`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்

அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக்குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான்.
ஆனால், பைலட் மறுக்கிறார். உடனே 25 வயது பயணி ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி!
1999-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்பதற்காக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. இதை `நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாதிகளிடம் சரணடைந்த சம்பவம் இது'
என்று சொல்லி, வாஜ்பாய் அரசைத் தனது புத்தகத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி.
விமானக் கடத்தல் சம்பவத்தின்போது நடந்தது என்ன?

1999, டிசம்பர் 24. மாலை 4:25 மணிக்கு நேபாள் தலைநகர் காத்மண்டுவிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம். 178 பயணிகள், 2 பைலட்டுகள்,
13 இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் உட்பட மொத்தம் 193 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர். விமானம் புறப்பட்டு 40 நிமிடங்கள் கடந்த நிலையில், ஐந்து பேர் தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்தனர். அவர்களில் இருவர் பைலட்டுகளின் அறைக்குச் செல்ல,
மீதி மூவரும் விமானத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, பயணிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அந்தத் தீவிரவாதக் கும்பலிடம் நிறைய துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் இருந்தன.
``நாங்கள் பாகிஸ்தானில் இயங்கும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்'' என்கிறார்கள் கடத்தல்காரர்கள். பின்னர், அந்தக் கடத்தல் குழுவின் தலைவன் பைலட்டுகளை மிரட்டி பாகிஸ்தானின் லாகூரில் இறங்கச் சொல்கிறான். ஆனால்,
லாகூர் அதிகாரிகள் கடத்தல் விமானம் அங்கு தரை இறங்க அனுமதி தர மறுக்கிறார்கள். தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள வேறொரு விமான நிலையத்தில் விமானத்தைத் தரை இறக்குமாறு உத்தரவிடுகிறார்கள் கடத்தல்காரர்கள். அதற்கு `போதிய எரிபொருள் இல்லை.
எனவே, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லலாம்' என்று யோசனை சொல்கிறார்கள் பைலட்டுகள்.
இதற்கிடையில், தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் விமானம் கடத்தப்பட்ட தகவலை டெல்லிக்குச் சொல்கிறார் பைலட் ஒருவர். `அமிர்தசரஸிலிருந்து உடனே புறப்படாமல், ஏதாவது காரணம் சொல்லி தாமதம் செய்யுங்கள்' என பைலட்டுக்கு டெல்லி அதிகாரிகள் தகவல் அனுப்புகின்றனர்.
அந்தச் சமயத்தில், ​டெல்லியிலுள்ள அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் கடத்தல்காரர்கள்.

200 மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய அரசு தர வேண்டும். இந்தியச் சிறைச்சாலைகளிலிருக்கும் 36 பாகிஸ்தான் தீவிரவாதிகளை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும்.
ஜம்மு பகுதியில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட ஸஜத் ஆ கானி உடலைச் சகல மரியாதைகளுடன் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொள்ளாவிட்டால் அனைத்துப் பயணிகளையும் கொன்றுவிடுவோம்.
கடத்தல்காரர்களின் கோரிக்கை
அப்போது ஆட்சியிலிருந்த வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு, இந்தக் கோரிக்கைகளைக் கேட்டு ஆடிப்போனது. தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரானது வாஜ்பாய் அரசு. அதோடு டெல்லியிலிருந்து தேசியப் பாதுகாப்புப் படையினரை அமிர்தசரஸுக்கும் அனுப்பிவைத்தது.
அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக் குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான். ஆனால், பைலட் மறுக்கிறார்.
உடனே பயணிகள் கூட்டத்திலிருந்த 25 வயது இளைஞர் ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி. அந்த இளைஞரின் மனைவி கதறி அழத் தொடங்குகிறார். விமானம் அமிர்தசரஸிலிருந்து புறப்படுகிறது. லாகூரில் தரை இறங்க அனுமதி கிடைக்கிறது.
`விமானத்தை லாகூரிலேயே நிறுத்திவையுங்கள்' என பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கிறது இந்தியா. ஆனால், கடத்தல்காரர்களோ அடுத்து துபாய் செல்ல வேண்டும் என்கிறார்கள். பாகிஸ்தான், இந்தியாவின் கோரிக்கையை மறுக்கவே, துபாய்க்குப் பறக்கிறது விமானம்.
அங்கும் விமானம் தர இறங்க அதிகாரிகள் அனுமதி மறுக்கிறார்கள்.

