அப்போது ஒரு ஞாயிறு அன்று மதிய நேரத்தில் சலூன் கடைக்கு சென்று எனது முடி திருத்த வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது ஒரு சில ஆண் பெண் நண்பர்கள் வீட்டு படிகளில் அமர்ந்திருந்தனர்.
உன்னை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம் என்றார்கள். அதற்கு நான் அலைபேசியை சைலண்ட் மோடில் வைத்திருந்தேன் என்று விளக்கினேன்.
நான் என்னவென்று கேட்டதற்கு "பாரில் சென்று குடிப்பதை விட இன்று உன் வீட்டில் குடிக்கலாமா? பிளீஸ்" என்றார்கள்.
வந்த நண்பர்களில் சிலரை தான் தெரியும் என்றாலும் சரியென அனைவரையும் முதலில் வரவேற்று வீட்டில் அமர சொன்னேன்.
எனக்கு பழக்கமில்லாத காரியம் என்பதால் முதலில் அப்பாவை அலைபேசியில் அழைத்து வீட்டில் சரக்கடிக்க நண்பர்கள் வந்துள்ளார்கள் என்பதை தெரியப்படுத்தினேன்.
பிறகு நண்பர்கள் பாரின் சரக்குகளை வாங்கி வந்தனர். வீட்டில் இருந்த சமையல்காரப் பெண்ணை சில ஸ்நாக்ஸ் செய்ய சொன்னேன். நேரமாக ஆக நண்பருக்கு நண்பர் என்று மேலும் சிலர் வீட்டிற்கு வந்தனர். ஒரு கட்டத்தில் 15 க்கும் மேல் இருந்தனர்.
என்னுடைய Bose ஸ்பீக்கரில் மான் கராத்தே பாடல்கள் ஒலித்தது.
அபார்ட்மெண்டில் "யாரோ" போலீசாருக்கு தகவல் சொல்லி உள்ளனர். தகவல் அறிந்த சிறிது நேரத்தில் காவல்துறையினர் வீட்டுக்கு வந்து வெகு நேரம் கதவை தட்டி உள்ளனர்.
எங்களுக்கு Bose பாட்டு சத்தத்தில் அவர்கள் தட்டியது சுத்தமாக கேட்கவில்லை.
கீழே இருந்த நண்பர் இந்த சத்தத்தை கேட்டு மேலே என்னவென்று பார்க்க வந்துள்ளார்.
அப்போது இந்த வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க என்று காவலர்கள் கேட்க நண்பரும் என்னை பற்றி சொல்ல பிறகு அவர்கள் சொல்லியதால் நண்பர் என்னை அலைபேசியில் அழைத்தார்.
நான் சட்டென கதவை திறந்தேன்.
உள்ளே வந்த காவல்துறையினர் என்னப்பா இதான் நம் நாடு "வல்லரசு" ஆவதற்கான லட்சணமா என்று வினவ நாங்கள் அமைதியாக நின்றோம்.
எங்கள் பெயரையும் முகவரியையும் வாங்கிய பின் இனிமேல் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்து சுமார் 30 நிமிடங்கள் கழித்து சென்றனர்.
பின்னர் நான் அப்பாவிடம் அலைபேசியில் தகவலை பரிமாறிக் கொண்டேன். விபரங்களை கேட்ட பிறகு தான் முதல் வேலையாக ஓனரிடம் பேசி விடுகிறேன் என்றார்.
இதற்கிடையே, ஓனரை தொடர்பு கொண்டு காவல்துறையினரும் அட்வைஸ் செய்துள்ளனர்.
அப்பா இது குறித்து அழைத்து பேசியதும் ஓனருக்கு ஒரே ஆச்சரியம்!
பிறகு ஓனரும் அவரது மனைவியும் மாலை நேரத்தில் வீட்டிற்கு வருகை புரிந்தனர்.
வீட்டில் ஆண்களும் பெண்களும் தண்ணி அடிப்பது குற்றமில்லை ஆனால் வீட்டிலிருந்து அதிக சத்தம் வருவதாக காவல் நிலையத்தில் புகார் தரப்பட்ட காரணத்தால் தான் காவல்துறையினர் வந்ததாக கூறினர்.
இது நீங்கள் வீட்டிற்கு தெரியாமல் செய்த காரியமாக இருக்குமோ என்று எண்ணி நான் உங்கள் அப்பாவை அழைத்து பேசவில்லை. ஆனால் உங்கள் அப்பாவே என்னை அழைத்து விபரங்களை பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் தங்கள் வீட்டில் நடந்த சிரமத்திற்கு வருத்தமும் தெரிவித்து கொண்டார்.
இது வருத்தத்திற்குரியது அல்ல என்று தான் சொன்னதாக ஓனர் கூறினார்.
