நான் போன வருஷம் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து சொல்லி வருவது நீங்க முதலீடு செய்ய விரும்பினால் முதலில் ஒரு நல்ல term insurance plan எடுத்து வைங்க.. அதன் பின்னர் முதலீட்டு திட்டங்களை பற்றி பார்ப்போம் என்பது தான். உடனே எல்லோரும் நான் lic ல insurance போட்டு வைச்சு இருக்கேன் என்று
சொல்லுகிறார்கள். Term insurance என்பது வேறு என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். Term plan பொறுத்த வரை தாங்கள் செலுத்தும் பிரீமியம் இன்சூரன்ஸ்க்கு மட்டுமே செல்வதால் இந்த பிளானில் எந்தவிதமான முதிர்வு தொகையும் இருக்காது.
இந்த மாதிரி கொரோனா பெரும் நோய் தொற்று காலத்தில் இன்சூரன்ஸ்
ஏஜென்ட்கள் அவர்கள் வருமானம் பார்ப்பதற்காக பாலிசியின் பெயரில் சில்ட்ரன்ஸ் பிளான், retirements plan என ஏதாவது சொல்லி உங்க தலைல கட்ட தயாரா இருக்குறாங்க. இந்த மாதிரி இன்சூரன்ஸ் எல்லாம் அவுங்க பங்குசந்தை, mutual fund, government bonds என சிலவற்றில் முதலீடு செய்து அவர்கள் பணம் பார்த்து
விடுவார்கள். அதில் உங்களுக்கு ஒரு சிறு தொகையை கில்லி கொடுத்து விட்டு போய்டுவாங்க. இந்த மாதிரியான திட்டங்கள் போடுவதற்கு direct mutual fund ல போடலாம். அப்போ term insurance அது தானே கேட்குறிங்க?? காப்பீடு ஏன்? எதற்கு? என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்
காருக்கோ பைக்குக்கோ காப்பீடு
எடுத்தாலும் இன்சூர் செய்யபடுவது காரோ பைக்கோ அல்ல, அதன் மதிப்புதான் (Underlying Value of the Vehicle or any other asset). விபத்தில் வண்டி மொத்தமா சேதாரம் ஆகிடிச்சு, என்னோட அதே வண்டியை காப்பீட்டு நிறுவனம் தரணும்னு கேக்க முடியாது- விபத்து நிகழ்ந்த அன்று அவ்வண்டியின் மதிப்பு என்னவோ
அதைத்தான் காப்பீட்டு நிறுவனம் தரும். அது போல பேர் என்னவோ ஆயுள் காப்பீடாக இருந்தாலும் காப்பீடு செய்யப்படுவது பயனரின் வருமானமே. Human Life Value என்கிற கான்சப்டின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் ஒவ்வொருவருக்கும் காப்பீடு வழங்கும்.
ஆயுள் காப்பீடு என்பது திடீர் மரணத்தால்
ஏற்படக்கூடிய வருமான இழப்பை ஈடுசெய்ய மட்டுமே. ஒருவருடைய வருமானத்தை நம்பி யாராவது இருந்தால் (பெற்றோர்,மனைவிபிள்ளைகள்) அவருக்கு ஆயுள் காப்பீடு அத்தியாவசியம்.
அவர் வருமானம் ஈட்டும் காலத்தில் இறக்க நேரிட்டால் அந்த Dependants பொருளாதார ரீதியில் கஷ்டப்படாமல் இருக்க காப்பீடு உதவும்.
மாப்ள நான் எல்லாம் ஃபிட்டான ஆளு, gym body சொல்லிட்டு திரிந்தவனை எல்லாம் கொரோனா பொட்டுண்ணு போட்டு தள்ளிருச்சு.
இப்போ கூட தேவையான அளவு ஆயுள் காப்பீடு மட்டுமே உங்க குடும்பத்தை வருமானம் ஈட்டுபவரின் அகால மரணத்துக்குப் பின் காக்கும் என்பது புரியலேன்னா இனி எப்போதும் புரிய வாய்ப்பில்லை.
