்ளனர்.

இதனால் என்ன இது எப்படி பாதிப்பை தரும் அதானே
கீழ ஒரு படம் கொடுத்து இருக்கேன் பாருங்க. இப்போ நாம 10000 முதலீடு செய்கிறோம் வெவ்வேறு mutual fund நிறுவனத்தில், வேறுபட்ட expense ratio அளவில்.

முதல் காலத்தில் 10 ஆயிரம் முதலிடானது 10% வட்டி அடிப்படையில் 20 ஆண்டிற்கு பின்னர் நமக்கு கொடுப்பது 67,275. எவ்வித கட்டணமும் இல்லாமல்
Read 10 tweets
30 Aug 20
சின்ன #thread Warren buffet பிறந்த நாளை முன்னிட்டு அவர் சொல்லும் compounds.. எப்படி compounds வேலை செய்யும் என்பதை பார்ப்போம்.

நீங்கள் ஒரு வேலைக்கு interview போறிங்க என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் ஒரு 3 வருட ஒப்பந்தத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள், வெளிப்படையாக
இப்போ நீங்க ரொம்ப சந்தோசமாக இருக்குறிங்க..

அப்போ Salary discussion வருது, HR உங்களுக்கு இரண்டு choice கொடுக்கிறாங்க..ஆனால் அதில் என்ன விஷயம் என்றால்

அந்த இரண்டு விருப்பங்களில் ஒன்றை தான் நீங்கள் ஏற்க முடியும்: -

1) மாத சம்பளமாக உங்களுக்கு ஒரு லட்சம் தருவதாக சொல்லுகிறார்கள்.
அப்படி இல்லை என்றால்

2) முதல் மாதத்தில் இருந்து 0.01 ஐ பெறுவீர்கள்.. ஆனால் அது மாதமாதம் இரட்டிப்பாகும்.

Ex : முதல் மாதம் 0.01 (1 பைசா), 2வது மாதம் 0.02 (2 பைசா), 3வது மாதம் 0.04 (4 பைசா)

நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்??
உங்க விருப்பத்தை கீழ பார்க்காமல் பதிவு பண்ணுங்க
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(