Term insurance part - 02
நேற்று பல பேர் தனிப்பட்ட முறையில் நிறைய கேள்விகளை கேட்டீர்கள் என்னால் எல்லோருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும் இந்த பதிவில் எனக்கு தெரிந்த வரை எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நான் சொன்னதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று எதுவும்
கிடையாது. நீங்கள் உங்களுடைய financial advisor தொடர்பு கொண்டு கலந்து ஆலோசித்த பின்பு நீங்கள் முதலீடு செய்யலாம்.
நிறைய பேர் நேற்று கேட்ட போது 5 மடங்கு தேவை உள்ள பாலிசி எடுத்தால் போதுமா கேட்டார்கள்
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றாலும் பொதுவா ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு
காப்பீடு எடுப்பது நல்லது. மிகக் குறைந்தபட்சமாக 10 மடங்காவது எடுக்க முயற்சி செய்யுங்கள். இன்னைக்கு 50 இலட்சம் பெரிதாக தெரியலாம் பத்து வருடங்கள் கழித்து பார்த்தால் அதன் மதிப்பு பெருசா இருக்கு அதனால் நன்றாக யோசித்து முடிவு எடுங்க
நிறைய பேர் எனக்கு 80 வயசு வரை காப்பீடு தேவை என்று
சொன்னார்கள்,அப்புறம் எந்த வயசுல இருந்து ஆரம்பிக்கலாம் எனக்கு இன்னும் marriage ஆகல எனக்கெல்லாம் தேவையா என்று கேட்டார்கள்??
எல்லோருக்கும் சொல்ல வருவது இது தான் இப்போ
இந்தியாவில் ஒரு கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் நடக்கவிருந்தது. அந்த ஆடுகளம் இரண்டாம், மூன்றாம், நாளிலிருந்து ஸ்பின் ஆகும்
என்று ஆளாளுக்கு ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ஒரு வர்ணனையாளர் சொன்னார்–எப்போது ஒரு சுழல் பந்து வீச்சாளர் வந்து பந்து வீசுகிறாரோ அப்போதிலிருந்து இந்த பிட்ச் ஸ்பின் ஆகும் என்று. அது போல உங்க வருமானத்தை யாராவது நம்பியிருக்கும் முதல் நாளிலேருந்து உங்களுக்கு ஆயுள் காப்பீடு அவசியம்
வயது ஏற ஏற ஆயுள் காப்பீட்டின் ப்ரீமியம் ஏறும் எனவே வேலைக்குப் போனதும் ஆயுள் காப்பீடு எடுப்பது தான் நல்லது.
ஆயுள் காப்பீட்டின் தேவை படத்தில் இருக்கும் Sine Wave இன் Positive Cycle போன்றது. தோரயமா 25வயதில் ஆரம்பிக்கும் தேவை, வருமானத்துடன் வளர்ந்து கொண்டே போகும். முதலில் பெற்றோர்
மட்டுமே உங்களை நம்பி இருப்பாங்க, அப்புறம் திருமணம் ஆகும் மனைவி பிள்ளைகள்னு உங்க வருமானத்தை நம்பி இருப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் வருமானம் வளர வளர அதுக்கு ஏற்ப உங்க லைஃப்ஸ்டைலையும் அதிகரித்துக் கொண்டோ போவீங்க.. 25 வயதில் பெரிய கமிட்மெண்ட் இருக்காது, அதுவே 40 களிலும் 50
வயதிலும் வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்லூரிச் செலவு, கல்யாண செலவுன்னு நெறய கமிட்மெண்ட் இருக்கும். இந்த காலகட்டத்தில் தான் காப்பீட்டின் தேவை மிக அதிகமாக இருக்கும். நாற்பதுகளில் இருக்கும் ஒருவர் திடீரென இறக்க நேரிட்டால் அவர் குடும்பம் அடுத்த 15-20 ஆண்டுகள் அதே லைஃப்ஸ்டைல்
மெயிண்டெயின் பண்ணி பொருளாதார ரீதியா கஷ்டப்படாம இருக்க ஒரே வழி டெர்ம் பாலிசி எடுத்து வைப்பதுதான்.
