அவசர நவராத்திரி விதிமுறைகள் அரசு அறிவிப்பு: (இப்படியும் இருக்குமோ?) 😂🤣😂🤣😂🤣
1. கொலுவில் பொம்மைகளுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.
2. ஒரு படிக்கு பத்து பொம்மைகளுக்கு மேல் அனுமதியில்லை.
3. ஏழு படிகளுக்குமேல் அனுமதி இல்லை.
4. சிறப்பு அனுமதியாக தசாவதாரம் செட்டுக்கு தனிப்படி(!) அனுமதி உண்டு. பத்து பேரும் ஒருவரே என்பதால் சமூக இடைவெளி தேவையில்லை.
5. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் கீதோபதேசம் செட் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் உபதேசம் செய்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கீதோபதேசக் காட்சி தமிழில் இருக்கவேண்டும்.
6. மொத்த பொம்மைகள் அதிக பட்சம் ஐம்பது மட்டுமே இருக்கலாம்.
7. சுண்டல் வழங்கப்படலாம். ஆனால் அவை சானிடைசரால் அலம்பப்பட்டிருக்க வேண்டும்.
8. பீச் பார்க் ஆகியவை கட்டலாம். அவை காலியாக இருக்கவேண்டியது அவசியம்.
9. அனைத்து விதிகளும் சரிவர பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க ஒவ்வொரு படியிலும் உங்கள் செலவில் 2 போலீஸ் பொம்மைகள் வைக்கப்பட வேண்டும். போலீஸ் பொம்மைகள் மேலே சொன்ன ஐம்பது பொம்மைகள் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது.
10. முக்கிய குறிப்பு: போலீஸ் பொம்மையின் காலடியில் அவரவர் விதிமீறலுக்கேற்ப நிஜ நூறு ரூபாய் நோட்டுகளை வைக்கலாம்.
அனைவருக்கும் இனிய பொம்மைத்திருநாள் வாழ்த்துகள்
பின்குறிப்பு: கொலுவுக்கு படிகளாக உபயோகப்படும் கம்ப்யூட்டர் டேபிள், அட்டை டப்பா, ஸ்டூல், டைனிங் டேபிள் போன்றவற்றை யாரேனும் ஆக்கிரமித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அதிகாரிகள் விரைந்து வந்து ஆக்கிரமிப்புகளை நீக்கி படிகளைக் கையகப்படுத்தித் தருவார்கள்.
மேலே சொன்ன விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
''அது என்ன புராண பெயர் அஸ்வத்தாமன் என்று, உங்களுக்கு? '' கல்யாணம் ஆனவுடன் மனைவி ஹேமா கேட்ட முதல் கேள்வி.
''இனிமே உங்க பேர் அஸ்வின்'' ஆளையே உச்சந்தலை முதல் உள்ளம் வரை மாற்றிவிட்டாள்
''அஸ்வினி நக்ஷத்ரமாம் எனக்கு, சிரஞ்சீவியா இருக்க நக்ஷத்ரத்திலே பாதி இருக்கிற பேரா அம்மா தேடி இருக்கா, அஸ்வத்தாமன் கிடைச்சான். இதோ இருக்கான் ''
அம்மா ராஜேஸ்வரி மீது கொள்ளை கொள்ளையா அஸ்வாவுக்கு ஆசை, பாசம்.
எல்லாம் 08.02.2000 காலை முஹூர்த்தம் வரையில். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி இருந்த அம்மா தூரமாக நகர்ந்து இப்போது நூறு கி.மீ.தள்ளியொரு முதியோர் இல்லத்தில்.
''என்னை ஏண்டா இங்கே சேர்க்கறே. நான் பாட்டுக்கு சிவனேன்னு ஆத்திலேயே ஒரு மூலையில் கிருஷ்ணா ராமான்னு கிடப்பேனே ''
ஒரு சாதாரண Surgical Trader கூட 3 வது அலையை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி Godownல் குவித்துள்ளான்
இதில் கொடுமை என்னவெனில் 2 ஆம் அலை முடிந்ததும் பல உற்பத்தியாளர்களும் ஜூலை மாதத்தில், தங்களிடம் உள்ள பொருட்களை Clearance Sale, Great Deal என்ற அடைமொழி வைத்து...
தங்களிடம் இருந்த Mask, Sanitizer, Gloves, Pulse Oxymeter என்று அனைத்து Surgical & Pharma Traders தலையில் கட்டிவிட்டார்கள்.
ஜூன் மாதம் 560/- ரூபாய் வரை விற்ற Latex Examination Gloves Box, தற்போது 270 ரூபாய்களுக்கே கிடைக்கிறது. ( 2019 ல் இதன் விலை வெறும் ரூபாய் 130/- மட்டுமே).
இலுப்பச்சட்டியில் கம்பிப் பதம் வந்து கரண்டியில் புரண்டு நெய் கக்கி டால்டா முழுங்கி பொளுக் பொளுக் என்று கொப்பளம் வந்து டிரேயில் விரிந்து வில்லை வில்லையாகும் பல ஸ்வீட்களைப் போல் இல்லாமல்....
ரவா லட்டு செய்வது மிக மிக சுலபம்.
வெறும் சர்க்கரைப்பொடியும் அதிர்ஷ்டவசமாக அகப்படும் முந்திரிப்பருப்பின் சுவை மட்டும் மேலோங்கி, நாக்கில் இன்ஸ்டண்டாக கரையும் *ரவாலாடு*
அரை பத்தி கூடத் தாண்டாத இந்த ப்ரிபரேஷனை பத்தி தெரியாதவாளுக்கு ருக்குவிடம் கேட்டு பிறகு பதிவு செய்கிறேன். படித்து செய்து பார்க்கவும்.