#108_திவ்ய_தேசங்கள்*

ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க, ""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். 🙏🇮🇳1
ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. இந்த திவ்யதேசங்களை எல்லாம்ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். 

🙏🇮🇳2
நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் : --
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;

🙏🇮🇳3
“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி

ஓர் பதின்மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம் - சீர்நாடு

ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு

கூறு திருநாடொன்றாக் கொள்”

🙏🇮🇳4
அதாவது,

சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (ஸ்ரீவைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுகிறார்.

🙏🇮🇳5
திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம்

திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

1. கிடந்த திருக்கோலம் - 27 திவ்ய தேசங்கள்

2. இருந்த திருக்கோலம் - 21 திவ்ய தேசங்கள்

3. நின்ற திருக்கோலம் - 60 திவ்ய தேசங்கள்.

🙏🇮🇳6
இறைவன் திருக்கோல திசைகள்

திவ்யதேசங்களில் இறைவன் திருக்கோலம் பார்க்கும் திசைகள் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

🙏🇮🇳7
1. கிழக்கு திசை நோக்கி - 79 திவ்ய தேசங்கள்

2. மேற்கு திசை நோக்கி - 19 திவ்ய தேசங்கள்

3. வடக்கு திசை நோக்கி - 3 திவ்ய தேசங்கள்

4. தெற்கு திசை நோக்கி - 7 திவ்ய தேசங்கள்.

"" வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியே காவிரி. வைகுண்டமே ஸ்ரீரங்கம். வாசுதேவனே அரங்கன். 

🙏🇮🇳8
பிரணவமே விமானம். விமானத்தின் நான்கு கலசங்களே வேதங்கள். உள்ளே பள்ளி கொண்டிருக்கும் அரங்கனே பிரணவத்தால் விவரிக்கப் படும் பரம்பொருள்'' என்றெல்லாம் ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஆலயங்களைத் திவ்யதேசங்கள் என்று புகழ்வர். திவ்யதேசங்கள் 108 என்கிறோம்.

🙏🇮🇳9
திவ்யதேசங்கள் பட்டியல் : --

இந்தப் பட்டியலில் 108 திவ்யதேசங்கள் பட்டியலில் முதலில் திருத்தலத்தின் பெயரும், அடைப்புக்குறிக்குள் அத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் மற்றும் அவரது தேவியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 🙏🇮🇳10
அதற்கடுத்து அந்தத் தலமிருக்கும் மாநிலம் அடைப்புக் குறிக்குள் ஊர்/மாவட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கநாதர் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (திருச்சி)

2. திருஉறையூர் (அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி) தமிழ்நாடு (திருச்சி)

🙏🇮🇳11
3. தஞ்சை (நீலமேகம் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

4. சுந்தர்ராஜப்பெருமாள் (வடிவழகியநம்பி - அழகியவல்லி) தமிழ்நாடு (திருச்சி)

5. உத்தமர் கோயில் (புருஷோத்தமன் - பூர்ணவல்லி) - தமிழ்நாடு (திருச்சி)

🙏🇮🇳12
6. திருவெள்ளரை (புண்டரீகாக்ஷன் - பங்கயச் செல்வி) - தமிழ்நாடு (திருச்சி)

7. புள்ளபூதங்குடி (வல்வில் ராமன் - பொற்றாமறையாள்) - தமிழ்நாடு (கும்பகோணம்)

8. கோயிலடி (அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி)) - தமிழ்நாடு (திருச்சி)

🙏🇮🇳13
9. ஆதனூர் (ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

10. தேரழுந்தூர் (ஆமருவியப்பன் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

11. சிறு புலியூர் (அருமாகடல் - திருமாமகள்) - தமிழ்நாடு (சீர்காழி)

🙏🇮🇳14
12. திருச்சேரை (சாரநாதன் - சாரநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

13. தலைச்சங்காடு (நாண்மிதியப்பெருமாள் - தலைச்சங்கநாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

14. கும்பகோணம் (சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி) - தமிழ்நாடு (குடந்தை)

🙏🇮🇳15
15. கண்டியூர் (ஹரசாபவிமோசனர் - கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

16. ஒப்பிலியப்பன் (ஒப்பிலியிப்பன் - பூமிதேவி) - தமிழ்நாடு (குமப்கோணம்)

17. திருக்கண்ணபுரம் (சௌரிராஜன் - கண்ணபுரநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

🙏🇮🇳16
18. திருவாலி,திருநகரி (வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

