#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு Image
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
இருந்த சுபேதார் அஹமது பைக் என்பவனுக்கு ரசிக முராரியின் இந்த கிருஷ்ணபக்தி பிடிக்கவில்லை. மேலும் ரசிக முராரியின் பேச்சும் உபதேசமும் பாடல்களும் பாமரரையும் கிருஷ்ணர் பால் ஈர்த்து எங்கெங்கு பார்க்கிலும் கிருஷ்ண நாமாவே ஒலித்தது. இது சுபேதார் அஹமதுவுக்கு மேலும் எரிச்சலை தந்தது. அப்போது
அந்த ராஜ்ஜியத்தில் மதம் பிடித்த பட்டத்து யானை ஒன்று இருந்தது. எதற்கும் அடங்க மறுத்து அட்டகாசம் செய்து வந்தது. ஒரு நாள் ரசிக முராரியை சந்தித்த சுபேதார் அஹமது அவரிடம், மதம் பிடித்த எதற்கும் அடங்காத யானை ஒன்று என்னிடம் இருக்கிறது. அதனை அடக்கி உன் கிருஷ்ணனுக்கு உள்ள சக்தியை எனக்கு
காட்ட முடியுமா, ஒருவேளை இதில் நீ தோற்றால் உனக்கு கடுமையான தண்டனைகள் தரப்படும் என்றான். ரசிக முராரி சிறிது கூட தயங்காமல், இதோ இப்போதே புறப்படுவோம் உன் யானையை பார்க்க என்றார். யானையை அடைத்து வைத்திருக்கும் கொட்டிலுக்குள் தனியே சென்றார் ரசிக முராரி. உள்ளே சென்றதும் யானை இவரை நோக்கி
ஆவேசமாக வந்தது. ஸ்ரீ கிருஷ்ணரை மனதுக்குள் தியானித்தவர், யானையின் இரண்டு காதுகளிலும் அந்த மஹா மந்திரத்தை உபதேசித்தார். அடுத்து யாருமே எதிர்பார்க்க வகையில் யானையின் குணம் மாறத் துவங்கியது. ஆக்ரோஷமாக பிளிறிக்கொண்டு வந்த யானை பரம சாதுவாகிப் போனது. அத்தோடு மட்டுமல்லாமல், காண்போர் Image
வியக்கும் வண்ணம் ரசிக முராரியை மண்டியிட்டு வணங்கவும் செய்தது. இதை கண்ணெதிரே பார்த்த சுபேதார் அஹமது, ரசிக முராரியிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, தானும் பகவான் கிருஷ்ணரின் மகிமையை போற்றத் துவங்கினான். ஒருமுறை சுவாமி ரசிகானந்தா பூரி ஜகன்னாதரை தரிசிக்க ஆவலுடன் ரத யாத்திரை நாளில்
பூரியை அடைவதை நோக்கமாகக் கொண்டு தனது ஆசிரமத்திலிருந்து புறப்பட்டார். சில தாமதங்கள் காரணமாக அவர் சரியான நேரத்தில் பூரியை அடைய முடியாது என்பதை உணர்ந்தார். தேரில் ஜகன்னாதர் அமர்ந்திருப்பதை தரிசிப்பதை தவற விட்டுவிடக் கூடாது என்று தவித்து அவர் வரும் வரை காத்திருக்குமாறு வேண்டினார்.
இந்த நேரத்தில் தேர் ஏற்கனவே ஓடத் தொடங்கியிருந்தது. ஆனால் பக்தரின் பிரார்த்தனைகளைக் கேட்டு ஜகன்னாதர் தேரோட்டத்தை நிறுத்திவிட்டார். ஏன் என்று அங்கு கூடியிருந்தவர்களுக்குப் புரியவில்லை. அரசர் குதிரைகள் மற்றும் யானைகளை வைத்துத் தேர்களை இழுக்க வைத்தார். மேலும் ஏராளமான மக்கள் மூன்று
ரதங்களை இழுத்தனர். ஆனால் எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தவுடன், மன்னர் ஜகன்னாதரிடம் பிரார்த்தனை செய்தார். என் பக்தன் ரசிகநாதா பூரிக்கு மிக அருகில் இருக்கிறார், அவர் என் அருகில் வந்து என் தரிசனம் பெற்றவுடன் தேர் சாதாரணமாக உருளத் தொடங்கும் என்று பகவான் அவருக்கு உணர்த்தினார். அதேபோல
சுவாமி ரசிகானந்தா தேர்களை தொட்டபோது ​​அவை உருளத் தொடங்கின. கி.பி 1640 இல் நடந்த இந்த நிகழ்வு கோவிலின் வரலாற்று பதிவுகளில் உள்ளன. இவரின் சமாதி ஓடிஷாவின் பாலாசோரில் உள்ள கீராசோரா கோபிநாத் கோவில் வளாகத்தில் உள்ளது.
பாடல்: ஜெய க்ருஷ்ணா முகுந்தா முராரி- கேட்டு மகிழுங்கள்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

16 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப் Image
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
Read 7 tweets
16 Sep
#NEET #நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)

ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)

மீனாக்‌ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )

SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )

ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )

சவீதா பல் மமருத்துவ கல்லூரி - 77.
(எம்ஜிஆர்
Read 7 tweets
15 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா Image
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
Read 7 tweets
14 Sep
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும் Image
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
Read 8 tweets
6 Sep
#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்
Read 11 tweets
6 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
மஹா பெரியவா தரிசன அனுபவங்களில் இருந்து-
காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. அதை மலைக்கோயில் என்று தான் சொல்வார்கள். 'ஹஸ்திகிரி'யில் வாசம் செய்பவர், 'ஹஸ்திகிரி நாதர்' இப்படி ஒரு பெயர் வரதருக்கு. வருஷத்தில், ஏறக்குறைய முந்நூறு நாட்கள் உற்சவம்
நடைபெறும். அந்தக் கோயிலில் உண்மையில் அவர் ராஜாதான். திருவிழா என்றால் அப்படி ஒரு கோலாகலம். காஞ்சிபுரத்தில் மூன்று #டை கள் ரொம்ப பிரசித்தம். நடை, வடை, குடை!
#நடை
வரதராஜர் பல்லக்கு அல்லது வாகனத்தில் பவனி வரும்போது, அந்த நடை கண்கொள்ளாக் காட்சி. பல்லக்கு, வாகனம் தூக்குபவர்களுக்கு
அவ்வளவு பயிற்சி. யுத்த வீரர்கள் நடையில் மிடுக்கு இருப்பதைப் போல, பல்லக்குத் தூக்கிகள் நடையில் தெய்வீகமான அழகு, பார்த்துப் பார்த்து ரசிக்கத் தக்கதாக இருக்கும்.
#வடை
அடுத்தது காஞ்சிபுரம் மிளகு வடை. காஞ்சிபுரம் இட்லி, நாக்கு படைத்தவர்களுக்குப் பரமானந்த விருந்து. காஞ்சிபுரம் மிளகு
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(