பிரதமர் #மோடி பற்றிய பேச்சு வந்தால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி இருக்கிறார் என்பது போன்ற வாழ்த்துகள் இந்துத்துவர்களிடையே குவிந்து விடுகின்றன.
சமீபத்தில் கூட 'இந்திய பாஸ்போர்ட்டின் மகிமையை மோடி உயர்த்தி விட்டிருக்கிறார் என்கிறார் நம் உள்துறை அமைச்சர் #அமித்_ஷா.!
எப்படி உயர்த்தி இருக்கிறார் என்ற விபரங்கள் எதுவும் ஷா கொடுக்கவில்லை.
பரவாயில்லை. அவர் கொடுக்காவிடில் கொடுக்க நமக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
ஒரு பாஸ்போர்ட்டின் மதிப்பு என்பது உலகெங்கும் ஒரே ஒரு அளவீட்டில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.
அது என்ன கணக்கீடு தெரியுமா?
அந்தப் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா தேவைப்படாமல் செல்ல முடியும் என்பதுதான் அது.
பிரிட்டன், அமெரிக்க பாஸ்போர்ட்களை வைத்து பெரும்பாலான ஐரோப்பிய, தென் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜாலியாக பிளேன் பிடித்து அதை வைத்திருப்பவர்கள் போய் வரலாம்.
ஏறக்குறைய பஸ்சில் ஏறி திருச்சி, மதுரை போவது போலத்தான்.
தொடர்ந்து அதிகதிக நாடுகள் தங்கள் எல்லைகளை ஒரு தேசக் குடிமக்களுக்கு திறந்து வைக்கும் பொழுது அந்தப் பாஸ்போர்ட்டின் மகிமை உயர்கிறது.
இந்த விபரங்களை பன்னாட்டு அளவில் பின் தொடர்ந்து Henley என்ற நிறுவனம் துல்லியமாக வெளியிடுகிறது.
பாஸ்போர்ட் அட்டவணை, Passport Index என்ற தரவரிசையைத் தொடர்ந்து அந்த நிறுவனம் பதிப்பித்து வருகிறது.
அந்தத் தரவின்படி உலகிலேயே அதிக நாடுகளுக்கு சகஜமாக பயணிக்கும் நிலையில் இருப்பது ஜப்பானிய சிங்கப்பூர் குடிமக்களே.
அவர்கள் பாஸ்போர்ட் "192 நாடுகளின்" கதவுகளை அலட்சியமாகத் திறக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட் "185 நாடுகளைத் திறந்து" 8 ம் இடத்தில் இருக்கின்றன.