25-30 வயது ஆக இருக்கும் போது ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு டெர்ம் பாலிசி எடுத்து வச்சா, வருமானம் உயர உயர காப்பீட்டின் மடங்கு குறைந்து கொண்டே வரும். அது 10 மடங்கை நெருங்கும் சமயத்தில்
இன்னொரு பாலிசி எடுத்தோ அல்லது பழசை கைவிட்டு புதுசா ஒரே பாலிசி எடுப்பதன் மூலமோ அப்போதைய வருமானத்தின் 20 மடங்கு காப்பீடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆயுள் காப்பீடு என்பது வருமான இழப்பை ஈடுசெய்ய மட்டுமே. வருமானம் ஈட்டுவதை நிறுத்தும் நாள் அதாவது ரிட்டையர் ஆகும் தினம்
காப்பீட்டின் தேவையும் முடிந்து விடுகிறது. நீங்க வேலைக்குப் போக நினைக்கும் வயசு வரை மட்டும் ஆயுள் காப்பீடு எடுத்தால் போதுமானது. அந்த தேதிக்குள் மிச்ச காலத்தைக் கழிக்கத் தேவையான பணத்தை சேமித்து வைக்க வேண்டியது அவசியம்.
நிறைய பேர் 65 வயது வரை பாலிசிக்கும் 80 வயது வரை பாலிசிக்கும்
ப்ரீமியத்தில் வித்தியாசம் அதிகமில்லை அதனால 75-80 வயசு வரை பாலிசி எடுக்கலாமான்னு நினைக்கறாங்க.இதுல ரிட்டையர்மெண்ட்ட்டுக்கு தேவையான அளவு சேமிக்காம போயிட்டா இன்சூரன்ஸ் பணம் வருமேன்னு துணைக்கேள்வி வேற.
1.வேலை செய்யும் போது தேவையில்லாம அதிக ப்ரீமியம் கட்டுவீங்க. மாசம் 500 ரூபாய்தானே
அதிகம்னு நினைக்கறீங்க, ஆனா அந்த 500 ரூபாய் முதலீடு 30 ஆண்டுகளில் 8-9 லட்சரூபாயாக இருக்கும் 2. காப்பீட்டு நிறுவனங்கள் Charity செய்வதற்கு இல்லை, ஒரு நாட்டில் மக்களின் Life Expectancy கணக்கிட்டுத்தான் பாலிசி டிசைன் பண்றாங்க.. 65 வயதுக்குள் இறக்காத நீங்க 75 வயதுக்குள் இறப்பீங்கன்னு
நிச்சயமில்லை.
3.ஓய்வு காலத்தில் வாழத்தேவையான அளவு பணம் சேக்கலேன்னும் போது எப்படி இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டுவீங்க?அப்ப கண்டிப்பா பாலிசியை நிறுத்துவீங்க, அதுநாள் வரை கட்டிய அதிக ப்ரீமியம் வீணாபோகும்
எப்படியாவது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கிடணும்னு நினைக்காதீங்க,
அந்த ஸ்ட்ராடஜி வெற்றி பெறவே பெறாது.அடுத்தது எந்த பாலிசி வாங்கலாம் இதை தான் பெரும்பாலானோர் கேட்டு இருந்தனர்.என்னோட பதில் உங்க financial advisor contact பண்ணுங்க.அவங்க கிட்ட இந்த கேள்விகளை கேளுங்க claim settlement ratio எவ்வளவு?இங்க சில நிறுவனங்களின் claim settlement ratio கொடுத்து
இருக்கிறேன் அதன் படி max life 99.2%முதல் இடத்திலும்,HDFC life & Tata AIA 99.1% இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.
அடுத்ததாக claim settlement period பற்றி கேளுங்க அதை ஏதாவது document இல் தரும் படி கேட்டு உறுதி படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
அப்புறம் return of premium வேண்டுமா
வேண்டாமா என்பதை நீங்க தான் முடிவு எடுக்க வேண்டும்.