காப்பீடு என்பது ஒரு உயிரின் / பொருளின் மதிப்புக்கு ஈடாக வழங்கப்படுவது. பொருளின் மதிப்பு அதன் விலை minus depreciation. மனிதரின் மதிப்பு Human Life Value கணக்கின் படி அமைகிறது. அதன் அடிப்படையே அந்நபர் ஈட்டும் வருமானம் தான். ஆண்டுக்கு 6 லட்சம் சம்பாதிக்கும் நபர் திடீரென இறக்க
நேரிட்ட்டால் அவர் குடும்பம் அடுத்த 20 ஆண்டுகள் பொருளாதார ரீதியில் கஷ்டப்படாமல் இருக்க ஒரே வழி 1.2 கோடி ரூபாய் (வருமானத்தின் 20 மடங்கு) டெர்ம் பாலிசி எடுத்து வைப்பதுதான்.
டெர்ம் பாலிசி தவிர வேற எந்த வகை அயூள் காப்பீடிலும் இந்த அளவு கவரேஜ் வாங்க முடியாது. 20 மடங்கு அல்ல 5 மடங்கு
கூட எண்டோமெண்ட் பாலிசி வாங்க முடியாது, அதன் ப்ரீமியம் அவ்வளவு அதிகமாய் இருக்கும். எண்டோமெண்ட் பாலிசிகள் தரும் 4-5 % வளர்ச்சியை வச்சி வருடாந்திர திவசம் கூட பண்ண முடியாது.
ஒரு message ஒருத்தர் அழகா சொல்லி இருந்தார்.. அதாவது எண்டோமெண்ட் பாலிசியில் “முதலீடு” செய்யும் லட்சக்
கணக்கானோர் எதிர்திசையில் செல்ல முயலும் உங்களை எள்ளிநகையாடலாம். அவர்களுக்கு Diane Grant சொன்னதைப் பதிலாக தாங்க
It’s better to walk alone than with a crowd going in the wrong direction.
Term insurance part - 02
நேற்று பல பேர் தனிப்பட்ட முறையில் நிறைய கேள்விகளை கேட்டீர்கள் என்னால் எல்லோருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும் இந்த பதிவில் எனக்கு தெரிந்த வரை எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நான் சொன்னதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று எதுவும்
கிடையாது. நீங்கள் உங்களுடைய financial advisor தொடர்பு கொண்டு கலந்து ஆலோசித்த பின்பு நீங்கள் முதலீடு செய்யலாம்.
நிறைய பேர் நேற்று கேட்ட போது 5 மடங்கு தேவை உள்ள பாலிசி எடுத்தால் போதுமா கேட்டார்கள்
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றாலும் பொதுவா ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு
காப்பீடு எடுப்பது நல்லது. மிகக் குறைந்தபட்சமாக 10 மடங்காவது எடுக்க முயற்சி செய்யுங்கள். இன்னைக்கு 50 இலட்சம் பெரிதாக தெரியலாம் பத்து வருடங்கள் கழித்து பார்த்தால் அதன் மதிப்பு பெருசா இருக்கு அதனால் நன்றாக யோசித்து முடிவு எடுங்க
எல்லோரும் space ல share market பற்றி பேசுறாங்க நாம bitcoin பற்றி பேசுவோம்..
இரு மாதத்திற்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்தது நினைவிருக்கலாம். அது தான் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய் நிகர் நாணயம் இந்திய மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி உத்தரவு
என்று..உண்மையை சொன்ன யாராலும் அதை தடை எல்லாம் செய்ய முடியாது..மத்திய அரசும் இப்படி பம்மாத்து காட்டிக்கிட்டு இருக்கலாம்.
அந்த கிரிப்டோகரன்சி பற்றிய நமது புரிதல் அல்லது நாம் அறியவேண்டிய சில உண்மைகளை பற்றி சின்ன example உடன் பார்ப்போம்.
கிரிப்டோ சுர்ரெனசி என்றொரு (Innovative)
புதுமையான நாணயத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது தான் பிட்காயின். இதை வடிவமைத்தவர் ஒரு அமெரிக்க வாழ் ஜப்பானியர் சடோஷி நாகமோட்டோ.
இதை உருவாக்கியபின், மின்னணு பணப்பரிவர்தனைகளை நடத்தும் போது, கூடுமானவரையில் மூன்றாவது நபர் தலையீடில்லாமல் பணம் பெறுபவரும் பணம் அளிப்பவரும் தங்களது
Part-2
Compounds-போன முறை நாம பார்த்த போது ஒவ்வொரு முறையும் பணம் இரு மடங்காக உயர்ந்து கொண்டே போச்சு.. ஆனா இது ரியாலிட்டி ல சாத்தியமா?என்றால் மிகப்பெரிய கேள்வி குறி தான்
ஆனா சின்ன வித்தியாசம் கூட (1%)நீண்ட கால திட்டத்திற்கு நீங்க பார்க்கும் போது மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும்
நீங்க mutual fund முதலீடு செய்வதற்கு முன்பு யாராவது expense ratio என்ன எவ்வளவு என்று பார்த்து இருக்கிறீங்களா?
