ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார்.
குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.
தமிழ்செய்தி, ஜெயபேரிகை என்கிற தினசரி செய்தித்தாள்களையும், அலைகள் என்கிற பெயரில் வார இதழையும் நடத்திவந்தார். பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். பத்திரிகை செலவு, கட்சி செலவுகளால் பெரும் நட்டத்துக்கு உள்ளானதால் பிற்காலத்தில் அவைகளை நிறுத்தினார்.
மேடை பேச்சுகளில் தமிழ் வார்த்தைகள் அருவியாய் கொட்டும். அதன்பொருட்டே அவரை சொல்லின் செல்வர் என அழைத்தனர்.
பெரியார் – மணியம்மை திருமணம் சம்பத் தான் பெரியாரின் வாரிசு என்கிற கருத்தை நொறுக்கிவிட்டது. இயக்கத்தின் பெரும்பான்மை தளபதிகள் பெரியாரின் முடிவால் இயக்கத்தில் இருந்து விலகினர்.
பெரியாரின் மூத்த தளபதியான அண்ணாவின் பின்னால் பெரியாரின் வாரிசு என நம்பப்பட்ட சம்பத் உட்பட அனைவரும் சென்றனர்.
திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. பெரியாருக்கு அடுத்த இடத்தில் சம்பத் இருந்தார். படித்தவர், அனுபவசாலி, சிந்தனையாளர், சட்டதிட்டங்கள் வடிவமைப்பதில் வல்லவர், இளைஞர்களை ஈர்க்கும் பேச்சாற்றல் மிக்கவர்.
1957ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாகி டெல்லி சென்றார். டெல்லி அவரது கொள்கையை மட்டுமல்ல அவரையே மாற்றியது. திராவிட நாடு கொள்கையை தீவிரமாக ஆதரித்துப் பேசிய சம்பத், படிப்படியாக அதை பேசுவதை தவிர்த்தார்.
இதனை அறிந்த திமுக தலைவர்கள் திமுகவை விட்டு விலகுகிறார் என்பதை அறிந்தனர்.
அதோடு, கட்சியில் சம்பத் – கருணாநிதி ஆகியோர் தலைமையில் குழுக்கள் உருவாகின. அந்த குழு மோதலால் கருணாநிதியை நசுக்க எவ்வளவோ முயன்றார் சம்பத், அதில் தோல்விகளை சந்தித்தார்.
இதனால் திமுகவில் நடிகர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது, தன்னை மதிக்கவில்லை என குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு அண்ணாவுடன் சண்டை போட்டுக்கொண்டு திமுகவில் இருந்து விலகுவதாக 1961 ஏப்ரல் 9ந்தேதி சம்பத் அறிவித்தார். உடனடியாக தமிழ் தேசிய கட்சி என்கிற கட்சியை தொடங்கி நடத்தினார்.
அதற்கு பெரியார், பாரதிதாசன் போன்றோர் பெரும் ஆதரவு தெரிவித்தனர். 1962ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் தனிக்கட்சி சரியாக வராது என காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார்,
தோல்வி தான் கிடைத்தது.இவரது மனைவி சுலோசனாசம்பத். இவர்களுக்கு 1946ல் திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இளங்கோவன், இனியன் என இரண்டு பிள்ளைகள். அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியில் நீண்டகாலம் இருந்தவர் சுலோசனாசம்பத். அவர்களது மகன்களில்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர், அதிரடி கருத்தாளர், மத்திய இணையமைச்சர் பதவி வகித்தவர். இனியன் சம்பத்துக்கும் காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலான பொறுப்புகளில் இருந்தவர் பின்னர் பழ.நெடுமாறன் கட்சியில் இருந்தார்,
பின்னர் தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்துகிறார்.
தனது 51வது வயதில் அதாவது 23.2.1977ல் மறைந்தார் ஈ.வி.கே.சம்பத்.'எனக்குப் பிறகு இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டியது சம்பத் தான் என்று மனதுக்குள் திட்டமிட்டுவைத்திருந்தேன்’ என்றார் பெரியார்.
'நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டிய முதலமைச்சர் நாற்காலி இது. நான் உட்கார்ந்து இருக்கிறேன்’ என்றார் எம்.ஜி.ஆர். ஆனால், 'சொல்லின் செல்வர்’ என்ற பட்டத்தோடு மட்டுமே தன்னுடைய அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொண்டார் ஈ.வெ.கி.சம்பத்.
அவரைப் போல எவராலும் பேச முடியாது. அண்ணாவே பல நேரங்களில் அவரது பேச்சில் மயங்கியவர். சம்பத்தின் எழுத்தைக் கேட்டுக் கேட்டு வாங்கி தன்னுடைய இதழ்களில் கண்ணதாசன் வெளியிட்டு மகிழ்ந்தார். உள்ளூர் அரசியலையும்
உலக அரசியலையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மணிக்கணக்காய் விவாதிக்கும் திறமை சம்பத்துக்கு இருந்தது. ஆனாலும் அவரால் அரசியலில் கோலோச்ச முடியவில்லை. ஏன்? அதற்காகவே இந்தப் புத்தகம்!