19. நாகப்பட்டினம் (சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி) - தமிழ்நாடு (நாகப்பட்டினம்)

20. நாச்சியார்கோயில் (நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார்) - தமிழ்நாடு (குமபகோணம்)

🙏🇮🇳17
21. நாதன் கோயில் (ஜகந்நாதர் - செண்பகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

22. மாயவரம் (பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

23. சிதம்பரம் (கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

🙏🇮🇳18
24. சீர்காழி (தாடாளன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

25. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) (ஜகத்ரட்சகன் - பத்மாசநவல்லி)- தமிழ்நாடு (கும்பகோணம்)

🙏🇮🇳19
26. திருக்கண்ணங்குடி (லோகநாதன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

27. திருக்கண்ணமங்கை (பக்தவத்சலன் - அபிசேகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

28. கபிஸ்தலம் (கஜேந்த்ரவரதர் - ரமாமணிவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்) 

🙏🇮🇳20
29. திருவெள்ளியங்குடி (கோலவில்லி ராமர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

30. மணிமாடக் கோயில் (சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

31. வைகுந்த விண்ணகரம் (வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

🙏🇮🇳21
32. அரிமேய விண்ணகரம் (குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

33. தேவனார் தொகை (தேவநாயகர் - ஸமுத்ரதநயா) - தமிழ்நாடு (சீர்காழி)

34. வண்புருடோத்தமம் (புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

🙏🇮🇳22
35. செம்பொன் செய்கோயில் (செம்பொன்னரங்கர் - சவேதபுஷ்பவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

36. திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால் - செங்கமலவல்லி) தமிழ்நாடு (சீர்காழி)

37. திருமணிக்கூடம் (மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

🙏🇮🇳23
38. திருக்காவளம்பாடி (கோபாலக்ருஷ்ணன் - செங்கமலநாச்சியார்)- தமிழ்நாடு (சீர்காழி)

39. திருவெள்ளக்குளம் (ஸ்ரீநிவாஸன் - பத்மாவதி) - தமிழ்நாடு (சீர்காழி)

40. திருபார்த்தன் பள்ளி (தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன்) - தமிழ்நாடு (சீர்காழி)

🙏🇮🇳24
41. திருமாலிருஞ்சோலை (அழகர் - சுந்தரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

42. திருக்கோட்டியூர் (சௌம்யநாராயணர் - மஹாலக்ஷ்மி) - தமிழ்நாடு (மதுரை)

43. திருமெய்யம் (சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார்) - தமிழ்நாடு (மதுரை)

🙏🇮🇳25
44. திருப்புல்லாணி (கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி)- தமிழ்நாடு (மதுரை)

45. திருத்தண்கால் (தண்காலப்பன் - அன்னநாயகி) - தமிழ்நாடு (மதுரை)

46. திருமோகூர் (காளமேகம் - மோஹனவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

47. கூடல் அழகர் கோயில் (கூடலழகர் - மதுரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

🙏🇮🇳26
48. ஸ்ரீவில்லிபுத்தூர் (வடபத்ரசாயி - ஆண்டாள்) - தமிழ்நாடு (ஸ்ரீவில்லிபுத்தூர்)

49. திருக்குருகூர் (நவதிருப்பதி) (ஆதிநாதர் - ஆதிநாதவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

🙏🇮🇳27
50. தொலைவில்லிமங்கலம் (இரட்டைத் திருப்பதி, நவதிருப்பதி) (அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

51. வானமாமலை (நவதிருப்பதி) (தோத்தாத்ரி நாதர் - ஸ்ரீவரமங்கை) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

🙏🇮🇳28
52. திருப்புளிங்குடி (நவதிருப்பதி) (காய்ச்சினவேந்தன் - மலர்மகள்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

53. திருப்பேரை (நவதிருப்பதி) (மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

🙏🇮🇳29
54. ஸ்ரீவைகுண்டம் (நவதிருப்பதி) (கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

55. திருவரகுணமங்கை(நத்தம்)(நவதிருப்பதி) (விஜயாஸனர் - வரகுணவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

🙏🇮🇳30
56. திருக்குளந்தை (நவதிருப்பதி) (மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

57. திருக்குறுங்குடி (வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

58. திருக்கோளூர் (நவதிருப்பதி) (வைத்தமாநிதி - கோளூர்வல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)🙏🇮🇳31
59. திருவனந்தபுரம் (அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலக்ஷ்மி) - கேரளம் (கோவளம்)

60. திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) (திருக்குறளப்பன் - கமலவல்லி)- தமிழ்நாடு (கன்னியாகுமரி)

