#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கழுதையொன்று புலியிடம் புல்லின் நிறம் நீலம் என்று கூறியது. புலியோ கோபமடைந்து இல்லை புல்லின் நிறம் பச்சை என்று கூறியது. விவாதம் சூடு பிடித்து இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர். எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர்.
சிங்கம் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, அரசே, புல் நீலநிறமானது என்பது தானே உண்மை என்று கேட்டது. சிங்கமோ, உண்மை புல் நீல நிறமானது என பதிலளித்தது. கழுதை தொடர்ந்தது. புலி என்னுடன் உடன்படவில்லை முரண்படுகிறது அரசே, என்னை எரிச்சலூட்டுகிறது, தயவு செய்து அவரை
தண்டியுங்கள் என்றும் கூறியது. அப்போது அரசர், புலியாகிய நீங்கள் இன்றிலிருந்து இரண்டு வருடங்களுக்கு யாருடனும் பேசவேக் கூடாது. மௌனமாகவே இருக்க வேண்டும். இதுதான்
உங்களுக்குரிய தண்டனை என்று
அறிவித்தது. கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து புல் நீலநிறமானது புல்
நீல நிறமானது என்று கூறிக்
கொண்டே அங்கிருந்து அகன்றது.
புலி அதனது தண்டனையை ஏற்றுக்
கொண்டது. ஆனால் அது சிங்கத்திடம் சென்று, அரசே ஏன் என்னைத் தண்டித்தீர்கள், புல்லின் நிறம் பச்சை தானே என்றது. அதற்கு சிங்கம், நீங்கள் சொல்வது
சரியே, புல் பச்சை நிறம் தான் என்றது. அப்படியானால் ஏன் என்னைத் தண்டித்தீர்கள் என்று
புலி கேட்டது. சிங்கம் பதிலளித்தது. புல் நீலமா அல்லது பச்சை நிறமா என்ற கேள்விக்கும் தண்டனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. உங்களைப் போன்ற ஒரு துணிச்சலான, புத்திசாலியான கம்பீர உயிரினம் ஏன் கழுதையுடன் விவாதித்து பொன்னான நேரத்தை வீணாக்கினீர்கள் என்பதே எனக்கு பெருங் கவலையை உண்டு பண்ணியது.
அதற்கே இந்தத் தண்டனை. முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது தான் மிக மோசமான நேர விரயமாகும். அவர்கள் உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி சிறிதளவும் கவலையேப் படாதவர்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களது பேச்சு வாத-விவாதங்களில் வெற்றி மட்டுமே. ஆகவே அர்த்தமில்லாத விவாதங்களில்
நேரத்தை வீணாக்காதீர்கள். நாம் அவர்களுக்கு எத்தனை ஆதாரப் பூர்வமான சான்றுகளை வழங்கினாலும் அவர்கள் புரிந்து கொள்ளும் திறனே இல்லாதவர்களே. அவர்களின் அகங்காரத்தாலும், வெறுப்பு மற்றும் கோபத்தாலும், கண்மூடித்தனமாகவே தான் இருப்பார்கள். அவர்கள் பக்கம்
பிழையாகவே இருந்தாலும், அவர்களுக்கு
தம்மை சரியாக இருப்பதாகவே காட்டிக்கொள்ள வேண்டும். அறியாமை அலறும் போதும் மேலோங்கும் போதும் நுண்ணறிவு அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை. நாம் வீண் செய்யும் ஒவ்வொரு மணித் துளியும் நம்மை நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து விலகி செல்கிறோம்.
அவ்வாறு வீண் செய்யாது நாம் பிறந்த பிறவி நோக்கம் அறிந்து ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபடுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருவருக்கு தேதி குறித்து விட்டால், அந்த தேதியில் உயிரை எமதர்மன் எடுத்து விடுவார் என்று சொல்லுவார்கள். அவ்வாறு ஒரு சிற்பி கந்தனுக்கு தேதி குறித்து விட்டார் எமதர்மன். அந்த தேதி பற்றி சிற்பி கந்தனுக்கும் எப்படியோ தெரிய வந்து விட்டது. கந்தனுக்கு இறக்க விருப்பம்
இல்லை. எமன் ஒருமுறை தான் பாசக் கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன் படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார் கந்தன். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப் போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள்
செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்க வைத்து விட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டு படுத்து விட்டார். எமன் வந்தார், பார்த்தார். திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டு தான் சிலைகள் என்பதை யூகித்து விட்டார். ஆனால் எவை சிலைகள் எது சிற்பி
காஞ்சி மடத்தில் ஒரு விசேஷ நாள் என்பதால் கூட்டம் நிறைய இருந்தது. சலசலத்த நபர்கள் பெரியவாளை தரிசனம் பண்ணவேண்டிய முறை வந்தது. அந்த நபர்கள்ல முதல்ல நின்னவரைப் பார்த்த ஆசார்யா,
"நோக்கு சிவபுராணம் தெரியுமோ?" என்று கேட்டார்.
