எல்லோரும் space ல share market பற்றி பேசுறாங்க நாம bitcoin பற்றி பேசுவோம்..
இரு மாதத்திற்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்தது நினைவிருக்கலாம். அது தான் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய் நிகர் நாணயம் இந்திய மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி உத்தரவு
என்று..உண்மையை சொன்ன யாராலும் அதை தடை எல்லாம் செய்ய முடியாது..மத்திய அரசும் இப்படி பம்மாத்து காட்டிக்கிட்டு இருக்கலாம்.
அந்த கிரிப்டோகரன்சி பற்றிய நமது புரிதல் அல்லது நாம் அறியவேண்டிய சில உண்மைகளை பற்றி சின்ன example உடன் பார்ப்போம்.
கிரிப்டோ சுர்ரெனசி என்றொரு (Innovative)
புதுமையான நாணயத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது தான் பிட்காயின். இதை வடிவமைத்தவர் ஒரு அமெரிக்க வாழ் ஜப்பானியர் சடோஷி நாகமோட்டோ.
இதை உருவாக்கியபின், மின்னணு பணப்பரிவர்தனைகளை நடத்தும் போது, கூடுமானவரையில் மூன்றாவது நபர் தலையீடில்லாமல் பணம் பெறுபவரும் பணம் அளிப்பவரும் தங்களது
ஒப்புகையோடு பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் மூன்றாவது நபரை விட நம்பகமான பாதுகாப்பைக் கொண்டு, பண பரிவர்த்தனைகளை செய்திட முடியும் என்பதே பிட் காயின் என்ற வழிமுறையின் இமாலய வளர்ச்சி.
Bit Coin என்பது ஏதோ ஒரு வட்ட வடிவ, சதுர வடிவ நாணயமோ அல்ல. அது ஒரு மென்பொருளால் உருவான ஒரு குறியீட்டு எண்.
Virtual Money, மெய்நிகர் காசு.
என்னது!! மென் பொருளால் உருவான குறியீடா மெய்நிகர் காசா ? என்று ஆச்சிரியப்படுபவர்களுக்கு மேலும் பல ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.
உலகில் உள்ள பணத்தை மொத்தமாக 21 மில்லியன் பிட் காயினாக உள்ளடக்கிட முடியும் என்பதே இந்த அறிஞரின் கூற்று. அதாவது
2.1கோடி bitcoin அடட்ரெஸ்ஸை வைத்துக்கொண்டு உலகில் வணிகம் செய்ய முடியும் என்று வடிவமைக்கப்பட்டது இந்த பிட் காயின்.
2009முதல் ஒவ்வொரு ஆண்டிருக்கும் இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டு, புரியும்படியாக சொல்லவேண்டுமானால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு 50 பிட் காயின் வெளியிடும் இந்த மென் பொருள்
அதுவும் ஒவ்வொரு ஆண்டும் அதன் எண்ணிக்கை பாதியாக குறைந்து கொண்டே இறுதியாக 2.1 மில்லியன் என்ற அதன் இலக்கு வந்து விட்டால் அதன் உற்பத்தி நிறுத்தப்படும் இது தான் சதோஷியின் இலக்கு. இதுவரை ஏறத்தாழ 18 மில்லியன் உற்பத்தி ஆகி விட்டது. தற்போது இன்னும் சில மில்லியன்களே மீதம்.
இதை நிர்வகிக்க
போகிறவர்கள் யார் ?இதை பாதுகாப்பார்கள் யார் ?
யாரும் இல்லை.
குழப்பமா இருக்கா ?
ஓபன் சோர்ஸ் (open source ) மூலம் இதை தயாரித்து 2.1கோடி நாணயங்கள் வந்தவுடன் இது தனது உற்பத்தியை நிறுத்திக்கொண்டால், வெறும் 2.1கோடி காயின்களாக இருக்கும் பிட் காயின்
மதிப்பு கூடும் என்பதே இதன் கருத்தியல்
(concept புரியவில்லையா) எளிதாக புரியும்படி பார்க்கலாம்.
நிலத்தில் கிடைப்பது தான் இரும்பும், தங்கமும். ஏன் ஒரு கிலோ இரும்பும் ஒரு கிராம் தங்கமும் ஒரே விலையிலா கிடைக்கிறது ? இரும்பு பெருவாரியாக கிடைக்கிறது, தங்கம் மிக குறைந்தே கிடைக்கிறது. இன்னும் கேட்டால் சுத்தமான இரும்பை வைத்து
கொண்டு ஒரு பெரிய கப்பலை உருவாக்கலாம். ஆனால் தங்கத்தை வைத்துக் கொண்டு ஆபரணங்கள், நகை போன்றவை செய்ய வேண்டுமானால் கூட அதில் செம்பை கலக்க வேண்டும். இது தான் யதார்த்தம். இருந்தாலும் தங்கத்திற்கு மோகம் அதிகம் அது குறைந்த அளவில் பூமியில் காணப்படுவதாலும், இரும்பை காட்டிலும் அதை தோண்டி
எடுக்க ஆகும் செலவு பல நூறு மடங்குகள். இது தான் அந்த உலோகத்தின் தன்மையை உயர்த்தி விலையை நிர்ணயிக்கிறது.