🙏🇮🇳32
61. திருக்காட்கரை (காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி) - கேரளா (கோட்டயம்)

62. திருமூழிக்களம் (திருமூழிக்களத்தான் - மதுரவேணி) - கேரளா (கோட்டயம்)

63. திருப்புலியூர் (மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

🙏🇮🇳33
64. திருச்செங்குன்றுர் (இமையவரப்பன் - செங்கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

65. திருநாவாய் (நாராயணன் - மலர்மங்கை நாச்சியார்) - கேரளா (திருச்சூர்)

66. திருவல்லவாழ் (கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து) - கேரளா (கோட்டயம்)

🙏🇮🇳34
67. திருவண்வண்டுர் (பாம்பணையப்பன் - கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

68. திருவட்டாறு (ஆதிகேசவன் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கன்னியாகுமரி)

69. திருவித்துவக்கோடு (உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி) - கேரளா (திருச்சூர்)

🙏🇮🇳35
70. திருக்கடித்தானம் (அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

71. திருவாரன்விளை (திருக்குறளப்பன் - பத்மாசனி) - கேரளா (கோட்டயம்)

72. திருவஹீந்திபுரம் (தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி) - தமிழ்நாடு (கடலூர்)

🙏🇮🇳36
73. திருக்கோவலுர் (திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார்) - தமிழ்நாடு (கடலூர்)

74. திருக்கச்சி (வரதராஜன் - பெருந்தேவி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

75. அஷ்டபுஜகரம் (ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

🙏🇮🇳37
76. விளக்கொளி பெருமாள் (தூப்புல்) (தீபப்ரகாசர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

77. திருவேளுக்கை (முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

78. திருப்பாடகம் (பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

🙏🇮🇳38
79. திருநீரகம் (ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி)- தமிழ்நாடு
(காஞ்சிபுரம்)

80. நிலாத்திங்கள் (நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

81. திரு ஊரகம் (உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

🙏🇮🇳39
82. திருவெக்கா (யதோத்தகாரி - கோமளவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

83. திருக்காரகம் (கருணாகரர் - பத்மாமணி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

84. திருக்கார்வானம் (கள்வர்பெருமாள் - கமலவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

🙏🇮🇳40
85. திருக்கள்வனூர் (ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

86. திருப்பவளவண் (பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார்)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

87. பரமேச்சுரவிண்ணகர் (பரமபதநாதன் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

🙏🇮🇳41
88. திருப்புட்குழி (விஜயராகவன் - மரகதவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

89. திருநின்றவூர் (பத்தவத்ஸலர் - ஸுதாவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

90. திரு எவ்வுள் (வைத்ய வீரராகவர் - கனகவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

🙏🇮🇳42
91. திருநீர்மலை (நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை) - தமிழ்நாடு (சென்னை)

92. திருவிடவெந்தை (நித்யகல்யாணர் - கோமளவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

93. திருக்கடல்மல்லை (ஸ்தலசயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார்) - தமிழ்நாடு (சென்னை)

🙏🇮🇳43
94. திருவல்லிக்கேணி (பார்த்தசாரதி - ருக்மணி)- தமிழ்நாடு (சென்னை)

95. திருக்கடிகை (சோளிங்கர்) (யோகநரசிம்மர் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

96. திருவேங்கடம் (திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை) - ஆந்திரப் பிரதேசம்

🙏🇮🇳44
97. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) (லட்சுமிநரஸிம்ஹன் - செஞ்சுலக்ஷ்மி) - ஆந்திரப் பிரதேசம்

98. திருவயோத்தி (சக்ரவர்த்திதிருமகன் - சீதாபிராட்டி) - உத்தரப்பிரதேசம்

99. நைமிசாரண்யம் (தேவராஜன் - ஹரிலக்ஷ்மி) - உத்தரப்பிரதேசம்

🙏🇮🇳45
100. சாளக்கிராமம் (ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி) - நேபாளம்

101. பத்ரிகாச்ரமம் (பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி) - உத்தராஞ்சல்

102. தேவப்ரயாகை (நீலமேகம் - புண்டரீகவல்லி) - உத்தராஞ்சல்

103. திருப்ரிதி (பரமபுருஷன் - பரிமளவல்லி) - உத்தராஞ்சல்

🙏🇮🇳46
104. திரு த்வாரகை (கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார்) - குஜராத்

