கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது.
சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை.
தலவிருட்சம் : கடம்ப மரம்.
"தென்சேரி கிரி"’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது.
இங்கு கோயில் கொண்டிருக்கிற ஆறுமுகப்பெருமான் ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை (மந்+திர+கிரி=மந்திரகிரி) என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.
அடிவாரத்தில் மலைப்பாளையம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து நூற்று ஐம்பது அடி உயரத்தில்தான் கோயில் அமைந்துள்ளது என்பதால் மிக எளிதில் சென்று விடலாம்.
அடிவாரத்திற்கு சற்று மேலே... சந்தன வினாயகர் காட்சி தருகிறார். தனது தோற்றத்தினாலேயே உள்ளங்களில் குளிர்ச்சியை உண்டுபண்ணக்கூடிய இவர்,
சந்தனக் குளுமையாய்... இங்கே மணம் நிறைய வீற்றிருக்கிறார். அதிலிருந்து இன்னும் கொஞ்சம் சென்றதும்... இடும்பனைத் தரிசிக்கிறோம்.
உச்சியில் கிழக்கு நோக்கி மந்திரகிரி வேலாயுத சுவாமியின் திருக்கோயில் துலங்குகிறது. கோவிலின் உள்ளே மூலவர் அழகுத் திருக்கோலமாய் விளங்ககிறார்.
ஆறுமுகத்துடன் வள்ளி தெய்வானை சமேதராய்க் காட்சி அளிக்கும்... அந்த அருட்பிரவாகத்தை மனமார வழிபடுகிறோம். இங்கேயுள்ள தனிச்சிறப்பு இவரின் ஆறுமுகங்களையும் ஒருசேர நாம் காணமுடிகின்ற ஒன்றாகும். மேலும் மயில் வாகனமானது இடதுபக்கம் தலையை வைத்திருக்கிற காட்சியையும் பார்க்க முடிகிறது.
தமிழ்நாட்டில் உள்ள முருகப் பெருமான் திருத்தலங்களில் சிலவற்றில் மட்டுமே இந்த தனித்துவத்தை நாம் காண இயலும்! விண்ணில் மேகங்கள் குவிந்தால்... விரிந்தாடுகிற தோகையென எண்ணமெல்லாம்... இந்த இறைஇவனின் திருமேனியில் குவிந்து விடுகிறது...! உள்ளமோ - வண்ண மயிலாக எழுந்து ஆடுகிறது.
இடது பக்கத்து கரத்தில் சேவற்கொடிக்கு பதிலாக, சேவலையே கொண்டுள்ளவர் இந்த செஞ்சேரி மலை இறைவன், அருணகிரிநாதரின் பக்தியுள்ளம் இந்த எழிற்கோலத்தை கண்டு பரவசமடைந்திருக்கிறது.
கர்ப்பக்கிரக முன்வாசல் மண்டபத்தின் இருபுறமும் கல்வெட்டுக்கள் சில உள்ளன. தலவிரு)ட்சமாக ‘கருநொச்சி’ உள்ளது.
கர்ப்பக் கிரகத்தின் வெளியே உள்ள அர்த்த மண்டபத்தில் கிழக்கு நோக்கி வலதுபுறத்தில் வினாயகரும், பிரகநாயகியம்மையும், இடது புறத்தில்... கைலாயநாதரும் காட்சி அளிக்கின்றனர்.
சுற்று வட்டாரத்து மக்கள் தங்களின் எதிர்காலப் பலன்கள் குறித்தும்,
துவங்கவிருக்கும் காரியங்கள் செவ்வனே நிறைவேற வேண்டும் என்பது குறித்தும் இந்த செவ்வேள் கந்தனின் கோயிலில் ‘பூக்கேட்டல்’ என்னும்ட வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
ஆறுமுகப் பெருமானின் திருக்கரங்களில் வலக்கையில் ஒன்றும், இடக்கையில் ஒன்றும் என பூக்களை வைக்கின்றனர்.
ஐந்து நிமிடங்களுக்குள் வலக்கையில் இருந்து பூ விழுமாயின், எண்ணி வந்த காரியம் ஜெயமாகும் எனவும்... இடக்கையில் இருந்து பூவிழுமாயின் அந்த காரியத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் நேரம் கடந்தும் பூ விழவில்லை என்றால் காலதாமதமாகும் எனவும் அர்த்தங்கள் இதற்கு இருக்கின்றன.
திருக்கோவிலின் வடபக்கத்தில் ‘சயிலோதகம்’ எனப்படும் ஞானதீர்த்தம், சுனை வடிவத்தில் காணப்படுகிறது. எந்த சூழலிலும் இந்த சுனை வற்றாமலிருப்பது சிறப்புக்குரியது. அபிஷேகத்திற்கும், பூஜைக்கும் இந்த நீரையே பயன்படுத்துகின்றனர்.
தலச்சிறப்பு :
இங்குள்ள தல மரத்தை 12 முறை சுற்றி வந்து சன்னதியில் தீபம் ஏற்றுவதன் மூலம் மனஅமைதி, தொழிற்தடை நீங்குதல், எதிரிகள்நீங்குதல், திருமண வரம், குழந்தை பேறு அடைவார்கள் என்று கூறப்படுகிறது.இது ஒரு மலைக்கோவில் என்பது குறிப்பிடதக்கது.