ஆகவே, பிட் காயின் குறைந்த அளவில் மட்டுமே உற்பத்தி ஆகும். அதனை அதற்கு மேல் உற்பத்தி செய்ய முடியாத அளவில் மென்பொருளை எழுதி உள்ளார் இதன் நிறுவனர் சதோஷி நாகமோட்டோ.. இதனால் இதற்கு
demand இருந்துக் கொண்டே இருக்கும். ஆகவே இதனை வாங்கி வைத்திருப்போர் மிகவும் புத்திசாலியாக பார்க்கிறது இந்த கிரிப்டோ கரன்சி உலகம்.
அதெல்லாம் சரி, இதன் வளர்ச்சி என்ன? ஏன் இதை தடை செய்தார்கள்? இதனால் யாருக்கு லாபம் யாருக்கு நட்டம் என்கிற கேள்வி நமக்கு இயல்பாகவே வரும். அதற்கு விடைகள்
அடுத்து பதிவில் கிடைக்கும்.
உலக அளவில் பிட்காயின் அதிகமாக புழக்கத்தில் இருப்பது எங்க என்று தெரியுமா??
Part-2
Compounds-போன முறை நாம பார்த்த போது ஒவ்வொரு முறையும் பணம் இரு மடங்காக உயர்ந்து கொண்டே போச்சு.. ஆனா இது ரியாலிட்டி ல சாத்தியமா?என்றால் மிகப்பெரிய கேள்வி குறி தான்
ஆனா சின்ன வித்தியாசம் கூட (1%)நீண்ட கால திட்டத்திற்கு நீங்க பார்க்கும் போது மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும்
நீங்க mutual fund முதலீடு செய்வதற்கு முன்பு யாராவது expense ratio என்ன எவ்வளவு என்று பார்த்து இருக்கிறீங்களா?
AMFI (Association of mutual funds in India) இந்த நிறுவனம் அந்த expense ratio 2.5% மேல் இருக்க கூடாது என்று சொல்லி உள்ளனர்.
இதனால் என்ன இது எப்படி பாதிப்பை தரும் அதானே
கீழ ஒரு படம் கொடுத்து இருக்கேன் பாருங்க. இப்போ நாம 10000 முதலீடு செய்கிறோம் வெவ்வேறு mutual fund நிறுவனத்தில், வேறுபட்ட expense ratio அளவில்.
முதல் காலத்தில் 10 ஆயிரம் முதலிடானது 10% வட்டி அடிப்படையில் 20 ஆண்டிற்கு பின்னர் நமக்கு கொடுப்பது 67,275. எவ்வித கட்டணமும் இல்லாமல்
என்ஜினீயரிங் மேல் உள்ள அபிப்பிராயத்தை மாற்றவே இந்த பதிவு. 2010க்கு பின்பு Mechanical, Electrical படித்தவர்களுக்கு சரியான பாதை அமையவில்லை. அண்ணா பல்கலைக்கழகம், PSG போன்ற கல்லூரிகளில் படித்தவர்கள் கூட பாதிப்பேர் படித்த பின்பு மென்பொருள் துறையை தான் தேர்வு செய்கிறார்கள்.
ஆனால் ஒரு
சிலர் ஒரு படி மேலே சென்று என்னது என்ஜினீயரிங் ஆ? அதெல்லாம் ஸ்கோப் இல்லாத படிப்பு இப்போ. இப்போ லாம் அக்ரி க்கு தான் ஸ்கோப், CA க்கு தான் scope என்று எங்க அண்ணன் சொன்னாரு னு நீங்க கோவப்படுறது தெரியுது.
ஒரு காலத்துல ஊருக்கு ஒரு என்ஜினீயர் இருக்கிறதே பெரிய விஷயம் இப்போ வீட்டுக்கு
ஒரு என்ஜினீயர்ங்கிற நிலமைக்கு வந்துட்டோம். ஆனா அன்னைக்கு என்ஜினீயர்க்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இப்போ இருக்கா? வேலை இல்லாம சுத்திட்டு இருக்க அண்ணன்ங்களை பார்த்தும் நான் எப்படி என்ஜினீயரிங் படிக்கிறது? னு கேள்வி வருவது நியாயம் தான்.
