#உஜ்ஜயினி மஹாகாளியின் அருள் பெற்ற யசோதர்மன் விக்ரமாதித்தியனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கினார் #வராஹமிஹிரர் வானியலாளர், கணித மற்றும் ஜோதிட மேதையான இவர் மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவர் தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். சூரியனை வழிபட்டு
வந்த தந்தையிடமிருந்து ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்தார். மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அரசன் வராஹமிஹிரரை அழைத்து ராஜகுமாரனின் ஜாதகத்தைக் கணித்துப் பலன்களைக் கூறுமாறு வேண்டினான். மிகக் கவனமாக ஜாதகத்தைக் கணித்து அவர், இந்த ராஜகுமாரனுக்கு அற்ப ஆயுளே உள்ளது, இவனது பதினெட்டாம்
வயதில் ஒரு பன்றியால் மரணம் ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று வருத்தத்துடன் கூறி அவன் இறக்கவிருக்கும் நாள் மற்றும் மாலை நேரத்தில் எந்த மணியில் அது சம்பவிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கூறினார். அரசன் திடுக்கிட்டான். தனது அருமை மந்திரி பட்டியை அழைத்து ஆலோசித்தான்.
பட்டியின் ஆலோசனையின் பேரில் ராஜகுமாரனுக்காக 80 அடி மதில் சுவர் உள்ள ஒரு பிரத்யேகமான அரண்மனை கட்டப்பட்டது. அதைச் சுற்றி ஆயிரக்கணக்கான வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். பன்றி என்ற மிருகமே தொலை தூரத்திற்கும் இல்லாதபடி பன்றிகள் அழிக்கப்பட்டன. ராஜகுமாரனுக்கு அனைத்துப் பயிற்சிகளும்
அரண்மனைக்குள்ளேயே அளிக்கப்பட்டதால் அவனுக்கு வெளியில் செல்ல வாய்ப்பே இல்லை ஆண்டுகள் உருண்டோடின. மன்னன் ராஜகுமாரனின் பதினெட்டாம் ஆண்டில் வராஹமிஹிரர் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நாளில் அவரை அழைத்தான். கடந்த ஆண்டுகளில் நான் செய்த காவல் திட்டத்தைக் கவனித்திருப்பீர்கள். இப்போது
சொல்லுங்கள் என் பையனுக்கு ஒன்றும் நேராது அல்லவா என்றார். வராஹமிஹிரர் வருத்தத்துடன் அரசே! விதியை யாராலும் வெல்ல முடியாது. இன்று மாலை ராஜகுமாரனுக்கு பன்றியின் மூலம் மரணம் நிச்சயம் என்று கூறினார். மன்னன் உடனே தன் மெய்காவலர்களை அழைத்து ஒவ்வொரு மணி நேரமும் ராஜகுமாரனின் நிலை பற்றி
எனக்கு அறிவியுங்கள் என்று ஆணையிட்டான். மாலையும் கடந்தது. கடைசியாக மன்னனுக்கு வந்த செய்தியின் படி அவன் தனது அறையில் மற்ற சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மன்னன் வராஹமிஹிரரை அழைத்து உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள் என்றான். வராஹமிஹிரரோ துக்கத்துடன் ராஜகுமாரன் இறந்து சிறிது
நேரம் ஆகி விட்டது. வாருங்கள் அவன் அரண்மனைக்குப் போகலாம் என மன்னனை துரிதப் படுத்தினார். கலங்கிய மன்னன் அரண்மனைக்கு விரைந்தான். அங்கே ராஜகுமாரனின் அறையில் அவனைக் காணோம். அனைவரும் பரபரப்புடன் தேடினர். கடைசியில் அரண்மனையின் ஏழாவது மாடியில் ரத்த வெள்ளத்தில் ராஜ குமாரன் இறந்து கிடந்ததை
பார்த்து மன்னன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நெடுநேரம் தன் அறையில் இருந்த ராஜகுமாரன் விதி ஆணையிட்ட அந்த சமயத்தில் மேல்மாடிக்குச் சென்றிருக்கிறான். அரண்மனை கோபுரத்தின் உச்சியில் ராஜ இலச்சினையான பன்றி இலச்சினை கொடிக்கம்பத்தில் இணைக்கப் பட்டிருந்தது. அங்கு அது வரை கண்டிராத
பலத்த காற்று வீசவே அது ஆடி ராஜகுமாரன் மீது விழவே அதனால் வெட்டுண்டு ராஜகுமாரன் மரணமடைந்தான். வராஹத்தின் மூலம் அதாவது பன்றியின் மூலம் மரணம் வருவதைச் சொன்ன இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் வராஹமிஹிரர் என அழைக்கப்படலானார்! அவர் வாழ்ந்த 80 ஆண்டுகளும் உலகினரால் அவர் பெரிதும் மதிக்கப்
