கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட...
கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
வக்கீல் நோட்டீஸ்
27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.
பேட்டியில் நீங்கள்,
"சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான்
அப்படி சொன்னதாக பிறகு வியாக் யானம் தந்தார். கச்சத் தீவுப் பற்றி எனக்குத் தெரியாது என்கிறாரே- சட்டசபையில் அனந்தநாயகி கேள்விக்கு இவர் பதில் சொன்னதே ஞாபகம் இருக்கே''- என்று தெரி வித்துள்ளீர்கள்.
முதல்-அமைச்சர் கருணா நிதி இதை வன்மையாக மறுக் கிறார். சட்டசபையில் எந்த ஒரு உறுப்பினரும் இப் படி அவரிடம் கேள்வி எழுப் பியதே இல்லை என்று கூறுகி றார். குறிப்பாக அனந்தநாயகி இத்தகைய கேள்வி எதுவும் கேட்கவில்லை. அதற்கு நான் இப்படி பதில் சொல்லவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தநாயகி எந்த தேதியில் இப்படி ஒரு கேள்வி கேட்டார் என்று நீங் கள் சொல்லவில்லை. அது போல முதல்-அமைச்சர் கருணாநிதி எப்போது, இப்படி பதில் சொன்னார் என்றும் குறிப்பிட வில்லை.
மலிவான அரசியல் ஆதாயம் தேடவும், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இப் படி ஒரு கேள்வி பதில் பேசப் பட்டதாக நீங்கள் (விஜய காந்த்) வேண்டும் என்றே பேட்டி அளித்துள்ளதாக முதல்-அமைச்சர் கருணா நிதி கருதுகிறார். நாட்டின் மூத்த அரசியல் தலைவரான அவரை நீங்கள்
தவறான எண்ணத்துடன் அவமானப் படுத்தும் வகையில் குற்றச் சாட்டுக்களை கூறி இருக்கி றீர்கள். அவருக்கு இருக்கும் மரியாதையை சீர்குலைக்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் உள்ளது.
அந்த பேட்டி முழுவதும் பொய் மூட்டைகளாக உள்ளது. அதில் எதுவும் அடிப்படை இல்லாதது. நீங்கள் சொன்னது போன்ற எந்த விவாதமும் சட்டசபையில் நடக்கவில்லை. சட்டசபையில் அதற்கான குறிப்புகளும் இல்லை. எனவே இந்த பேட்டி மூலம் நீங்கள் சட்டசபை உறுப்பினர் நடத்தை விதிகளை மீறி உள்ளீர்கள்.
உங்களால் கூறப்பட்டுள்ள இந்த கேள்வி-பதில் பெண்களை மிகவும் இழிவு படுத்துவதாக உள்ளது. முதல்-அமைச்சர் கருணா நிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தில் நீங்கள் இப்படி அபாண்டமான பொய்யை கூறியுள்ளீர்கள்.
பொது வாழ்வில் அவருக்கு கண்ணியத்தை மாசுப்படுத்த இப்படி தர்மமே இல்லாமல் கருத்து தெரிவித்து இருக்கி றீர்கள்.
இந்த தவறான தகவலை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளாமல் குமுதம் ஆசிரி யரும், வெளியீட்டாளரும் பிர சுரித்துள்ளார்கள். இது தவறானது.
ஒரு மூத்த தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் இந்த கருத்தை யாராலும் ஏற்க இயலாது.
தவறாக தகவல் தெரி வித்த உங்கள் பேட்டி முக்கியத் துவம் கொடுத்து பிரசுரிக்கப் பட்டுள்ளது. இவை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499,500,501 மற்றும் 502ன்படி குற்றமாகும்.
இந்த சட்டத்தின் கீழ் உங்களை தண்டிக்க
முடியும்.எனவே முதல்-அமைச்சர் கருணாநிதி சொல்லாததை நீங்கள் திரித்துப் பேசியதற்காக 2 நாளில் நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும். உங் களது மன்னிப்பு தகவல் அனைத்து முக்கிய நாளிதழ் களிலும் இன்னும் 2 நாளில் வரவேண்டும்.
அதோடு குமுதம் இதழின் அடுத்த வார இதழிலும் உங்களது மன்னிப்பு இடம் பெற வேண்டும்.