இப்போ ஒருத்தர் 50 இலட்சத்திற்கு பாலிசி எடுக்கிறார் அவர் ஆண்டிற்கு 6614 ரூபாயை பிரீமியம் தொகையாக 40 வருடத்திற்கு கட்ட வேண்டும். இடையில் அவர் இறந்து விட்டால் 50 இலட்சம் அவர் nominee க்கு போகும். அவர் 40 வருடம் காலம் எந்த ஒரு
அசமாபவிதம் நடக்காமல் நல்லபடியாக இருக்கிறார் என்றால் 40வது வருட முடிவில் அவருக்கு (6614 x 40) 2,64,560 ரூபாய் கிடைக்கும்.
நான் போன வருஷம் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து சொல்லி வருவது நீங்க முதலீடு செய்ய விரும்பினால் முதலில் ஒரு நல்ல term insurance plan எடுத்து வைங்க.. அதன் பின்னர் முதலீட்டு திட்டங்களை பற்றி பார்ப்போம் என்பது தான். உடனே எல்லோரும் நான் lic ல insurance போட்டு வைச்சு இருக்கேன் என்று
சொல்லுகிறார்கள். Term insurance என்பது வேறு என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். Term plan பொறுத்த வரை தாங்கள் செலுத்தும் பிரீமியம் இன்சூரன்ஸ்க்கு மட்டுமே செல்வதால் இந்த பிளானில் எந்தவிதமான முதிர்வு தொகையும் இருக்காது.
இந்த மாதிரி கொரோனா பெரும் நோய் தொற்று காலத்தில் இன்சூரன்ஸ்
ஏஜென்ட்கள் அவர்கள் வருமானம் பார்ப்பதற்காக பாலிசியின் பெயரில் சில்ட்ரன்ஸ் பிளான், retirements plan என ஏதாவது சொல்லி உங்க தலைல கட்ட தயாரா இருக்குறாங்க. இந்த மாதிரி இன்சூரன்ஸ் எல்லாம் அவுங்க பங்குசந்தை, mutual fund, government bonds என சிலவற்றில் முதலீடு செய்து அவர்கள் பணம் பார்த்து
எல்லோரும் space ல share market பற்றி பேசுறாங்க நாம bitcoin பற்றி பேசுவோம்..
இரு மாதத்திற்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்தது நினைவிருக்கலாம். அது தான் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய் நிகர் நாணயம் இந்திய மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி உத்தரவு
என்று..உண்மையை சொன்ன யாராலும் அதை தடை எல்லாம் செய்ய முடியாது..மத்திய அரசும் இப்படி பம்மாத்து காட்டிக்கிட்டு இருக்கலாம்.
அந்த கிரிப்டோகரன்சி பற்றிய நமது புரிதல் அல்லது நாம் அறியவேண்டிய சில உண்மைகளை பற்றி சின்ன example உடன் பார்ப்போம்.
கிரிப்டோ சுர்ரெனசி என்றொரு (Innovative)
புதுமையான நாணயத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது தான் பிட்காயின். இதை வடிவமைத்தவர் ஒரு அமெரிக்க வாழ் ஜப்பானியர் சடோஷி நாகமோட்டோ.
இதை உருவாக்கியபின், மின்னணு பணப்பரிவர்தனைகளை நடத்தும் போது, கூடுமானவரையில் மூன்றாவது நபர் தலையீடில்லாமல் பணம் பெறுபவரும் பணம் அளிப்பவரும் தங்களது
Part-2
Compounds-போன முறை நாம பார்த்த போது ஒவ்வொரு முறையும் பணம் இரு மடங்காக உயர்ந்து கொண்டே போச்சு.. ஆனா இது ரியாலிட்டி ல சாத்தியமா?என்றால் மிகப்பெரிய கேள்வி குறி தான்
ஆனா சின்ன வித்தியாசம் கூட (1%)நீண்ட கால திட்டத்திற்கு நீங்க பார்க்கும் போது மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும்
நீங்க mutual fund முதலீடு செய்வதற்கு முன்பு யாராவது expense ratio என்ன எவ்வளவு என்று பார்த்து இருக்கிறீங்களா?
