இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்.

இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?
இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால்1937-ம் ஆண்டு முதல்முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.

.
அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் ஈ.வே.ரா. பெரியாரும் மூன்றாண்டுகள் உண்ணாவிரதம், மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்களை நடத்தினர்
அந்நாள் அரசின் காவல்துறை நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர். பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் அரசு 1939-ம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாணத்தின்
பிரிட்டன் அரசின் ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' 1940-ம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு அரசியலமைப்பு சட்டமன்றத்தில் புதிய இந்தியக் குடியரசில் நிலவ வேண்டிய அலுவல்மொழி குறித்து நீண்ட விவாதம் நடந்தது.
பற்பல உரையாடல்களுக்குப் பின்னர் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி அரசுப்பணி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல்மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 அன்று நடப்பிற்கு வந்தது. ஆகவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொண்டபடி 1965 ஆண்டிலிருந்து இந்தி மட்டுமே அரசுப்பணிமொழியாக விளங்க அரசு மேற்கோண்ட முயற்சிகள் இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலைகளை உண்டாக்கின.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது.

இந்தக் கவலைகளை நீக்கும் விதமாக அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1963-ம் ஆண்டில் கொண்டு வந்த அரசுப்பணிமொழி சட்டத்தில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் ஆங்கிலமே அரசுமொழியாக விளங்கிட வழிவகை செய்தார்.
இதை தொடர்ந்து 23-1-1968 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், 1986-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இந்தக் கொள்கை நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் நிறுவிட வழி செய்தது.
திமுக இப்பள்ளிகளில் இந்தி கற்பது கட்டாயமாக்கப்படும் என்று கூறியது.

அந்த நேரம் திமுகவிலிருந்து பிரிந்து உருவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தார். திமுக முதன்மை எதிர்க்கட்சியாக இருந்தது.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி போராட்டம் துவக்கினார். நவம்பர் 13 அன்று மாநில சட்டப்பேரவை ஒருமனதாக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியை நீக்கவும் ஆங்கிலத்தை ஒன்றியத்தின் ஒரே அலுவல்மொழியாக அங்கீகரிக்கவும் தீர்மானம் இயற்றியது.
17-11-1986 அன்று திமுக உறுப்பினர்கள் கல்விக் கொள்கைக்கெதிராக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியை தீயிட்டு கொளுத்தினர். இந்தி திணிப்பு சட்டநகல் எரிப்பு போராட்டம் என்றழைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் கருணாநிதி உட்பட சுமார் 20 ஆயிரம் திமுக தொண்டர்கள் கைதாகினர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 21 பேர் தம்மைத்தாமே தீயிட்டு கொளுத்திக்கொண்டு உயிர் நீத்தனர்.

பின்னர், இந்தி கட்டாயமாக்கப்படாது என்று தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ராஜீவ் காந்தி வாக்குறுதி கொடுத்தார்.
இதன் பின்னணியில் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது, நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமேயாகும்.

இந்நிலையில், மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு தற்போது புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைத்துள்ளது.
அதில் அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்குமா? என்ற நிலை இங்கு தலைதூக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய முன்னோடியாக திகழ்ந்து மறைந்த ‘சொல்லின் செல்வர்’ ஈ.வே.கி. சம்பத் முன்னர் 1960-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்தபோது
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
‘மத்திய அரசின் மொழி கொள்கை தொடர்பாக முன்னர் பாராளுமன்ற மக்களவையில் அளித்த வாக்குறுதிக்கு மாறான நிலைப்பாட்டை ஒருநாளும் எடுக்க மாட்டோம்.
எனது வாக்குறுதி தொடர்பாக, ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் மக்களவையில் உரையாற்றிய உள்துறை மந்திரியும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
சென்னை அரசின் நிதிமந்திரியும் இதுதொடர்பாக தெளிவுப்படுத்தி இருப்பதாக அறிந்தேன். எனவே, இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்தின் மாண்புமிகு உறுப்பினரான தங்களுக்கு எவ்வித ஐயப்பாடும் தேவையில்லை.
தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இந்த அரசு உறுதியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என முன்னர் ஈ.வே.கி. சம்பத்துக்கு அனுப்பிய கடிதத்தில் நேரு குறிப்பிட்டிருந்தார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

15 Oct
"ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா, சம்பத் ஆகியோர் நடித்த "சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்' நாடகத்தில் விடுப்பட்டுப் போன மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வை மறைந்த எனது தந்தையார் இரா.சங்கரலிங்கனார் என்னிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அந்நாடகத்தில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்க நேரிட்ட சம்பத், புகைபிடித்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரை விலகி விளக்குகள் எரிந்தன. காகப்பட்டராக நடித்த அண்ணாவின் கேள்விக்கணைகளுக்குப்
பதிலளிக்கத் தொடங்கிய சம்பத்தின் வாயிலிருந்து சிகரெட்டின் புகையைப் பார்த்த அண்ணா, உடனே சுதாரித்துக் கொண்டு, ""சிவாஜி, கனல் கக்கப் பேசுவாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ புகை கக்கப் பேசுகிறாயே'' என்று சொன்னபோது மாநாட்டு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி.
Read 23 tweets
15 Oct
பெரியாரின் வாரிசாகப் பார்க்கப்பட்டவர்.

பின் காங்கிரசில் இணைந்தவர்.

ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார்.
குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.
Read 28 tweets
15 Oct
பாவாடை நாடா அவதூறு*

கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட...

கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
வக்கீல் நோட்டீஸ்

27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.

பேட்டியில் நீங்கள்,
"சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான்
Read 21 tweets
15 Oct
`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்

அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக்குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான்.
ஆனால், பைலட் மறுக்கிறார். உடனே 25 வயது பயணி ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி!
1999-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்பதற்காக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. இதை `நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாதிகளிடம் சரணடைந்த சம்பவம் இது'
Read 35 tweets
14 Oct
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
Read 19 tweets
14 Oct
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:- "அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதால் ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு
விரோதம் இருந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து வந்தது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பினார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். டெல்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார்.
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(