AMFI (Association of mutual funds in India) இந்த நிறுவனம் அந்த expense ratio 2.5% மேல் இருக்க கூடாது என்று சொல்லி உள்ளனர்.
இதனால் என்ன இது எப்படி பாதிப்பை தரும் அதானே
கீழ ஒரு படம் கொடுத்து இருக்கேன் பாருங்க. இப்போ நாம 10000 முதலீடு செய்கிறோம் வெவ்வேறு mutual fund நிறுவனத்தில், வேறுபட்ட expense ratio அளவில்.
முதல் காலத்தில் 10 ஆயிரம் முதலிடானது 10% வட்டி அடிப்படையில் 20 ஆண்டிற்கு பின்னர் நமக்கு கொடுப்பது 67,275. எவ்வித கட்டணமும் இல்லாமல்
என்ஜினீயரிங் மேல் உள்ள அபிப்பிராயத்தை மாற்றவே இந்த பதிவு. 2010க்கு பின்பு Mechanical, Electrical படித்தவர்களுக்கு சரியான பாதை அமையவில்லை. அண்ணா பல்கலைக்கழகம், PSG போன்ற கல்லூரிகளில் படித்தவர்கள் கூட பாதிப்பேர் படித்த பின்பு மென்பொருள் துறையை தான் தேர்வு செய்கிறார்கள்.
ஆனால் ஒரு
சிலர் ஒரு படி மேலே சென்று என்னது என்ஜினீயரிங் ஆ? அதெல்லாம் ஸ்கோப் இல்லாத படிப்பு இப்போ. இப்போ லாம் அக்ரி க்கு தான் ஸ்கோப், CA க்கு தான் scope என்று எங்க அண்ணன் சொன்னாரு னு நீங்க கோவப்படுறது தெரியுது.
ஒரு காலத்துல ஊருக்கு ஒரு என்ஜினீயர் இருக்கிறதே பெரிய விஷயம் இப்போ வீட்டுக்கு
ஒரு என்ஜினீயர்ங்கிற நிலமைக்கு வந்துட்டோம். ஆனா அன்னைக்கு என்ஜினீயர்க்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இப்போ இருக்கா? வேலை இல்லாம சுத்திட்டு இருக்க அண்ணன்ங்களை பார்த்தும் நான் எப்படி என்ஜினீயரிங் படிக்கிறது? னு கேள்வி வருவது நியாயம் தான்.
அணு உலை இறுதி பாகம் - 10
ரியாக்டர் ஹாலிலிருந்து பெரும் தீயும் புகையும் மேல்நோக்கியவாறு சென்று கொண்டிருந்ததால அலெக்ஸாண்டருக்கு இன்னமும் ரியாக்டரின் உண்மை நிலை தெரியவில்லை.
அவர் சில உதவியாளர்களை அழைத்து ரியாக்டர் ஹாலுக்கு அருகே வேலை செய்து கொண்டிருந்தவர்களை தேடி மீட்க அனுப்பினார்.
உலையின் கதிரியக்கத்தை கண்காணிக்கும் பணியாளரை அழைத்து வரச்சொன்னார். அவரோ இடிபாடுகளில் சிக்கி மயக்கமுற்று கிடந்தார். அவரது முகத்தில் உள்ள தோல் முழுவதும் சிதைந்து எலும்புகள் தெரிந்தன. அவரை தூக்கும்போது உடலில் உள்ள தோல் கையோடு உரிந்து வந்தது. இருவர் சேர்ந்து அந்த மயங்கிய பணியாளரை
அம்புலன்ஸ் மூலம் பிரிப்யாட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன் பின்னர் மேலும் சிலரை அழைத்து உலை மையத்தை குளிர்விக்கும் பம்புகளை இயக்க ஏற்பாடு செய்ய சொன்னார். அந்த பம்புகளுக்கு செல்லும் மின்சார கேபிள்கள் கிழிந்து தொங்கி தீப்பொறியை கொட்டுவதாக அவர்கள் திரும்பி வந்து சொன்னார்கள்.