சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது.
சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.
குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது.
மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்றார்கள்.
ஒவ்வொரு முறையும் அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது.
அவர்களில் ஒருவர் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவர்.
மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவரோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும்
பொருட்படுத்தவேயில்லை.
ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தார்.
எனக்கு முதலில் தோன்றியது அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவரோ என்று தான்.
ஏனென்றால் வேறு யாரும் அந்த வெயிலில், அந்த சூழ்நிலையில் அப்படிப் பாடிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் குரல் சாதாரணமாக இருக்கிறதே.?
மற்றவர்கள் நம்மை என்ன நினைப்பார்கள்.?
போன்ற சராசரி மனிதர்களுக்கு உண்டான கூச்சமெல்லாம் இல்லாமல் அவர் பணி செய்த விதம் வித்தியாசமாக இருந்தது.
அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, பாடலில் திளைத்த விதம் எல்லாம் என்னை சிந்திக்க வைத்தது.
அடிக்கும் வெயிலையோ, செய்யும் தொழிலையோ அவர் நிச்சயம் மாற்ற முடியாது.
ஆனால் செய்யும் விதத்தையும், செய்யும் மனநிலையையும் அவர் தேர்ந்தெடுக்க முடியும் அல்லவா?
அவர் அதைத் தான் செய்து கொண்டிருந்தார்.
மற்றவர்கள் வெயிலை உணர்ந்த நேரத்தில் அவர் தனக்குத் தெரிந்த பாடல்களின் இனிமையை உணர்ந்தார்.
அவர்களுக்கு வேலை நேரம் அவருக்கு பாட்டு நேரம் ஆகியது.?
அதே நேரத்தில் அவர் செய்கிற வேலையும் நடந்து கொண்டிருந்தது.
முதலில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தோன்றியது போய், அவர் தான் மனநிலை சரியானவர் என்று எனக்கு இப்போது தோன்றியது.
லாரியும் அந்தப் பணியாளர்களும் சென்று நிறைய நேரம் என்னை சிந்திக்க வைத்தது அந்த சம்பவம்.
கல்வியறிவில்லா விட்டாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் அந்த அசாதாரணமான அறிவு அவரிடம் இருந்ததாகத் தோன்றியது.
நாம் பல நிலைகளில் பலதரப்பட்ட ஆசிரியர்களிடமிருந்து
பாடங்கள் பெற்றோம். பெறுகிறோம். பெறுவோம்.
ஏன் அறிவு சார்ந்த நூல்களில் இருந்து கூட பாடங்கள் பெறுகிறோம்.
சில சமயங்களில் தெருக்களில் கூட சில பாடங்களை, அறிஞர்களல்லாத சாதாரண மனிதர்களிடமிருந்து பெறும் சந்தர்ப்பங்கள் உண்டு.
அதற்கு சிறந்த உதாரணம், நாம் மேலே கண்ட அந்தச் சாதாரண குப்பைகளை அள்ளும் தொழிலாளி.
சாதாரண மனிதர்களிடமிருந்து நமக்குக் கிடைக்கும் பாடங்கள் வேற லெவல் என்று சொல்லலாம்.
பக்கம் பக்கமாக படிக்கும் புத்தகங்களில் இருந்தும், மணிக்கணக்கில் பேசும் அறிஞர்களிடமிருந்தும் கிடைக்கும் பாடங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த மாதிரி எனிய மனிதர்களிடமிருந்து கிடைக்கும் பல பாடங்கள்.
இன்னும் சொல்லப் போனால் அவை மிக எளிமையாகவும் ஆழமாகவும் நம் மனதில் பதிந்து விடுகிறது.
நீதி: "உலகில் இயற்கை நிகழ்வுகளை நாம் மாற்ற முடியாது.
அழுவதாலோ, புலம்புவதாலோ, அப்படி இருந்திருக்கலாம் என்று நினைப்பதாலோ எதுவும் மாறிவிடப் போவதில்லை இங்கு.
ஆனால் அவைகளில் இருந்து என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது நம்மிடமே இருக்கிறது.!"
1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது.
இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை.
தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது.
அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன.
எங்கே சிக்கல் என்றுத் தெரியவில்லை.
ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள், நின்று கொண்டிருந்த ஒவ்வொரு காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாகி விட்டது.!"
முதலில் தீ பரவியது.
பிறகு வெள்ளம்.
இப்போதோ பூகம்பம்.
காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே, என்ன தான் செய்வது? என்று மனிதர் பொரிந்து தள்ளி விட்டார்.
அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டி இதே கேள்வியைக் கேட்டார்.
"கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது."
இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.!
"போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்"
"கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்"
"உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்"
"மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
உலகம் எங்கும் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்"
"மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம்.
1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்.!"
இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்த போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்..!
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர். அவருக்கா இப்படி ஒரு சிரமம்.?
2) ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.
அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! ஒரு ஹெல்ப் பண்ணு எனக்கு.
உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே.!'
எவ்வளவு பெரிய நடிகர்!
MGR, சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?
அந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான் தோன்றுகிறது அவருக்கு தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று.
'வாழ்க்கையில் அவ்வளவு இலகுவாக யாருக்கும் கிடைத்து விடாத பெரும் வாய்ப்பு தங்கத்தட்டில் வைத்துத் தனக்குத் தரப்பட இருக்கையில் அதைத் தானே தட்டிப் பறித்துத் தள்ளி விட்டு விட்டோமோ?'
லேசாக உறுத்தத் தொடங்குகிறது அவருக்கு.
மீண்டும் தொலைபேசியில் அழைத்துத் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம்.
விசயம் வேறு ஒன்றுமில்லை. இதுதான்.
சட்டப்படிப்பை முறையாக முடித்து விட்ட அவருக்கு திங்கட்கிழமை காலையில் 'வைவா' தேர்வு நடைபெற இருக்கிறது.
அந்தத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும்போதுதான் ஞாயிறு காலையில் - அதாவது தேர்வுக்கு முந்தைய நாளில் - அந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.
"நாளைக் காலை சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது" என்பதே அதன் சாரம்.