105. வடமதுரை (கோவர்தனகிரிதாரி - சத்யபாமா) - டெல்லி

106. திருவாய்ப்பாடி (நவமோஹன க்ருஷ்ணன் - ருக்மணி,சத்யபாமா) - டெல்லி

🙏🇮🇳47
107. திருப்பாற்கடல் (க்ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார்) - புவியில் இல்லை

108. பரமபதம் (பரமபதநாதன் - பெரியபிராட்டியார்) - நாதன் திருவடி

#வாழ்க_பாரதம் 🇮🇳🙏
#வளர்க_பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

4 Oct
அருள்மிகு சப்த கன்னியர் திருக்கோயில், கன்னிமார்பாளையம், திண்டுக்கல்

ஆலயத்தின் நுழைவாயிலைத் தொடர்ந்து மகாமண்டபம், அதையடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் கிழக்கு திசை நோக்கி சூல வடிவில் பெரியசாமி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳1
அடுத்துள்ள கருவறையில் சப்தகன்னியர் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தல விருட்சம் ஆவி எனப்படும் ஒரு வகை மரம். இம்மரம் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ளது. இம்மரத்தின் அடியில் விநாயகர் அருள்பாலிக்கிறார். மேற்குப் பிரகாரத்தில் அழிஞ்சி மரம் உள்ளது.

🙏🇮🇳2
ஆதியில் சப்த கன்னியரின் திருமேனிகள் இம்மரத்தின் அடியில்தான் இருந்தன. பின்னரே தனி ஆலயம் அமைத்து கருவறையில் சப்தகன்னியர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த அழிஞ்சி மரத்திற்கு ஊஞ்சல் மரம் என்ற பெயரும் உண்டு. கிழக்குப் பிரகாரத்தில் ஐம்பது ஆண்டுகள் பழமையான மின்னமரம் உள்ளது.🙏🇮🇳3
Read 6 tweets
4 Oct
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்

எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர்கள் சன்னதி உள்ளன. திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது. 🙏🇮🇳1
பத்மகிரி நாதர் பேரில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய தென்றல் விடு தூது இக்கோயிலின் இலக்கியப் பெருமையைப் பறை சாற்றுகிறது.

🙏🇮🇳2
பலபட்டடைச் சொக்கநாத புலவர் இயற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது என்ற அரிய நூலைப் பதிப்பித்த டாக்டர் உ.வெ.சாமிநாத அய்யர் அந்நூலின் முன்னுரையில் பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் திருநாமம் இதற்கு திண்டீச்சுரம் என்ற திருநாமமும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று என்கிறார்.🇮🇳3
Read 27 tweets
3 Oct
#படித்ததில்_பிடித்தது

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்...
அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர்  பேட்டி எடுத்தார்...

"உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..
ஃபெமி கூறினார்:

"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."
Read 15 tweets
3 Oct
மோடியின் சாதனையும் தமிழக இந்து அறநிலையத் துறையின் அவலமும்

ஸ்டான்லி இராஜன் அவர்களின் சஞ்சிகை பகிர்வு

மோடியின் அமெரிக்க பயணத்தின் மிகபெரிய வெற்றி என்பது அமெரிக்காவுக்கு கடத்தபட்ட சிலைகளை மீட்டிருப்பது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தபட்ட அல்லது விற்கபட்ட சுமார் 157 சிலைகளை திருப்பி கொடுக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருக்கின்றது. இதில் பெரும்பான்மையான சிலைககள் தமிழக சிலைகள்.
இதுவரை இச்சிலைகளை மீட்க நேரு முதல் மன்மோகன்சிங் வரை எந்த அரசும் முயற்சிக்கவில்லை. வாஜ்பாய் காலத்தில் சில பொருளாதார தடைகள் இருந்ததால் அவராலும் முழு வெற்றி பெற முடியவில்லை.
Read 7 tweets
3 Oct
அரசின் ஒத்துழைப்பு வேண்டும் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

புதுடில்லி:"அனைவருக்கும் நீதி கிடைக்கவும், ஜனநாயகத்தை வலுபடுத்தவும், உச்ச நீதிமன்றம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:
கடந்த மே மாதம் முதல், உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்ப, 106 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதில் ஏழு பரிந்துரைகளுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Read 7 tweets
3 Oct
ஜல் ஜீவன் இயக்கத்தால் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் : சாதித்து காட்டியதாக பிரதமர் மகிழ்ச்சி

புதுடில்லி : ''நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கத்தின் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தோர், 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
நாடு முழுதும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 'ஜல் ஜீவன்' இயக்கத்தை 2019 ஆக., 15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(