`உயிருக்குப் போராடிவரும் பயணியின் நிலைமையை மனதில்வைத்து அனுமதி வழங்க வேண்டும்' என்கின்றன இந்தியாவும் அமெரிக்காவும். மனிதாபிமான அடிப்படையில் அனுமதி தருகிறது துபாய் அரசு. அதேநேரத்தில்,
`தீவிரவாதிகளை எதிர்க்க, இந்தியப் பாதுகாப்புப் படைக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்கிற இந்தியாவின் கோரிக்கையை மறுத்துவிடுகிறது துபாய்.
நேரம் நள்ளிரவைத் தாண்டுகிறது. விமானத்திலிருந்த உணவுகளும் தண்ணீரும் காலியாகிவிடுகின்றன. ``பெண்களையும் குழந்தைகளையும் விடுதலை செய்யுங்கள். தண்ணீர், உணவு தருகிறோம்'' என்கிறார்கள் துபாய் அதிகாரிகள். பெண்கள், குழந்தைகள் என 25 பயணிகளை விடுவிக்கிறது
தீவிரவாதக்குழு. கத்தியால் குத்தப்பட்ட இளைஞரின் உடலும் வெளியே அனுப்பப்படுகிறது. அதிக ரத்தம் வெளியேறிய காரணத்தால் அந்த இளைஞரின் உயிர் பிரிந்துவிட்டது.
உணவும் தண்ணீரும் கிடைத்தவுடன் துபாயைவிட்டுக் கிளம்புகிறது விமானம். அடுத்ததாக தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குச் செல்லுமாறு உத்தரவிடுகிறார்கள் தீவிரவாதிகள். டிசம்பர் 25-ம் தேதி காலை நேரத்தில் கந்தஹாரில் தரை இறங்கியது விமானம்.
அப்போதைய தாலிபன் அரசோடு இந்தியாவுக்கு நல்லுறவு இல்லாத காரணத்தால், ஆப்கனில் இந்தியத் தூதரகம் கிடையாது. எனவே, பாகிஸ்தானிலுள்ள ஆப்கன் தூதரகத்தின் உதவியோடு டிசம்பர் 27-ம் தேதியன்று கந்தஹார் சென்றது இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு.
இந்தியப் பாதுகாப்புப் படை ஆப்கானிஸ்தானுக்கு வர, தாலிபன் அரசு அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் கடத்தல்காரர்களுக்குப் பாதுகாப்பாக பீரங்கிகளையும், ராக்கெட் லாஞ்சர்களையும் விமானத்தைச் சுற்றி நிறுத்தினார்கள் தாலிபன்கள்.
இந்தநிலையில், தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியது இந்தியக் குழு. `ஒரு கோரிக்கையையும் ஏற்க மாட்டோம்; பயணிகளை விடுவியுங்கள்' எனத் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் பேசியது இந்தியா.
இதற்கிடையில் உணவு, தண்ணீரில்லாமல் விமானத்துக்குள் அவதிப்பட்டனர் பயணிகள். கழிவறைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமடைந்தன. வியர்வையில் பயணிகள் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.
`எப்படியாவது பயணிகளை விடுவியுங்கள்' எனப் பயணிகளின் உறவினர்கள், மனிதநேய ஆர்வலர்கள் இந்திய அரசிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர்.
நான்கு நாள்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மசூத் அஸார் உள்ளிட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது இந்திய அரசு. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், விடுதலை செய்யப்பட்ட மூன்று பயங்கரவாதிகளுடன் தனி விமானத்தில் கந்தஹார் சென்றார்.
அங்கு கடத்தல்காரர்களிடம் மூன்று பயங்கரவாதிகளையும் ஒப்படைக்கப்பட்டு, பயணிகளும், இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் மீட்டுவரப்பட்டனர்.
சுப்பிரமணியன் சுவாமி தனது புத்தகத்தில் சொல்லியிருப்பது என்ன?