அணு உலை இறுதி பாகம் - 10
ரியாக்டர் ஹாலிலிருந்து பெரும் தீயும் புகையும் மேல்நோக்கியவாறு சென்று கொண்டிருந்ததால அலெக்ஸாண்டருக்கு இன்னமும் ரியாக்டரின் உண்மை நிலை தெரியவில்லை.
அவர் சில உதவியாளர்களை அழைத்து ரியாக்டர் ஹாலுக்கு அருகே வேலை செய்து கொண்டிருந்தவர்களை தேடி மீட்க அனுப்பினார்.
உலையின் கதிரியக்கத்தை கண்காணிக்கும் பணியாளரை அழைத்து வரச்சொன்னார். அவரோ இடிபாடுகளில் சிக்கி மயக்கமுற்று கிடந்தார். அவரது முகத்தில் உள்ள தோல் முழுவதும் சிதைந்து எலும்புகள் தெரிந்தன. அவரை தூக்கும்போது உடலில் உள்ள தோல் கையோடு உரிந்து வந்தது. இருவர் சேர்ந்து அந்த மயங்கிய பணியாளரை
அம்புலன்ஸ் மூலம் பிரிப்யாட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன் பின்னர் மேலும் சிலரை அழைத்து உலை மையத்தை குளிர்விக்கும் பம்புகளை இயக்க ஏற்பாடு செய்ய சொன்னார். அந்த பம்புகளுக்கு செல்லும் மின்சார கேபிள்கள் கிழிந்து தொங்கி தீப்பொறியை கொட்டுவதாக அவர்கள் திரும்பி வந்து சொன்னார்கள்.
அணு உலை பாகம் - 09
ரியாக்டர் எண் 4ன் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணியாளர்களுக்கு என்ன நடக்கிறது என கணிக்க அவகாசம் ஏதும் கிடைக்கவில்லை. கண்ட்ரோல் ரோடுகள் வினாடிக்கு 15 இன்ச் வீதம் மொத்தமுள்ள 7 மீட்டர் ஆழம் இறங்க 18sec ஆகும். போர்மேன் அலெக்ஸாண்டர் அகிமோவ் கண்ட்ரோல் ராடுகள் இறங்கும்
வேகம் போதவில்லை என கருதி, அவற்றை இயக்கும் கிளட்ச்சுக்கான மின்சாரத்தை துண்டித்தார். இப்படி செய்தால் ராடுகள் வடிவமைக்கப்பட்ட வேகத்தில் அல்லாமல் தனது சுய எடையால் வெகு வேகமாக ஒரே நொடியில் கீழிறங்கும். ஆனால் ராடுகள் அசையவில்லை. மாறாக ரியாக்டரிலிருந்து வினோதமான
உருட்டும் ஒலிகள் வந்தன.
வினாடிக்கு வினாடி உலையினுள் ஆற்றல் வெளிப்பாடு இருமடங்காக அதிகரித்துக்கொண்டே சென்றது. 1000MW மின் உற்பத்தி திறன் கொண்ட அந்த உலையின் திறன் வெளிப்பாடு,அதனை காட்டும் கருவி கடைசியாக காட்டிய அளவு: 3300MW
நேரம்:01:24:00
அணு உலையின் அடிப்பகுதியிலிருந்து வெப்பம் அதிக அளவில் உருவானதாலும்
நிறைய பேர் stock suggestion சொல்லுங்கன்னு சொல்லி கேட்கிறீங்க நாம அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல என்கிட்ட மட்டுமில்ல யார் இடத்திலும் டிப்ஸ் எல்லாம் கேட்காதீங்க அவுங்களுக்கு எங்க enter ஆகனும் எங்க exit ஆகனும் தெளிவா இருப்பாங்க..entry, exit இரண்டும் ரொம்ப முக்கியம் அதை பார்ப்போம்
அப்புறம் ஒருத்தர் நான் வெளிநாட்டுல வேலை பார்க்கிறேன், எனக்கு ஒரு 20k முதல் 30k வரை வந்தா கூட போதும் வேலை விட்டு வந்திடலாம்ன்னு இருக்கிறேன் சொல்லுறார். தயவுசெய்து அந்த மாதிரி தப்பு எல்லாம் செஞ்சுடாதிங்க இது இரத்த பூமி, பல பேரை காவு வாங்கி இருக்கு. எனக்கு நல்லா தெரியும் ஒரு பையன்
ஸ்டாக் மார்க்கெட் ல டிரேடிங் பண்ணுறேன் சொல்லி 10 இலட்சம் லோன் வாங்கி அந்த 10 இலட்சத்தையும் மார்கெட்டில விட்டுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டான். அதே மாதிரி எனக்கு நல்லா தெரிந்த ஒருத்தர் வெறும் 2 மாசத்தில் 30 இலட்சத்தை இழந்த சம்பவம் எல்லாம் நேரில் பார்த்து இருக்கேன் அதனால் இது மாதிரி