தல வரலாறு :
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அந்த திருக்குமரன், பிரணவ மந்திரத்தை தனது தந்தைக்கு உபதேசித்த திருத்தலம் எது என்றால் சுவாமிமலை என்று சட்டென்று பதில் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவன் உபதேசித்த திருத்தலம் எது என்றால்,
பலரும் திசை தெரியாதவர் போல் முழிக்கத் தான் செய்வார்கள். அத்தகைய சிறப்பு மிக்க திருத்தலம் கோவை மாட்டம் செஞ்சேரி மலையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவன் உபதேசித்த திருத்தலம் இது என்பதால் மிகவும் பழமையான திருத்தலம் என்றால் மிகையாகாது.
சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவன், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானை தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை,
முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி சிவபெருமானிடம் கூறினார் பார்வதிதேவி.
என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்' என்று வழி கூறினார்.
சிவனின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப் பெருமான் பூலோகம் வந்தார்.அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும்,
சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க.. 'தாம் தவம் இருக்க சரியான இடம் இது' என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார்.
தலபுராணம்:
தேவர்களைக் காப்பதற்காக, சூரபத்மனையும், அவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும்
அசுரர்களையும் அழிக்க வேண்டிய சூழல் உருவானது. இதற்காகவே முருகக்கடவுள் தோன்றினார் என்பது பரவலாக அறியப்பட்டிருக்கும் வரலாறு. இந்த முருகனுக்குத் துணையாக பரமசிவன்... வீரபாகுவை அனுப்பினார். பார்வதியோ சக்திவேலினைத் தந்தார்.
ஒரு கைக்கு சக்திவேலும், மீதமுள்ள பதினோரு கைகளுக்குப் பதினோரு ஆயுதங்களும் முருகப் பெருமானுக்கு தன் தாயாரால் இவ்விதம் வழங்கப்பட்ட பிறகு சூரபத்மனின் மாயச் சக்திகளில் இருந்து மீண்டு வர மந்திர உபதேசமும் செய்து வைக்கப்பட்டது. பார்வதிதேவியின் வேண்டுகோளுக்கேற்ப, பரமசிவனார்...
முருகப் பெருமானை நோக்கி ‘‘நீ போகிற வழியில் பேரருளால்... மலையின் வடிவமாக யாம் உள்ளோம். உன் தாயின் வடிவமாக சக்திகிரி அங்கே தென்படும்.
அந்தக் கிரியில் சென்று ஒரு தினம் சிவந்தனையோடு தவம் செய்வாயா! அங்கே வந்து மந்திர உபதேசத்தை உனக்குப் செய்தருளுகிறோம்’’ எனக் கூறினார்.
அதன்படியே தவத்தை மேற்கொண்ட முருகனின் திருச்செவிகளில் மூந்திரத்தை உரைத்து சூரபத்மனை வென்றுவர தந்தையார் கட்டளையிட்டார். அப்படி அவர் கட்டளையிட்டது இந்த மலையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பொருட்டே இந்த மலை ‘மந்திராசலம்’ எனப் பெயர் பெற்றது.
இந்த மலையின் குகையன்றில் யோக நிலையில் போகர் சிலகாலம் இருந்தார். அகத்தியர், வாமதேவர் முதலானோர் ஆசிரமம் அமைத்து அடிவாரத்தில் தங்கியிருந்தனர். பிரம்மன் தனது பாவம் நீங்க இங்கே நோன்பு மேற்கொண்டிருந்தான். போர் முடிந்து சூரனை வெற்றி கொண்ட நிலையில் திருப்பரங்குன்றத்தில்
தெய்வானையை மணம் முடித்துக் கொண்டு திரும்பி வரும்பொழுது முருகப் பெருமான் இங்கே தங்கினார் என்பவனை எல்லாம் தலபுராணத்திலிருந்து நமக்கு அறியக் கிடைக்கின்றன.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கின்ற கருநெல்லிமரங்கள் அடர்ந்து காணப்பட்டவனப்பகுதியில்,
அமைந்துள்ள பஞ்ச
பாண்டவர்களின் பெருமை பேசும் ஆலயம் பற்றி தெரியுமா?
திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் ஆலயம் உள்ளது.
இக்கோயிலில் சிவபெருமான் புண்ணியமூர்த்தியாகவும், இவருடன் மகாபாரத நாயகர்கள் தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலுக்கான பழங்கதை அற்புதமானது.
வனவாச காலத்தில் தென்னிந்திய பகுதிக்கு வந்த பஞ்சபாண்டவர்கள்,
முழுவதும் காடாக இருந்த நல்லமரம் பகுதியில் வசித்ததாக கூறப்படுகிறது.
இவ்வூர் காட்டுப்பகுதிக்குள் அக்காலத்தில் ‘சைந்தவர்’ எனும் முனிவர் வாழ்ந்துள்ளார்.
இவ்வனத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கிற நெல்லிக்கனியை அவர் உண்டு, தொடர் தவத்தில் இருந்திருக்கிறார்.
இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமான பூதத்தாழ்வார் அவதரித்த மகாபலிபுர ஸ்தல சயன பெருமாள் கோவில் வரலாறு:
108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது.
கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும்
பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ தேவியும் பூதேவியும்
நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள்.
திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலையில் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.
*சிறப்பு:
முருக வாகனமான மயில்கள் நடமாடும் கோயில்
*மாவட்டம்:புதுக்கோட்டை
*வட்டம்:விராலிமலை
தல வரலாறு :
விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கி.பி.1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர்,
வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம்.
அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்.
மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம்.
ஆனால் இங்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளி என்பதால் இவள் மதுரகாளி என்றானாளாம். ஆம், மதுரையை கடும் கோபம் கொண்டு எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு தகவல் இந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நிராதரவாக இங்கு வந்த கண்ணகி ஆவேசம் அடங்கி,