#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்
விடும் நேரம் வந்ததும் அரண்மணைக் காவலாளிகளை வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது, அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை என அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட துறவி மன்னரிடம் வந்து, ‘மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான் சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள். நீங்கள் நினைப்பது போல் அல்ல,
அந்த மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. அதை தெய்வீகப் பெண்மணி ஒருவரே சாப்பிடுவார். நீங்கள் சாப்பிட நினைத்தால் இந்த தேசம் அழிவுறும்’ என உரைத்து கிளம்பினார் துறவி. ஆனால் மன்னன் துறவி கூறியதை லட்சியம் செய்யவில்லை. தாரகன் என்பவர் வியாபார விஷயமாக
தன் மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார். அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி நந்தவனத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச்சென்றார். தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே விழுந்த மாங்கனியை எடுத்து சாப்பிட்டார். இதனை அறிந்த மற்ற பெண்கள் மன்னனின்
தண்டனை விவரத்தை எடுத்து கூறினர். அதற்குள் விஷயம் அறிந்த மன்னன் காவலாளிகளை விட்டு தாரணியை கைது செய்து குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனையை அறிவித்தான். ஒரு மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என் ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் என்று சூளூரைத்து உயிர் பிரிந்தாள். அவள் உடல் மயானம் எடுத்துச்
செல்லப்பட்டது. அவள் உருவத்தைப் போலவே மண்ணால் செய்து வைத்து, மாங்கனிக்காக இறந்த கன்னியை மாங்கன்னியாக மாசாணி அம்மனாக தொழுது வருகிறார்கள் மக்கள். 17 அடி சயனக் கோலத்தில் அருள் புரிகின்றாள் மாசாணியம்மன். அம்மனின் காலடியில் இருக்கும் அசுரன் மகுடாசுரன் என அழைக்கிறார்கள். மாசாணி அம்மனாக
சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது. பல்வேறு அவதாரங்களில் ஈஸ்வரி அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் மாசாணி அம்மன். இவர் உக்கிர தெய்வம் ஆவார். இங்கு வரும் பக்தர்கள், மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி
பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார்.
பில்லிசூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணி அம்மன வணங்கினால் நலம் பயக்கும் என்பது நம்பிக்கையாகும். மாசாணம் என்றால் மயானம் என்று பொருள். மயானத்தில் இருக்கும் அம்மன் நீதி தேவதையாக
பார்க்கப்படுகின்றார்.
ஸ்ரீ மாசாணியம்மன் திருவடிகளில் சரணம் 🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப்
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
#NEET#நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)
மீனாக்ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )
SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )
ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும்
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
மஹா பெரியவா தரிசன அனுபவங்களில் இருந்து-
காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. அதை மலைக்கோயில் என்று தான் சொல்வார்கள். 'ஹஸ்திகிரி'யில் வாசம் செய்பவர், 'ஹஸ்திகிரி நாதர்' இப்படி ஒரு பெயர் வரதருக்கு. வருஷத்தில், ஏறக்குறைய முந்நூறு நாட்கள் உற்சவம்
நடைபெறும். அந்தக் கோயிலில் உண்மையில் அவர் ராஜாதான். திருவிழா என்றால் அப்படி ஒரு கோலாகலம். காஞ்சிபுரத்தில் மூன்று #டை கள் ரொம்ப பிரசித்தம். நடை, வடை, குடை! #நடை
வரதராஜர் பல்லக்கு அல்லது வாகனத்தில் பவனி வரும்போது, அந்த நடை கண்கொள்ளாக் காட்சி. பல்லக்கு, வாகனம் தூக்குபவர்களுக்கு
அவ்வளவு பயிற்சி. யுத்த வீரர்கள் நடையில் மிடுக்கு இருப்பதைப் போல, பல்லக்குத் தூக்கிகள் நடையில் தெய்வீகமான அழகு, பார்த்துப் பார்த்து ரசிக்கத் தக்கதாக இருக்கும். #வடை
அடுத்தது காஞ்சிபுரம் மிளகு வடை. காஞ்சிபுரம் இட்லி, நாக்கு படைத்தவர்களுக்குப் பரமானந்த விருந்து. காஞ்சிபுரம் மிளகு