பட்டார். வராஹமிஹிரர் ஜோதிடக் கலையை தனது கூரிய அறிவின் மூலமாக ஒரு உன்னதமான ஸ்தானத்தில் ஏற்றி வைத்தார். அவர் இயற்றிய பல நூல்கள் இன்றும் ஆச்சரியத்தை விளைவிக்கும் அபூர்வ நூல்களாக விளங்குகின்றன. நவீன விஞ்ஞானிகளே மலைக்கும் அவரது கணித அறிவும், வானியல் அறிவும் பிரமிக்க வைப்பவை! இத்தோடு
ஜோதிட அறிவையும் உலகியல் அறிவையும் மனித குலம் மீது அவருக்குள்ள மனிதாபிமானத்தையும் அவரது நூல்கள் மூலம் காண முடியும். வானவியலிலும் கணிதத்திலும் தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மேதையாகத் திகழ்ந்த #ஆர்யபட்டரின் சிஷ்யர் இவர். நியூட்டன் பின்னால் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றி
வராஹமிஹிரர் நன்கு விளக்கி இருப்பது பிரமிக்க வைக்கும் விஷயமாகும். புவி ஈர்ப்பு விசையை அவர் குருத்வ ஆகர்ஷண் என குறிப்பிடுகிறார். அதாவது குருவினால் ஈர்க்கப்படுதல் என்பது இதன் பொருள். சூரியனை நடு நாயகமாகக் கொண்டு சூரியனின் ஆகர்ஷணத்தால் இதர கிரகங்கள் பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்
பட்டு இருப்பதை அவர் கண்டறிந்து அதை குருத்வாகர்ஷன் என்று பெயரிட்டார்! வானவியலை கோள சாஸ்திரம் என நமது பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோள சாஸ்திரம் நாலந்தா பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்தது. கோள சாஸ்திரத்தில் நிபுணராகத் திகழ்ந்த ஆர்யபட்டர் புதிய கண்டுபிடிப்புகளால்
அனைவரையும் வியக்க வைத்தார். ஆர்யபட்டர் எழுதிய அற்புதமான நூல் #ஆர்யபட்டீயம்! இந்த நூலுக்குப் பல மேதைகள் விரிவாக விளக்கவுரைகள் எழுதி உள்ளனர். வராஹமிஹிரரின் புதல்வரும் தன் பங்கிற்கு ஜோதிடக் கலை வித்தகராக ஆனார். வராஹமிஹிரரின் புதல்வரான #ஹோராசரர் ப்ரஸ்ன சாஸ்திரம் பற்றி ஷட்பஞ்சசிகா
என்ற நூல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். வராஹமிஹிரரின் நூல்களுக்கு விளக்கவுரையாக அவரது நூல்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. இப்படி #உஜ்ஜயினி வாழ் ஜோதிடமேதைகள் வேத ஜோதிடத்திற்கு விஞ்ஞான முறையில் ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்ததோடு அதை உலகெங்கும் பரப்பினர்! #வாழ்கபாரதம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருவருக்கு தேதி குறித்து விட்டால், அந்த தேதியில் உயிரை எமதர்மன் எடுத்து விடுவார் என்று சொல்லுவார்கள். அவ்வாறு ஒரு சிற்பி கந்தனுக்கு தேதி குறித்து விட்டார் எமதர்மன். அந்த தேதி பற்றி சிற்பி கந்தனுக்கும் எப்படியோ தெரிய வந்து விட்டது. கந்தனுக்கு இறக்க விருப்பம்
இல்லை. எமன் ஒருமுறை தான் பாசக் கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன் படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார் கந்தன். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப் போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள்
செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்க வைத்து விட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டு படுத்து விட்டார். எமன் வந்தார், பார்த்தார். திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டு தான் சிலைகள் என்பதை யூகித்து விட்டார். ஆனால் எவை சிலைகள் எது சிற்பி
காஞ்சி மடத்தில் ஒரு விசேஷ நாள் என்பதால் கூட்டம் நிறைய இருந்தது. சலசலத்த நபர்கள் பெரியவாளை தரிசனம் பண்ணவேண்டிய முறை வந்தது. அந்த நபர்கள்ல முதல்ல நின்னவரைப் பார்த்த ஆசார்யா,
"நோக்கு சிவபுராணம் தெரியுமோ?" என்று கேட்டார்.
"ஏதோ படிச்சிருக்கேன் பெரியவா!" கைகட்டி வாய் பொத்தி பவ்யமாக
சொன்னார்.
