ஒரு முறை ரமண மகரிஷியை ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள் அருளுரை வழங்க வேண்டி.
விழாவில் அனைவருக்கும் அறுசுவை உணவு தயாராகி இருந்தது.
ரமணரின் அருளுரை முடிந்து உணவு இடைவேளை வந்தது.
பெரும் திரளான கூட்டம். எல்லாம் போக பிச்சைக்காரர்கள் வேறு கூட்டமாக உணவருந்த வந்து விட்டனர் அங்கே.!
நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு பெரிய தர்ம சங்கடமாகிவிட்டது.
என்ன செய்வது என்றுத் தெரியவில்லை.
ஒரு முடிவுக்கு வந்து பிச்சைக்காரர்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்று மைக்கில் அறிவிப்பு செய்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்.
மிகவும் சிரமப்பட்டு பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ரமணமகரிஷிக்கு உணவு பரிமாறிவிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மகரிஷியைத் தேடிக்கொண்டிருந்தனர்.
இறுதியில் "ரமணமகரிஷி பிச்சைக்காரர்களுடன்" வெளியே அமர்ந்திருந்தார்.!
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரே அதிர்ச்சி. பதைபதைத்துப் போனார்கள். ரமணரை உள்ளே வந்து உணவருந்த வேண்டினார்கள்.
ரமண மகரிஷி சொன்னார், "நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான்.
பலர் இறைவனிடம் பிச்சை கேட்கிறோம்.
சிலர் தீர்க்க ஆயுள் வேண்டுமென்பார்.
ஒரு சிலர் சம்பத்துக்கள் வேண்டுமென்பர்.
ஒரு சிலர் புத்திர பாக்கியம் வேண்டுவர்.
ஒரு சிலர் நிம்மதி வேண்டுவர்.
அதனால் நானும் ஒரு பிச்சைக்காரனே" என்றார்.
நிகழ்ச்சிக்கு அழைத்தவர் தனது தவறை உணர்ந்து அனைவருக்கும் ஒரே பந்தி போட்டு உணவைப் பரிமாறினார். விழா இனிதே முடிந்தது.
1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது.
இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை.
தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது.
அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன.
எங்கே சிக்கல் என்றுத் தெரியவில்லை.
ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள், நின்று கொண்டிருந்த ஒவ்வொரு காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாகி விட்டது.!"
முதலில் தீ பரவியது.
பிறகு வெள்ளம்.
இப்போதோ பூகம்பம்.
காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே, என்ன தான் செய்வது? என்று மனிதர் பொரிந்து தள்ளி விட்டார்.
அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டி இதே கேள்வியைக் கேட்டார்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது.
சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.
குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது.
மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்றார்கள்.
ஒவ்வொரு முறையும் அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது.
அவர்களில் ஒருவர் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவர்.
மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவரோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும்
பொருட்படுத்தவேயில்லை.
"கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது."
இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.!
"போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்"
"கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்"
"உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்"
"மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
உலகம் எங்கும் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்"
"மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம்.
1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்.!"
இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்த போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்..!
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர். அவருக்கா இப்படி ஒரு சிரமம்.?
2) ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.
அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! ஒரு ஹெல்ப் பண்ணு எனக்கு.
உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே.!'
எவ்வளவு பெரிய நடிகர்!
MGR, சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?