"ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா, சம்பத் ஆகியோர் நடித்த "சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்' நாடகத்தில் விடுப்பட்டுப் போன மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வை மறைந்த எனது தந்தையார் இரா.சங்கரலிங்கனார் என்னிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அந்நாடகத்தில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்க நேரிட்ட சம்பத், புகைபிடித்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரை விலகி விளக்குகள் எரிந்தன. காகப்பட்டராக நடித்த அண்ணாவின் கேள்விக்கணைகளுக்குப்
பதிலளிக்கத் தொடங்கிய சம்பத்தின் வாயிலிருந்து சிகரெட்டின் புகையைப் பார்த்த அண்ணா, உடனே சுதாரித்துக் கொண்டு, ""சிவாஜி, கனல் கக்கப் பேசுவாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ புகை கக்கப் பேசுகிறாயே'' என்று சொன்னபோது மாநாட்டு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி.
வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் சாமி நாயுடு, நீதிக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். அவருடைய மூத்த மகன் எஸ். கஜேந்திரன். மகள் சுலோச்சனா. கஜேந்திரன் பி.ஏ. பட்டம் பெற்ற பின் 1934}இல் ஈரோடு குருகுலத்திற்கு வந்தார். பின்னர்
அவர் தந்தை பெரியாரிடம் செயலாளர் ஆனார். "குடியரசு' இதழில் எழுதினார். ஜஸ்டிஸ் இதழைப் பார்த்துக் கொண்டார். அறிவுக் கூர்மையும் விவாதிக்கும் திறனும், எழுத்தாற்றலும் மிக்க அவர் மாணவர் இயக்கத்திலும் தீவிரப் பங்கு கொண்டிருந்தார்.
1945 மே 24 ஆம் நாள் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் மூத்த மகள் செல்வி மிராண்டாவுக்கும் (ஈ.வெ.கி. சம்பத்தின் தமக்கையார்) எஸ். கஜேந்திரனுக்கும் பெரியார் தலைமையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தலைவர்கள் வாழ்த்தினர். கஜேந்திரன் அரசுத் தலைமைச் செயலகத்தில் அலுவலர்.
இருவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள், காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். மிராண்டா சென்னை மாநகராட்சிக் கல்வித் துறை அதிகாரியாகப் பலகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவ்விணையருக்கு இரு பெண் மக்கள்.
தேர்வில் தோல்வி - பெரியார் சீற்றம்
யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் கூட வேதனையாகத்தானிருந்தது. பச்சையப்பன் கல்லூரியில் இன்டர் படித்துக் கொண்டிருந்த ஈ.வெ.கி. சம்பத் தேறவில்லை.
தவறி விட்டதைக் கேட்டு அய்யா சுடுநீரைக் காலில் கொட்டிக் கொண்டது போல் துடித்தார்.
""எனக்குத் தெரியும். அண்ணாத்துரையோடு சேர்ந்து கொண்டு நாடகம், சினிமா, மாநாடு என்று இவன் சுற்றிக் கொண்டிருந்த போதே, படிப்பு பாழாய்கிட்டிருக்குன்னு நினைத்தேன்.
அப்படியே ஆகிவிட்டது'' என்றும் தம் பிள்ளை தேறவில்லை என்றும் பெரியார் தவித்தார்.
ஈரோடு வந்த சம்பத், பெரியாரின் கோபம் அடங்கட்டுமென்று அவர் கண்ணில் படவில்லை. அத்தை வீட்டில் படுத்திருந்த சம்பத்தை, பெரியார் அழைத்துவரச் சொன்னார். சம்பத்திற்கு ஒன்றும் பயமில்லை.
எதுவந்தாலும் ஆகட்டும் என்று நெஞ்சுயர்த்தி நின்றார்.
""அப்போதே சொன்னேன். படிப்பை முடித்து விட்டு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். நீ அண்ணாத்துரையை நம்பினாய். படிக்கிற உனக்கு நாடகக் கம்பெனி முக்கியமா? உருப்படுவதற்கு வழியைப் பார்.
இன்னைக்கே திருச்சிக்குப் போய் சங்கரன் பங்களாவிலே தங்கிகிட்டு, டியூட்டோரியல்லே சேர். எப்படியும் பாசாகணும்'' என்று கோபத்தோடு வார்த்தைகள் வந்து விழுந்தன.
அருகிலிருந்த தந்தையார் ஈ.வெ.கிருஷ்ணசாமியும், ""படிப்பை முடிச்சுட்டு என்னைத்தையாவது பண்ணு. ஒரு பட்டதாரி கூட ஆகவில்லைன்னா..
யார் மதிப்பா? உனக்கென்ன குறை, திருச்சி புறப்படு'' என்று சீறினார்.
அப்போதுதான் தம்மை அணைத்து, உச்சி மோந்து கொஞ்சிடும் அன்னையார் நாகம்மையில்லையே என்று மனம் வெதும்பினார் சம்பத். அப்பாவோ, சிற்றப்பாவோ, எவரும் கடிந்த வார்த்தை சொல்லிவிடாமல் அன்புக் கேடயமாக
ஆசை மகனைப் பாசத்தோடு கட்டியணைத்துக் கொள்ளும் தாய் இல்லையே என்று வேதனைப்பட்டார். சிறிய தந்தையாரை நோக்கி, ""இப்போதே நான் திருச்சி புறப்படுகிறேன்'' என்றார்.