"ஏதோ படிச்சிருக்கேன் பெரியவா!" கைகட்டி வாய் பொத்தி பவ்யமாக
சொன்னார்.
"அதுல இருந்து உன்னண்டை ஒரு கேள்வி கேட்கலாமோ?"
"பெரியவா மன்னிக்கணும் எனக்கு புராணத்துல பாண்டித்தியமெல்லாம் இல்லை. ஏதோ படிச்சிருக்கேன் அதனால்... இழுத்தார் அவர்.
"ஒரே ஒரு சின்னக்கேள்வி பரமேஸ்வரனோட ஸ்வரூபம் எப்படி இருக்கும்னு தெரியுமோ? அதைச் சொன்னா போதும்."
"மகேஸ்வரனோட
வடிவங்கள்ல மூணு பிரிவு இருக்குன்னு புராணம் சொல்றது. ரூபம், அரூபம், ரூபா ரூபம்னு" தயங்கித் தயங்கி சொன்னவரை தடுத்தார் பெரியவா.
"அவ்வளவு டீப்பா எல்லாம் போக வேண்டாம் அவரோட ரூபத்துல என்னவெல்லாம் இருக்கும்? இதெல்லாம் நீ பார்த்த சித்திரங்களை நினைவுபடுத்திண்டு சொன்னாலே போதும்!" மென்மையாக
#உஜ்ஜயினி மஹாகாளியின் அருள் பெற்ற யசோதர்மன் விக்ரமாதித்தியனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கினார் #வராஹமிஹிரர் வானியலாளர், கணித மற்றும் ஜோதிட மேதையான இவர் மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவர் தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். சூரியனை வழிபட்டு
வந்த தந்தையிடமிருந்து ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்தார். மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அரசன் வராஹமிஹிரரை அழைத்து ராஜகுமாரனின் ஜாதகத்தைக் கணித்துப் பலன்களைக் கூறுமாறு வேண்டினான். மிகக் கவனமாக ஜாதகத்தைக் கணித்து அவர், இந்த ராஜகுமாரனுக்கு அற்ப ஆயுளே உள்ளது, இவனது பதினெட்டாம்
வயதில் ஒரு பன்றியால் மரணம் ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று வருத்தத்துடன் கூறி அவன் இறக்கவிருக்கும் நாள் மற்றும் மாலை நேரத்தில் எந்த மணியில் அது சம்பவிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கூறினார். அரசன் திடுக்கிட்டான். தனது அருமை மந்திரி பட்டியை அழைத்து ஆலோசித்தான்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆறு வயது சிறுவன் சரவணன் தன் நான்கு வயது தங்கை சுமதியை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தன் தங்கை சுமதியை பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து
அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் சரவணன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி சுந்தரம், உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த கடல்
சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். அய்யா இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்கார முதலாளி அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார். சிறுவன் சரவணன் மகிழ்ச்சியுடன் மீதி உள்ள சிப்பிகளுடன் தன்
ஸுப்ரமண்ய புஜங்கத்தில் திருச்செந்தூரில் பன்னீர் இலையில வைத்துக் கொடுக்கப்படும் விபூதியின் மஹிமையைப் பற்றி ஆதிசங்கர பகவத்பாதாள் விசேஷமாக சொல்கிறார். ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா
அணியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
என்று சொல்கிறார். விபூதி தரித்துக் கொண்டவர்களிடம் எனக்கு பயம் இருப்பதில்லை. மற்றோரை பார்த்தல் பயம் ஏற்படுகிறது என்கிரார். அச்சப்பத்து-என்று பத்துப்
பாடல், பகவானிடம் நெருக்கம் ஏற்பட்ட பின் உலக விஷயங்களைப் பார்த்தாலே பயமாக உள்ளது என பத்து பாடல்கள் இயற்றியுள்ளார். அதில் வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே என்று சொல்கிறார். விபூதிக்கு அத்தனை மகிமை. திருநீறு இட்டுக் கொண்டு வந்தால் பஞ்சமா பாதங்களும் போகும், கைலாசம்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சிரவணன் எனும் அரசரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன. தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார். ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவரான வேல்முருகன் தவறான ஒரு கருத்தை சொன்னார். அரசருக்கு கோபம் வந்துவிட்டது. இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள் என
கட்டளையிட்டார் அரசர் சிரவணன். வேலைக்காரன் வேல்முருகன் கெஞ்சினான். அரசே நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன். நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் தாருங்கள் என்றான். ராஜா சிரவணன் ஒப்புக
கொண்டார். அந்த பத்து நாட்களில் வேலைக்காரன் வேல்முருகன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான். காவலர் குழப்பமடைந்தார் ஆனாலும் ஒப்புக்கொண்டார். வேலைக்கார வேல்முருகன் அந்த நாய்களுக்கு