You have done a right thing by discussing the subject before the incident and after the incident with your father via phone. Don't worry, keep enjoying yourself. Live the life என்றார் அவர்.
கிளம்பும் நேரத்தில் "இந்த வயதில் இதெல்லாம் சகஜமப்பா ஆனால் அடுத்த முறை பாட்டு சத்தம் மட்டும் கம்மியாக வைத்துக் கொண்டு மகிழுங்கள்" என்றார் ஓனர் மனைவி.
அன்று நடந்த தவறை நான் மறுக்கவில்லை.
ஆனால்
Be frank when there is a need.
Face the issue's and come back.
// பின் குறிப்பு //
*இச்சம்பவம் நடந்த அன்று நானும் நண்பர்களும் காவல்துறையினர் விசாரித்த போது மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டோம்.
*உங்களுக்கும் இப்படி நடந்தால் எக்காரணத்தைக் கொண்டும் எகிறி பேசாதீர்கள் ஏனெனில் அது தவறாக தான் போய் முடியும்.
*வீட்டில் ஆண்கள் பெண்கள் பலர் இருந்ததால் காவல்துறையினர் ஏம்பா இதெல்லாம் சரியா? யாராவது ஏதாவது என்னமாவது என்று வினவியது நன்கு நினைவில் உள்ளது. அது சரியான கேள்வி தான்.
*Bose ஸ்பீக்கர் என்பதால் சத்தம் கூட வைத்த போது அது எங்களுக்கு மட்டுமல்ல வெளியில் பலருக்கும் கேட்டுள்ளது போல. 😷
*அன்று பலரும் ஹாட் குடித்து இருந்தனர் ஆனால் நான் Heineken பீர் தான் குடித்தேன் அதனால் காவல்துறையினரிடம் தெளிவாக பேச முடிந்தது. 😉
*எனக்கு பார்ட்டி என்றால் என்றுமே விதவிதமான சாப்பாடு தான் ஆனால் அன்று நண்பர்கள் வீட்டில் குடிக்க இறைஞ்சியதால் நானும் சரியென சம்மதித்தேன். 😃
*ஆனால் அந்த சம்மதம் எங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை பெற்று தந்தது.
*முன் - பின் வீட்டில் பேசியதும், ஓனரின் புரிதலும், காவல்துறையினரின் அறிவுரையும் எனக்கு பலமாக அமைந்தது.
// Moral of the Story //
If you need heay Sound, go to Pub instead of disturbing residents. 🙏
*heavy (typo).
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
// World's Most Notorious Crime Sector & Unorganised Cash Flow Business are the same //
1. Narcotics
2. Stocks
3. Sex
# Narcotics are defined as a substance which is used to treat Pain.
# Unorganized Narcotics = Unmonitored usage of Powder, Injection, etc.
# Stocks are defined as a supply of something.
# Unorganized Stocks = Unbilled movements like Offshore, Benami, Trading, etc.
// Points to Remember //
*Most of the international terrorist organizations purchase their Weapon from the arms dealer (Like Adnan Khashoggi) to fulfill their needs and way of working.
*So, Weapon Business doesn't fall under unorganised category.
# +2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது.
# +2 முடித்த மாணவிகளுக்கு விடுதி, உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் வேலை, தனித் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பு, கண் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையில் துணை நிற்கும் வாய்ப்பு.
A - கல்வியிலும் வேலையிலும் அனைவரும் முதல் ரேங்க் தான் வரணும் என்று கல்வியாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
B - கடைசி ரேங்க் மாணவன் இருப்பதால் தானே முதல் ரேங்க் மாணவனுக்கு புகழ் சேர்க்கிறது என்றேன்.
A - அப்ப நீ என்ன கடைசி ரேங்க் எடுத்தா புளாங்கிதம் அடைவியா என்று கேட்டார்.
B - நான் அப்படி பொருள்பட சொல்லல சார் ஆனால் யதார்த்தத்தை இவ்வுலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்று வினவினேன்.
A - எத யதார்த்தம் என்று நீ சொல்ற? ரஜினி படத்துக்கு FDFS போற மாதிரி தான் கல்வியிலும் என்றார்.
B - ரேங்க் நோக்கி குதிரைக்கு லாடம் கட்டுன மாதிரி பயணிக்க வேண்டாம். ரேங்க்கை காட்டிலும் வளரும் சமூகத்திற்காக இங்கு பேசி மாற்ற வேண்டியது நிறைய இருக்கு. கல்வி ரேங்க்கையை புத்திசாலித்தனத்துடன் இணைத்து குழப்பக்கூடாது. நம் நாட்டில் ஆராய்ச்சி சார்ந்த கல்வி வளர வேண்டும் என்றேன்.