""எப்படியும் பாசாகணும்'' என்றார் பெரியார். திருச்சி புறப்பட்டார் சம்பத். அவருடைய மனக்குகையில் பெரும் போராட்டம்.
குடும்பத்தாரைத் திருப்திப்படுத்த படிப்பைத் தொடர்வதா? தன்னை எதிர் நோக்கி உள்ள மாணவர் படையை வழி நடத்துவதா? என்னால் என் அண்ணனுக்குப் பழி ஏற்படுவதா? என்றெல்லாம் மனம் குமுறியபடி குழப்பமான நிலையில் திருச்சி சங்கரன் பங்களா போய்ச் சேர்ந்தார்.
இவர் போய்ச் சேருவதற்கு முன்பே பெரியார் தொலைபேசியில் சங்கரனிடம் எல்லாவற்றையும் பேசிவிட்டார். ஆகவே சம்பத் வரும்போதே வருத்தமாகத்தான் வருவார் என்பதைப் புரிந்து கொண்டு அவருடைய வருத்தத்தைப் போக்கும் வகையில் பெரும் நண்பர் குழாம் காத்திருந்து அவரை உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.
எல்லாவற்றையும் காஞ்சிபுரத்திலேயே அறிந்துகொண்டு, தம்பியின் வருத்தம் போக்க, அத்தனை வேலைகளையும் உதறிவிட்டு, சம்பத்தைச் சந்திக்க சங்கரன் பங்களா வந்துவிட்டார் அண்ணா.
அண்ணாவைக் கண்டதும், தாம் பாஸôகிவிட்டது போன்றே சம்பத் குதூகலம் அடைந்தார்.
அங்கே அனைத்தையும் விட அண்ணன் தம்பி பாசம் மேலோங்கி நின்றது. இருவரும் இரவு ஆங்கிலத் திரைப்படம் பார்த்தார்கள். அது அவர்கள் வாடிக்கை.
அண்ணாவிற்குக் கூட மனத்துக்குள் வருத்தம்தான். சம்பத் பாசாகியிருந்தால், அவர் தலை உருண்டிருக்காது.
அன்றிரவு அவர்கள் தூங்கவே இல்லை. பேசினார்கள். பராங்குசம், அன்பில், மன்னை போன்றவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். எல்லோரும் சம்பத்தை மகிழ்ச்சியாக வைக்க வேண்டுமென்பதில் போட்டி போட்டார்கள். அண்ணாவோடிருக்கிறபோது சம்பத்திற்கு மகிழ்ச்சிக்கா பஞ்சம்? விடிய விடியப் பேசினார்கள்.
யார் எப்போது தூங்கினார்கள் என்பது அவர்களில் எவருக்கும் தெரியாது.
கல்வியா? கலையா? அரசியலா?
திருச்சி வந்த சம்பத்துக்கு தனிப்பயிற்சிக் கல்லூரி வாழ்க்கை ஆர்வத்தைத் தரவில்லை. படிக்க வேண்டும், பட்டம் பெறவேண்டும் என்னும் மனத்துடிப்பு மிகுதி என்றாலும் அவரது சுற்றுச்சூழ்நிலை,
இயக்கச் சம்பவங்களாலும் நிகழ்ச்சிகளாலும் சூழப்பட்டிருந்தது. எப்போதும் அவரைத் தேடி கழக மாணவர்கள் வந்தபடியிருந்தனர். அவரோ மாதமிருமுறையாவது ஈரோடு செல்லாவிடினும், காஞ்சிபுரத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. நாடக ஆர்வம் வேறு அவரை ஆட்டிப் படைத்தது.
சரியாகப் படிக்கவில்லையென்று பெரியார் திருச்சி வந்து மிகவும் கண்டித்துவிட்டுப் போனார். மனத்துயரை மாற்றிக் கொள்ளச் சம்பத் யாரிடமும் சொல்லாமல் நேராக குடந்தை போய்விட்டார். அங்கேதான் கே.ஆர்.ஆர். நாடக சபா வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.
கே.ஆர். ராமசாமிக்கு, அண்ணாவிற்கடுத்து சம்பத் மீது அதிகப் பிரியம். வரவேற்று, ஆறுதல் கூறி, ""கஷ்டப்பட்டு படிப்பை முடித்துவிடு, பிறகு பெரியார் உனக்கே முடிசூட்டிவிடுவார். நீ பொறுமையுடன் படிக்கத்தான் வேண்டும்'' என்றெல்லாம் அவர் நயமாகவே கூறினார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்.
இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?
இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால்1937-ம் ஆண்டு முதல்முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார்.
குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.
கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட...
கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
வக்கீல் நோட்டீஸ்
27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.
பேட்டியில் நீங்கள்,
"சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான்
`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்
அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக்குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான்.
ஆனால், பைலட் மறுக்கிறார். உடனே 25 வயது பயணி ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி!
1999-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்பதற்காக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. இதை `நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாதிகளிடம் சரணடைந்த சம்பவம் இது'
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:- "அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதால் ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு
விரோதம் இருந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து வந்தது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பினார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். டெல்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார்.