அவர் காலையில் அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.
போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக்கொண்டே சென்று மெக்கானிக் கடையில் பழுது பார்த்து புறப்பட்டார்.
அதனால் ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்குச் சென்றார்.
தாமதமாக வேலைக்கு வந்ததால் அவருடைய முதலாளி அவரை கடுமையாக திட்டினார்.
அதனால் மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.
சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம்பட்டது.
இது என்னடா நமக்கு இன்று வந்த சோதனை.?
என்று நினைத்தபடியே தன் காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார்.
சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது.
என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே.? என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் விரைவாக முடித்தார்.
முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.
ஆனால் அவருடைய வண்டி மீண்டும் பழுதானது.
இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி வீட்டிற்கு போவாய்.? வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார் அந்த தச்சர்.
போகும் வழியில், பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு போல என்று முதலாளி ஆறுதல் சொல்லிக் கொண்டே அழைத்துச் சென்றார்.
தச்சர் வீடு வந்ததும் தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா என்று முதலாளி சொன்னார். வீட்டுக்குள் வாங்க முதலாளி என்று அவரை உள்ளே அழைத்தார்.
முதலாளி அவரை தொடர்ந்தார்.
தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார்.
முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.
தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது.
குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.
தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளிக்கு விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். தேநீர் போடச் சொன்னார் தனக்கும் அவருக்கும்.
காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி நிஜமாகவே வியந்தார்.
தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.
தண்ணீர் மற்றும் தேநீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.
வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், எப்படி உன்னால் வீட்டில் இப்படி ஆனந்தமாக இருக்க முடிகிறது.?
இந்த மரத்தை தொட்டுவிட்டு போனாயே? ஏன்?
அப்படி நீ இந்த மரத்தை தொட்டு சிறிது நேரம் நின்று போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்று கேட்டார்.
அதற்கு தச்சர் முதலாளியிடம், இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தை தொட்டு விடுவேன்.
அப்படி என் பாரத்தை இந்த மரத்திடம் இறக்கி வைத்து விட்டே வீட்டிற்குள் செல்வேன்.
வேலை செய்யும் இடத்தில், வெளியில் நமக்கெல்லாம் பொதுவாக ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும்.
அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துக்கொண்டு நான் போக மாட்டேன். இன்று எனக்கு நடந்த சம்பவங்களையே எடுத்துக் கொள்வோம்.?
காலையில் என் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்.?
நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்.?
தினமும் நான் மாலை வந்ததும் முதலில் இந்த மரத்திடம்தான் வருவேன்.
என் பிரச்சனைகளை இறக்கி வைத்து விடுவேன். எந்தக் காரணம் கொண்டும் வீட்டில் அவைகள் எதிரொலிக்க விடவே மாட்டேன் என்றார்.
முதலாளிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது அந்தத் தொழிலாளியின் தீர்க்கமான சிந்தனையைப் பார்த்து.
நீதி: "எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை மற்றவர்களின் மீது முக்கியமாக நம் குடும்ப உறுப்பினர்களிடம் நாம் ஒரு போதும் திணிக்கக் கூடாது.
நம்முடைய அலுவலக மற்றும் பொதுப் பிரச்சனைகளை நாம் மட்டுமே எதிர்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்!"
ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன், தன்னை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக ஒரு குடிமகனைக் கைது செய்து "மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில்" அடைக்கும்படி கட்டளையிட்டான்.
நிரபராதியான அந்த குடிமகன் சிறையில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான்.
"நான் நிரபராதி அரசே.!"
இந்த நாட்டில் கருத்து சொன்னது ஒரு குற்றமா.?
ஏன் என்னைக் கைது செய்தீர்கள்? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள்?
என்று உரக்கக் கதறினான்.
பின்னர் அவனை "ஒரு மீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில்" அடைக்கும்படி கட்டளை வந்தது.
மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான் அந்தக் குடிமகன்.
ஆனால் இம்முறை "நான் நிரபராதி" என்ற வாதத்தை மறந்து விட்டான்.
"இது என்ன கொடுமை.! இந்தச் சிறையில் எப்படி இருப்பது.? உறங்குவது.? அமர்ந்து கொண்டுதானே உறங்க முடியும்.? இது உங்களுக்கே தப்பாகத் தெரியவில்லையா.?" எனக் கதறினான்.
சினம் கொண்ட காவலர்கள் வேறு ஒரு முடிவு செய்தார்கள்.
1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது.
இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை.
தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது.
அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன.
எங்கே சிக்கல் என்றுத் தெரியவில்லை.
ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள், நின்று கொண்டிருந்த ஒவ்வொரு காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாகி விட்டது.!"
முதலில் தீ பரவியது.
பிறகு வெள்ளம்.
இப்போதோ பூகம்பம்.
காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே, என்ன தான் செய்வது? என்று மனிதர் பொரிந்து தள்ளி விட்டார்.
அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டி இதே கேள்வியைக் கேட்டார்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது.
சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.
குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது.
மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்றார்கள்.
ஒவ்வொரு முறையும் அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது.
அவர்களில் ஒருவர் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவர்.
மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவரோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும்
பொருட்படுத்தவேயில்லை.
"கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது."
இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.!
"போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்"
"கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்"
"உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்"
"மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
உலகம் எங்கும் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்"
"மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம்.