கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு.
வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள்.
பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சி.
இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு.
அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல.
நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. வேலைக்கும் போறோம்.
வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும்.
எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு Sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி.
காபி குடித்து விட்டு ஒரு மணி நேர சம்பாஷணைக்கு பின் தான் வீடு வருவோம். நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும்.
அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு தனி சுகம்.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் அவங்க வீட்டுக்கு போகும் போது. காபி டப்பா மூடியை திறக்க முடியாம அந்த பாட்டி, தாத்தா கிட்ட கொடுத்து திறக்க சொல்வாங்க பொதுவாகவே இது வழக்கம்.
தாத்தாவும் மீசையை ஸ்டைலா முறுக்கி விட்டுகிட்டு ஒரு வெற்றி சிரிப்புடன் திறந்து கொடுப்பார்.
பாட்டி ஒரு நமட்டு சிரிப்புடன் அடுப்பங்கரைக்கு போயிருவாங்க.
இத ரெண்டு, மூன்று வாரம் பாத்துட்டு, போன வாரம் போயிருந்தப்ப பாட்டிக்கு மூடியை ஈஸியா தொறக்குற மாதிரி ஒரு Device வாங்கி கொடுத்தோம்.
இந்த வாரமும் வழக்கம் போல் எங்கள் ஞாயிறு visit. வழக்கம் போல் காபி டப்பாவுடன் தாத்தாவை அணுகினார் பாட்டி. தாத்தாவும் இறுமாப்புடன் திறந்து கொடுக்க,
பாட்டி உள்ளே சென்றார்.
பாட்டி உள்ளே செல்ல, என் மனைவியும் பின் சென்று, "பாட்டி, ஏன் அந்த device use பண்ணி நீங்க டப்பாவை திறக்கல்ல.?
மறந்துடீங்க போலன்னு
கேட்க,
பாட்டி சிரித்துக்கொண்டே கூறியது தான் இந்த கதையின் ஹைலைடே.!
"குழந்தே, இந்த மூடியை திறக்க எதுவும் தேவை இல்லை. நானே திறந்திருவேன். அவர நான் தெறக்க சொல்றதுனாலே அவருக்கு என்னைவிட பலசாலின்னு ஒரு பெருமிதம். சந்தோசம். ஒரு மாதிரி கெத்துன்னு வைச்சுக்கோயேன்.!"
இந்த வீட்டு ஆம்பிளைனு ஒரு இறுமாப்பு.
இன்னும் நம்ம இந்த வீட்டுக்கு உபயோகமா இருக்கோம் என்ற ஒரு மகிழ்ச்சி. நான் இன்னும் அவரை சார்ந்து இருக்கேன்னு அவருக்கு ஒரு ஆளுமை.
திருமண வாழ்க்கையின் அடிப்படையே ஒருமித்து வாழ்வதுதானே குழந்தை.
இன்னும் நாங்க வாழப்போறது கொஞ்சநாள் தானே.!
யாரும் யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கோமென்ற நினைப்பு இல்லாமல் ஒருமித்து சந்தோசமா வாழனும்.
அதுக்குத் தான் இந்த நாடகம்" ரொம்ப நாளா நடக்குதுன்னு னு சொன்னாங்களாம்.
என் மனைவி சொன்னதைக் கேட்டு எனக்கு பிரமிப்பா போச்சு.
கொஞ்ச நேரம் என்னால நிஜமாகவே ஒன்னும் பேச முடியல.
இந்த மூடியில இவ்வளவு விஷயமா.?
வயசானவங்களை எப்போதும் Underestimate பண்ணக்கூடாது. அவங்க செயல்களிலும் அர்த்தம் இருக்கு. தன்னாலே யாருக்கும் பிரயோஜனம் இல்லைனு ஒரு நெனப்பு யாருக்கும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அழகா சொல்றாங்க. செய்றாங்க. நடந்துக்கிறாங்க மத்தவங்களுக்கு முன் மாதிரியா.?
இந்த பாடம் எல்லாம் எந்த பள்ளிக்கூடத்திலும் சொல்லிக்குடுக்க மாட்டாங்க.
இந்த மாதிரி தாத்தா பாட்டிகளை பார்த்து தான் கத்துக்கணும். அதுக்கு அவங்க நம்மளோட இருக்கணும்.
ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன், தன்னை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக ஒரு குடிமகனைக் கைது செய்து "மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில்" அடைக்கும்படி கட்டளையிட்டான்.
நிரபராதியான அந்த குடிமகன் சிறையில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான்.
"நான் நிரபராதி அரசே.!"
இந்த நாட்டில் கருத்து சொன்னது ஒரு குற்றமா.?
ஏன் என்னைக் கைது செய்தீர்கள்? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள்?
என்று உரக்கக் கதறினான்.
பின்னர் அவனை "ஒரு மீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில்" அடைக்கும்படி கட்டளை வந்தது.
மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான் அந்தக் குடிமகன்.
ஆனால் இம்முறை "நான் நிரபராதி" என்ற வாதத்தை மறந்து விட்டான்.
"இது என்ன கொடுமை.! இந்தச் சிறையில் எப்படி இருப்பது.? உறங்குவது.? அமர்ந்து கொண்டுதானே உறங்க முடியும்.? இது உங்களுக்கே தப்பாகத் தெரியவில்லையா.?" எனக் கதறினான்.
சினம் கொண்ட காவலர்கள் வேறு ஒரு முடிவு செய்தார்கள்.
1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது.
இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை.
தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது.
அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன.
எங்கே சிக்கல் என்றுத் தெரியவில்லை.
ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள், நின்று கொண்டிருந்த ஒவ்வொரு காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாகி விட்டது.!"
முதலில் தீ பரவியது.
பிறகு வெள்ளம்.
இப்போதோ பூகம்பம்.
காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே, என்ன தான் செய்வது? என்று மனிதர் பொரிந்து தள்ளி விட்டார்.
அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டி இதே கேள்வியைக் கேட்டார்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது.
சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.
குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது.
மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்றார்கள்.
ஒவ்வொரு முறையும் அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது.
அவர்களில் ஒருவர் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவர்.
மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவரோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும்
பொருட்படுத்தவேயில்லை.
"கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது."
இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.!
"போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்"
"கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்"
"உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்"
"மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
உலகம் எங்கும் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்"
"மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம்.