"அதுல இருந்து உன்னண்டை ஒரு கேள்வி கேட்கலாமோ?"
"பெரியவா மன்னிக்கணும் எனக்கு புராணத்துல பாண்டித்தியமெல்லாம் இல்லை. ஏதோ படிச்சிருக்கேன் அதனால்... இழுத்தார் அவர்.
"ஒரே ஒரு சின்னக்கேள்வி பரமேஸ்வரனோட ஸ்வரூபம் எப்படி இருக்கும்னு தெரியுமோ? அதைச் சொன்னா போதும்."
"மகேஸ்வரனோட
வடிவங்கள்ல மூணு பிரிவு இருக்குன்னு புராணம் சொல்றது. ரூபம், அரூபம், ரூபா ரூபம்னு" தயங்கித் தயங்கி சொன்னவரை தடுத்தார் பெரியவா.
"அவ்வளவு டீப்பா எல்லாம் போக வேண்டாம் அவரோட ரூபத்துல என்னவெல்லாம் இருக்கும்? இதெல்லாம் நீ பார்த்த சித்திரங்களை நினைவுபடுத்திண்டு சொன்னாலே போதும்!" மென்மையாக
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆறு வயது சிறுவன் சரவணன் தன் நான்கு வயது தங்கை சுமதியை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தன் தங்கை சுமதியை பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து
அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் சரவணன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி சுந்தரம், உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த கடல்
சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். அய்யா இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்கார முதலாளி அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார். சிறுவன் சரவணன் மகிழ்ச்சியுடன் மீதி உள்ள சிப்பிகளுடன் தன்
ஸுப்ரமண்ய புஜங்கத்தில் திருச்செந்தூரில் பன்னீர் இலையில வைத்துக் கொடுக்கப்படும் விபூதியின் மஹிமையைப் பற்றி ஆதிசங்கர பகவத்பாதாள் விசேஷமாக சொல்கிறார். ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா
அணியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
என்று சொல்கிறார். விபூதி தரித்துக் கொண்டவர்களிடம் எனக்கு பயம் இருப்பதில்லை. மற்றோரை பார்த்தல் பயம் ஏற்படுகிறது என்கிரார். அச்சப்பத்து-என்று பத்துப்
பாடல், பகவானிடம் நெருக்கம் ஏற்பட்ட பின் உலக விஷயங்களைப் பார்த்தாலே பயமாக உள்ளது என பத்து பாடல்கள் இயற்றியுள்ளார். அதில் வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே என்று சொல்கிறார். விபூதிக்கு அத்தனை மகிமை. திருநீறு இட்டுக் கொண்டு வந்தால் பஞ்சமா பாதங்களும் போகும், கைலாசம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கழுதையொன்று புலியிடம் புல்லின் நிறம் நீலம் என்று கூறியது. புலியோ கோபமடைந்து இல்லை புல்லின் நிறம் பச்சை என்று கூறியது. விவாதம் சூடு பிடித்து இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர். எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர்.
சிங்கம் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, அரசே, புல் நீலநிறமானது என்பது தானே உண்மை என்று கேட்டது. சிங்கமோ, உண்மை புல் நீல நிறமானது என பதிலளித்தது. கழுதை தொடர்ந்தது. புலி என்னுடன் உடன்படவில்லை முரண்படுகிறது அரசே, என்னை எரிச்சலூட்டுகிறது, தயவு செய்து அவரை
தண்டியுங்கள் என்றும் கூறியது. அப்போது அரசர், புலியாகிய நீங்கள் இன்றிலிருந்து இரண்டு வருடங்களுக்கு யாருடனும் பேசவேக் கூடாது. மௌனமாகவே இருக்க வேண்டும். இதுதான்
உங்களுக்குரிய தண்டனை என்று
அறிவித்தது. கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து புல் நீலநிறமானது புல்
நீல நிறமானது என்று கூறிக்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சிரவணன் எனும் அரசரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன. தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார். ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவரான வேல்முருகன் தவறான ஒரு கருத்தை சொன்னார். அரசருக்கு கோபம் வந்துவிட்டது. இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள் என
கட்டளையிட்டார் அரசர் சிரவணன். வேலைக்காரன் வேல்முருகன் கெஞ்சினான். அரசே நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன். நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் தாருங்கள் என்றான். ராஜா சிரவணன் ஒப்புக
கொண்டார். அந்த பத்து நாட்களில் வேலைக்காரன் வேல்முருகன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான். காவலர் குழப்பமடைந்தார் ஆனாலும் ஒப்புக்கொண்டார். வேலைக்கார வேல்முருகன் அந்த நாய்களுக்கு