1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது.
இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை.
தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது.
அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன.
எங்கே சிக்கல் என்றுத் தெரியவில்லை.
ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள், நின்று கொண்டிருந்த ஒவ்வொரு காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாகி விட்டது.!"
முதலில் தீ பரவியது.
பிறகு வெள்ளம்.
இப்போதோ பூகம்பம்.
காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே, என்ன தான் செய்வது? என்று மனிதர் பொரிந்து தள்ளி விட்டார்.
அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டி இதே கேள்வியைக் கேட்டார்.
அந்தக் காரோட்டி சிரித்துக் கொண்டே சொன்னார்.
"காலையில் ஆறு மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பி விட்டேன்.
ஆனால் இந்த போக்குவரத்து நெரிசலில் நான் வேலைக்குப் போய் சேர கண்டிப்பாய் தாமதம் ஆகும்.
ஆனால் ஆறு மணிக்கே கிளம்பி விட்ட நான் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது இல்லையா.?
அதனால் என்னை என் முதலாளி திட்ட முடியாது.
அவருக்கும் போக்குவரத்து நெரிசல் தெரியும்.
நான் கிளம்பும் போதே படிக்க புத்தகம், கேட்க பாட்டு கேசட்டுகள், ப்ளாஸ்கில் காபி எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருப்பதால் எனக்கு பிரச்னையில்லை.
போய் சேர்கிற போது நான் போய் சேர்ந்தால் போதும்.
அதுவரை பாட்டையும், புத்தகத்தையும் ரசிக்கலாம்." என்றார் அமைதியாக.
பல பேர் கோபத்துடனும், எரிச்சலுடனும் அங்கே இருக்க, அந்தத் தெருவின் போக்குவரத்து நெரிசலில் கூட அந்த மனிதர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்த விதத்தை சிந்தித்துப் பார்த்தால் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா.?
நிலநடுக்கமும், அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாதவை.
ஆத்திரப்படுவதாலோ, புலம்புவதாலோ அவற்றை மாற்றி விட முடியாது.
அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு அதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்து அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்த மனிதர் நிச்சயம் வேற லெவல் தானே.?
எவ்வளவு பெரிய பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார் பாருங்கள்.
காத்திருக்கும் அந்த நேரத்தைக் கூட அவருக்கு மட்டும் பயனுள்ளதாய் மாற்றிக் கொண்டது புத்திசாலித்தனமே அல்லவா?
நடப்பதை எப்படிக் காண்பது என்பதையும், எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது என்பதையும் நாம் மட்டுமே தீர்மானிக்கிறோம்.
மேலே குறிப்பிட்ட காரோட்டி நிச்சயம் பெரிய மேதை அல்ல.
வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறும் சிந்தனையாளர் போன்ற வகையிலும் இடம் பெறுபவர் அல்ல.
ஆனால் அவர் நமக்கெல்லாம் கற்றுக் கொடுக்கும் இந்தப் பாடம் நிச்சயம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
நம் மகிழ்ச்சிக்கான மகத்தான ரகசியம் அல்லவா.?
நீதி: "நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் நமக்கான பாடம் ஒன்று நிச்சயம் இருக்கும்.
அதில் இருந்து நல்லவைகளை கற்றுக் கொள்வதும், தேவையில்லாததை விட்டொழிவதும் அவரவர்கள் உத்வேகத்தைப் பொறுத்தே என்றால் அது மிகையாகாது.!"
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது.
சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.
குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது.
மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்றார்கள்.
ஒவ்வொரு முறையும் அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது.
அவர்களில் ஒருவர் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவர்.
மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவரோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும்
பொருட்படுத்தவேயில்லை.
"கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது."
இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.!
"போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்"
"கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்"
"உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்"
"மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
உலகம் எங்கும் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்"
"மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம்.
1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்.!"
இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்த போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்..!
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர். அவருக்கா இப்படி ஒரு சிரமம்.?
2) ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.
அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! ஒரு ஹெல்ப் பண்ணு எனக்கு.
உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே.!'
எவ்வளவு பெரிய நடிகர்!
MGR, சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?
அந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான் தோன்றுகிறது அவருக்கு தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று.
'வாழ்க்கையில் அவ்வளவு இலகுவாக யாருக்கும் கிடைத்து விடாத பெரும் வாய்ப்பு தங்கத்தட்டில் வைத்துத் தனக்குத் தரப்பட இருக்கையில் அதைத் தானே தட்டிப் பறித்துத் தள்ளி விட்டு விட்டோமோ?'
லேசாக உறுத்தத் தொடங்குகிறது அவருக்கு.
மீண்டும் தொலைபேசியில் அழைத்துத் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம்.
விசயம் வேறு ஒன்றுமில்லை. இதுதான்.
சட்டப்படிப்பை முறையாக முடித்து விட்ட அவருக்கு திங்கட்கிழமை காலையில் 'வைவா' தேர்வு நடைபெற இருக்கிறது.
அந்தத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும்போதுதான் ஞாயிறு காலையில் - அதாவது தேர்வுக்கு முந்தைய நாளில் - அந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.
"நாளைக் காலை சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது" என்பதே அதன் சாரம்.