`இந்தியாவில் மனித உரிமைகளும், பயங்கரவாதமும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அதில்,
``பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ.எஸ்., தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆப்கானிஸ்தான், மற்ற பயங்கரவாத அமைப்புகள், சீனாவால் ஆதரிக்கப்படும் வடகிழக்கு கிளர்ச்சியாளர்கள் என இந்தியா இன்று பயங்கரவாத முற்றுகையில் இருக்கிறது. இந்து நாகரிகத்தை அழிப்பது,
இந்து மதத்தைச் சீரழிப்பது உள்ளிட்டவைதான் பயங்கரவாதிகளின் அரசியல் குறிக்கோள். ஆகையால், அவர்களின் எந்தவிதக் கோரிக்கைக்கும் அரசு ஒருபோதும் அடிபணிந்துவிடக் கூடாது. ஏனென்றால், கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை மீட்பதற்காக
1999-ம் ஆண்டு டிசம்பரில் மசூத் அஸார் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. நவீன இந்திய வரலாற்றில் பயங்கரவாதிகளிடம் அடைந்த மிகவும் மோசமான சரணடைதல் அது. அப்போது நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளை,
நீதிமன்ற அனுமதிகூட பெறாமல் விடுவித்தது வாஜ்பாய் அரசு.

அதுமட்டுமல்லாமல் அந்த பயங்கரவாதிகளை இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஒப்படைப்பதற்கு பதிலாக, மூத்த மத்திய அமைச்சர் ஒருவரால் பிரதமரின் சிறப்பு விமானத்தில் அரசு விருந்தினர்கள்போல கந்தஹாருக்குக் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டனர்.
இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், விடுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்று இந்துக்களைக் கொல்வதற்காக மூன்று தனி பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கினர்'' என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

15 Oct
"ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா, சம்பத் ஆகியோர் நடித்த "சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்' நாடகத்தில் விடுப்பட்டுப் போன மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வை மறைந்த எனது தந்தையார் இரா.சங்கரலிங்கனார் என்னிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அந்நாடகத்தில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்க நேரிட்ட சம்பத், புகைபிடித்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரை விலகி விளக்குகள் எரிந்தன. காகப்பட்டராக நடித்த அண்ணாவின் கேள்விக்கணைகளுக்குப்
பதிலளிக்கத் தொடங்கிய சம்பத்தின் வாயிலிருந்து சிகரெட்டின் புகையைப் பார்த்த அண்ணா, உடனே சுதாரித்துக் கொண்டு, ""சிவாஜி, கனல் கக்கப் பேசுவாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ புகை கக்கப் பேசுகிறாயே'' என்று சொன்னபோது மாநாட்டு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி.
Read 23 tweets
15 Oct
இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்.

இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?
இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால்1937-ம் ஆண்டு முதல்முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.

.
Read 22 tweets
15 Oct
பெரியாரின் வாரிசாகப் பார்க்கப்பட்டவர்.

பின் காங்கிரசில் இணைந்தவர்.

ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார்.
குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.
Read 28 tweets
15 Oct
பாவாடை நாடா அவதூறு*

கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட...

கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
வக்கீல் நோட்டீஸ்

27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.

பேட்டியில் நீங்கள்,
"சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான்
Read 21 tweets
14 Oct
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
Read 19 tweets
14 Oct
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:- "அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதால் ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு
விரோதம் இருந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து வந்தது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பினார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். டெல்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார்.
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(