12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கின்ற கருநெல்லிமரங்கள் அடர்ந்து காணப்பட்டவனப்பகுதியில்,
அமைந்துள்ள பஞ்ச
பாண்டவர்களின் பெருமை பேசும் ஆலயம் பற்றி தெரியுமா?
திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் ஆலயம் உள்ளது.
இக்கோயிலில் சிவபெருமான் புண்ணியமூர்த்தியாகவும், இவருடன் மகாபாரத நாயகர்கள் தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலுக்கான பழங்கதை அற்புதமானது.
வனவாச காலத்தில் தென்னிந்திய பகுதிக்கு வந்த பஞ்சபாண்டவர்கள்,
முழுவதும் காடாக இருந்த நல்லமரம் பகுதியில் வசித்ததாக கூறப்படுகிறது.
இவ்வூர் காட்டுப்பகுதிக்குள் அக்காலத்தில் ‘சைந்தவர்’ எனும் முனிவர் வாழ்ந்துள்ளார்.
இவ்வனத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கிற நெல்லிக்கனியை அவர் உண்டு, தொடர் தவத்தில் இருந்திருக்கிறார்.
முனிவரை தவிர்த்து வேறு யாருடைய கண்களுக்கும் இந்த நெல்லிக்கனி தெரியாது.
இப்பகுதிக்கு வந்த திரவுபதி தாகத்தில் தவிக்க, வில் வீரரான அர்ஜூனன், பூமியை நோக்கி பாணத்தை எய்ய நீர் பெருக்கெடுத்திருக்கிறது.
அந்த நீரினைக் குடித்து தாகம் தணித்த திரவுபதியின் கண்களில்,
சைந்தவர் முனிவரின் கண்களுக்கு மட்டுமே தெரிகிற நெல்லிக்கனி தெரிந்திருக்கிறது.
திரவுபதியின் விருப்பத்தில், அர்ஜூனனும் அந்த கனியை தன் பாணத்தை எய்து வீழ்த்தியுள்ளார்.
இதையறிந்த தருமர், அந்த கனியின் மகத்துவம் அறிந்து அதனை மீண்டும் மரத்திற்கே அனுப்பும்படி கூறவே,
பரமாத்மா கிருஷ்ணபிரானின் உதவியால் அந்த கனியை அர்ஜூனன் மீண்டும் மரத்தில் சேர்த்திருக்கிறார்.
வனவாசம் முடிந்து மகாபாரத போருக்கு பின்பு மீண்டும் பஞ்சபாண்டவர்கள், மகாராணி திரவுபதியுடன் வந்து சைந்தவர் முனிவரிடம் ஆசிபெற்று சென்ற வரலாறு காலம்தோறும் பேசப்படுகிறது.
அர்ஜூனன் பாணம் செலுத்தி உருவான நீரூற்று வற்றாத நிலையில் இன்றும் இவ்வூரில், ‘அர்ஜூனன் கிணறு’ பெயரில் இருக்கிறது.
நல்லமரத்தில் சைந்தவர் முனிவர், கிருஷ்ணன், பேச்சியம்மன் ஆலயம் தனி சன்னதியாக இருக்கிறது.
அருகில் புண்ணிய மூர்த்தியாக சிவபெருமான், பஞ்சபாண்டவர்கள் 5 பேர்,
திரவுபதிக்கு தனி சன்னதியும் இருக்கின்றன.
மூலஸ்தானத்தில் சிவபெருமானுடன், பஞ்சபாண்டவர்களும் காட்சி தருகின்றனர்.
பரிவார தெய்வங்களான வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான், விநாயகர், வடக்கு அம்மன், உச்சி கருப்பசாமி, துவார பாலகர்கள் மற்றும்
தேரடிகருப்பசாமி ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர்.
சைந்தவர் முனிவர் ஆலயத்தில் முனிவருடன் கிருஷ்ணன், பேச்சியம்மன் வீற்றிருக்கின்றனர்.
இக்கோயிலில் சிவராத்திரி, ஆனித்திருவிழா சிறப்பாகும். இங்கு வழிபட்டால் திருமணத்தடை நீங்கும்.
தம்பதியினருக்கு மழலைச்செல்வம் வாய்க்கும் நம்பிக்கை இருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலம் கிடைக்கும் என்கிற ஐதீகமும் உள்ளது.
கோயில் கோபுரத்திலும் பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணன், திரவுபதியுடன், சைந்தவர் முனிவர் கருநெல்லிமரத்தின் அடியில் தவம் இருப்பது,
அர்ஜூனன் நெல்லிக்கனிக்காக பாணம் செலுத்துவது, உடன் திரவுபதி இருப்பது உள்ளிட்டவை சிற்பவடிவில் கதை சொல்கின்றன.
கோயில் குறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘‘மகாபாரத கதையுடன் தொடர்புடைய இக்கோயிலில் தற்போது ஒருகால பூஜை மட்டுமே நடந்து வருகிறது.
பக்தர்கள் வருகை அதிகமிருப்பதால், முக்கால பூஜை நடத்தப்பட வேண்டும். கோயிலுக்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லை.
அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலின் தொன்மை அறிந்து மேம்படுத்த வேண்டும் ,ராஜகோபுரம் இல்லை. உட்புறமாக மண்டபங்கள் கட்டினால் வெளியூர் வரும் பக்தர்கள் தங்கிச் செல்லலாம்.
திருக்கோயில் அன்னதான திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.
ஆலயத்தைச் சுற்றி பக்தர்கள் தரிசனத்திற்கு நடைபாதை அமைத்துத்தர வேண்டும்.
மகாபாரத காலத்துடன் கருநெல்லிமரங்கள் அடர்ந்து காணப்பட்ட இவ்வனப்பகுதியில், அந்த பழைய நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக
நெல்லிமரங்களையும் இந்த கோவில் வளாகப்பகுதியில் வளர்க்க வேண்டும்,’’ என்கின்றனர்.
🙏🙏🙏 @basurasa1969
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது.
சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை.
தலவிருட்சம் : கடம்ப மரம்.
"தென்சேரி கிரி"’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது.
இங்கு கோயில் கொண்டிருக்கிற ஆறுமுகப்பெருமான் ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை (மந்+திர+கிரி=மந்திரகிரி) என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.
இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமான பூதத்தாழ்வார் அவதரித்த மகாபலிபுர ஸ்தல சயன பெருமாள் கோவில் வரலாறு:
108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது.
கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும்
பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ தேவியும் பூதேவியும்
நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள்.
திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலையில் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.
*சிறப்பு:
முருக வாகனமான மயில்கள் நடமாடும் கோயில்
*மாவட்டம்:புதுக்கோட்டை
*வட்டம்:விராலிமலை
தல வரலாறு :
விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கி.பி.1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர்,
வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம்.
அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்.
மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம்.
ஆனால் இங்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளி என்பதால் இவள் மதுரகாளி என்றானாளாம். ஆம், மதுரையை கடும் கோபம் கொண்டு எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு தகவல் இந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நிராதரவாக இங்கு வந்த கண்ணகி ஆவேசம் அடங்கி,