AMFI (Association of mutual funds in India) இந்த நிறுவனம் அந்த expense ratio 2.5% மேல் இருக்க கூடாது என்று சொல்லி உள்ளனர்.
இதனால் என்ன இது எப்படி பாதிப்பை தரும் அதானே
கீழ ஒரு படம் கொடுத்து இருக்கேன் பாருங்க. இப்போ நாம 10000 முதலீடு செய்கிறோம் வெவ்வேறு mutual fund நிறுவனத்தில், வேறுபட்ட expense ratio அளவில்.
முதல் காலத்தில் 10 ஆயிரம் முதலிடானது 10% வட்டி அடிப்படையில் 20 ஆண்டிற்கு பின்னர் நமக்கு கொடுப்பது 67,275. எவ்வித கட்டணமும் இல்லாமல்
என்ஜினீயரிங் மேல் உள்ள அபிப்பிராயத்தை மாற்றவே இந்த பதிவு. 2010க்கு பின்பு Mechanical, Electrical படித்தவர்களுக்கு சரியான பாதை அமையவில்லை. அண்ணா பல்கலைக்கழகம், PSG போன்ற கல்லூரிகளில் படித்தவர்கள் கூட பாதிப்பேர் படித்த பின்பு மென்பொருள் துறையை தான் தேர்வு செய்கிறார்கள்.
ஆனால் ஒரு
சிலர் ஒரு படி மேலே சென்று என்னது என்ஜினீயரிங் ஆ? அதெல்லாம் ஸ்கோப் இல்லாத படிப்பு இப்போ. இப்போ லாம் அக்ரி க்கு தான் ஸ்கோப், CA க்கு தான் scope என்று எங்க அண்ணன் சொன்னாரு னு நீங்க கோவப்படுறது தெரியுது.
ஒரு காலத்துல ஊருக்கு ஒரு என்ஜினீயர் இருக்கிறதே பெரிய விஷயம் இப்போ வீட்டுக்கு
ஒரு என்ஜினீயர்ங்கிற நிலமைக்கு வந்துட்டோம். ஆனா அன்னைக்கு என்ஜினீயர்க்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இப்போ இருக்கா? வேலை இல்லாம சுத்திட்டு இருக்க அண்ணன்ங்களை பார்த்தும் நான் எப்படி என்ஜினீயரிங் படிக்கிறது? னு கேள்வி வருவது நியாயம் தான்.
அணு உலை இறுதி பாகம் - 10
ரியாக்டர் ஹாலிலிருந்து பெரும் தீயும் புகையும் மேல்நோக்கியவாறு சென்று கொண்டிருந்ததால அலெக்ஸாண்டருக்கு இன்னமும் ரியாக்டரின் உண்மை நிலை தெரியவில்லை.
அவர் சில உதவியாளர்களை அழைத்து ரியாக்டர் ஹாலுக்கு அருகே வேலை செய்து கொண்டிருந்தவர்களை தேடி மீட்க அனுப்பினார்.
உலையின் கதிரியக்கத்தை கண்காணிக்கும் பணியாளரை அழைத்து வரச்சொன்னார். அவரோ இடிபாடுகளில் சிக்கி மயக்கமுற்று கிடந்தார். அவரது முகத்தில் உள்ள தோல் முழுவதும் சிதைந்து எலும்புகள் தெரிந்தன. அவரை தூக்கும்போது உடலில் உள்ள தோல் கையோடு உரிந்து வந்தது. இருவர் சேர்ந்து அந்த மயங்கிய பணியாளரை
அம்புலன்ஸ் மூலம் பிரிப்யாட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன் பின்னர் மேலும் சிலரை அழைத்து உலை மையத்தை குளிர்விக்கும் பம்புகளை இயக்க ஏற்பாடு செய்ய சொன்னார். அந்த பம்புகளுக்கு செல்லும் மின்சார கேபிள்கள் கிழிந்து தொங்கி தீப்பொறியை கொட்டுவதாக அவர்கள் திரும்பி வந்து சொன்னார்கள்.