இல்லையெனில் உங்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும். உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இனி எதிர்காலத் தில் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி எந்த அடிப்படை இல்லாத தகவல்களையும், பொய்யான கருத்துக்களையும் நீங்கள் (விஜய காந்த்) பேசக்கூடாது. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குமுதம் வார இதழின் நிருபர் வி.சந்திரசேகரன் என்பவர் தானாகவே எனது கட்சிக்காரரின் அலுவலகத்திற்கு வந்து, அவரைத் தூண்டுவதைப்போல- உங்கள் கட்சிக்காரரால் பல நேரங்களில் என் கட்சிக்காரர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளையெல்லாம் தொகுத்து பல கேள்விகளைக் கேட்டார்.
எந்த விதமான உள்நோக்கமும் இல்லாமல், எனது கட்சிக்காரர் கேட்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலளித்தார். எனது கட்சிக்காரரின் பதில்கள், அவர் கூறியவாறு அப்படியே வெளியிடப்படவில்லை. தவறாகவும், முறை தவறியும் தேவையற்ற வகையிலும் 27.2.2008 அன்று குமுதம் இதழில் அவைகள் வெளியிடப்பட்டன.
டேப்பில் அந்த பேட்டி பதிவும் செய்யப்பட்டது. எனது கட்சிக்காரர் சில பகுதிகளை அவரது டேப்பில் அழித்து விடும்படி கூறிய பின்னரும், அந்த பகுதிகள் என்ன காரணத்தாலோ அந்த இதழிலே வெளியிடப்பட்டுள்ளது.
கருணாநிதியை மதிக்க கூடியவர்
உங்கள் நோட்டீசிலே குறிப்பிட்டு இருப்பதைப் போல தங்கள் கட்சிக்காரரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் படியாக ஏதுவும் கூறவில்லை என்பதை என் கட்சிக்காரர் தெரிவித்துக் கொள்கிறார். எனது கட்சிக்காரர், நிருபருக்கு பேட்டி அளித்த போது,
உங்கள் கட்சிக்காரரை எப்போதும் தான் மதிக்கக்கூடியவர் என்றும், அவரை `கலைஞர்' என்று தான் அழைப்பது வழக்கம் என்றும், `கருணாநிதி' என்று கூட உச்சரிக்க மாட்டார் என்றும் கூறியதையெல்லாம் கூட வேண்டுமென்றே குமுதம் இதழ் வெளியிடாமல் தவிர்த்து விட்டது என்றும் என் கட்சிக்காரர் தெரிவிக்கிறார்.
முக்தா சீனிவாசனின் முகநூல் பதிவைக் கொண்டு பைத்தியம் பிடித்த குரங்குக்கு சாராயத்தை கொடுத்தது போல் மரை கழண்டு உளரும் ,குரங்கு கையில் பூமாலை போல் இனியும் கம்பு சுத்துவதை நிறுத்துக.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா, சம்பத் ஆகியோர் நடித்த "சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்' நாடகத்தில் விடுப்பட்டுப் போன மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வை மறைந்த எனது தந்தையார் இரா.சங்கரலிங்கனார் என்னிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அந்நாடகத்தில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்க நேரிட்ட சம்பத், புகைபிடித்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரை விலகி விளக்குகள் எரிந்தன. காகப்பட்டராக நடித்த அண்ணாவின் கேள்விக்கணைகளுக்குப்
பதிலளிக்கத் தொடங்கிய சம்பத்தின் வாயிலிருந்து சிகரெட்டின் புகையைப் பார்த்த அண்ணா, உடனே சுதாரித்துக் கொண்டு, ""சிவாஜி, கனல் கக்கப் பேசுவாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ புகை கக்கப் பேசுகிறாயே'' என்று சொன்னபோது மாநாட்டு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி.
இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்.
இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?
இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால்1937-ம் ஆண்டு முதல்முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார்.
குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.
`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்
அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக்குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான்.
ஆனால், பைலட் மறுக்கிறார். உடனே 25 வயது பயணி ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி!
1999-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்பதற்காக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. இதை `நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாதிகளிடம் சரணடைந்த சம்பவம் இது'
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:- "அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதால் ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு
விரோதம் இருந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து வந்தது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பினார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். டெல்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார்.