"கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது."

இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய‌ தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.!

"போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்" Image
"கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்"

"உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்"

"மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
உலகம் எங்கும் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்"

"மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம்.
இன்னும் மேலே போனாலும் போகலாம்"

"ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஓர் அந்தர் வெயிட்டுக்கு வரலாம். பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்கு பதில் மின்சார சக்தி உபயோகப்படுத்தப் படலாம்/விசை சேகரிப்பிலேயே ஓட்டப்படலாம்"

-(பெரியார் நாளைய உலகம், முதல் பதிப்பு 1944, பெரியார் புத்தக நிலையம்).
இதைப் படித்தவுடன் வியப்பாக உள்ளதா?

நாளைய உலகில் சமூக வளர்ச்சி எப்படி இருக்கும் என்று மேற்கண்ட கருத்துகளை தந்தை பெரியார் எழுதிய ஆண்டு 1944.

ஏறத்தாழ இன்றைய நவீன நுட்ப வளர்ச்சி பெற்ற ஆண்டில் நமக்கு கிடைத்திருக்கும் செல் போன், இன்டர்நெட், டெலி கம்யூனிகேசன், இன்னும் சொல்ல வேண்டுமா.?
நவீன கால வளர்ச்சி, பேட்டரியில் இயங்கும் ஊர்திகள், நேனோ டெக்னாலஜி என இவைபற்றிய இந்திய சமூக வெளியில் யாருமே யோசித்திருக்காத கால கட்டங்களில் 73 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இந்த அரக்கரால் யோசிக்க முடிந்தது.?

#பெரியார் தான் வாழ்ந்த காலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.
நிரூபிக்கப்பட்ட அறிவியல் நுட்ப முறைகள் பற்றி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அது வரை நம்பப்பட்டு வந்த புராதன காலத்து பழங் கதைகளை தன் கைத்தடியால் உடைத்தார்.

நான் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன், என மக்களிடம் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை அகற்றவே ஊர் ஊராக சுற்றித் திரிந்தார்.
மேம்படுத்தப்பட்ட அறிவியல் நுட்பத்தின் வாயிலாக மட்டுமே நாளைய உலகம் அமையும் என்று நம்பினார்.

அது பணக்காரன், ஏழை என்ற பேதமில்லாமல் அனைவருக்குமான ஒரு நவீன உலகமாக இருக்கும் என்ற ஒரு காரணத்திற்காகவே பழமை வாதத்தை பெரியார் அவர்கள் அறவே வெறுத்தார். அவைகளை எதிர்க்கப் போராடினார்.
அதனால் தான் 75 ஆண்டுகளுக்கு பிறகு தம் சமூகத்திற்கு கிடைக்கப் போகும் அறிவியல் நுட்பங்களை அவரால் தன் காலத்தில் கணிக்க முடிந்திருக்கிறது.

எப்போதும் எளிய மக்களின் பக்கம் மட்டுமே நின்று தொடர்ந்து பேசிய‌ அவரை நாங்கள் பகுத்தறிவு பகலவன் என்றும், ஈரோட்டு தீர்க்க தரிசி என்றழைக்கிறோம்.
#பெரியார் அவர்களே எங்கள் சமூக நீதிக்கான விதை.

மக்களின் தீர்க்கதரிசி,
எங்கள் ஈரோட்டு பேரரக்கன், தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று.

வாழ்க பெரியார் புகழ்.!
வாழ்க திராவிடம்.!!
வாழ்க தமிழ்நாடு.!!!

இசை இன்பன் என்கிற அன்பன் பதிவு.
படித்ததில் பிடித்தது.!

#HBDPeriyar
#HBDPeriyar143

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with விஷ்வா I Viswa

விஷ்வா I Viswa Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chennaiviswa2

19 Sep
1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது.

இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை.

தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது.

அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன.
எங்கே சிக்கல் என்றுத் தெரியவில்லை.
ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள், நின்று கொண்டிருந்த ஒவ்வொரு காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாகி விட்டது.!"
முதலில் தீ பரவியது.
பிறகு வெள்ளம்.
இப்போதோ பூகம்பம்.

காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே, என்ன தான் செய்வது? என்று மனிதர் பொரிந்து தள்ளி விட்டார்.

அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டி இதே கேள்வியைக் கேட்டார்.
Read 10 tweets
18 Sep
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது.

சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.
குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது.

மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்றார்கள்.
ஒவ்வொரு முறையும் அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது.

அவர்களில் ஒருவர் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவர்.

மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவரோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும்
பொருட்படுத்தவேயில்லை.
Read 11 tweets
17 Sep
1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்.!"
இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்த போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்..!
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர். அவருக்கா இப்படி ஒரு சிரமம்.?
2) ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.

அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! ஒரு ஹெல்ப் பண்ணு எனக்கு.
உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே.!'
எவ்வளவு பெரிய நடிகர்!
MGR, சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?
Read 10 tweets
31 Aug
அந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான் தோன்றுகிறது அவருக்கு தான் அவசரப்பட்டு விட்டோமோ ‌என்று.

'வாழ்க்கையில் அவ்வளவு இலகுவாக யாருக்கும்‌ கிடைத்து விடாத பெரும்‌ வாய்ப்பு தங்கத்தட்டில் வைத்துத் தனக்குத் தரப்பட இருக்கையில் அதைத் தானே தட்டிப் பறித்துத் தள்ளி விட்டு விட்டோமோ?'
லேசாக உறுத்தத் தொடங்குகிறது அவருக்கு.

மீண்டும் தொலைபேசியில் அழைத்துத் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம்.

விசயம் வேறு ஒன்றுமில்லை. இதுதான்.

சட்டப்படிப்பை முறையாக முடித்து விட்ட அவருக்கு திங்கட்கிழமை காலையில் 'வைவா' தேர்வு நடைபெற இருக்கிறது.
அந்தத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும்போதுதான் ஞாயிறு காலையில் - அதாவது தேர்வுக்கு முந்தைய நாளில் - அந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.

"நாளைக் காலை சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது" என்பதே அதன் சாரம்.
Read 15 tweets
31 Aug
1903-ஆம் ஆண்டு.
இடம் லண்டன்.

மேடை நாடகங்கள் மிகப் பிரபலமாக இருந்த காலகட்டம் அது.

மாலை நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவழிக்க நாடகக் கொட்டகைகளுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள்.

லண்டனில் ஏராளமான நாடக குழுக்கள் ஓர் அரங்கில் "ஷெர்லாக் ஹோம்ஸ்' நாடகத்துக்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது.
தினசரி ஒரு சிறுவன் ஒத்திகைக்கு வந்து கொண்டிருந்தான்.

இறுதிக்கட்ட ஒத்திகை அன்று.
மறுநாள் நாடகம்.

'பில்லி' என்ற வேலைக்காரன் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு அன்று காய்ச்சல் என்று தகவல் வந்தது.

பாத்திரம் வேலைக்காரன் என்றாலும், நிறைய வசனம் அந்த கேரக்டருக்கு.
பேச வேண்டிய முக்கியமான பாத்திரம்.

தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

புதிதாக யாரையும் ஏற்பாடு செய்ய முடியாத நிலை.

வழக்கமாக அந்தச் சிறுவனைப் பார்த்த இயக்குநர் "டேய் தம்பி நடிக்கிறாயா?' என்று கேட்டார். காதில் தேனாகப் பாய்ந்தது அந்தக் கேள்வி.
Read 18 tweets
29 Aug
ஒரு நாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான்.

அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார்.

பின்னாலேயே வந்து திட்டி ஓய்ந்தவனுக்கு அவர் புன்னகை என்னவோ செய்தது.
சகிக்க முடியாததாகவும், வியப்பைத் தருவதாகவும் இருந்தது.

என்ன மனிதர் இவர் என்று வியந்தவன் "ஏனப்பா, இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான்.

கௌதமர் அவன் சொன்னதை அமைதியாகக் கேட்டார். திரும்பவும் புன்னகை மலர்ந்தது அவர் முகத்தில்.
"ஐயா, ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் யாருக்குச் சொந்தம்?" என்று கேட்டார்.

"கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத் திட்டியவன் பதிலாக அவர் கேட்ட கேள்விக்கு.

திரும்பவும் புன்னகை புத்தரிடத்தில்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(