அரசியலில் அனைத்துத் திறமைகளையும்விட முக்கியமானது கால்குலேட்டிவ் மைண்ட் என்பார்கள். அது இல்லாவிட்டால் தோல்வியே ஏற்படும் என்பதற்கு சம்பத் வாழ்க்கை ஒரு உதாரணம். அத்தை மகளைத் திருமணம் செய்துகொண்டால் எல்லாச் சொத்தும் வாரிசு உரிமையையும் தருவதாகப் பெரியார் சொன்னார்.
ஆனால் விரும்பிய பெண்ணைத்தான் மணப்பேன் என்று முடிவெடுத்தார் சம்பத். இதனால் கோபப்பட்ட பெரியார், மறுமணத்துக்கு ஏற்பாடு செய்தார். இதனால் திராவிடர் கழகமே இரண்டானது. பெரியாரை எதிர்த்து அண்ணாவுடன் வந்த சம்பத், அவருடனாவது முரண்படாமல் இருந்திருக்கலாம்.
அல்லது முரண்படுவதைக் காட்டாமல் அமைதியாக இருந்திருக்கலாம். 'கிடைக்காத திராவிட நாட்டுக்கு போலியாகப் போராடுகிறார் அண்ணா’ என்று சொல்லி அங்கிருந்தும் வெளியேறி, தனிக் கட்சி தொடங்கினார். காங்கிரஸுக்கு மாற்றாக தி.மு.க-வை மக்கள் ஏற்றுக்கொண்ட போது
தி.மு.க-வை எதிர்த்து சம்பத் ஆரம்பித்த கட்சி சோபிக்கவில்லை. மிகவும் நல்லவர். அதிகப்படியானத் திறமைகளைக்கொண்டவர். அவசரத்தாலும் காலம் அறியாமலும் செயல்பட்டதால் பெரிய பதவிகள் எதனையும் அடைய முடியாமல்போன தமிழ்நாட்டு அரசியலின் சோகமானப் பகுதிகளை நம்முடைய மனக்கண் முன்
கொண்டுவந்து நிறுத்துகிறது இந்தப் புத்தகம்.
'சொத்துக்கள் எனக்குக் கால் தூசு. வாரிசு உரிமை பற்றியும் நான் கவலைப்படவில்லை. கொள்கையே முக்கியம்’ என்று சொல்பவராக சம்பத் இருந்தார். 'சினிமாக்காரர்களை கட்சிக்குள் விடாதீர்கள்’
என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் விடுத்த எச்சரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டதன் பலனைத்தான் திராவிட இயக்கம் இன்றும் அனுபவிக்கிறது. 'அரசியலில் அன்பு, வழிபாடாகவும்... பாராட்டு, பூஜையாகவும் மாறிவிட்டால் நல்லவர்கள்கூட நமது தவறால்
பலி கேட்கும் தெய்வங்களாகவும் கோபித்துக் கொடுமை புரியும் காட்டுத் தேவதைகளாகவும் மாறிவிடுகின்றனர்’ என்று தி.மு.க. தொண்டர்களுக்கு சம்பத் எழுதிய ரகசியக் கடிதம் சொல்கிறது. அதனுடைய முற்றிய நிலையைத்தான் இன்று பார்க்கிறோம்.
நிறைவேற்றப்பட வேண்டிய கொள்கைகள், அவசியமான வாக்குறுதிகள், அமைதியான போராட்டங்கள், இவற்றுக்கான உண்மையான உழைப்புகள்... இவற்றைத்தான் சம்பத் வலியுறுத்தினார். அதனால்தான் பெரும் பதவிகளில் இல்லாவிட்டாலும் 'திராவிட இயக்கத்தின் தலைவர்’
என்ற வரிசையில் மரணத்துக்குப் பிறகும் கம்பீரமாக உட்காரவைக்கப்பட்டுள்ளார்.
தன்னிடம் இருந்து ஈ.வெ.கி. சம்பத் பிரிந்து சென்றபோது, ‘காது புண்ணானதால் தோட்டைக் கழட்டி வைத்திருக்கிறோம். மீண்டும் அணிவோம்’ என்று பரிவோடு சொன்னார் அண்ணா.
"ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா, சம்பத் ஆகியோர் நடித்த "சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்' நாடகத்தில் விடுப்பட்டுப் போன மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வை மறைந்த எனது தந்தையார் இரா.சங்கரலிங்கனார் என்னிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அந்நாடகத்தில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்க நேரிட்ட சம்பத், புகைபிடித்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரை விலகி விளக்குகள் எரிந்தன. காகப்பட்டராக நடித்த அண்ணாவின் கேள்விக்கணைகளுக்குப்
பதிலளிக்கத் தொடங்கிய சம்பத்தின் வாயிலிருந்து சிகரெட்டின் புகையைப் பார்த்த அண்ணா, உடனே சுதாரித்துக் கொண்டு, ""சிவாஜி, கனல் கக்கப் பேசுவாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ புகை கக்கப் பேசுகிறாயே'' என்று சொன்னபோது மாநாட்டு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி.
இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்.
இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?
இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால்1937-ம் ஆண்டு முதல்முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட...
கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
வக்கீல் நோட்டீஸ்
27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.
பேட்டியில் நீங்கள்,
"சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான்
`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்
அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக்குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான்.
ஆனால், பைலட் மறுக்கிறார். உடனே 25 வயது பயணி ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி!
1999-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்பதற்காக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. இதை `நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாதிகளிடம் சரணடைந்த சம்பவம் இது'
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:- "அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதால் ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு
விரோதம் இருந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து வந்தது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பினார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். டெல்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார்.