அதில் ஒரு சிறந்த வயலின் வித்வான் வாழ்ந்து வந்தார்.
அவர் வயலின் இசைக்கு யாவரும் வசப்படுவர்.
அப்படிப்பட்ட ஞானமுடையவர்.
இந்நிலையில் அவ்வூரில் முகாமிட்டிருந்த சர்க்கஸ் கூடாரத்திலருந்த புலி ஒன்று தப்பித்து ஊருக்குள் புகுந்து விட்டதாக தகவல் பரவியது. (1)
இதைக் கேட்ட மக்கள் தங்களை பாதுகாப்பதில் ஈடுபட்டதோடு அவர்கள் மிகவும் நேசித்த வயலின் வித்வானையும். எச்சரித்தனர்.
இந்த நிலையில் வித்துவானின் கெட்ட நேரம், புலியும் அவர் முன்னே வந்து நின்றது
வித்வான் பயப்படவே இல்லை. பட்டென்று தன் வயலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். (2)
அவருடைய நம்பிக்கை நம் இசை கேட்டு புலி நம் வசமாகிவிடும் என்று.
மக்கள் இவரின் செயலை பார்த்து இது என்ன முட்டாள்தனம் என்று பார்த்து கொண்டிருக்கும் போதே,
நல்ல வேளை சர்க்கஸ் கூடாரத்திற்கு புலி ஊருக்குள் வந்த தகவல் போய்,
சர்க்கஸின் ரிங் மாஸ்டர் அங்கு வந்து சேர்ந்தார். (3)
உடனடடியாக அவர் புலியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, மெல்ல சொன்னாராம் நம்ம வயலினிஸ்டிடம்,
வித்வான் ஐயா, நீங்கள் மிக சிறந்த வயலின் வித்வானாக இருக்கலாம். ஆனால் இந்த புலிக்கு காது கேட்காது. எனவே இது போன்ற முட்டாள்தனமான காரியங்களை இனி ஒரு போதும் செய்யாதீர்கள் என்று. (4)
பிரதமர் #மோடி பற்றிய பேச்சு வந்தால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி இருக்கிறார் என்பது போன்ற வாழ்த்துகள் இந்துத்துவர்களிடையே குவிந்து விடுகின்றன.
சமீபத்தில் கூட 'இந்திய பாஸ்போர்ட்டின் மகிமையை மோடி உயர்த்தி விட்டிருக்கிறார் என்கிறார் நம் உள்துறை அமைச்சர் #அமித்_ஷா.!
எப்படி உயர்த்தி இருக்கிறார் என்ற விபரங்கள் எதுவும் ஷா கொடுக்கவில்லை.
பரவாயில்லை. அவர் கொடுக்காவிடில் கொடுக்க நமக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
ஒரு பாஸ்போர்ட்டின் மதிப்பு என்பது உலகெங்கும் ஒரே ஒரு அளவீட்டில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.
அது என்ன கணக்கீடு தெரியுமா?
அந்தப் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா தேவைப்படாமல் செல்ல முடியும் என்பதுதான் அது.
பிரிட்டன், அமெரிக்க பாஸ்போர்ட்களை வைத்து பெரும்பாலான ஐரோப்பிய, தென் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜாலியாக பிளேன் பிடித்து அதை வைத்திருப்பவர்கள் போய் வரலாம்.